Kondavil Giant Fighters

Kondavil Giant Fighters Male

🔰🔰📣📣‼️Kondavil Giant Fighters 🔰🔰இன் மாபெரும் மென்பந்து துடுப்பந்தாட்டப்போட்டியின் பருவகாலம் 2.0 இல்    பங்குபற்றி அனைத்த...
14/10/2024

🔰🔰📣📣‼️Kondavil Giant Fighters 🔰🔰இன் மாபெரும் மென்பந்து துடுப்பந்தாட்டப்போட்டியின் பருவகாலம் 2.0 இல் பங்குபற்றி அனைத்து அணிகளுக்கும் சுற்றுப்போட்டியினை திறம்பட நடாத்தி முடிப்பதற்கு எம்மொடு தோளோடு தோள் நின்று அனைத்து வகையிலும் உதவிய அனைத்து உறவுகளுக்கும் எமது குழுமம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் இன்னும் மிகப்பிரமாண்டமான மூன்றாம் பருவகாலத்தில் கூடிய விரைவில் மீண்டும் சந்திப்போம் என்பதை பெருமையுடன் அறியத்தருகின்றோம்.🙏🏾🙏🏾📣📣‼️

- KGF🐅 குழுமம் -

Kondavil Giant Fighters இன் மாபெரும் மென்பந்து துடுபந்தாட்டப்போட்டி -2024 பருவகாலம் 2.0 இன் இச்சுற்றுப்போட்டியினை வெகு வ...
14/10/2024

Kondavil Giant Fighters இன் மாபெரும் மென்பந்து துடுபந்தாட்டப்போட்டி -2024 பருவகாலம் 2.0 இன் இச்சுற்றுப்போட்டியினை வெகு விமர்சையாகவும் எந்தவித தடங்கலுமின்றி நடாத்துவதற்கேதுவாக தங்கள் உதவிகளை வாரிவழங்கியிருந்ததுடன் இச்சுற்றுப்போட்டியின் முதலாவது பருவகாலத்தின் ஆரம்பம் முதல் தோளோடு தோள் நின்று எம்மை உற்சாகப்படுத்திய எமது அனுசரனணயாளர்களான
Sathananthan Gopi
JA Roy
Vijayratnam Piratheepan. -
Balachandran Koby
Theiventhiram Thanesh
Kishanthan - Bulls
Nanthakumar Niroshan
Kaja
Yogenthiran Susanthan. - Impex -germany
Kisharuka Thanusan. - stills
Mahalingam Ashokkumar - or Fight Gym
Suren kangasabapathy - Stores
Vikineswaran Piranavan
Mathiyalagan Abarajithan - Cafe
Seelan Tharani. - Bakery
Mothilalnehru Matheesan. - Digitals
Ilaango Hariprashanth
Laxshana Sivatharshan - Cakes
Sinthujah Sathanantharasa. - Aari Works
Ganesalingam Piraveenan - ELECTRONICS & CCTV
Chandru (Chandi)
Sanmuganathan Danushan - Travels
Selvam Vithushan - Capture
Super Kings
GPS Sports Club
Boys

ஆகிய தங்கள் அனைவருக்கும் எமது சிரம் தாழ்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்வதுடன் இச்சுற்றுப்போட்டியினை இனிவரும் காலங்களில் மிகச்சிறப்பாக நடாத்துவதற்கு தொடர்ந்தும் உறுதுனணயாக இருக்க வேண்டும் எனவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.✊🫡🙏🏾

- KGF குழுமம் -

📣📣 🏆🍾🍾Kondavil Giant fighters விளையாட்டுக்கழகம் நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட மாபெரும் மென்பந்து துடுப்பாட்டச்சுற்றுப்ப...
13/10/2024

📣📣 🏆🍾🍾Kondavil Giant fighters விளையாட்டுக்கழகம் நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட மாபெரும் மென்பந்து துடுப்பாட்டச்சுற்றுப்போட்டி - 2024 பருவகாலம் 2.0

Champions 🥇🏆- Puttalai Garudas

Runners up 🥈🏆- Kalvijankadu Super Kings

📣📣🔰 KGF 🐅இன் மகுடத்திற்கான அனல் பறக்கும் அதிரடித்திருவிழாவானது 🏏🎾 கோலாகலமாக அட்டகாசமான 24 அணிகளின் அணிவகுப்புடன் நேற்றைய தினம் (08-10-2024) ஆரம்பமாகியது.🏁

🎾 1ம் நாள் (08-10-2024) சமரில் அட்டகாசமான முதல் 12 படைகளின் அதிரடி நிறைந்த களச்சமரில் Puttalai Garudas கழகமானது முதலாவது அணியாக இப்பருவகாலத்திற்கான KGF மகுடத்திற்கான தேடலின் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.

