Trophy Warriors

  • Home
  • Trophy Warriors
Call Directions Contact the business

Trophy Warriors விளையாட்டால் மண்ணுக்கு மனம் சேர்ப்போம்.

TROPHY WARRIORS கிரிக்கட் கழகத்தின் பெருமிதம் சாதனைச் சிகரம் தொட்ட MIM SIFNAS அவர்களுக்கு வாழ்த்துக்கள்! ​எமது TROPHY WA...
18/02/2026

TROPHY WARRIORS கிரிக்கட் கழகத்தின் பெருமிதம் சாதனைச் சிகரம் தொட்ட MIM SIFNAS அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

​எமது TROPHY WARRIORS கிரிக்கட் கழகத்தின் ஆலோசகரும், நட்பிற்கும் பண்பிற்கும் இலக்கணமான MIM SIFNAS அவர்கள், People Leasing and Finance PLC (Al-Shafa Islamic Finance) நிறுவனத்தின் கல்முனை கிளை முகாமையாளராக (Branch Manager) 18.02.2026 அன்று தனது புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டதனையிட்டு எமது கழகம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.

​அல்-மினன் வித்தியாலயத்தில் தரம் 1 தொடக்கம் 5 வரை அடியெடுத்து வைத்து, பின் கமு/ ஸம்ஸ் மத்திய கல்லூரியின் தரம் 6 தொடக்கம் A/L வரை நிழலில் வளர்ந்த ஒரு ஆளுமை இன்று வங்கித்துறையில் ஒரு பெரும் நிலையை எட்டியுள்ளார்.

மருதமுனை மண்ணிலிருந்து வங்கித்துறையில் கால்பதித்து, மருதமுனையின் முதலாவது "Marketing Officer" எனும் பெருமையைப் பெற்ற ​இவர் 2007 ஆம் ஆண்டு இலங்கை வங்கியில் (BOC) தனது வங்கித்துறைப் பயணத்தில் முதல் தடமம்பதித்து பின்
​2008 தொடக்கம் 2009 வரை மக்கள் வங்கியில் (People's Bank) திறம்படப் பணியாற்றி பின்னர் ​2009 தொடக்கம் இன்று வரை People's Leasing and Finance (Al-Shafa) நிறுவனத்தில் சுமார் 17 ஆண்டுகால விசுவாசமான உழைப்பால் இன்று கிளை முகாமையாளர் எனும் அதியுயர் நிலையை அடைந்துள்ளார்.

ஆன்மிகம் மற்றும் பொதுப்பணிகளிலும் அதிக ஈர்ப்பு கொண்டவர்.இவர் மருதமுனை ஜம்யத்துல் உலமா சபை ,ஹிதாய பள்ளிவாசல் பொருளாளராகவும் கடமை ஆற்றியுள்ளார்.மேலும் தான் பயின்ற பாடசாலை மட்டத்திலான வகுப்புத் தோழர் குழுவின் (Batchmates Group) ஒரு முக்கிய தூணாகவும், வழிகாட்டியாகவும் இன்றும் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமது புதிய பொறுப்பின் ஊடாக கல்முனைப் பிராந்திய மக்களுக்குச் சிறந்த சேவையாற்றவும், இஸ்லாமிய நிதித்துறையில் (Al-Shafa) புதிய மைல்கற்களை எட்டவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, எமது TROPHY WARRIORS கிரிக்கட் கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

​வாழ்த்துக்களுடன்:
நிர்வாகம் மற்றும் உறுப்பினர்கள்
TROPHY WARRIORS
18.02.2026



"தலைவர் மனாஸ்"( Asan Manas )அவர்களின் தலைமையில் மருதமுனை கிரிக்கெட் சங்கத்தின் பொற்காலம்! ​மருதமுனை கிரிக்கெட் சங்கத்தின...
18/02/2026

"தலைவர் மனாஸ்"( Asan Manas )அவர்களின் தலைமையில் மருதமுனை கிரிக்கெட் சங்கத்தின் பொற்காலம்!

