07/08/2025
Silambam
சிலம்பம்
1. சுக்மா 2026 விளையாட்டுப் போட்டி நடத்தும் சிலாங்கூர் மாநிலம், சுக்மா விதிமுறையின் படி கூடுதல் விளையாட்டாக சிலம்பத்தை பட்டியலிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. சுக்மா விதிமுறைப்படி, மாநிலங்கள் தற்போதைய ஆண்டுக்கான கூடுதல் விளையாட்டுகளை முன்மொழியலாம். ஆனால், அதற்கான இறுதி முடிவை போட்டி விளையாட்டுகளுக்கு குறைந்தது 12 மாதங்களுக்கு முன்னதாகவே மலேசிய விளையாட்டுகளின் உச்சமன்ற குழுவால் முடிவு செய்யப்படும்.
2. ஒலிம்பிக், ஆசிய, காமன்வெல்த் மற்றும் சீ விளையாட்டுப் போட்டிகள் போன்ற எந்த முக்கிய விளையாட்டுகளிலும் சிலம்பப் போட்டிகள் இடம்பெறாததால், சிலாங்கூர் சிலம்பத்தை தேர்ந்தெடுக்கவில்லை. தேர்வு செய்யப்பட்ட கூடுதல் விளையாட்டுகள் அனைத்தும் பட்டியலிடப்பட்ட முக்கிய விளையாட்டுகளில் இடம்பெறும்.
3. சுக்மா விளையாட்டு போட்டிகளில் இடம்பெறும் விளையாட்டுகள் பொதுவாக அனைவருக்கும் திறந்தவையாகும். குறிப்பிட்ட இனத்தினர் கலந்துகொள்ளும் போட்டிகளில் உதாரணமாக, உஷு போன்ற விளையாட்டுகளில் மலாய்க்காரர்களும் பங்கேற்கின்றனர். எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டுகளில் சிலர் இன ரீதியாக புறக்கணிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. கராத்தே, கபடி மற்றும் ஒட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுகளில் இந்தியர்கள் அதிகமாக பங்கேற்கின்றனர். எடுத்துக்காட்டாக, 2024-ஆம் ஆண்டு சரவாக் மாநிலத்தில் நடைபெற்ற சுக்மா விளையாட்டுப் போட்டியில் சுமார் 654 இந்திய விளையாட்டு வீரர்கள் (8.34%) பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1. Selangor selaku tuan rumah telah membuat keputusan untuk tidak menyenaraikan Sukan Silambam sebagai sukan tambahan berdasarkan Peraturan Tetap Perkara 12.3 : Negeri-negeri termasuk tuan rumah masih boleh mencadangkan lain-lain jenis sukan untuk penganjuran tahun semasa namun perlu diputuskan oleh Jawatankuasa Tertinggi Sukan Malaysia dalam tempoh sekurang-kurangnya 12 bulan sebelum pengelolaan temasya.
2. Antara sebab tidak dipilih oleh oleh tuan rumah Selangor adalah kerana Sukan Silambam tidak dipertandingkan dalam mana-mana Temasya utama seperti Sukan Olimpik, Sukan Asia, Sukan Komanwel dan Sukan SEA. Sukan-sukan yang dipilih dipertandingkan diperingkat temasya sukan utama yang di senaraikan.
3. Sukan yang dipertandingkan di Sukan Malaysia adalah universal walaupun kadangkala di dominasi oleh kaum tertentu namun ada sahaja sukan seperti wushu yang mempunyai atlet dikalangan kaum melayu. Isu berkaitan sukan yang terpilih memingirkan kaum tertentu adalah tidak benar memandangkan sukan seperti karate, kabbadi dan olahraga diwakili oleh ramai atlet dari kaum india. Seramai 654 orang atlet india atau 8.34% telah mewakili negeri pada Temasya Sukan Malaysia 2024 di Sarawak.