OBA of Omer Farook M.V

OBA of Omer Farook M.V Old Boys' Association of Omer Farook Maha Vidyalaya

எமது பாடசாலையின் எதிர்கால கல்வி முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு மாணவர்களின் தரவுகளை கணினி மயப்படுத்தும் செயற்திட்டம், இன...
24/12/2025

எமது பாடசாலையின் எதிர்கால கல்வி முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு மாணவர்களின் தரவுகளை கணினி மயப்படுத்தும் செயற்திட்டம், இன்று பழைய மாணவர் சங்கம் (OBA) மூலம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

பாடசாலை நிர்வாகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இச்செயற்திட்டம், ஒரு முக்கியமான மாற்றத்திற்கான தொடக்கமாகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மையமாகக் கொண்ட இந்த முயற்சி, பாடசாலையின் நிர்வாக செயல்பாடுகளை மேலும் இலகுவாக்கும் என்பதே
பழைய மாணவர் சங்கத்தின் உறுதியான நம்பிக்கையாகும்.

20/12/2025

வகுப்பு பிரதிநிதிகள் தேவை

அஸ்ஸலாமு அலைக்கும் / வணக்கம் ,

உமர் பாரூக் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் (OBA) செயல்பாடுகளை மேலும் ஒழுங்குபடுத்தி, செயற்பாடுமிக்கதாக மாற்றும் நோக்கில், ஒவ்வொரு Batch-இலிருந்தும் பிரதிநிதிகளை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, பழைய மாணவர்களுக்கான உத்தியோகபூர்வ WhatsApp குழு ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. இது எதிர்காலத்தில் பாடசாலை அபிவிருத்தி, சமூக சேவை, மாணவர் நலன், மற்றும் OBA நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை ஒருங்கிணைப்பதற்கான முக்கிய மேடையாக அமையும்.

இதற்காக ஒவ்வொரு Batch சார்பாகவும் ஒரு பொறுப்புள்ள, ஆர்வமுள்ள வகுப்பு பிரதிநிதி ஒருவரை நாம் எதிர்பார்க்கின்றோம். ஆர்வம் உள்ளவர்கள் தங்களது
பெயர் :
வருடம் (O/L batch) :
WhatsApp :
தகவல்களை பின்வரும் இலக்கங்களுல் ஒன்றிற்கு வாட்ஸப்பில் அனுப்பவும்
* +94 72 610 7338
* +94 76 383 7373
* +94 71 031 2915

எனவே, உங்களுடைய Batch களில் எவராவது ஒருவர் தாமாக முன்வந்து, தங்களுடைய Batch-இன் சார்பாக சேவை செய்ய தயாராக இருந்தால், வகுப்பு பிரதிநிதியாக பொறுப்பேற்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

வகுப்பு பிரதிநிதியின் முக்கிய பொறுப்புகள்:

# பழைய மாணவர் சங்கத்தின் WhatsApp குழுவில் அட்மின்களில் ஒருவராக செயல்படுதல்.

# தங்களது Batch நண்பர்களை உத்தியோகபூர்வ பழைய மாணவர் WhatsApp குழுவில் இணைத்தல்.

# OBA தொடர்பான முக்கிய அறிவிப்புகள் மற்றும் தகவல்களை Batch நண்பர்களிடம் பகிர்தல்.

# Batch மற்றும் OBA குழுவுக்கிடையே தொடர்பு பாலமாக செயல்படுதல்.

இது ஒரு பதவி மட்டுமல்ல; எங்களுடைய பாடசாலைக்கும், பழைய மாணவர் சங்கத்திற்கும் சேவை செய்யும் ஒரு வாய்ப்பாகும். உங்களின் சிறிய பங்களிப்பே, பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

எங்களுடைய பாடசாலையின் வளர்ச்சிக்கும், OBA-வின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் உங்களது ஆதரவு மிகவும் அவசியமானது.

நன்றி

N.M. நப்ரிஸ்
செயலாளர்
பழைய மாணவர் சங்கம்
பு/உமர் பாரூக் மகா வித்தியாலயம்
புளிச்சாக்குளம்

2025.12.15பு / உமர் பாரூக் மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்ற தரம் 9 இல் பயிலும் இரு மாணவர்கள், சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள அன...
16/12/2025

2025.12.15

பு / உமர் பாரூக் மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்ற தரம் 9 இல் பயிலும் இரு மாணவர்கள், சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் காரணமாக உயிரிழந்தமை எமது அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த துயரச் செய்தியைத் தொடர்ந்து, பாடசாலை அதிபர் அவர்களின் தலைமையில் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மறைந்த மாணவர்களின் இல்லங்களுக்கு சென்று, குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தனர்.

இந்த துயரமான நேரத்தில் எங்களின் ஆதரவும் ஆறுதலும் எப்போதும் அவர்களுடன் இருக்கும் என உறுதியளிக்கப்பட்டதுடன், மறைந்த மாணவர்களுக்காக பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த துயர சம்பவம் எமது பாடசாலை சமூகத்தை மிகுந்த மனவருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருடன் எங்களது அனுதாபமும் ஆதரவும் என்றும் நிலைத்திருக்கும்.

