Benzene Sports Club

Benzene Sports Club Benzene Sports Club
Benzene Social Service

📍 Maruthamunai

அஸ்ஸலாமு அலைக்கும்!அல்ஹம்துளில்லாஹ், எமது பென்சீன் விளையாட்டுக் கழகத்தின் வீரரும், கழகத்தின் பொருளாளருமான UAM.JAREETH (N...
20/10/2025

அஸ்ஸலாமு அலைக்கும்!

அல்ஹம்துளில்லாஹ், எமது பென்சீன் விளையாட்டுக் கழகத்தின் வீரரும், கழகத்தின் பொருளாளருமான UAM.JAREETH (NWSDB) அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்ஸின் மருதமுனை 4 இற்கான இளைஞர் அமைப்பாளராக கட்சியின் தலைவர் மரியாதைக்குரிய ரௌப் ஹக்கீமிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

இன்ஷாஅல்லாஹ், விரைவில் அவரது பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும், இதற்கான அலுவலகம் திறக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இப் பொறுப்பினை திறன்பட செயலாற்ற எமது கழகத்தினால் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம், நன்றி!

அஸ்ஸலாமு அலைக்கும்!எமது பென்சீன் விளையாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு நாடாத்தப்பட்ட Benzene Night Trophy - 2025 இ...
27/05/2025

அஸ்ஸலாமு அலைக்கும்!

எமது பென்சீன் விளையாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு நாடாத்தப்பட்ட Benzene Night Trophy - 2025 இல் எமது பென்சீன் அணி இறுதிப் போட்டியில் பலமான பிரிஸ்பேன் அணியினை வீழ்த்தி சாம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.

இத்தொடரில் சிறந்த முறையில் அனைத்து போட்டிகளிலும் விளையாடி, அனைத்து வீரர்களின் ஒத்துழைப்புடனும், ஒற்றுமையுடனும் செயற்பட்டு இவ்வெற்றியை தனதாக்கிக் கொண்டது எமது அணி.

அதே போன்று, இத்தொடர் சிறந்த முறையில் நடந்தேற உதவிய அனைத்து அனுசரணையாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், எமது அணியின் நிருவாகத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே போல இத்தொடரில் சிறந்த முறையில் பங்கு பற்றிய அனைத்து அணிகளுக்கும் நன்றியை தெரிவிக்கின்றோம். அத்துடன் சுற்றுப் போட்டித்தொடருக்கு ஆதரவு வழங்கிய மருதமுனை கிரிக்கட் சங்கத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த வருடம் இடம்பெற்ற இரு இரவு நேர தொடரிலும் எமது அணியினரே சாம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்ஸலாமு அலைக்கும்!எமது அணியினால் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் Benzene Night Trophy - 2025 இன் இரு அரையிறுதி போட்டிகளும...
26/05/2025

அஸ்ஸலாமு அலைக்கும்!

எமது அணியினால் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் Benzene Night Trophy - 2025 இன் இரு அரையிறுதி போட்டிகளும், பிரம்மாண்டமான இறுதிப் போட்டியும், இறுதி நாள் நிகழ்வுகளும் இன்ஷா அல்லாஹ் இன்றைய தினம் இடம் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே அனைத்து கிரிக்கெட் ஆதரவாளர்களையும் உரிய நேரத்துக்கு வருகை தந்து போட்டிகளை கண்டு களிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

அஸ்ஸலாமு அலைக்கும்!எமது அணியினால் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் Benzene Night Trophy - 2025 இன் மூன்றாம் நாளிற்கான போட்ட...
26/05/2025

அஸ்ஸலாமு அலைக்கும்!

எமது அணியினால் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் Benzene Night Trophy - 2025 இன் மூன்றாம் நாளிற்கான போட்டிகள் சிறந்த முறையில் இடம்பெற்றன.

 அஸ்ஸலாமு அலைக்கும்!இன்ஷா அல்லாஹ் எமது மின்னொளி கிறிக்கெட் சுற்றுத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறும். ஆகவே இன்றைய தினம் 25/0...
25/05/2025



அஸ்ஸலாமு அலைக்கும்!

இன்ஷா அல்லாஹ் எமது மின்னொளி கிறிக்கெட் சுற்றுத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறும்.
ஆகவே இன்றைய தினம் 25/05/2025 பங்குபற்றும் கழகங்கள் உரிய நேரத்துக்கு வருகை தந்து எமது சுற்றுத்தொடரை சிறந்த முறையில் நடாத்தி முடிக்க ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அஸ்ஸலாமு அலைக்கும்!எமது அணியினால் நடாத்தப் பட்டுக்கொண்டிருக்கும் Benzene Night Trophy - 2025 இற்கான இரண்டாம் நாள் போட்டி...
25/05/2025

அஸ்ஸலாமு அலைக்கும்!

எமது அணியினால் நடாத்தப் பட்டுக்கொண்டிருக்கும் Benzene Night Trophy - 2025 இற்கான இரண்டாம் நாள் போட்டிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தேறின, அல்ஹம்துலில்லாஹ்.

 அஸ்ஸலாமு அலைக்கும்!இன்ஷா அல்லாஹ் எமது மின்னொளி கிறிக்கெட் சுற்றுத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறும். ஆகவே இன்றைய தினம் 24/0...
24/05/2025



அஸ்ஸலாமு அலைக்கும்!

