NEPL A FOOTBALL TOURNAMENT

வேர்கள் என்ற ஒன்று தான் வளரும் செடிக்கு ஆதாரம். தன்னம்பிக்கை என்ற ஒன்று தான் ஒவ்வொருவரின் திறனின் உயர்வுக்கு மூலாதாரம்.ம...
08/03/2022

வேர்கள் என்ற ஒன்று தான் வளரும் செடிக்கு ஆதாரம். தன்னம்பிக்கை என்ற ஒன்று தான் ஒவ்வொருவரின் திறனின் உயர்வுக்கு மூலாதாரம்.

மாகாணங்களுக்கு இடையேயான சுதந்திரகிண்ண தொடரில் வடக்கு அணி சார்பில் #சகலதுறைகளிலும் ஜொலித்த வீரர்

பின்களத்தில் #தடுப்புச்சுவராகவும் இரு வெவ்வேறு போட்டிகளில் கோல்க்காபாளரைத் தாண்டி கோல்ப்பரப்புக்குள் நுழைய இருந்த பந்தை தனது நுட்பமான ஆட்டத்தால் தடுத்து எதிரணியின் இரு கோல்போடும் சந்தர்ப்பத்தை மிக சிறப்பாக தடுத்தார்

வடக்கு அணியின் மூலை உதை சந்தர்ப்பங்களில் எதிரணி கோல்ப்பரப்புக்குள் நின்று #தலையால் பந்தை முட்டுவதில் முதன்மையானவர்

பக்க கோட்டில் இருந்து எறியும் பந்து வியக்கத்த வகையில் மிக #வேகமாகவும் #தூரமாகவும் எதிரணி கோல்ப்பரப்பை நெருங்கும் வகையில் எறியும் #அதீத #திறமைகொண்டவர்

மன்னார் சென் ஜோசப் வி.கழகத்தை தாய்க்கழகமாக கொண்ட வடமாகாண தெரிவு அணி வீரர் #கிளின்டன் ( #மனோ)

மென்மேலும் உயர வாழ்த்துக்கள்

மூலப் பதிவு வீரா

வடக்கு அணி சம்பியனாகியதுஇலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று  வந்த மாகாணங்களுக்கு இடையேயான சுதந்திர க...
06/03/2022

வடக்கு அணி சம்பியனாகியது

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வந்த மாகாணங்களுக்கு இடையேயான சுதந்திர கிண்ண தொடரின் இறுதியாட்டத்தில் வடக்கு மாகாண தெரிவு அணி மற்றும் தென்மாகாண தெரிவு அணிகள் மோதின ஆட்டநேரமுடிவில் வடக்கு அணி 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சுதந்திரகிண்ண தொடரின் சம்பியனாகியது

வடக்கு அணிசார்பில் ஜூட் சுமனின் சுயாதீன உதையை முதலாவது கோலாக மாற்றினார் விக்னேஸ்,

கீதனின் அருமையான பந்துப் பரிமாற்றத்தை கிளிநொச்சி வீரர் தேனுஜன் இரண்டாவது கோலாக மாற்றியதுடன்

இரண்டாம்பாதியாட்டத்தில் தேனுஜனின் அருமையான பந்துப் பரிமாற்றத்தை மூன்றாவது கோலாக்கினார் அணித்தலைவர் நிதர்சன் என்பது குறிப்பிடத்தக்கதுடன்

இத் தொடரில் அணித்தலைவர் நிதர்சன் ஏழு கோல்களை வடக்கு அணிக்காக பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது

தங்க காலணி மற்றும் தங்க பந்து #நிதர்சன் (வடக்கு வீரர்)

இளம் வீரர் #முகமட் #முன்சீப்
( கிழக்கு மாகாணம்)
தங்க கையுறை #முகமட் #முர்சின் (கிழக்குமாகாணம்)

தொடரின் நன்நடத்தை அணி கிழக்குமாகாணம்

வாழ்த்துக்கள் வடக்கு அணியினர்

கிழக்கில் நடந்த ஆட்டத்தை சமனிலைப்படுத்தியது வடக்கு சுதந்திர கிண்ண தொடரின் இறுதிக்கு தகுதி பெற்றது வடக்கு தெரிவு அணிஇலங்க...
01/03/2022