– செயலாளர்
பழைய மாணவர் சங்கம் (OBA)
உமர் பாரூக் மஹா வித்தியாலயம் (OFMV)




09/11/2025
22/09/2025

தேசிய மட்டத்தில் உமர் பாரூக் வரலாற்றுச் சாதனை.

இன்று கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ்மொழி தினப் போட்டி, "திறனாய்வுப் போட்டியில்" தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை புளிச்சாக்குளம் உமர் பாருக் மகா வித்தியாலய G.தரண்யா என்ற மாணவி தனதாக்கிக் கொண்டு சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவிக்கும் மாணவியை வழிகாட்டி தேசிய மட்டம் வரை அழைத்துச் சென்ற தமிழ்ப்பாட பொறுப்பாசிரியை ஏ.சுலைஹா ஆசிரியைக்கும் பாடசாலை சமூகம் வாழ்த்து தெரிவிக்கின்றது.

🎉 2024 (2025) க.பொ.த. சாதாரண தர பெறுபேறுகள்.
18/07/2025

🎉 2024 (2025) க.பொ.த. சாதாரண தர பெறுபேறுகள்.

புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தின் 41 ஆவது அதிபராக M.U.M. Shajahan (SLPS) நியமனம்..பழைய மாணவர் சங்கம் (OBA...
26/06/2025

புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தின் 41 ஆவது அதிபராக M.U.M. Shajahan (SLPS) நியமனம்..

பழைய மாணவர் சங்கம் (OBA) சார்பாக, எமது பாடசாலையின் 41 வது அதிபராக இன்று (26.06.2025) அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்ற M.U.M. Shajahan (SLPS) அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும், அன்பு பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவருடைய கல்விப் பயணமும் சேவையும்..

புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயம் மற்றும் சிலாபம் நஸ்ரியா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான இவர், A.M. உமர் மற்றும் S. ஹைரியா ஆகியோரின் புதல்வராவார்.

📌 1998 – உமர் பாரூக் பாடசாலையில் ஆசிரியராக தனது கல்விச் சேவையை ஆரம்பித்தார்.

📌 2013 – தாராக்குடிவில்லு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பணியாற்றினார்.

📌 2016 – அதே பாடசாலையில் தரம் பெற்ற அதிபராக பதவியேற்றார்.

📌 2018 – மீண்டும் உமர் பாரூக் பாடசாலையின் பிரதி அதிபராக திரும்பினார்.

📌 2024 – ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபராக பணியாற்றினார்.

இடைப்பட்ட காலத்தில் மூன்று ஆண்டுகள் வெளிநாட்டு கல்வி நிறுவனத்தில் நிர்வாக அனுபவமும் பெற்றுள்ளார்.

ஆன்மீக அறிவும் அனுபவவும்..

தகவல் தொழில்நுட்பத் துறையில் நுண்ணறிவு, ஆரம்பக் கல்வியில் ஆழ்ந்த அறிவு, மார்க்க விழிப்புணர்வு, தனித்துவமான தலைமைத்துவம் என்பன M.U.M. Shajahan அவர்களுக்குப் பெரும் பலமாய் விளங்குகின்றன.

“நல்ல ஆசிரியர் ஒரு வகுப்பை மாற்றுவார்; நல்ல அதிபர் ஒரு பாடசாலையையே மாற்றுவார்”

இந்தக் கூற்றை நிகழ்வாக நிரூபிக்கக்கூடிய ஆற்றல், அனுபவம் மற்றும் அர்ப்பணிப்பு இவரிடம் உறுதியாக உள்ளது.

இந்நியமனம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், நலன்விரும்பிகள் ஆகியோரின் ஒருமித்த பரிந்துரையின் அடிப்படையில், புத்தளம் வடமேல் மாகாணக் கல்வித் திணைக்களம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் தலைமையில் ஒரு புதிய தொடக்கம்…

உங்கள் தலைமையில் எமது பாடசாலை புதிய சாதனைகளை நோக்கிச் செல்லும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
உங்கள் சேவையில் வெற்றி என்றும் நிலைத்திருக்கட்டும்!

உமர் பாரூக் OBA – எப்போதும் உங்கள் பக்கமே!

செயலாளர்,
பழைய மாணவர் சங்கம்,
புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயம்.

அதிபர் அஷ் ஷேய்க் M.U.M. SHAREEK (BA, MPA, JP[WI]) அவர்களுக்கு பழைய மாணவர்கள் சங்கத்தின் சார்பில் பாராட்டும் மற்றும் நன்...
25/06/2025

அதிபர் அஷ் ஷேய்க் M.U.M. SHAREEK (BA, MPA, JP[WI]) அவர்களுக்கு பழைய மாணவர்கள் சங்கத்தின் சார்பில் பாராட்டும் மற்றும் நன்றியும்..

