Alnaja Sc

Alnaja Sc " DO THE BEST OR LEAVE TO DO THE BEST "

காலங்கள் கடந்தாலும் கருணை மறக்காதகோலமிகு தலைவனே, எஸ்.எம்.இத்ரீஸ்!ஞாலம் புகழும் நல் நாளிதுவே – இன்றுநாங்களெல்லாம் வாழ்த்த...
29/07/2026

காலங்கள் கடந்தாலும் கருணை மறக்காத
கோலமிகு தலைவனே, எஸ்.எம்.இத்ரீஸ்!
ஞாலம் புகழும் நல் நாளிதுவே – இன்று
நாங்களெல்லாம் வாழ்த்திடுவோம் உமக்கே!
ஆறு வருட காலம் அயராது உழைத்தீர்,
ஆடுகளத்தில் எங்களை உயர்த்தியே பிடித்தீர்!
விளையாட்டுத் துறையில் வீறுகொண்டு எழவே,
விதைத்தீர் பல நல் வித்துக்களை அன்றே!
சமூக சேவைதனை சிகரமாக மாற்றியவர்,
சகமனிதர் வாழ்வில் ஒளியேற்றி நின்றவர்!
எம் கழகத்தின் மேன்மைக்கு மூலதனமானவர்,
எங்கள் நெஞ்சங்களில் என்றும் நிலைத்திருப்பவர்!
இன்பமும் தித்திக்கும் ஆரோக்கியத்துடன்,
எந்நாளும் வாழ்க நீர் பல்லாண்டு காலம்!
துன்பங்கள் ஒழிந்து துணிவோடு நீவீர்,
துலங்க வேண்டும் என்றும் இந்த பூமியிலே!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தலைவா!
— இப்படிக்கு, கழக வீரர்களும் நிர்வாகத்தினரும் —

-ANSC MEDIA-

பயணம் சிறக்க வாழ்த்துகள்!செப்பமுற்ற ஒழுக்கத்தோன் - எங்கள்சிந்தனையில் நின்றோன்!ஒப்புயர்வில்லாப் பணிவோடே - கழகம்உயர்த்திய ...
29/07/2026

பயணம் சிறக்க வாழ்த்துகள்!

செப்பமுற்ற ஒழுக்கத்தோன் - எங்கள்
சிந்தனையில் நின்றோன்!
ஒப்புயர்வில்லாப் பணிவோடே - கழகம்
உயர்த்திய மாவீரன்!
அர்ப்பணிப்பின் இலக்கணமாய் - என்றும்
அயராது உழைத்தவன்!
வெப்பமிகு சோதனையும் - புன்னகையால்
வென்று கடந்தவன்!
சொந்த நாட்டை விட்டுவிட்டு - இன்று
தொழில் தேடிச் செல்கின்றாய்!
வந்த களம் மறந்துவிடாது - உந்தன்
வாழ்வினில் வெல்கின்றாய்!
வானளவு உன்னுடைய - லட்சியங்கள்
வளர்ந்திட வேண்டும்!
போனகத்தில் உன் உழைப்பால் - புகழொளி
பரவிட வேண்டும்!
கழகத்தின் நெஞ்சார்ந்த - கண்ணியத்தின்
நாளங்கள் வாழ்த்துகிறோம்!
தடைகள் யாவும் தகர்ந்து நீயும் - தரணியில்
உயர்ந்திட வாழ்த்துகிறோம்!

-ANSC MEDIA-

எல்லாப்புகழும் இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்.......நடைபெற்று முடிந்த அட்டாளைச்சேனை பிரிமீயர் லீக் சுற்றுத்தொடர் சீசன்-03 இ...
02/07/2026

எல்லாப்புகழும் இறைவனுக்கே
அல்ஹம்துலில்லாஹ்.......

நடைபெற்று முடிந்த அட்டாளைச்சேனை பிரிமீயர் லீக் சுற்றுத்தொடர் சீசன்-03 இல் கப்பலடி கிங்ஸ் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டது.இவ் இளம் அணியை தலைமைப்பொறுப்பேற்று பல தடைகளையும் தாண்டி எமது அல்-நஜா விளையாடட்டு கழகத்தின் தலைவர் கபூல் பஹாத் சிறப்பாக வழி நடாத்தி இந்த வரலாற்று வெற்றியை பெற மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.

