Mutur Umpires Association - UDPM

Mutur Umpires Association - UDPM Umpire Development & Panel of Mutur

UDPM General Meeting......23/09/2023Pertaining Umpire Development & School Cricket Development for Mutur.Snaps - UDPM Me...
23/09/2023

UDPM General Meeting......
23/09/2023
Pertaining Umpire Development & School Cricket Development for Mutur.
Snaps - UDPM Media Unit.

UDPM இல் அங்கம் வகிக்கும் 13 நடுவர்கள் இலங்கை கிரிக்கட் நடுவர்களாக தெரிவு.இந்த வருடம் (2023) மே மாதம் மட்டக்களப்பு மற்று...
13/07/2023

UDPM இல் அங்கம் வகிக்கும் 13 நடுவர்கள் இலங்கை கிரிக்கட் நடுவர்களாக தெரிவு.

இந்த வருடம் (2023) மே மாதம் மட்டக்களப்பு மற்றும் வவுனியாவில் இடம்பெற்ற இலங்கை கிரிகட் நடுவர்கள் தரம் - 5 இற்கான போட்டிப்பரீடசையில் எமது UDPM நடுவர்கள் 13 பேர் தோற்றி, தோற்றிய அனைவரும் வெட்டுபுள்ளி 70 இற்கு மேல் பெற்று சிறப்பு சித்தி எய்தனர். எல்லா புகழும் இறைவனுக்கே!! இந்த நிகழ்வானது மூதூர் கிரிக்கட்டின் ஒரு இமாலய சாதனையாக கருதப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களினை மையப்படுத்தி இலங்கை கிரிக்கட் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட மேற்படி நடுவர் தரம் ஐந்திற்கான போட்டி பரீட்சையில் 95 புள்ளிகளை பெற்று நஹீம் இஜாஸ் அஹமட் அவர்கள் வட மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் பரீட்சைக்கு தோற்றிய 198 பேரில் முதலிடத்தினை பெற்று மூதூர் மண்ணிற்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். மேலும் கிழக்கு மாகாணத்திற்கான முதல் நான்கு இடங்களினையும் எமது UDPM அமைப்பின் அங்கத்தவர்கள் தக்கவைத்து மேலும் மூதூருக்கும் திருமலை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தனர். நஹீம் இஜாஸ் அஹமட் இற்கு அடுத்ததாக கிழக்கு மாகாணத்தின் முறையே 2, 3, 4 காவது இடங்களினை ஐதுரூஸ் முஹம்மட் நஹ்பீஸ் 91 புள்ளிகள், பசுருதீன் முஹமட் நஸீம் 91 புள்ளிகள் மற்றும் அப்துல் லதீப் முஹம்மட் பர்சாத் 90 புள்ளிகள் ஆகியோர்களே குறித்த சாதனையினை நிகழ்த்தியவர்கள் ஆவார்கள்.

சுமார் எட்டு வருடங்களுக்கு பிறகு இலங்கை கிரிக்கட் சபையினால் நடாத்தப்பட்ட மேற்படி போட்டிப்பரீட்சையில் திருமலை மாவட்டத்தில் மொத்தம் 20 பேர்வரையில் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

எமது UDPM அமைப்பு சார்பாக கீழ்வருவோர்களே சிறப்பு சித்தி எய்தவர்கள் ஆவார்கள்.

