30/12/2022
*மஸ்கெலியா சென்ஜோசப் கல்லூரியின் பழைய மாணவர் சங்க ஆண்டு பொதுக் கூட்டமும் நிறைவேற்று குழு தெரிவும்.*
மஸ்கெலியா சென்.ஜோசப் (தேசிய பாடசாலை) கல்லூரியின் பழைய மாணவர் சங்க ஆண்டு பொதுக்கூட்டம் கடந்த 26 ஆம் திகதி (திங்கட்கிழமை) கல்லூரி அதிபர் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. கல்லூரியின் சிரேஷ்ட பழைய மாணவரும், கல்லூரியின் தற்கால அதிபர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமான திரு. எஸ். பி. பரமேஸ்வரன் ஐயா அவர்களின் தலைமையுரையை தொடர்ந்து அவர் ஓய்வு பெறும் நிலையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து மலையகத்தின் பல்வேறு பாடசாலைகளில் அவர் ஆற்றிய சேவையை பாராட்டி அனைத்து பழைய மாணவர்கள் சார்பிலும் பழைய மாணவர் சங்கத்தினால் அவருக்கு கெளரவம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களில் நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பழைய மாணவர்களின் பங்களிப்புடன் பழைய மாணவர் சங்கத்தினால் பாடசாலைக்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் செயற்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் தற்கால செயலாளரினால் விளக்கமளிக்கப்பட்டது, தொடர்ந்து தற்கால பொருளாளரினால் கணக்கு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இரண்டும் திருத்தங்களுடன் முறையாக அறிக்கையிட ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.பின்னராக புதிய நிறைவேற்றுக்குழு மற்றும் உபகுழுக்களின் உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெற்றது.
பாடசாலையின் புதிய அதிபர் பழைய மாணவர் சங்க தலைவராகவும், உப தலைவராக திரு. எஸ்.சேகர் (ஹட்டன் கல்வி பணிமனை), செயலாளராக திரு. எஸ்.ஹெரோசன்குமார்(சட்டத்தரணி), உப செயலாளராக திரு. டீ. கமலகாந்தன்(வர்த்தகர்), பொருளாளராக திரு. தயாநந்தன்(ஆசிரிய ஆலோசகர்), உதவி பொருளாளராக திரு.ஜெ. கி ரிஷாந்தன்(வர்த்தகர்) மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களாக சிரேஷ்ட பழைய மாணவர்களான திரு.எஸ். மோகன்ராஜ், திரு.டி. கங்காதரன், திரு.எம் .கிருபாகரன், திருமதி.எஸ். சத்தியவாணி மற்றும், திரு.எஸ்.பாரதன், திரு.என்.சதா, திரு.எஸ்.சதீஸ்குமார்,திருமதி கே. வேணிகுமாரி, திருமதி எம்.திவ்யா திரு. ஜே.கிருஷ்ணகுமார், திரு.எஸ்.உமாகரன், திரு.வை.மனோபிரசாத், மொத்தமாக பன்னிரெண்டு பேரும் தெரிவு செய்யப்பட்டனர், மேலும் பழைய மாணவர் சங்க எதிர்கால செயற்பாடுகளை திறனாக்கும் வகையில் கல்வி, விளையாட்டு, கலை, ஊடகம், சுகாதாரம், பெளதீகவளம் போன்ற குழுக்களின் தலைவர்களாக முறையே திரு.எஸ்.ராஜவீரன், திரு.பி.ராஜ்குமார், திரு.எஸ்.சிவபிரதாப்ஸ், திரு.தி. சத்தியசிறி, திரு. ஏ.சந்திரஹாசன், திரு.கே.கிரிஷாந்தன் மற்றும் மேற்படி குழுக்களுக்கான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இறுதியாக நன்றியுரையுடன் ஆண்டு பொதுக்கூட்டம் சிறப்பாக நிறைவுபெற்றது.
செயலாளர்.
ச.ஹெரோசன் குமார்.