​மருதமுனை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மனாஸ் அவர்களின் வழிகாட்டலில், ஒரு மிகச்சிறந்த நிர்வாகக் கட்டமைப்புடன் சங்கம் தனது இரண்டாவது ஆண்டில் வெற்றிகரமாக கால்பதிக்கிறது.மேலும் இந்த நிர்வாகக் கட்டமைப்பில், எமது Trophy Warriors கழகத்தின் முகாமையாளர் Mohamed Mafas அவர்கள் மருதமுனை கிரிக்கெட் சங்கத்தேர்தலில் வெற்றிபெற்று உப தலைவர்களில் ஒருவராக (Vice President) நியமிக்கப்பட்டு, சங்கத்தின் நிர்வாக கட்டமைப்புடன் வளர்ச்சிக்காகப் பணியாற்றி வருவது எமது கழகத்திற்குப் பெருமிதம் அளிக்கிறது.

MCA தலைவர் MANAS தனது தேர்தல் வாக்குறுதிக்கமைய, அனைத்து கழகங்களையும் அரவணைத்து, நடுவர் சங்கத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் மருதமுனை கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை இவர் எழுதி வருகிறார்.

இதில் ​முக்கிய சாதனைகளாக
​சர்வதேச தரத்தில் வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வை ஒத்த பிரம்மாண்டமான விருது வழங்கும் நிகழ்வு 14.02.2026 அன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது இவ் நிகழ்வுக்கு எமது கழக உயர்பீட உறுப்பினர்களான Mohammed Firnaas Samad Hameed இருவரும் கலந்து சிறப்பித்தனர்.அத்துடன் தலைவர் மனாஸ் அவர்கள் ​நிர்வாக ரீதியிலான வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த ஒருங்கிணைப்புடன் ​அனைத்து கழகங்களுக்குமான சமத்துவமான வாய்ப்புகள்,பக்கச்சார்பற்ற முடிவுகள் என தற்துணிவான தலைமைத்துவ பண்புகளுடன் சிறந்த சேவையினை வழங்கி வருகிறார்.

​இந்த வெற்றிகரமான பயணத்தில் Trophy Warriors கழகமாகிய நாமும் கைகோர்ப்பதில் பெருமிதம் கொள்கிறோம். எமது கழகத்தின் சார்பில் நிர்வாகம் மற்றும் நடுவர்களுக்கான மேலங்கிகள் (Jerseys),ஸ்கோர்புக் (Scorebooks),லட்டர் பேட் (Letterheads) ஆகியவற்றை வழங்கி எமது ஆதரவை முதன்மைக் கழகமாக உறுதிப்படுத்தியிருந்தோம்.

​இன்ஷா அல்லாஹ், மருதமுனை கிரிக்கெட் சங்கத்தின் எதிர்கால வளர்ச்சிப் பணிகளிலும் எமது கழகத்தின் பூரண ஒத்துழைப்பு என்றும் தொடரும் என உறுதியளிக்கிறோம்.

​வாழ்த்துகளுடன்,
நிர்வாகம்,
Trophy Warriors

​

பிரிவது வலியைத் தந்தாலும், உங்கள் உயர்வு எங்களுக்குப் பெருமையே!Trophy Warriors-இன் ஆரம்பகாலத் தூண்களுக்கு எமது வாழ்த்துக...
24/01/2026

பிரிவது வலியைத் தந்தாலும், உங்கள் உயர்வு எங்களுக்குப் பெருமையே!

Trophy Warriors-இன் ஆரம்பகாலத் தூண்களுக்கு எமது வாழ்த்துகள்!

​எமது Trophy Warriors கிரிக்கெட் கழகத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே எம்மோடு பயணித்து, கழகத்தின் வளர்ச்சிக்காக உழைத்த மிக முக்கியமான இரு வீரர்கள் இன்று தொழில் நிமித்தமாக வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்கள்.
​🏏 அஜ்பான் (Ajfan): மைதானத்தில் களமிறங்கினாலே எதிரணியினரை அதிரவைக்கும் எமது அதிரடி ஆட்டக்காரர்! உங்களது சிக்ஸர்களும் பவுண்டரிகளும் kuwait மண்ணிலும் உங்கள் வாழ்வை சிறப்பாக்கட்டும்.

​🏏 அன்ஸி (Ansi): எமது கழகத்தின் ஒரு வளர்ந்து வரும் இளம் நட்சத்திரம்! மிகக் குறுகிய காலத்தில் தனது திறமையால் அனைவரையும் கவர்ந்த அன்ஸி, DUBAI நாட்டில் தனது புதிய பயணத்தைத் தொடங்குகிறார்.
​ஆரம்பகால உறுப்பினர்களாக நீங்கள் இருவரும் கழகத்திற்கு வழங்கிய பங்களிப்பு ஈடுசெய்ய முடியாதது.

