Sports Media

Sports Media அனைத்து விதமான விளையாட்டு செய்திகளையும் உடனுக்குடன் பார்வையிடலாம்.

 #சாய்ந்தமருது ரியல் பிளாஸ்டர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் ரீஜென்சி T20 பிளாஸ்ட்  கிரிக்கெட் தொடர...
03/09/2026

#சாய்ந்தமருது ரியல் பிளாஸ்டர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் ரீஜென்சி T20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிக்கு சம்மாந்துறை எஸ் எஸ் எஸ் அணி தெரிவு.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக வி.வி.எஸ். லட்சுமண் நிய...
03/09/2026

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக வி.வி.எஸ். லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் வழக்கமான தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், அதே காலகட்டத்தில் நடைபெறும் சர்வதேச தொடரில் இந்தியாவின் முதன்மை அணியுடன் செயல்படவுள்ளதால், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான அணியின் பயிற்சிப் பொறுப்பு லட்சுமணிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ICC தரவரிசையில் சோனல் தினுஷாவுக்கு மாபெரும் முன்னேற்றம்! இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 சதங்கள் விளாசி அசத்திய இ...
03/09/2026

ICC தரவரிசையில் சோனல் தினுஷாவுக்கு மாபெரும் முன்னேற்றம்!

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 சதங்கள் விளாசி அசத்திய இலங்கையின் இளம் நட்சத்திரம் சோனல் தினுஷா, ICC டெஸ்ட் தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளார்.

183-வது இடத்தில் இருந்த சோனல் தினுஷா, தற்போது 158 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தைப் பிடித்துள்ளார்!

இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவரது அபாரமான பேட்டிங் செயல்பாடு, இலங்கை கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கையாக அவரை உருவெடுக்கச் செய்துள்ளது.

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக மைக் ஹெசன் நியமனம்!இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அண...
03/09/2026

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக மைக் ஹெசன் நியமனம்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் மோசமான தோல்விகளை சந்தித்ததைத் தொடர்ந்து, டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சர்பராஸ் அகமட் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக, ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக செயல்பட்டு வரும் நியூசிலாந்தின் மைக் ஹெசன், டெஸ்ட் அணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

இதன் மூலம், பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்பில் கடந்த 34 மாதங்களில் 6-வது மாற்றம் இடம்பெற்றுள்ளது.

மேலும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் நடுப்பகுதியில் பாகிஸ்தான் அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன், 7 வீரர்களும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மீண்டும் பயிற்றுவிப்பாளர் மாற்றம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சாமரி அத்தபத்துவின் அழகான செயல்!போட்டியின் சிறந்த வீராங்கனைக்கான Player of the Match விருதை பெற்ற இலங்கை அணியின் கேப்டன்...
02/09/2026

சாமரி அத்தபத்துவின் அழகான செயல்!

போட்டியின் சிறந்த வீராங்கனைக்கான Player of the Match விருதை பெற்ற இலங்கை அணியின் கேப்டன் சாமரி அத்தபத்து, அந்த விருதை சக வீராங்கனை நிலக்ஷிகா டி சில்வாவுடன் பகிர்ந்து கொண்டார்.

ஒரு விருது… இரு வீராங்கனைகளின் பங்களிப்பு!.

What a gesture from the Sri Lankan skipper!

வரலாற்று சாதனை படைத்த சாமரி அத்தபத்து! கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, இலங்கை மகளிர் T20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்...
02/09/2026

வரலாற்று சாதனை படைத்த சாமரி அத்தபத்து!

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, இலங்கை மகளிர் T20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனையாக கேப்டன் சாமரி அத்தபத்து சாதனை படைத்துள்ளார்!

மேலும், ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்!

இலங்கை – இந்தோனேசியா மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டியில், சாமரி அத்தபத்துவின் அபார பந்துவீச்சால் இந்தோனேசிய அணி வெறும் 49 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இறுதிப்போட்டிக்கு முன்னேறியது  சாய்ந்தமருது ரியல் பிளாஸ்டர்.சாய்ந்தமருது ரியல் பிளாஸ்டர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்ட...
02/09/2026

இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சாய்ந்தமருது ரியல் பிளாஸ்டர்.

சாய்ந்தமருது ரியல் பிளாஸ்டர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் ரீஜென்சி T20 பிளாஸ்ட் சுற்றுப்போட்டிகள் சாய்ந்தமருது வொலிவெரியன் பொது மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

இத்தொடரின் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் சாய்ந்தமருது பிளேன் ஹோர்ஸ் அணியை எதிர்கொண்ட ரியல் பிளாஸ்டர் அணி, 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம், இத்தொடரில் முதலாவது அணியாக இறுதிப்போட்டிக்கு போட்டிக்கு ரியல் பிளாஸ்டர் அணி தகுதி பெற்றுள்ளது.

இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு.இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடர்களுக்கான 16 பேர் க...
02/09/2026

இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடர்களுக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இதன்படி, இரு வடிவங்களிலும் இலங்கை அணியின் தலைவராக குசல் மெண்டிஸும், துணைத் தலைவராக சரித் அசலங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் அணியில்: குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, பத்தும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, தீக்ஷண, சச்சிந்து கொழும்புக்கே, துஷ்மந்த சமீர, இஷான் மலிங்க, அசித பெர்னாண்டோ மற்றும் தில்ஷான் மதுஷங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இருபதுக்கு 20 அணியில்: குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, கமிந்து மெண்டிஸ், பத்தும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, லஹிரு உதார, ஜனித் லியனகே, தசுன் ஷானக்க, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க, தீக்ஷண, தருந்து ரத்நாயக்க, துஷ்மந்த சமீர, இஷான் மலிங்க, நுவான் துஷார மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்தில் இலங்கை அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதற்காக இலங்கை அணி எதிர்வரும் செப்டெம்பர் 5ஆம் திகதி இங்கிலாந்து நோக்கிப் புறப்படவுள்ளது.

01/09/2026

நிக்ஸி அஹமட் எனும் நிந்தவூர் புகழ்!
ஒவ்வொரு அடியும் சர்வதேச தரம்.🔥🏏💪

🎙️ Voice Edited by: Aasir Cricket Tamil

பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர் தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான்...
01/09/2026

பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர் தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி படுதோல்வியடைந்துள்ளது. இதையடுத்து, தலைமைப் பயிற்சியாளர் சர்ஃபராஸ் அகமது மற்றும் உதவிப் பயிற்சியாளர் உமர் குல் ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக், சல்மான் அலி ஆகா உள்ளிட்ட ஐந்து வீரர்கள் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், போட்டிகளில் விளையாடாத ஏழு வீரர்கள் நாடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குப் பதிலாக புதிய வீரர்கள் அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், மைக் ஹெசன் மற்றும் முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஆஷ்லே நோஃப்கே ஆகியோர் புதிய பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து–பாகிஸ்தான் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள நிலையில், தொடரின் நடுவே பாகிஸ்தான் அணியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Address

233B Meera Nagar Road Nintavur/11
Ampara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sports Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category