01. 95 புள்ளிகள் - நஹீம் இஜாஸ் அஹமட் (Technical Officer)
02. 91 புள்ளிகள் - ஐதுரூஸ் முஹம்மட் நஹ்பீஸ் (Child Rights Promoting Officer)
03. 91 புள்ளிகள் - பசுருதீன் முஹமட் நஸீம் (Eastern University)
04. 90 புள்ளிகள் - அப்துல் லதீப் முஹம்மட் பர்சாத் (Development Officer, MPS)
05. 89 புள்ளிகள் - தௌபீக் முஹம்மட் பயாஸ் (Development Officer, Agrarian)
06. 86.5 புள்ளிகள் - ஜமால்தீன் முஹம்மட் ஜஸ்றூன் (GN Officer, MUTUR DS.
07. 86 புள்ளிகள் - ஜஹாங்கீர் முஹம்மட் சப்றாஸ் (Teacher, MCC)
08. 85 புள்ளிகள் - ஜீவரத்னம் கார்தீபன் (Field Officer, World Vision)
09. 83.5 புள்ளிகள் - இமாம் சாஹிப் முஹம்மட் நஜ்றான் (ICT Assistant, Health Department)
10. 83 புள்ளிகள் - புஹாரி முஹம்மட் சஜான் (Land Field Officer)
11. 82 புள்ளிகள் - முஹம்மட் ரபீக் முஹம்மட் ஹில்மி (Development Officer)
12. 82 புள்ளிகள் - கசுதீன் முஹம்மட் அஜ்வாத் (Manager, Abans)
13. 81.5 புள்ளிகள் - முஹம்மட் ரபீக் முஹம்மட் சிஹான் (Development Officer, BH Mutur)

மேற்படி சித்தியடைந்த நடுவர்களுக்கான நியமனங்கள் மற்றும் சான்றிதல் வழங்கும் நிகழ்வுகள் மிக விரைவில் கொழும்பு கெத்தாராம ஆர் பிரேமதாஸ சர்வதேச கிரிக்கட் மைதானத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது.

இந்த வரலாற்று ரீதியான சாதனையினை நிகழ்த்துவதற்கு பெரிதும் உதவிய எமதூர் மண்ணின் முதலாவது இலங்கை கிரிக்கட் நடுவரும், இங்கிலாந்து கிரிகட் சபையின் தரம் - 2 இன் நடுவரும், இலங்கை கிரிக்கட் சபையின் தரம் - 4 இன் நடுவருவருமாகிய சிஹான் சுஹூத் அவர்களுக்கும், நிருவாக அங்கத்தவர்களுக்கும், UDPM இன் சகல அங்கத்தவர்களுக்கும், மேலும் இலங்கை கிரிக்கட்டின் நடுவர்கள் குழாத்திற்கும் UDPM சார்பாக வாழ்துக்களை தெரிவிப்பதுடன் உங்களின் எதிர்கால கிரிக்கட் நடுவர் பயணம் சர்வதேசம்வரை செல்ல எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

UDPM Media Unit

மூதூர் கிரிக்கட் சங்கத்தினால் (MCA) நடாத்தப்பட்ட Dr.ZIYA CHAMPIONS T20 TROPHY தொடரில் நடுவர்களாக இலங்கை கிரிக்கட் சபையின...
20/08/2022

மூதூர் கிரிக்கட் சங்கத்தினால் (MCA) நடாத்தப்பட்ட Dr.ZIYA CHAMPIONS T20 TROPHY தொடரில் நடுவர்களாக இலங்கை கிரிக்கட் சபையின் அங்கீகாரம் பெற்ற எமது Udpm Mutur நடுவர்கள் சிறப்பாக பணியாற்றியிருந்தனர்.

இத்தொடரின் இறுதிப் போட்டி நேற்று 19.08.2022 ம் திகதி மாலை வேளை MCC மைதானத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

எமது வாழ்த்துக்கள்!இலங்கையின் முதலாவது இங்கிலாந்து கவுன்டி போட்டிகளுக்கான நடுவராக எமது UDPM ஸ்தாபக போஷகரும்,  இலங்கை கிர...
28/07/2022

எமது வாழ்த்துக்கள்!

இலங்கையின் முதலாவது இங்கிலாந்து கவுன்டி போட்டிகளுக்கான நடுவராக எமது UDPM ஸ்தாபக போஷகரும், இலங்கை கிரிக்கட் நடுவருமான சிஹான் சுஹூட் அவர்கள் தெரிவு!

மூதூரின் புகழினை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் சென்ற மண்ணின் மைந்தன், தேசிய நடுவர் சிஹான் சுஹூட் அவர்களை வாழ்த்துவதில் Udpm Mutur பெருமகிழ்ச்சி அடைகின்றது.