​உங்கள் இருவரது எதிர்காலமும் ஒளிமயமாக அமையவும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றிபெற்று மேன்மேலும் உயரவும் Trophy Warriors குடும்பம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்! 🤝✨


​

MCA 7A SIDE CHAMPION TROPHY -2025மருதமுனை கிரிக்கெட்  சங்கத்தின்  இவ்வருடத்தின் இரண்டாவது சுற்றுத்தொடர்.2025/2026 ஆம் ஆண...
24/08/2025

MCA 7A SIDE CHAMPION TROPHY -2025

மருதமுனை கிரிக்கெட் சங்கத்தின் இவ்வருடத்தின் இரண்டாவது சுற்றுத்தொடர்.

2025/2026 ஆம் ஆண்டுக்கான. மருதமுனை கிரிக்கெட் சங்க தலைவரின் வாக்குறுதிக்கமைய இவ்வருடத்தின் இரண்டாவது சுற்றுத் தொடரின் 10 ஆவது போட்டியில் எமது அணி LANKAN BULLS அணிக்கெதிரான போட்டியில் எமது கழகத்தின் புதிய தலைவர் AJIFAN அவர்களின் தலைமையில் போட்டியில் வெற்றி பெற்றிருந்தனர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய LANKAN BULLS அணியினர் 5 விக்கெட்டுகளை இழந்து 5 ஓவர்கள் முடிவில் 33 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பாடிய எமது அணியினர் 3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றிருந்தனர்.

இவ் வெற்றியைத் தொடர்ந்து MARUTHAM அணியுடனான காலிறுதிப் போட்டியில் எமது அணி வெற்றி பெற வாழ்த்துகிறோம்.....!









மருதமுனை கிரிக்கெட் சங்கம்

-அல்ஹம்துலில்லாஹ் --முதலாவது வெற்றி- நம்பி விதையை விதைத்ததால் இன்று முளைக்க துவங்கி விட்டது !காலங்களும் கோலங்களும் இனிதே...
12/07/2025

-அல்ஹம்துலில்லாஹ் -
-முதலாவது வெற்றி-

நம்பி விதையை விதைத்ததால் இன்று
முளைக்க துவங்கி விட்டது !

காலங்களும் கோலங்களும் இனிதே மாறும்.!

மருதமுனை கிரிக்கெட் சங்க அனுசரணையுடன் பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கும் KLAPANA T10 WAR சுற்றுப்போட்டித்தொடர் சிறப்பான முறையில் நடைபெற வாழ்த்தி ..!

இன்று நடைபெற்ற இச்சுற்றுத்தொடரின் 5ஆவது போட்டியில் கலந்து கொண்டுள்ள எமது அணி OXFORD அணியுடனான போட்டியில் கிரிக்கெட் சங்க அணுசரனையுடனான தொடரின் எமது அணி முதலாவது வெற்றியினை பதிவு செய்துள்ளது.!

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய எமது அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 110 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.இது இத் தொடரில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ங்களாகும் மேலும் சுற்றுத் தொடர் சார்பாக தனிநபர் அதிகூடிய ஓட்டங்களாக THARIK ஆசான் முதலாவது அரைச் சதத்தினை ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
மேலும் மைதான முதலாவது விக்கெட் இணைப்பாட்ட சாதனையாக இருவரும் 9.2 ஓவர்கள் வரை ஆட்டமிழக்காமல் 95 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.!

பதிலுக்கு துடுப்பாடிய OXFORD அணியினர் 87 ஓட்டங்களைப்பெற எமது அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெறிருந்தனர்.

இன்றைய வெற்றியானது கழகத் தலைவர் Hannas Sirath அவர்களின் நம்பிக்கையுடனான அயராத முயற்சியின் அவருக்கான பிறந்தநாள் பரிசாக எமது அணியினால் அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாகும்..!

