Eravur News

Eravur News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Eravur News, Sports Team, Eravur.

29/03/2014

ஹெட்ரிக் வெற்றியில் ஏறாவூர் LSSC

நேற்று நடைபெற்ற KPL இன் லக்கிஸ்டார் கழகத்திற்கான 03 வது போட்டியில் காத்தான்குடி சவுண்டஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து விளையாடிய எமது லக்கிஸ்டார் விளையாட்டுக்கழகம் 04-02 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மிக விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டியின் ஆரம்பத்தில் சவுண்டஸ் விளையாட்டுக் கழகம் முதல் கோலை போட்ட போதும் லக்கிஸ்டார் கழகம் பின்னர் தொட்ர்ச்சியாக 04 கோல்களை போட்டு வெற்றியை தம் வசப்படுத்தியது. சுமார் 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இப் போட்டியை கண்டுகளித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

16/03/2014

6 கோல்களை போட்டு A பிரிவுவின் இரண்டாவது போட்டியில் ஏறாவூர் LSSC அபார வெற்றி...

காத்தான்குடியில் இடம்பெற்ற இரண்டாவது லீக் போட்டியில் ஏறாவூர் LSSC பாலமுனை முகைதீன் அணிக்கு எதிராக 6-0 என்ற கோல்களை பெற்று அபார வெற்றி பெற்றது.
இஸ்ஸதீன் 02
நளீம் 01
ஆக்கில் 01
வக்கில் 01
ரிபாஸ் 01

10/03/2014

தொடர்ச்சியான வெற்றியில் ஏறாவூர் லக்கிஸ்டார் உதைப்பந்தாட்டக் கழகம்....

குறிப்பிட்ட ஒரு வருட காலத்தில் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தில் பதிவு செய்து பல முன்னணி கழகங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் ஏறாவூர் லக்கிஸ்டார் உதைப்பந்தாட்டக் கழகம் இவ் வருடத்திற்கான பிரதேச மட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தை தன்வசப்படுத்தியது.

40 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வரும் உதைப்பந்தாட்ட கழகமான Yssc Evr கழத்துடன் இடம் பெற்ற போட்டியில் 1-3 என்ற கோல் அடிப்படையில் தோல்வியை தழுவிய போதும் இவ் வருடத்திற்காக இரண்டாம் நிலையை குறுகிய காலத்தில் பெற்றுக் கொண்டமை வெற்றியளிக்கின்றது.

கழகத்தின் சிரேஷ்ட முக்கிய வீரர்கள் களம் இறங்காமலே தொடர்ச்சியாக 02 போட்டியில் வெற்றி கொண்டு 03 வது போட்டியான இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு Yssc Evr கழத்துடன் மிக சிறப்பாக விளையாடி தோல்வியை தழுவிய போதும் குறிப்பிட்ட ஒரு வருட காலத்தில் கிடைக்கப் பெற்ற நற்பெருபேராகும்.

மேலும் ஏறாவூர் லக்கிஸ்டார் உதைப்பந்தாட்டக் கழகம் காத்தான்குடியில் இடம்பெற்ற A பிரிவு கழக மட்ட முதலாவது போட்டியில் 3-1 கோல் அடிப்படையில் வெற்றியீட்டியமை யாவரும் அறிந்த விடயமே....

இவ் வெற்றிகள் அனைத்தும் எம்மை ஊக்கப்படுத்தும் உங்களையே சாரும்..

we are 2nd place in youth meet football match.....
30/03/2013

we are 2nd place in youth meet football match.....

Address

Eravur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eravur News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category