கிழக்கில் நடந்த ஆட்டத்தை சமனிலைப்படுத்தியது வடக்கு

சுதந்திர கிண்ண தொடரின் இறுதிக்கு தகுதி பெற்றது வடக்கு தெரிவு அணி

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் மாகாணங்களுக்கு இடையேயான சுதந்திர கிண்ண தொடரின் இரண்டு தொகுதி அரையிறுதி ஆட்டத்தின் 2 வது அரையிறுதியில் வடக்கு மாகாண தெரிவு அணி மற்றும் கிழக்கு தெரிவு அணிகள் மோதின ஆட்டநேரமுடிவில் போட்டி எதுவித கோல்கள் இன்றி சமனிலையில் முடிவுற்றதால் எதிரணி மைதானத்தில் வைத்து போட்டியை சமனிலைப்படுத்தியும் சொந்த மைதானத்தில் நடந்த போட்டியை வெற்றி கொண்டதன் அடிப்படையில் வடக்கு தெரிவு அணி இறுதியாட்ட வாய்ப்பினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வரும் 5 ம் திகதி இறுதியாட்டம் யாழ் துரையப்பா மைதானத்தில் இடம்பெறும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியின் ஆரம்பத்தில் மறைந்த முதல்தர தேசிய வீரர் பியூஸ்லஸ் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கதுடன்

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய
வடக்கு அணியினருக்கு வாழ்த்துக்கள்

திறமை என்ற ஒன்றினால் மட்டும் அனைத்து காரியங்களும் கை கூடாது. நமது திறமையுடன் கூடிய நம்பிக்கையுடன் நம்மால் முடியும் என்று...
01/03/2022

திறமை என்ற ஒன்றினால் மட்டும் அனைத்து காரியங்களும் கை கூடாது. நமது திறமையுடன் கூடிய நம்பிக்கையுடன் நம்மால் முடியும் என்று நம்புவதே ஒருவரையோ அல்லது அணியையோ அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்

வடக்கு கிழக்கு அரையிறுதியாட்டத்தில் எடுத்து அடிக்கமுடியாது என தோன்றிய சில பந்துகளை தனது வேகத்தால் மைதானம் முழுவதும் ஆக்கிரமித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த குருநகர் பாடும்மீன் கழகத்தை தாய்க்கழகமாக கொண்ட
வடக்கு தெரிவு அணியின்
#வேகமான #வீரர் #கீதன்

தேசிய அணிக்குள் இடம் பிடிப்பதே, குதிரைக்கொம்பாக வாய்ப்பளிக்கப்படுகின்ற சிறுபான்மையினர் நடுவிலிருந்து - அத்தி பூத்தாற் போ...
27/02/2022

தேசிய அணிக்குள் இடம் பிடிப்பதே, குதிரைக்கொம்பாக வாய்ப்பளிக்கப்படுகின்ற சிறுபான்மையினர் நடுவிலிருந்து - அத்தி பூத்தாற் போலும் மேலெழுந்து விளையாடும் வாய்ப்பும் போதுமான தகைமைகளும் கொண்டவனாக கொண்டாடப்படுவதே அரிது.

இத்தகையதொரு இடத்தினை தொடுவதற்கு அவர்களுக்கு நூற்றெட்டு சோதனைகள் என்றால் - உனக்கும், உன் பின்வரும் தம்பிகளுக்கும் ஆயிரத்தெட்டு சோதனைகள் என்பதை எங்களெல்லோரையும் விட நன்கறிந்தவன், நீயேயல்லவா பியூஸ்?

‘பியூஸ்லஸ்’ - யாருடைய இயற்பெயரென்று இங்கே பெரும்பாலானோருக்கே தெரியாதேடா, மாவீரன் மருமகனே?

இது சரியில்லையடா தம்பி.
முன்னுதாரணமாய் காட்டியும் முயற்சியின் அடையாளமென்று சொல்லியும் பேசப்படக்கூடிய பெருமைகளுக்கு சொந்தக்காரன் நீ,
இப்படியாக போயிருக்கக்கூடாது?

நீதி - நிரந்தரமாக மறுக்கப்பட்ட இனத்திலிருந்து, உன் சாவுக்கு நீதி கேட்கக்கூட குரலற்றவர்களானோம் நாம்??