மேலும் இன்றைய போட்டிக்கு வருகைதந்து எமது அணியை வழிநடத்திய கழக நிர்வாக உறுப்பினர்கள், வீரர்கள் மற்றும் அபிமானிகள் விசேடமா தாகசாந்தி ஏற்பாடுகளை செய்து தந்த கழக நிர்வாகியும் ZAIQAM NEHAAN DISTRIBUTION MY COLA BEVERAGE'S PVT LTD உரிமையாளரும், கழக போசகருமான ARAFATH அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.!

ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடும் வீரர்களை ஊக்குவிக்கும் பரிசித்திட்டத்திற்கமைய இன்றைய போட்டியில் அரைச் சதத்தினை பெற்ற தாரிக் ஆசான் அவர்களுக்கு எமது கழகத்தால் பெறுமதியான பரிசில் வழங்கப்பட்டது.!

அடுத்த போட்டியில் எமது மண்ணின் ஆக்ரோஷமான கிரிக்கெட் விளையாட்டின் தனிச்சிறப்பு பெற்ற Kalpana Sports Club Maruthamunai உடனான போட்டியிலும் சிறப்பாக விளையாடி வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம.

T10 WAR



-வாழ்த்துப்பா வழங்கும் நிகழ்வு-TROPHY WARRIORS கழக இஸ்தாபக உறுப்பினரும் அணியின் உயர்பீட உறுப்பினருமான MSM.SAJEEN அவர்களி...
12/07/2025

-வாழ்த்துப்பா வழங்கும் நிகழ்வு-

TROPHY WARRIORS கழக இஸ்தாபக உறுப்பினரும் அணியின் உயர்பீட உறுப்பினருமான MSM.SAJEEN அவர்களின் திருமண நிகழ்வை வாழ்த்தி நேற்று TROPHY WARRIORS கழகத்தால் வாசித்து வழங்கப்பட்ட வாழ்த்துப்பா..!

06/07/2025

அழகிய அணிகள் அறிமுக நிகழ்வு..!

Kalpana Sports Club Maruthamunai

படைகள் 24
படைத் தலைவன்கள் 24
படைத் தளபதிகள் 24
படை வீரர்கள் 360

கிரிக்கட் யுத்த களத்தில் நடக்கப் போகும் மாபெரும் சமர்

மருதமுனை வரலாற்றில் றோன் தொழிநுட்பத்துடன் படைத் தலைவன்கள் போருக்கான அணியை தயார் செய்யும் வீடியோ

வரலாறு பேசும் KALPANA T10 WAR

அல்ஹம்துலில்லாஹ்..! அணியின் நான்காவது புதிய மேலங்கி.!தொடர்சியான சுற்றுத்தொடர்கள் மாஷாஅல்லாஹ் தொடர்ச்சியான புதிய மேலங்கிக...
13/06/2025

அல்ஹம்துலில்லாஹ்..! அணியின் நான்காவது புதிய மேலங்கி.!

தொடர்சியான சுற்றுத்தொடர்கள் மாஷாஅல்லாஹ் தொடர்ச்சியான புதிய மேலங்கிகள்.!

Elite Mega champion வெற்றிக்கிண்ணத்துற்கான 8ஆவது போட்டியில் பங்குபற்றிய எது அணியானது Avengers அணியுடனான போட்டியின் போது தோல்வியை தழுவியது.போட்டியின் 70 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Avengers அணியின் இஸ்தாபகரும் அதிரடி ஆட்டக்கரருமான NAJAH அவர்களின் சிறப்பான ஆட்டத்தினாலும் பந்து வீச்சாளர்களின் அசமந்த போக்கினால் போட்டியானது எதிரணி வசம் கைமாறியது.! இருந்தும் ஆரம்ப முதல் இறுதிவரை சுவாரஸ்யமான போட்டியாக களம்காணப்பட்டது.!

பழமைவாய்ந்த கழக ஒன்றின் ஆரம்பகாலம் தொட்டு இன்று வரை வெற்றிநாயக வீரராக வலம்வந்த வீரரின் திடகாத்திரமான முயற்சியால் கழகம் ஆரம்பித்து தனது முதலாவது போட்டியில் வெற்றிவாகை சூடிய நண்பர் NAJAH அவர்களின் வழிநடத்தலிலான AVENGERS அணியினர்க்கு எமது கழகம் சார்பான மனமார்ந்த வாழ்த்துகளைத்தெரிவித்துக்கொள்கிறோம்..