இன்ஷா அல்லாஹ் எமது மின்னொளி கிறிக்கெட் சுற்றுத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறும்.
ஆகவே இன்றைய தினம் 24/05/2025 பங்குபற்றும் கழகங்கள் உரிய நேரத்துக்கு வருகை தந்து எமது சுற்றுத்தொடரை சிறந்த முறையில் நடாத்தி முடிக்க ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அஸ்ஸலாமு அலைக்கும்!எமது பென்சீன் விளையாட்டுக் கழகத்தினால் நடத்த திட்டமிட்ட Benzene Night Trophy நேற்றைய தினம் சிறப்பான ம...
24/05/2025

அஸ்ஸலாமு அலைக்கும்!

எமது பென்சீன் விளையாட்டுக் கழகத்தினால் நடத்த திட்டமிட்ட Benzene Night Trophy நேற்றைய தினம்
சிறப்பான முறையில் ஆரம்பம் செய்யப்பட்டது.

இதில் முதல் நாளிற்கான போட்டிகள் சிறந்த முறையில் திட்டமிட்ட படி நடத்தி முடிக்கப்பட்டது.

இன்ஷா அல்லாஹ் இரண்டாம் நாளிற்கான போட்டிகள் இன்றைய தினம் இடம்பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Assalamu Alaikum!Let’s ready to witness the beautiful cricket games bewtween BENZENE and BRISBANE.We warmly welcome all ...
08/05/2025

Assalamu Alaikum!

Let’s ready to witness the beautiful cricket games bewtween BENZENE and BRISBANE.

We warmly welcome all our cricket fans to enjoy the night through the cricket.

Venue :- Mashoor Moulana Play Ground
Date :- 2025.05.10
Time :- 7.00 PM

Organized by Benzene SC

அஸ்ஸலாமு அலைக்கும் ;அல்ஹம்துலில்லாஹ்!மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானம் மின்னொளி மைதானமாக மாற்றப்பட்டதன் பின் மருத...
28/04/2025

அஸ்ஸலாமு அலைக்கும் ;

அல்ஹம்துலில்லாஹ்!

மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானம் மின்னொளி மைதானமாக மாற்றப்பட்டதன் பின் மருதம் விளையாட்டுக் கழகத்தால் முதன் முதலாக நடத்தப்பட்ட சுற்றுப்போட்டித் தொடரில் எமது பென்சீன் விளயாட்டுக் கழகம் சம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது மருதமுனை கிரிக்கெட் வரலாற்றில் பதியப்பட வேண்டிய விடயமாகும்.

இத்தொடரில் எமது கழகமானது,
முன்காலிறிதியில் கல்பனா அணியையும், காலிறிதியில் அஸ்னல் அணியையும், அரையிறிதியில் யுனிவெர்ஸ் அணியையும், இறுதியில் மருதம் அணியையும் வீழ்த்தி இச் சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.

இச் சாம்பியன் பட்டத்துடன் எமது அணியானது 6வது சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டது.

இவ்வருடம் இடம் பெற்ற இரண்டு தொடர்களில் அரையிறிதியில் தோல்வியை தழுவியிருந்தாலும் எமது அணி வீரர்களின் பொறுமையாலும், அவர்களின் திறமையினாலும், அல்லாஹ்வின் உதவியுடனும் இவ்வருடத்தின் மூன்றாவது தொடரில் சாம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்டது எமது பென்சின் கழகம்.

இவ்வெற்றிக்கு உழைத்த எமது அணி வீரர்களுக்கும், எம்முடன் பக்க பலமாக இருந்த எமது அணியின் நிருவாக உறுப்பினர்களுக்கும், எமது அணியின் ஆதரவாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன் இச் சுற்றுப்போட்டியைத் திறன்பட நடத்திய மருதம் அணியினருக்கும், மருதமுனை கிரிக்கட் சங்கத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அஸ்ஸலாமு அலைக்கும்!மருதமுனை பென்சின் விளையாட்டுக் கழகத்தின் 08வது மேலங்கி வெளியீட்டு நிகழ்வு-2025.மருதமுனை பென்சின் விளை...
13/01/2025

அஸ்ஸலாமு அலைக்கும்!

மருதமுனை பென்சின் விளையாட்டுக் கழகத்தின் 08வது மேலங்கி வெளியீட்டு நிகழ்வு-2025.

மருதமுனை பென்சின் விளையாட்டுக் கழகத்தின் 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தேசிய நீர் வடிகாலமைப்பு சபையின்
மானி வாசிப்பாளரும்
கழகத்தின் பொருளாளருமான யூ.ஏ.எம். ஜரீத் அவர்களின் பூரண பங்களிப்புடன் கழகத்திற்கான மேலங்கி வழங்கி வைக்கப்பட்டது.

கழகத்தின் தலைவர் ஏ.பி. றனூஸ் தலைமையில் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
இரவு நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மருதமுனை ஷறாபத் மீன் விற்பனை, பதனிடுதல் மற்றும் சந்தைப்படுத்தல் நிலையத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் கழகத்தின் தவிசாளருமான வி.எம். முஹம்மட் றியாஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதன் போது விளையாட்டு
வீரர்களுக்கான மேலங்கி வழங்கி வைக்கும் நிகழ்வு பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தரும் கழகத்தின் செயலாளருமான என்.எம். சுபுகான் அவர்களின் நெறிப்படுத்தலில் மேலங்கிகள் பிரதம அதிதி அவர்களின் மகன் எம்.ஆர். ஷறாபத்
அவர்களினால் வீரர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது ஷறாபத் அவர்களுக்கு
விஷேட சீருடையும் வழங்கி வைக்கப்பட்டு இரவு இராப்போசனத்துடன் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவுபெற்றது.


Address

Maruthamunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Benzene Sports Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category