🎾 2 ம் நாள் (13-10-2024) சமரில் பலம்பொருந்திய அடுத்த 12 அணிகளின் அதிரடி நிறைந்த களச்சமரில் Kalviyankadu Super Kings கழகமானது இரண்டாவது அணியாக இப்பருவகாலத்திற்கான KGF மகுடத்திற்கான தேடலின் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.

🎾 KGF இன் மகுடத்தை தட்டித்தூக்குவதற்கான மாபெரும் இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Puttalai Garudas அணியின் ஜீவராஜ் {17} கைகொடுக்க 5 பந்துப்பரிமாற்றங்களில் 63 ஓட்டங்களைப் பெற்றது. எதிரணி சார்பாக துவா மற்றும் சுஜி ஆகியோர் தலா ஒவ்வொரு இலக்குகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு எதிர்த்து களமாடிய Kalviyankadu Super Kings அணியின் மயூரன் {22} சற்று அதிரடி காட்டியபோதும் Puttalai Garudas அணியின் பந்து வீச்சாளர்களான சேந்திரன் {2w} மற்றும் பிரதீப் {2w} ஆகியோர் தமது துள்ளியமான பந்துவீச்சினை வெளிப்படுத்தி 5 பந்துப் பரிமாற்றங்களில் வெறுமனே 38 ஓட்டங்களுக்குள் எதிரணியைக் கட்டுப்படுத்தி போட்டியினை 25 ஓட்டங்களால் தம்வசப்படுத்தியதன் மூலம் KGF இன் மாபெரும் மென்பந்தாட்டச் சுற்றுப்போட்டி -2024 பருவகாலம் - 2.0 இன் மகுடத்தினை தம்வசமாக்கிக்கொண்டதுடன் 75,000/- பணப்பரிசிலினையும் வெற்றி கொண்டனர்.

மேலும் 2ம் இடத்தினைப்பெற்ற Kalviyankadu Super Kings அணியினர் வெற்றிக்கேடயத்துடன் 40,000/- பணப்பரிசிலினையும் வென்றனர்.

🎾போட்டியின் ஆட்டநாயகன் Puttalai Garudas அணியின் பிரதீப் அவர்களும்

🏏 சுற்றுப்போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக Kalviyankadu Super Kings அணியின் மயூரன் அவர்களும்

🎾 சுற்றுப்போட்டியின் சிறந்த பந்து வீச்சாளராக Puttalai Garudas அணியின் சேந்திரன் அவர்களும்

🏏🎾சுற்றுப்போட்டியின் தொடர் ஆட்டநாயகனாக Kalviyankadu Super Kings அணியின் கபிசாந் (46 ஒட்டங்கள் மற்றும் 4இலக்குகள்) அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.✌️

இச்சுற்றுப்போட்டி சிறப்பாக நடைபெறுவதற்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏🏾🙏🏾🙏🏾

- KGF குழுமம் -

13/10/2024
கோலகலமாக ஆரம்பமான KGF இன் மாபெரும் மென்பந்து சுற்றுத்தொடர் பருவகாலம் 2.0 இன் இரண்டாம் நாளின் ஆரம்பத்தில் அனல் பறக்கும் அ...
13/10/2024

கோலகலமாக ஆரம்பமான KGF இன் மாபெரும் மென்பந்து சுற்றுத்தொடர் பருவகாலம் 2.0 இன் இரண்டாம் நாளின் ஆரம்பத்தில் அனல் பறக்கும் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தும் முனைப்போடு ஆடுகளம் புகுந்த பலம் பொருந்திய 12 அணிகளின் துடுப்பாட்ட வீரர்கள் நாலாபுறமும் ஆறு ஓட்டங்களை பறக்கவிட மறுபுறம் பந்து வீச்சாளர்கள் தமது துள்ளியமான பந்துவீச்சு மூலம் விக்கெட்டுக்களை சிதறடிக்க விறுவிறுப்பின் உச்சம் தொட்ட போட்டிகளில் தமது சிறப்பான சகலதுறை ஆட்டத்தின் மூலம் KGF இன் மாபெரும் மென்பந்து சுற்றுத்தொடர் பருவகாலம் 2.0 இன் மகுடத்தினையும் மாபெரும் பணப்பரிசிலினையும் தட்டிச்செல்லும் முனைப்போடு இரண்டாவது படையணியாக இறுதிப்போட்டிக்குள் Kalvijankadu super kings உள் நுழைந்தனர் அணியினர்.

KGF இன் மாபெரும் மென்பந்து சுற்றுத்தொடர் பருவகாலம் 2.0 இன் மாபெரும் இறுதிப்போட்டி 4:15 மணியளவில் கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலய மைதானத்தில் ஆரம்பமாகும் என்பதை அறியத்தருகின்றோம்.