இலங்கை கிரிக்கட் வரலாற்றில் முதன் முதலாக இங்கிலாந்து கவுன்டி கிரிக்கட்டின் (பிராந்திய) புகழ்பெற்ற பிராந்திய கிரிக்கட்டான மஞ்செஸ்டர் கிரிக்கட் லீக்கிற்கு 2022 பருவகால கிரிக்கட் தொடருக்கு இங்கிலாந்து கிரிக்கட் சபையின் அங்கீகாரம் பெற்று நான்கு மாத ஒப்பந்த அடிப்படையில் நடுவர் பணியினை மேற்கொள்ள இன்று 28.07.2022 ம் திகதி இங்கிலாந்தின் மஞ்செஸ்டருக்கு பயணமாகியுள்ளார்.

மறைந்த முன்னாள் அதிபரும், ஆங்கில ஆசிரியருமாகிய முஹம்மது இப்றாஹிம் யுபுனு சுஹுத் மற்றும் மசாஹினா சுஹுத் ஆகியோரின் மூன்றாவது மகனான சிஹான் சுஹுத் அவர்கள் மூதூர் மத்திய கல்லூரி, திருமலை இந்துக் கல்லூரி மற்றும் மாவனல்லை ஸாஹிரா கல்லூரிகளின் பழைய மாணவராவார்.

2016 ம் ஆண்டில் சிறி லங்கா கிரிக்கட்டினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட நடுவர் போட்டிப் பரீட்சையில் ஆங்கில மொழி மூலம் சித்தி பெற்று மூதூரின் முதலாவது இலங்கை கிரிக்கட் நடுவராக எமதூர் பெயரினை நாடறியச் செய்தார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மூதூரின் கடின பந்து கிரிக்கட் வளர்ச்சிக்கு முறையான திட்டங்கள் பல வகுத்து மூதூர் வெஸ்டர்ன் வோறியஸ் எனும் தெரிவு அணியினை உருவாக்கி மாவட்ட மட்டத்தில் பலமான அணியாக அதனை வளர்த்து பின்னர் மூதூரில் பல முன்னனி கடின பபந்து கிரிக்கட் கழகங்கள் தோற்றம் பெற காரணமாக இருந்தார். மேலும் பாடசாலை மட்டத்திலான கிரிக்கட்டினை மூதூரில் அறிமுகப்படுத்தும் தொலை நோக்குடன் மூதூர் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் அல் ஹாஜ்.A.H. பசீர் சேரின் தலைமையில் 19 வயதுக்குற்பட்ட அணியினை உருவாக்கி,பயிற்றுவித்து வழிநடாத்தி மாகாண மட்டம் வரை அவ்வணியை கொண்டு சென்று மூதூர் வலய மட்ட பாடசாலைகள் அனைத்திற்கும் முன்மாதிரியாக மூதூர் மத்திய கல்லூரி வரலாற்றுச் சாதனை படைப்பதற்கு உந்து சக்தியாக விளங்கினார்.

மேலும் தனது நடுவர் துறையானது தன்னுடன் மாத்திரம் நின்றுவிடாமல் மூதூர், திருமலை மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேலோங்கச்செய்யும் வகையில் எமது Udpm அமைப்பினை ஸ்தாபித்து தன் மூலம் பல புதிய நடுவர்களை பயிற்றுவித்து 2019 இல் இடம்பெற்ற இலங்கை நடுவர்கள் (ACUSL) சங்க பரீட்சையில் எமதூரை சேர்ந்த சிறந்த கிரிகட் வீரர்கள் மற்றும் ஆர்வலர்கள் 14 பேர் ஒரே தடவையில் சித்தி பெற்று மூதூருக்கான வரலாற்று சாதனையாக பதிவு செய்தார் எம் மண் ஈன்றெடுத்த மைந்தன் சிஹான் சுஹூட் அவர்கள்.