எமது கழகத்தின் தலைவர் அவர்களுடைய செயற்பாடுகளை கூறுவதானால் அவர் பொறுப்பெடுக்கும் எதனையும் மிகவும் நேர்மையாகவும் கச்சிதமாகவும் செய்து முடிக்கக்கூடியவர்.இந்த இளம் அணியை இலகுவாக வழிநடாத்தி இந்த மட்டத்தை எட்டுவது என்பது மிகவும் கடினமானது இருந்தும் எமது கழக இளம் வீரர்களை எவ்வாறு வழிநடாத்தி செல்கின்றாரோ அந்தப்பாணியில் மிகவும் சிறப்பாக வீரர்களின் ஒத்தாசை மற்றும் பயிற்றுவிப்பாளர் உரிமையாளர் எல்லோரின் அர்ப்பணிப்புடன் இந்த வெற்றியை தனதாக்கி கொண்டனர்.

இச்சுற்றுப்போட்டியை சிறப்பாகவும் நடாத்தி முடித்த APL சுற்றுப்போட்டி குழாத்தினருக்கும் அனுசரணை வழங்கிய அனைபேருக்கும் குறிப்பாக இத்தொடரில் கலந்து சிறப்பித்த கழகத்தினருக்கும் பார்வையாளர்களுக்கும் எமது கழகம் ஈன்றெடுத்த இளம் தலைமை பஹாத் அவர்களுக்கும் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.....

-ANSC MEDIA-

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஓய்வுபெ...
30/06/2026

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகருமான பொத்துவிலைச் சேர்ந்த மீராசாஹிப் அப்துல் மஜீட் (SSP) இன்று (30) திங்கட்கிழமை காலை கொழும்பில் காலமானார்

Congratulations Champion - GTCRunner up - Kappladi Kings
30/06/2026

Congratulations

Champion - GTC
Runner up - Kappladi Kings

எமது அல்-நஜா விளையாட்டு கழகத்தின் வீரர் தொழில்வாய்ப்பு காரணமாக வெளிநாடு சென்றிருந்து நாடு திரும்பிய SAMEER அவர்கள் நேற்ற...
25/06/2026

எமது அல்-நஜா விளையாட்டு கழகத்தின் வீரர் தொழில்வாய்ப்பு காரணமாக வெளிநாடு சென்றிருந்து நாடு திரும்பிய SAMEER அவர்கள் நேற்றைய தினம் கழக செயற்பாடுகளில் மீண்டும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அல்ம்துலில்லாஹ்....

-ANSC MEDIA-

அஸ்ஸலாமு அலைக்கும்..எமது சகோதர கழகமான phoenix விளையாட்டு கழகத்தினரின் கவனத்திற்குஎமது கழகத்தின்  உறுப்பினராக இருக்கும் R...
19/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும்..

எமது சகோதர கழகமான phoenix விளையாட்டு கழகத்தினரின் கவனத்திற்கு
எமது கழகத்தின் உறுப்பினராக இருக்கும் R.M.AJMIR அவர்களை கழகத்தில் இணைத்து கொண்டதாக முகநூல் மூலமாக இன்றைய தினம் அறியக்கிடைத்தது.

எவ்வித அறிவித்தல்களும் எழுத்து மூலமாக அறிவிக்காமலும் கழக நிருவாகத்தினரிடம் இது சம்பந்தமாக விடயங்கள் Official ஆக சமர்ப்பிக்காமல் உங்களது கழகத்தில் இணைந்து கொண்டதாக பதிவிடப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது. கழகத்தால் இவ் இளம் வீரருக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதால் இவ்வீரர் ஒழுக்காற்று நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் தக்க காரணங்களை கழகத்துக்கு வழங்கும் வரை இவர் கழகத்தில் உறுப்புரிமையோடு பயணிக்கின்றார் என்பதுடன் ஒழுக்காற்று நடவடிக்கை முடியும் வரை போட்டிகளில் பங்குபற்ற முடியாது என்பதனை சகல கழகங்களுக்கும் தெரிவித்து கொள்கின்றேன்.

Y.நிதாஸ்
செயலாளர்
ANSC

எமது அல்-நஜா விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரர்கள் NPL சுற்றுத்தொடருக்காக  SPONSOR & MENTORNOORIANS PHOENIX அணிக்காக செய...
14/06/2026

எமது அல்-நஜா விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரர்கள் NPL சுற்றுத்தொடருக்காக SPONSOR & MENTOR
NOORIANS PHOENIX அணிக்காக செயற்படுவதையிட்டு கழகம் மனம் மகிழ்கின்றது.

அல்ஹம்துலில்லாஹ்.....

-ANSC MEDIA-

09/06/2026
09/06/2026

எமது கழகத்தின் இளம் வீரர் fareed faheeth மௌலவி அவர்களின் அசத்தலான ஆட்டம் வாழ்த்துக்கள் ......

-ANSC MEDIA-

Address

Opa Road
Saintamaruthu

Telephone

+94750428407

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alnaja Sc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category