18/03/2026
மருதமுனை வாழ் DIMO Fishing Friends மீனவ உறவுகளின் வருடாந்திர இப்தார் ஒன்றுகூடல் 15/03/2026 ஞாயிற்றுக்கிழமை மருதமுனை கடற்கரையில் சிறப்பாக நடைபெற்றது. அமைப்பின் உறுப்பினர்கள், அபிமானிகள், ஆதரவாளர்கள் மற்றும் பலர் என 145-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்நிகழ்வை மனநிறைவுடன் அனுபவித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
மேலும், இந்நிகழ்வில் கலந்து கொண்டு இதனை இனிமையாக்கிய மருதமுனை கடற்தொழில் புரியும் எமது உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நிகழ்வின் இனிமையை அதிகரிக்க பலரின் நல்லுள்ள பங்களிப்புகளும் இடம்பெற்றது; அவற்றில் J Fruits இன் பங்களிப்பும் இந்நிகழ்வின் ஒரு அங்கமாக அமைந்தது.இதற்கு
எங்களை பங்காளர் ஆக மாற்றிய Azees Ismy (அமைப்பின் முகாமையாளர்) அவர்களுக்கும் மனமுவந்த நன்றிகள் .