08/08/2025
மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையம்
60 ஆவது ஆண்டு நிறைவு விழா - வைரவிழா அழைப்பிதழ்
நாள்: 10/08/2025 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: மாலை 02:30 மணியளவில்
இடம்: வளர்மதி விளையாட்டு மைதானம், மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி
அன்புடையீர்,
மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையம், கடந்த 60 ஆண்டுகளாக எமது சமூகத்திற்கு கல்வி, கலை, விளையாட்டு, பண்பாடு மற்றும் சமூக சேவைகளில் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிறது. இந்த மகத்தான பயணத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவை (வைரவிழா) கொண்டாடுவதற்கு நாம் பெருமை கொள்கிறோம்.
இந்த சிறப்பு நிகழ்வில், உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம். உங்கள் வருகையும் ஆதரவும் எமது சனசமூக நிலையத்தின் மேலும் பல வெற்றிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.
தங்கள் நல்வரவை இனிதே நாடும்
மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலைய நிர்வாகத்தினரும், அங்கத்தவர்களும்
நன்றி 🙏🏽