31/05/2026
அணியினர் நடாத்திய தென்மராட்சிப் பிரதேசத்திற்கு உட்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கான சுழற்சி முறையிலான போட்டியின் இறுதிப் போட்டியானது #மட்டுவில்_மின்னல் விளையாட்டுக் கழகத்திற்கும் #சாவகச்சேரி_CRC விளையாட்டுக்கழகத்திற்கும் இடையில் உசன் மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் எமது CRC அணியானது கிண்ணத்தையும் 100000 ரூபா பணப் பரிசினையும் பெற்றுக் கொண்டது.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக CRC அணியின் இளம் நட்சத்திரம் #டினோஜன் அவர்களும், Game Changer ஆக நட்சத்திரப் பந்துவீச்சாளர் #கோபிகன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இத்தொடர் முழுவதும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியை இறுதிக்குள் அழைத்துச் சென்ற #துவாரகன் சிறந்த துடுப்பாட்ட வீர்ராக தெரிவு செய்யப்பட்டார்.
இவர்களுக்கு கழகம் சார்பான வாழ்த்துக்கள்.அத்துடன் இத்தொடரில் இரண்டாம் இடத்தினைப் பெற்ற மின்னல் அணியினருக்கும் எமது வாழ்த்துக்கள்.❤️
இத்தொடரானது தென்மாராட்சியில் குறிப்பிட்ட சில நாட்களுக்குள் நடாத்தப்பட்டு பெறுமதியான பரிசில்களை வீர்ரகளுக்கு வழங்கியதோடு மட்டுமல்லாது இறுதிப் போட்டிக்கான பரிசில் தொகையினை அன்றைய தினமே இரு அணிகளுக்கும் வழங்கி வைத்து சிறந்த முறையில் ஓர் தொடரினை நடாத்திய Black Squad அணியினருக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.🙏🏻❤️