உமர் சித்தி ஹைரியா தம்பதியரின் வளர்ப்பு சிகரம்,
கல்வியிலும், மார்க்கத்திலும், நிர்வாகத்திலும் ஒளிவிளக்காக விளங்கிய, அல்ஹாஜ் அஷ் ஷேக் M.U.M. SHAREEK (BA, MPA, JP[WI]) அவர்கள், 32 ஆண்டு கால ஆசிரிய – அதிபர் சேவையை நிறைவு செய்து, இன்று (25.06.2025) ஓய்வு பெறும் இந்த சிறப்புநாளில்,

புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் சங்கத்தின் சார்பில், எமது நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும், நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

“ஓர் மாணவராக தொடங்கிய பயணம் – ஓர் அதிபராக நிறைவு”

அதிபர் ஷேய்க் ஷரீக் அவர்கள்,
தம் கல்விப் பயணத்தைத் துவக்கிய இந்தப் பள்ளியிலேயே பின்னர் அதிபராக நியமிக்கப்பட்டது,
ஒரு ஆசிரியருக்கே உரிய உயரிய மரியாதையின் சான்றாகும்.

அவரது தலைமையில், நம் பாடசாலை கல்வியில், ஒழுக்கத்தில், போட்டிப் பரீட்சைகளில், விளையாட்டிலும், வளாக அபிவிருத்தியிலும்
ஒரு பொற்கால வளர்ச்சி பாதையை கண்டுள்ளது.

மனநிறைவு தரும் மாணவர்களின் ஒளிபுகழ்..

அவரது 32 ஆண்டுகளுக்குள், பல மருத்துவர்கள், இன்ஜினியர்கள், சட்டத்துறை நிபுணர்கள், சமுதாய சேவையாளர்கள் உருவானனர்.

நாங்கள் – பழைய மாணவர்கள் – இன்று பெற்றுக்கொண்ட உயரம், அவரது ஒவ்வொரு மாணிக்கச் சொற்களாலும், ஒவ்வொரு நேர்மையுள்ள திட்டங்களாலும் கட்டமைக்கப்பட்டது.

பாடசாலை மட்டுமல்ல – சமூகமும் நன்றி கூறும்..

பாடசாலை வளாகம் மட்டும் அல்ல,
மஸ்ஜித், மார்க்கப்பணி, ஸகாத், சமுதாய முன்னேற்றம் – இவை அனைத்திலும் அவர் தனது பங்களிப்பை அழுத்தமுடன் நமது சமூகத்துக்கு தந்துள்ளார்.

பணிவும், பரிவும், பொறுமையும், முடிவு எடுக்கும் திறமை – நமக்கு முன்னுதாரணம்..

அன்புடனும் நன்றியுடனும்…

அதிபர் அவர்களது ஓய்வுக்காலம்,
ஆரோக்கியமும், அமைதியும், ஆனந்தமும் நிறைந்ததாக அமைய பழைய மாணவர்களான எமக்கு மட்டுமல்ல, எதிர்கால சந்ததிக்கும் அவர் வாழ்கை ஒரு பாடமாக அமையும்.

“கல்வி வழியில் பயணித்தவன், காலத்தின் வழிகாட்டி ஆகிறான்”

அந்த வகையில்,
அதிபர் அஷ் ஷேய்க் M.U.M. SHAREEK அவர்களின் சேவை, நம் பாடசாலையின் வரலாற்றில் ஒளிரும் ஒரு அத்தியாயமாக இருக்கும்.

அன்புடன்,

செயலாளர்,
பழைய மாணவர்கள் சங்கம் (OBA),
புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயம்.

On this momentous occasion of Sri Lanka's 77th Independence Day, the Old Boys' Association of Omer Farook College extend...
04/02/2025

On this momentous occasion of Sri Lanka's 77th Independence Day, the Old Boys' Association of Omer Farook College extends its heartfelt wishes to the nation and its people. As we celebrate the freedom and sovereignty of our beloved country, we reflect on the sacrifices made by our forefathers and reaffirm our commitment to upholding the values of unity, peace, and progress.

May this Independence Day inspire us to work together for a brighter future, fostering harmony and prosperity for all Sri Lankans. Let us take pride in our rich heritage and strive to contribute meaningfully to the nation's growth and development.

Happy 77th Independence Day, Sri Lanka!
Jayawewa!

- OBA of Omer Farook College

உமர் பாரூக் மகா விதியாலயத்தின் வளர்சிக்காக அயராது உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கின்ற அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் “ஆசி...
06/10/2024

உமர் பாரூக் மகா விதியாலயத்தின் வளர்சிக்காக அயராது உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கின்ற அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் “ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்”

உமர் பாரூக் கலையகத்திற்கு பெருமை சேர்த்த சாதாரண தர (O/L) மாணவர்கள்
01/10/2024

உமர் பாரூக் கலையகத்திற்கு பெருமை சேர்த்த சாதாரண தர (O/L) மாணவர்கள்

Address

Pulichchakulam
Puttalam
61246

Telephone

0771815478

Website

Alerts

Be the first to know and let us send you an email when OBA of Omer Farook M.V posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to OBA of Omer Farook M.V:

Share