ஆழ்ந்துறங்கு!
அமைதி கொள்!!💔💔

ஏற்றுக்கொள்ள முடியாத இழப்புமன்னார் மண்ணின் மைந்தனும் இலங்கை கால்பந்தாட்ட அணியின் வீரருமாகிய பியூஸ் அகாலமரணமாகிய செய்திகள...
26/02/2022

ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு

மன்னார் மண்ணின் மைந்தனும் இலங்கை கால்பந்தாட்ட அணியின் வீரருமாகிய பியூஸ் அகாலமரணமாகிய செய்திகள் அனைவரது நெஞ்சத்தையும் இறுக்கிவிட்டது

உதைபந்தாட்ட சமூகம் சார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்

Under 21 Women's Development அணிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் மற்றும் ஒப்பந்தம் கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம்  இ...
30/11/2021

Under 21 Women's Development அணிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் மற்றும் ஒப்பந்தம் கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இலங்கை கிரிக்கெட் சங்க தலைமையகத்தில் நடைபெற்றது. இவ்வணிக்கு இலங்கைபூராக120 வீராங்கனைகளுக்கிடையில் நடைபெற்ற தெரிவில் 20 வீராங்கனைகள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மூன்று மாத காலத்திற்கு (நவம்பர் 01 முதல் ஜனவரி 31, 2022 வரை) SLC ஆல் பெண்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவ் ஒப்பந்தத்தின் மூலம் நிதி ரீதியான உதவிகளும் வழங்கப்படவுள்ளது.

உருவாக்கப்பட்ட அணி SLC இன் பயிற்சியாளர்களின் மூன்றுமாத சிறப்பு பயிற்சி திட்டத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.
வீராங்கனைகள் மூன்று மாத பயிற்சித் திட்டத்தை முடித்தவுடன், அவர்கள் மேலும் மதிப்பீடு செய்யப்பட்டு, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மகளிர் மாவட்ட மற்றும் மாகாண அணிகளில் SLC ஒழுங்கமைக்கப்பட்ட வருடாந்த போட்டிகளில் விளையாடுவதற்கு சேர்த்துக்கொள்ளப்படுவார்கள், இது மார்ச் / ஏப்ரல் 2022 இல் விளையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வணியில் மகாஜனக்கல்லூரி வீராங்கனை மற்றும் கிறாஸ்கோப்பர்ஸ் விளையாட்டுக்கழக வீராங்கனையுமான சானு பாஸ்கரன் அவர்களும் ஸ்கந்தவரோதயக்கல்லூரி வீராங்கனையான மதுரிகா முரளிதாசன் அவர்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் மேலும் சிறப்பாக செயற்பட்டு அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு வாழ்த்துகள்.

இவ்வீராங்கனைகளுக்கு பயிற்சியளித்த பயிற்றுநர்கள் மற்றும் மாவட்ட, மாகாண பயிற்றுவிப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

Leo Messi wins record 7th Ballon d'Or award 🥇🏆  கால்ப்பந்து அரங்கில் அதி உயர் விருதான ‘Ballon d'Or’ விருதை 7 ஆவது முறையா...
30/11/2021

Leo Messi wins record 7th Ballon d'Or award 🥇🏆


கால்ப்பந்து அரங்கில் அதி உயர் விருதான ‘Ballon d'Or’ விருதை 7 ஆவது முறையாக வென்று அதிக தடவைகள் குறித்த விருதை வென்ற சாதனையை நிலை நாட்டினார் மெஸ்ஸி.

கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்த விருதை 5 தடவைகள் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று உதைபந்தாட்ட உலகின் தலைசிறந்த வீரனான  லியனல் மெஸ்ஸி ஆடுகிற கழகமான பாரிஸ் செயிண்ட் ஜேர்மன் கழகத்தின் போட்டி ஒன்றை ப...
21/11/2021

நேற்று உதைபந்தாட்ட உலகின் தலைசிறந்த வீரனான லியனல் மெஸ்ஸி ஆடுகிற கழகமான பாரிஸ் செயிண்ட் ஜேர்மன் கழகத்தின் போட்டி ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது மெஸ்ஸியை எதிர்த்து ஆடிய அணியின் வீரர் ஒருவரின் பெயர் எனக்கு சமீபித்து இருப்பதாக படவே அவர் யார் என தேடினேன். தமிழ் தகப்பனுக்கும் கொங்கோ தாய்க்கும் பிறந்த வீரர் தான் , அடிக்கடி வர்ணனையாளர்களின் வாயில் விழுந்த பெயர்.