-KGF குழுமம்-

கோலகலமாக ஆரம்பமான KGF இன் மாபெரும் மென்பந்து சுற்றுத்தொடர் பருவகாலம் 2.0 இன் முதலாம் நாளின் ஆரம்பத்தில் வருணபகவான் தனது ...
12/10/2024

கோலகலமாக ஆரம்பமான KGF இன் மாபெரும் மென்பந்து சுற்றுத்தொடர் பருவகாலம் 2.0 இன் முதலாம் நாளின் ஆரம்பத்தில் வருணபகவான் தனது அதிரடியினை சற்று வெளிப்படுத்திய போதும் சற்றும் தளராமல் அனல் பறக்கும் ஆட்டத்தினை வெளிப்படுத்தும் முனைப்போடு ஆடுகளம் புகுந்த பலம் பொருந்திய 12 அணிகளின் துடுப்பாட்ட வீரர்கள் நாலாபுறமும் ஆறு ஓட்டங்களை பறக்கவிட மறுபுறம் பந்து வீச்சாளர்கள் தமது துள்ளியமான பந்துவீச்சு மூலம் விக்கெட்டுக்களை சிதறடிக்க விறுவிறுப்பின் உச்சம் தொட்ட போட்டிகளில் தமது சிறப்பான சகலதுறை ஆட்டத்தின் மூலம் KGF இன் மாபெரும் மென்பந்து சுற்றுத்தொடர் பருவகாலம் 2.0 இன் மகுடத்தினையும் மாபெரும் பணப்பரிசிலினையும் தட்டிச்செல்லும் முனைப்போடு முதலாவது படையணியாக இறுதிப்போட்டிக்குள் உள் நுழைந்தனர் Puttalai Garudas அணியினர்.

இவர்களுடன் மோதும் மற்றைய படையணியை அறியும் KGF இன் மாபெரும் மென்பந்து சுற்றுத்தொடர் பருவகாலம் 2.0 இன் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை காலை 8:30 மணியளவில் கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலய மைதானத்தில் ஆரம்பமாகும்.

-KGF குழுமம்-

‼️கிண்ணம் ஒன்று 🏆படைகள் 2️⃣4️⃣ஒவ்வொருவரும் தத்தமது களவியூகங்களுடன் 🏟️🏟️ஒவ்வொரு ஆட்டங்களையும் தம் வசப்படுத்தும் நோக்கத்து...
10/10/2024

‼️கிண்ணம் ஒன்று 🏆
படைகள் 2️⃣4️⃣
ஒவ்வொருவரும் தத்தமது களவியூகங்களுடன் 🏟️🏟️
ஒவ்வொரு ஆட்டங்களையும் தம் வசப்படுத்தும் நோக்கத்துடன் 🏏
ஊகிக்க முடியாத இறுதி முடிவுகளுக்காய் 🏆🏆🏆🏆
தமது அனல் பறக்கும் ஆட்டத்தால் 🔥🔥🔥
மைதானம் நிறைந்த ரசிகர்களுக்கு விருந்தளிக்க 😍😍
ஒன்றையொன்று முட்டி மோத காத்திருக்கும் 🤜🏽🤛🏽
வடக்கின் தலைசிறந்த 🔥
2️⃣4️⃣ அணிகள் 🔰🔰🔰
ஆரம்பமாக இருக்கின்றது KGF 🐅இன் மாபெரும் மென்பந்து 🎾🏏🎾🏏சுற்றுத்தொடர் பருவகாலம் -2.0 - 2️⃣0️⃣2️⃣4️⃣
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

📣📣‼️‼️🔰KGF நடாத்தும் மாபெரும் மென்பந்துத்துடுப்பந்தாட்டப்போட்டி பருவகாலம் -2 இன் பணப்பரிசு மழைகள் 📣📣‼️‼️🎾🏏🎾🏏1. நடைபெறும்...
29/09/2024

📣📣‼️‼️🔰KGF நடாத்தும் மாபெரும் மென்பந்துத்துடுப்பந்தாட்டப்போட்டி பருவகாலம் -2 இன் பணப்பரிசு மழைகள் 📣📣‼️‼️🎾🏏🎾🏏