தோல்வி முடிவுமல்ல.
வெற்றி இறுதியுமல்ல
தொடர்வதே துணிவே பெரிது...!!!
அதிலும் எம் தோல்வியை
ருசிப்பவர்களை பார்க்கும் போது
நம் வளர்ச்சி அவர்களின் மனவுறுதியை பலவீனமடைய வைத்துள்ளமையே எமது முதல் வெற்றி அல்ஹம்துலில்லாஹ் 🫰
!!!

இரு புதிய மேலங்கி அறிமுக நிகழ்வும் கழக ஒன்றுகூடலும்.!அனுசரணையாளர்கள் 1. AMY.ARAFATH       ZAIQAM NEHAAN Distributor myco...
13/06/2025

இரு புதிய மேலங்கி அறிமுக நிகழ்வும் கழக ஒன்றுகூடலும்.!

அனுசரணையாளர்கள்
1. AMY.ARAFATH
ZAIQAM NEHAAN
Distributor mycola beverage

2.M. ASLAM & M.SAJIN
Ayman Nisam Nisma



இன்று ஆரம்பமாகவுள்ள எலைட் மெகா தொடருக்காக வேண்டி எமது அணிக்கான புதிய மேலங்கினை கத்தார் நாட்டில் இருந்து வருகை தந்த எமது உயர்பீட உறுப்பினர் சஜின் மற்றும் அஸ்லம் அவர்களின் அனுசரணையுடன் கழக அணித்தலைவரிடம் உயர்பீட உறுப்பினர் சஜின் மற்றும் அஸ்லம் அவர்களின் புதல்வர்களால் முகாமையாளர் மபாஸ் அவர்களின் இல்லத்தில் வைத்து நேற்று இரவு கையளிப்பு செய்யப்பட்டது.! அதன் தொடர்ச்சியாக இரண்டாவது புதிய மேலங்கினை AMY. ARAFATH நண்பர் அவர்களின் நிறுவன பெயர் பதிக்கப்பட்ட ZAIQAM NEHAAN distributor mycola beverage மேலங்கியிீனை எமது கழக நிர்வாகிகளிடம் கையளிப்பு செய்யப்பட்டது.

இவ் இரு மேலங்கியினையும் தந்துதவிய எமது அனுசரணையாளர்கள் இருவருக்கும் எமது கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறோம்.

நிகழ்வின் இறுதியாக சுற்றுப்போட்டி சார்பான கலந்துரையாடலுடன் கூட்டம் நிறைவுபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ் 😍

-வெற்றிப்பயணத்திற்கான காத்திருப்பு-Benzene மின்னொளி சுற்றுப்போட்டி தொடரின் இரண்டாவது நாளின் ஆறாவது போட்டியாக GOLD MIND அ...
25/05/2025

-வெற்றிப்பயணத்திற்கான காத்திருப்பு-

Benzene மின்னொளி சுற்றுப்போட்டி தொடரின் இரண்டாவது நாளின் ஆறாவது போட்டியாக GOLD MIND அணிக்கெதிரான போட்டியில் எமது அணி 22 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

நாணைய சுழற்சியில் வெற்றி பெற்ற GOLD MIND அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட இணக்கம் தெரிவித்து 7 ஓவர்கள் முடிவில் 72 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். .பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எமது அணி 7 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 50 ஓட்டங்களைப் பெற்று தோல்வியை தழுவியிருந்தனர்.குறிப்பாக களத்தடுப்பின் போது ஏற்பட்ட ஓர் சில அசமந்த போக்கினால் மேலதிகமாக 10-15 உற்பட்ட ஓட்டங்களை எதிரணிக்கு வழங்கியமையால் அவ் ஓட்டங்கள் வெற்றி ஓட்டங்களாக போட்டியை மாற்றியிருந்தன.

இன்ஷாஅல்லாஹ் இனிவரும் போட்டிகளில் அணியின் வெற்றிப்பயணம் தொடர எமது வீரர்களை வாழ்த்துகிறோம்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற GOLD MIND அணியினர்க்கு வாழ்த்துகளை கூறி இத்தொடரில் பங்குபற்றிய எமது கழக வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறோம்.






மருதமுனை கிரிக்கெட் சங்கம்

Address


Telephone

+97430834304

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trophy Warriors posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trophy Warriors:

Shortcuts

  • Want your business to be the top-listed gym/sports facility?

Share