சாமுவேல் முத்துசாமி.

தமிழ் தகப்பன் ஒருவனுக்கு பிரான்சில் பிறந்து Nantes அணிக்காக ஆடும் சாமுவேல் முத்துசாமி பிறந்த மண்ணில் தான் , அங்கேயே பிறந்து பிரான்சின் நகர்களில்ல் வாள்களோடும் தடிகளோடும் கட்டப்பஞ்சாயத்து செய்யும் நம்மாட்களும் இருக்கிறார்கள்.

பதிவு கிசோகர்

08/10/2021

கிறிக்கட்டை கொண்டாடும் அளவிற்கு எம்மவர்கள் பலர் உதைபந்தாட்டத்தை கொண்டாடுவதில்லை.திறமை இருந்தால் எங்கும் எப்போதும் சாதிக்கலாம் என்பதற்கு பியூஸ் ஒரு முன்னுதாரணம்.

நடைபெற்றுக்கொண்டிருக்கும் தெற்காசிய நாடுகளுக்கான உதைபந்தாட்ட போட்டியில் கலக்கிவரும் மன்னார் மண்ணின் டக்ஸன் பியூஸ்லஸ்.

நேற்றைய நாளில் இந்திய அணியுடனான போட்டியில் ஆட்டநாயகன் விருதை தனதாக்கினார்.எத்தனை பிரச்சினைகள் என்றாலும் ஒரு தமிழன் தேசிய அணியில் சாதிக்கும் போது நிச்சயம் எல்லா தமிழருக்குமே பெருமை.. தேசிய கிறிக்கட் அணியில் தமிழரை சேர்த்துக்கொள்ளவில்லை என கம்புசுற்றும் பலருக்கு ஏனோ உதைபந்தை பற்றி பேச மனம்வருவதில்லை.

இந்திய அணி சர்வதேச ரீதியில் 101வது இடத்தில் இருக்கும் அணி,இலங்கை இன்னும் 205வது இடத்திலேயே இருக்கிறது.தரவரிசை என்பது ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்கள்.

ஜரோப்பிய கழகங்கள் கூட ஒப்பந்தம் செய்வதற்கு முனைப்பு காட்டும் இந்திய அணித்தலைவர் #சுனில்_சேத்திரி அற்புதமான முன்கள வீரர். அதுமட்டுமல்லாது #உடான்ரா_அனிறுத்தப்பா
என பலம்வாய்ந்த முன்களத்தை கொண்ட இந்திய அணியின் தாக்குதல்களை சிறப்பாக எதிர்கொண்டு போட்டியை சமப்படுத்த முக்கிய காரணமாக பியூஸ் இருந்தார்.

எம்மவர்களை கொண்டாடுவோம். நிச்சயம் ஒருநாள் எமது உதைபந்தாட்டமும் சர்வதேச அரங்கில் பேசப்படும்.அங்கு நிச்சயம் எம்மவர்கள் சாதனையாளராக இருப்பர்.


Full time 0-0
Man of the Match
Duckson LS

Really Big player 🙆‍♂️👍After 1995 Golden lions drw again india 🇮🇳 Congratulations Piuslus U deserve it 👏🤝
07/10/2021

Really Big player 🙆‍♂️👍
After 1995 Golden lions drw again india 🇮🇳
Congratulations Piuslus U deserve it 👏🤝

Team Line up Against 🇱🇧வடக்கின் இரு நட்சத்திரங்களுடன் களமிறங்கிய ஸ்ரீலங்கா உதைபந்தாட்ட அணியூட் சுபன்டக்சன் பியூஸ்லஸ்
05/06/2021

Team Line up Against 🇱🇧
வடக்கின் இரு நட்சத்திரங்களுடன் களமிறங்கிய ஸ்ரீலங்கா உதைபந்தாட்ட அணி

யூட் சுபன்
டக்சன் பியூஸ்லஸ்

Address

Duraiyappa Stadium
Jaffna Town
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when NEPL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share