1. நடைபெறும் ஒவ்வொரு போட்டியின் ஆட்டநாயகனுக்கும் ரூ.1,000/-🏏
2. நடைபெறும் ஒவ்வொரு போட்டிகளிலும் அணிவிரர் ஒருவரால் பெறப்படும் 50 ஓட்டங்களுக்கும் ரூ.2,000/- 🏏
3. நடைபெறும் ஒவ்வொரு போட்டிகளிலும் வீசப்படும் ஒவ்வொரு ஒட்டமற்ற பந்துபரிமாற்றங்களுக்கும் ரூ.1,500/-🎾
4. நடைபெறும் ஒவ்வொரு போட்டிகளிலும் பெறப்படும் தொடர்ச்சியான மூன்று இலக்குகளுக்கும்🎾 (Hattrick) ரூ.1,500/-
5. நடைபெறும் ஓவ்வொரு போட்டிகளிலும் அணியால் பெறப்படும் 100 க்கு மேற்பட்ட ஓட்டங்களுக்கு ரூ.2,000/-💯
6. நடைபெறும் ஒவ்வொரு போட்டிகளிலும் பெறப்படும் தொடர்ச்சியான மூன்று ஆறு(6) ஓட்டஙலகளிற்கும்🏏🏟️ (Hattrick sixes) ரூ.1,000/-

‼️அறிவித்தல் ‼️📣📣🔰🔰 KGF 🐅இன் மகுடத்திற்கான அதிரடி துடுப்பாட்டச்சமரின்    பருவகாலம் 2.0 ற்காக இதுவரை  20அணிகள் தங்களது பத...
28/09/2024

‼️அறிவித்தல் ‼️

📣📣🔰🔰 KGF 🐅இன் மகுடத்திற்கான அதிரடி துடுப்பாட்டச்சமரின் பருவகாலம் 2.0 ற்காக இதுவரை 20அணிகள் தங்களது பதிவுகளை மேற்கொண்டுள்ளதால் மேலும் 4 அணிகளுக்கான விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை அறியத்தருகிறோம் .

எனவே புதிதாக பதிவுகளை மேற்கொள்ள விரும்பும்
அணிகள் கீழ்வரும் தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்
-நன்றி-

தொ.இல -:
1. 072 233 9596 ( WhatsApp)
2. 077 373 9881

📣📣🔰🏏🏏KGF 🐅இன் மகுடத்திற்கான அதிரடி துடுப்பாட்டச்சமரின்    பருவகாலம் 2.0🏏🏏📣📣‼️🏏🎾🎾🔰🛑 யுத்தகளம் புகும் தேதியின் உத்தியோகபூர...
23/09/2024

📣📣🔰🏏🏏KGF 🐅இன் மகுடத்திற்கான அதிரடி துடுப்பாட்டச்சமரின் பருவகாலம் 2.0🏏🏏📣📣

‼️🏏🎾🎾🔰🛑 யுத்தகளம் புகும் தேதியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு🛑🔰 🏏🎾🎾‼️‼️

KONDAVIL GIANT FIGHTERS (KGF) நடத்தும் மாபெரும் மென் பந்து சுற்றுப்போட்டி - 2024

தேதி -: 12 & 13 - ஐப்பசி - 2024
இடம் : கோண்டாவில் இராமகிருஸ்ணா மகா வித்தியாலய மைதானம்

‼️‼️”போட்டிக்கான கட்டணம் செலுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட 24 அணிகள் மட்டுமே உள்வாங்கப்படும்.”‼️‼️
👉🏻‼️‼️ 05-10-2024(சனிக்கிழமை) திகதிக்கு முன்னர் போட்டிக்கான கட்டணத்தை செலுத்தி பணம் செலுத்திய வங்கிச்சிட்டையினை கீழ் குறிப்பிட்ட whatsapp இலக்கத்திற்கு அனுப்பி வைப்பதன் மூலம் உங்கள் அணிகளை உறுதிப்பபடுத்திக் கொள்ளவும்.‼️‼️

🛑🛑🏏🎾கீழ்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களுடன் 📞📱📞 தொடர்பு கொண்டு தங்கள் அணிகளை விரைவாக உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 🛑🛑🏏🎾

📱1. 072 233 9596 (WhatsApp)அ
2. 077 373 9881

🎾🏏🎾🏏🎾🏏🎾🏏🎾🏏🎾🏏🎾🏏🎾🏏🎾🏏🎾🏏

📣📣🔰🔰 KGF 🐅இன் மகுடத்திற்கான அதிரடி துடுப்பாட்டச்சமரின்    பருவகாலம் 2.0தாயாராகுங்கள் படையணிகளே🔰🔰🏁🏁🏁‼️‼️‼️யுத்தகளம் புகும...
18/09/2024

📣📣🔰🔰 KGF 🐅இன் மகுடத்திற்கான அதிரடி துடுப்பாட்டச்சமரின் பருவகாலம் 2.0

தாயாராகுங்கள் படையணிகளே🔰🔰🏁🏁🏁

‼️‼️‼️யுத்தகளம் புகும் தேதி அறிவுப்புடன் விரைவில் வருகின்றோம்‼️‼️‼️

- KGF குழுமம் -

Address

Kondavil, East Kondavil
Jaffna
40000

Telephone

+94754161150

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kondavil Giant Fighters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kondavil Giant Fighters:

Share

Category