Cricket Tamil

Cricket Tamil கிரிக்கெட் தொடர்பான அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் "தமிழ் கிரிக்கெட்"

இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்திய அணி வீரர்கள் பய...
04/08/2026

இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள வலைப் பயிற்சிபந்து பந்துவீச்சாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பட்டியலில், தனுஷ் கோட்டியன், ஹர்ஷ் துபே , விப்ராஜ் நிகம் , ஷிவாங் குமார் ஆகியோர் வலைப் பயிற்சி பந்துவீச்சாளர்களாக செயல்பட உள்ளனர்.

இலங்கை ஆடுகளங்கள் வழக்கமாக சுழற்பந்துவீச்சுக்கு அதிகம் சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக தயாராகும் வகையில் பல்வேறு வகையான சுழற்பந்துவீச்சாளர்கள் வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2026 துலீப் டிராபி தொடரில் இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடிய அனுபவமிக்க 9 வீரர்கள் பல்வேறு மண்டல அணிகளுக்காக களமிறங்க உள்...
04/08/2026

2026 துலீப் டிராபி தொடரில் இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடிய அனுபவமிக்க 9 வீரர்கள் பல்வேறு மண்டல அணிகளுக்காக களமிறங்க உள்ளனர்.

2024-ம் ஆண்டு இந்திய அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரஜத் படிதார், இந்த தொடரில் மத்திய மண்டல அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.

2023-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷன், கிழக்கு மண்டல அணியை வழிநடத்த உள்ளார். அவருடன், இந்தியாவுக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளை வீழ்த்திய அனுபவமிக்க வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய முகேஷ் குமார் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான மேற்கு மண்டல அணியில், இந்தியாவின் டெஸ்ட் அனுபவமிக்க மூன்று வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

13 டெஸ்ட் போட்டிகளில் 377 ரன்கள் மற்றும் 33 விக்கெட்டுகள் எடுத்துள்ள ஷர்துல் தாகூர், 6 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடிய சர்பராஸ் கான், டெஸ்ட் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த பிருத்வி ஷா ஆகியோர் அணியில் உள்ளனர்

இந்திய டெஸ்ட் வரலாற்றில் முச்சதம் அடித்த இரு வீரர்களில் ஒருவரான கருண் நாயர், தெற்கு மண்டல அணிக்காக களமிறங்குகிறார். 1

கடந்த ஆண்டு (2025) இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமான வேகப்பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ், வடக்கு மண்டல அணிக்காக விளையாடுகிறார்.

ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா களமிறங்குகிறார்: உடல்தகுதி பரிசோதனையில் தேர்ச்சிமேலும் வாசிக்க - https://www....
09/06/2026

ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா களமிறங்குகிறார்: உடல்தகுதி பரிசோதனையில் தேர்ச்சி

மேலும் வாசிக்க - https://www.cric21.com/rohit-sharma-fit-for-afghanistan-odi-series-india

முத்தரப்பு தொடரில் இந்தியா ‘ஏ’ அணியின் வெற்றி: இலங்கையை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதுமேலும் வாசிக்க - https://www...
09/06/2026

முத்தரப்பு தொடரில் இந்தியா ‘ஏ’ அணியின் வெற்றி: இலங்கையை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

மேலும் வாசிக்க - https://www.cric21.com/india-a-beat-sri-lanka-a-by-8-runs-tri-series-opener

Address

Colombo, Srilanka
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Cricket Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cricket Tamil:

Shortcuts

Share