அத்துடன் மூதூர் மத்திய கல்லூரியின் முழு நேர கிரிக்கட் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய சிஹான் சுகூத் அவர்கள் திருமலை ரத்னஜோதி வித்யார்த்தன கல்லூரியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றினார்.

கிழக்கு மாகாண பாடசாலை மட்ட 19 வயதுக்குற்பட்ட கிழக்கின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் இரட்டை சதத்தினை பதிவு செய்து சாதனை நிகழ்த்திய மூதூர் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை வீரர் உனைஸ் முஹமட் நுபைல் என்பவரின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.

மேலும் 2020 ம் காலப்பகுதியில் இலங்கை கிரிக்கட்டினால் நடாத்தப்பட்ட நடுவர்களுக்கான ப்ரோமோசன் பரீட்சை மற்றும் வைவாவில் மெரிட் அடிப்படையில் சித்திபெற்று கிழக்கு மாகாணத்தின் சாதனையாளராக திகழ்ந்தார் சிஹான் சுஹுட் அவர்கள்.

இவ்வாறாக கிரிகட் துறையில் எண்ணற்ற அறிவும்,ஆளுமையும் மற்றும் அனுபவமும் கொண்டு தனது அயராத முயற்சியாலும், அபரீத திறமையாலும் இறைவனின் உதவியோடும், குடும்பம்,நண்பர்களின் ஒத்துழைப்போடும் மூதூரின் புகழை சர்வதேசத்திற்கு அறியச் செய்த எமது மைப்பின் ஸ்தாபக போஷகரும்,தேசிய நடுருமாகிய Mr.Y.S.M.ZIHAN SUHOOD அவர்களை கௌரவித்து வழியனுப்பும் நிகழ்வு Udpm அமைப்பின் நடுவர்கள் பங்குபற்றுதலோடு கடந்த செவ்வாய்க் கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது எமது நடுவர்கள் அவருடனான அனுபவங்களைப் பகிர்ந்ததோடு, அவரும் தனது பயண நடுவர் பணியின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அந்த அடிப்படையில் தனது சர்வதேச நடுவர் கனவின் முதற் படியில் கால் பதித்து தனது பயணத்தை ஆரம்பித்திருக்கும் மூதூர் மண்ணின் மைந்தன் Mr. Zihan Suhood அவர்களின் இந்த சர்வதேச நடுவருக்கான பயணமானது சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைய எமது மூதூர் UDPM நடுவர் சங்கம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

அண்மையில் நடைபெற்று முடிந்த திருகோணமலை நகர பிரதேச செயலக (DS Cricket Tournament) மட்ட அணிகள் பங்குபற்றிய மென்பந்து கிரிகட...
26/05/2022

அண்மையில் நடைபெற்று முடிந்த திருகோணமலை நகர பிரதேச செயலக (DS Cricket Tournament) மட்ட அணிகள் பங்குபற்றிய மென்பந்து கிரிகட் தொடரில் சிறப்பாக கடமையாற்றிய எமது நடுவர் குழாம்.

ஆழ்ந்த அனுதாபங்கள்👏திருமலை சிவபாலசுந்தரம் மயூரன் யானை தாக்கி மரணம்!திருகோணமலையைச் சேர்ந்த சிவபாலசுந்தரம் மயூரன் (33வயது)...
20/12/2021

ஆழ்ந்த அனுதாபங்கள்👏

திருமலை சிவபாலசுந்தரம் மயூரன் யானை தாக்கி மரணம்!

திருகோணமலையைச் சேர்ந்த சிவபாலசுந்தரம் மயூரன் (33வயது) அவர்கள் 69வது தேசிய பூப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வு கொழும்பில் நடைபெற்று வருகின்ற நிலையில் இவர் அதன் நடுவராக செயற்பட்டு வந்துள்ளார்.

