Sekar Nisha Vck,

Sekar Nisha Vck, politician

12/01/2024
புதுடெல்லியில் தேசிய தலைவர்களுடன் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்:அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு.மல்லிகார்ஜுன் கார்கே ...
30/11/2023

புதுடெல்லியில் தேசிய தலைவர்களுடன் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்:

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு.மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் தேர்தல் அரசியலில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை சிறப்பிக்கும் விதமாக நூலொன்று டெல்லியில் இன்று (29-11-2023) வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் #தலைவர்_எழுச்சித்தமிழர் எம்.பி அவர்கள் அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார். உடன் பொதுச் செயலாளர் துரை‌.ரவிக்குமார் எம்‌.பி அவர்கள்.

Thol.Thirumavalavan
Velicham TV - வெளிச்சம் டிவி

உச்சநீதிமன்றம் உத்தரவிடும்வரை காத்திருக்காமல் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்!விடுதலைச் சிறுத்தைகள் ...
18/11/2023

உச்சநீதிமன்றம் உத்தரவிடும்வரை காத்திருக்காமல் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
--------------------------------------------------------------------
பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரை நியமித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோதாக்களைக் காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்தார். அவற்றை மீண்டும் சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காகத் தமிழ்நாடு அரசு இன்று அனுப்பியுள்ளது. அவற்றை, உச்சநீதிமன்றம் உத்தரவிடும்வரை மீண்டும் கிடப்பில் போட்டு வைக்காமல் தமிழ்நாடு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

“ இந்தியாவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் கிட்டத்தட்ட 85% பேருக்கு மாநில அரசுகள் உருவாக்கிய பல்கலைக்கழகங்கள்தாம் உயர்கல்வியை வழங்குகின்றன” என 2019-20 ஆம் ஆண்டுக்கான உயர்கல்வி குறித்த அனைத்திந்திய ஆய்வறிக்கை (AISHE) தெரிவிக்கிறது. உயர்கல்வியிலும், ஆராய்ச்சிக் கல்வியிலும் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. அதுமட்டுமின்றி இந்தியாவின் முதன்மையான 100 பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டிலுள்ள 9 மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன.

மாநில அரசுகள் தமது நிதியைக்கொண்டு உருவாக்கும் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக ஆளுநரை நியமிக்க வேண்டுமென எந்த சட்ட நிர்ப்பந்தமும் கிடையாது. அரசமைப்புச் சட்டம் வரையறுத்திருக்கும் ஆளுநரின் பணிகளில் பல்கலைக்கழக வேந்தராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படவில்லை. தனியார் நடத்தும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அவற்றின் உரிமையாளர்கள்தான் வேந்தர்களாக உள்ளார்கள். அவற்றில் ஆளுநருக்கு எந்த வேலையும் கிடையாது.

இந்தியா சுதந்திரமடைந்தபின் மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரே கட்சியே ஆட்சி செய்ததால் ஆளுநர்களை வேந்தர்களாக நியமிக்கும் மரபு அறிமுகமானது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த கட்சிகளும் அதே மரபைப் பின்பற்றி வந்தன. அதையே வாய்ப்பாக வைத்து ஆளுநர்களைப் பயன்படுத்தி பாஜக அல்லாத மாநிலங்களில் உயர்கல்வியை சீரழிக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

குஜராத் முதலமைச்சராக திரு. நரேந்திர மோடி இருந்தபோது குஜராத்தில் இருக்கும் 14 மாநில அரசுப் பல்கலைக்கழகங்களில் அப்போது வேந்தராக இருந்த ஆளுநரை நீக்கிவிட்டு முதலமைச்சரான தன்னை வேந்தராக நியமித்து சட்டம் இயற்றினார். அதற்கு காங்கிரஸால் நியமிக்கப்பட்டிருந்த ஆளுநர் கமலா பெனிவால் ஒப்புதல் தரவில்லை. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜகவைச் சேர்ந்த ஓ.பி.கோலி குஜராத்தின் ஆளுநர் ஆனதும் 2015 இல் அந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தந்தார். இப்போது முதலமைச்சர்தான் அங்கே வேந்தராக உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வெளிநடப்புச் செய்த பாஜக எம்.எல்.ஏக்கள் குஜராத்தில் திரு. மோடி எடுத்த நடவடிக்கை தவறு என்கிறார்களா?

