07/08/2023
ஆழ்ந்த அனுதாபங்கள்
துன்னாலையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டு எங்களுடைய ஊரின் பிரசித்தி பெற்ற வல்லிபுர மாயவனை சிறுவயதில் இருந்து தந்தையார் உடன் பிறப்புகளோடு இணைந்து அர்ச்சித்து நித்திய நைமித்தியகுருவாக எங்களுடைய கிராம மக்களிடம் நன்மதிப்போடு குல ஆசாரசீலராக விளங்கி ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் பிரதமகுருவும் 20 ஆண்டுகளுக்கு மேலாக மஹோற்சவ குருவுமாக விளங்கிய (முன்னை நாள்) குருக்கள் அமரர் ஸ்ரீ கணபதிசுவாமிக்குரு புருஷோத்தமக்குருக்கள் (விசாகய்யா) நித்தமும் நாம் பணியும் ஸ்ரீ வல்லிபுர மாயவனின் திருவடி நிழலில் அமைதியானார். 07/08/2023 இன்று இச் செய்தி ஆழ்ந்த கவலை தருகிறது வல்லிபுர மாயவனோடும் மிந்திரன் அம்பாளோடும் தன்னுடைய குருத்துவ பணியை சிறப்பாக செய்து தன்னுடைய வாழ்க்கை பாதையையும் துணைவிபிள்ளைகளோடு சிறப்பாக அமைத்து வாழ்ந்த சிறப்பு மிகையானது எங்களோடு பழகிய அந்த பசுமையான காலம் மறக்க முடியாது பிள்ளைகளுக்கும் நற்கல்வி நல்வாழ்க்கை அமைத்து வல்லிபுர ஆலயத்துக்கு பெரும் அர்பணிப்பு செய்து குருவாக பெரும் தொண்டுகள் பல ஆற்றி வெளிஉலகமே செல்லாமல் மாயவன் கோவிலோடு தன் வாழ்நாளை சாதித்தவர் குடும்ப உறவினர்களோடு கவலையில் தோய்ந்து ஆத்மா சாந்தியடைய வல்லிபுர மாயவன் தாள் பணிவோம் ஓம் நமோ நாராயணாய ஓம் சாந்தி