27/10/2026
சம்மாந்துறையின் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தவர்களுக்கு உரிய கௌரவம்..!
சம்மாந்துறையின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்து, அரும்பணியாற்றி வரும் எமது அன்புச் சகோதரர்களான ஓய்வுபெற்ற மாவட்ட விளையாட்டு உத்யோகத்தர் சகோதரர் சப்ரி நசார் மற்றும் ஓய்வுபெற்ற விளையாட்டு உத்தியோகத்தர் சகோதரர் சபூர்தீன் ஆகிய இருவரையும் எமது சகோதரர் Ameer Afnan Sammanthurai அவர்களின் முயற்சியுடன் Royal Lines Academy ,Royal Madrit ஊடாக அழைத்து, பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்ததில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது அதன் சாதனைகளை மட்டும் கொண்டாடுவதில் அல்ல; அந்தச் சாதனைகளுக்குப் பின்னால் இருந்து உழைத்தவர்களின் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் உரிய முறையில் அங்கீகரிப்பதிலும்தான் தங்கியுள்ளது.
எமது ஊரின் சார்பில் இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கௌரவங்கள் உரிய அளவில் கிடைக்காவிட்டாலும், அவர்களின் அர்ப்பணிப்பையும் சேவையையும் மதித்து, எம்மால் இயன்ற வகையில் கௌரவிப்பதை எமது கடமையாகக் கருதுகின்றோம். ஏனெனில், உண்மையான சேவையாளர்களை மதிப்பதே சிறந்த சமூகத்தின் அடையாளமாகும்.
இந்நிகழ்வில் உரையாற்றிய சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் அவர்கள், சம்மாந்துறையின் விளையாட்டுத்துறை வளர்ச்சியில் சப்ரி நசார் மற்றும் சபூர்தீன் ஆகியோரின் பங்களிப்பு அளப்பரியது என்றும், எதிர்காலத்திலும் அவர்களின் அனுபவமும் அர்ப்பணிப்பும் எமது இளம் தலைமுறைக்குப் பெரும் பலமாக அமையும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், விளையாட்டுத்துறையைத் தனித்தனியான முயற்சிகளால் மட்டுமன்றி, அனைவரும் ஒரே நோக்கத்துடன் அமைப்பாக இணைந்து செயற்படுவதன் மூலமே அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“சம்மாந்துறையின் விளையாட்டுத்துறையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். எமது இளம் வீரர்களை ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் வளர்த்து, அவர்களைத் தேசிய மட்டத்தில் சாதனை படைக்கும் வீரர்களாக உருவாக்குவதற்கு உங்கள் அனுபவமும் வழிகாட்டலும் எமக்கு மிகவும் அவசியம். இந்தப் பயணத்தில் எம்முடன் இணைந்து, எமது இளைஞர்களின் எதிர்காலத்திற்குத் தொடர்ந்து பங்களியுங்கள்” என்ற அழைப்பையும் அவர் முன்வைத்தார்.
விளையாட்டுத்துறை என்பது வெறும் வெற்றி, தோல்விகளுடன் முடிவடையும் ஒரு துறையல்ல. அது இளைஞர்களிடையே ஒழுக்கம், ஒற்றுமை, தலைமைத்துவம், சகிப்புத்தன்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு போன்ற உயரிய பண்புகளை வளர்க்கும் ஓர் உன்னதமான களமாகும்.
எனவே, சம்மாந்துறையின் விளையாட்டுத்துறையை மேலும் வளர்ச்சியடையச் செய்வதற்கும், எமது இளம் வீரர்களின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை தேசிய மட்டத்தில் சாதனையாளர்களாக உருவாக்குவதற்கும், அனுபவமிக்க விளையாட்டுத்துறைச் சேவையாளர்கள், விளையாட்டுக் கழகங்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் கைகோர்த்து செயற்படுவோம்!
இன்று நாம் வழங்கும் இந்தக் கௌரவம், இரண்டு தனிநபர்களுக்கான பாராட்டு மட்டுமல்ல; சம்மாந்துறையின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக உழைத்த அனைவருக்கும் நாம் செலுத்தும் நன்றியின் அடையாளமாகும்.
விளையாட்டை வளர்ப்போம்!
இளைஞர்களை வலுப்படுத்துவோம்!
சம்மாந்துறையைச் சாதனைகளின் மண்ணாக மாற்றுவோம்!
அல்ஹம்துலில்லாஹ்,
இவ்வாறான நிகழ்வை நடத்த எமக்கு பெரிதும் தூண்டுதலாக இருந்த பிரதேச சபை உறுப்பினர் Ameer Mohamed Afnan அவர்களுக்கு நன்றிகள்.