நேற்று 19.12.2021 ம் திகதி கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி ரயிலில் வருகை தந்த அவர்,மீண்டும் மோட்டார் சைக்கிளில் திருக்கோணமலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது வீதியை கடக்க முற்பட்ட யானை இவரை தாக்கி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி மூலம்
-(பதுர்தீன் சியானா) & சிவா ராமசாமி-

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான மயூரன்,கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ துறையின் பட்டதாரியாகவும் பட்டம் பெற்றுக் கொண்டவர் .

திருகோணமலை மண்ணில் மட்டுமல்லாது இலங்கையின் விளையாட்டுத் துறையின் அபரிமிதமான சாதனையாளராகவும் தன்னை அர்ப்பணித்து செயலாற்றியவர் அமரர்.மயூரன் ஆவார்.

இலங்கையின் பல் துறை விளையாட்டுத்துறை ஆளுமைகளில் ஒருவராக, மிகச் சிறந்த விளையாட்டு நடுவர்களுள் ஒருவராக பல்வேறு கட்டங்களில் சித்திபெற்ற திறமையாளன்,மெய்வல்லுனர்களை வழிப்படுத்துவதற்கான ஒரு வழிகாட்டல் நூல் ஒன்றையும் மயூரன் எழுதி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஶ்ரீ லங்கா கிரிக்கட்டின் Level 5 கிரிக்கட் நடுவராகவும், ACUSL நடுவராகவும் தெரிவாகி சிறப்பாக செயற்பட்டு வந்தவர் இவர்.இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் Level 2 நடுவராகவும் மயூரன் விளங்கியவர். 69வது தேசிய பூப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வு கொழும்பில் நடைபெற்ற நிலையில், அதன் நடுவராக செயற்பட்டுவிட்டு திருமலை திரும்புகையிலேயே இவரது இவ் எதிர்பாராத மரணமும் சம்பவித்துள்ளது.

தன் வாழ்நாள் முழுவதையும் விளையாட்டுக்காக அர்ப்பணித்த ஒருவர் இளம் வயதிலேயே இயற்கை எய்தியமை திருகோணமலை மாவட்டம் மட்டுமல்ல முழு நாட்டின் விளையாட்டுத் துறைக்குமே பேரிழப்பாகும்.

அமரர்.மயூரனின் ஆத்ம சாந்திக்காக மூதூர் நடுவர் சங்கம் (UDPM) ன் ஆத்மார்த்த பிரார்த்தனைகள் 🙏

விரைவாக பூரண நலம்பெற பிராத்திக்கின்றோம்!! எமது மூதூர் நடுவர் சங்கத்தின் (UDPM) போசகரும்,அங்கத்தவரும் அல்ஹிலால் மத்திய கல...
25/08/2021

விரைவாக பூரண நலம்பெற பிராத்திக்கின்றோம்!!

எமது மூதூர் நடுவர் சங்கத்தின் (UDPM) போசகரும்,அங்கத்தவரும் அல்ஹிலால் மத்திய கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியருமான நசீர் - முஹம்மது றிப்கான் (ஆசிரியர்) அவர்கள் கொரோனா தொற்றுகுள்ளாகி ஈச்சிலம்பற்று தனிமைப்படுத்தல் முகாமில் கடந்த சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது கந்தளாய் வைத்தியசாலையிலுள்ள அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவர் விரைவாக பூரண சுகம் பெற்று நலமுடன் வீடு திரும்ப எமது Udpm Mutur சங்கம் சார்பாக பிராத்திக்கிறோம்.

நிருவாகம்
UDPM - Mutur

 ! 💐Mr. Shammi Silva, the President of Sri Lanka Cricket (SLC), has been appointed as the chairman of the Asian Cricket ...
04/06/2021

! 💐

Mr. Shammi Silva, the President of Sri Lanka Cricket (SLC), has been appointed as the chairman of the Asian Cricket Council (ACC) Finance & Marketing Committee!

Mutur Umpires Association - Udpm Mutur

25/05/2021

Welcome to our official page & give your support.
-Admin-

Address

Mutur

Alerts

Be the first to know and let us send you an email when Mutur Umpires Association - UDPM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mutur Umpires Association - UDPM:

Share

Category