மத்திய - மாநில உறவுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆணையங்கள் ஆளுநரை வேந்தராக நியமிக்க வேண்டாம் என்றுதான் பரிந்துரை செய்துள்ளன. “ அரசியலமைப்புச் சட்டத்தால் முன்வைக்கப்படாத ‘ பல்கலைக்கழக வேந்தர்’ முதலான அதிகாரங்களை ஆளுநருக்கு வழங்குவதை மாநில சட்டமன்றங்கள் தவிர்க்க வேண்டும்” என்று சர்க்காரியா கமிஷன் பரிந்துரைத்துள்ளது.

“ஆளுநரை வேந்தராக நியமிப்பதால் வீண் சர்ச்சைகளுக்கும், பொது மக்களின் விமர்சனங்களுக்கும் அவர் ஆளாக நேரிடும்” என பூஞ்சி கமிஷன் தெரிவித்துள்ளது.

எனவே, ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிப்பதில்லை என்ற தமிழ்நாடு அரசின் முடிவு அரசியல் சட்டப்படி சரியானது; மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கு உதவக்கூடியது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்று ஆதரிக்கிறோம்.

தமிழ்நாடு ஆளுநர் இப்போதாவது தனது அதிகாரம் என்னவென்பதைப் புரிந்துகொண்டு இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

அன்பு தோழர் அணைவரும் இத்தளத்தில் இனையவூம்
05/11/2023

அன்பு தோழர் அணைவரும் இத்தளத்தில் இனையவூம்

சாதிகளை அறுக்கும் கொடி
சமத்துவத்தை நாட்டும் கொடி
தலை நிமிர்வின் சாட்சி கொடி
தலை வணங்கா தமிழனின் கொடி...

ஆதிக்கத்தை நொறுக்கும் கொடி
அடிமைத்தனத்தை வெறுக்கும் கொடி
பெண்ணியத்தை போற்றும் கொடி
கண்ணியத்தை விதைக்கும் கொடி...

தன்னாட்சி தத்துவ கொடி
தமிழராட்சியின் விடுதலை கொடி
தேசிய இனத்தின் லட்சிய கொடி
தாயக பூமியின் ஆட்சிக்கொடி...

அம்பேத்கரின் கனவுக்கொடி
பெரியாரின் சமூக கொடி
தேசிய தலைவரின் தம்பி கொடி...

அடங்க மறுக்கும் கொடி
அத்து மீறும் கொடி
திமிறி எழுந்த கொடி
திருப்பியடிக்கும் கொடி...

சிறுத்தைகள் ஏற்றும் இனத்தின் கொடி மானத்தமிழன் திருமாவின்
விடுதலைகொடி...

02/11/2023
31/10/2023

விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து

| | | | | | | | |

31/10/2023

அறிவிப்பு

வடமண்டல தேர்தல் கலந்தாய்வுக் கூட்டம் இடம்மாற்றம்
~~~~~
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடமண்டல தேர்தல் கலந்தாய்வுக் கூட்டம் இன்று காலை 10மணிக்கு சென்னை அசோக் நகர் காமராஜ் சாலையில் மத்தியாஸ் தேவாலய வளாகத்தில் அமைந்துள்ள அரங்கத்தில் நடைபெறுகிறது. இடம்மாற்றப்பட்ட தகவலை தேர்தல் மேலிடப் பொறுப்பாளர்கள் மண்டலச் செயலாளர்களுக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தலைமையகம்
விசிக

27/10/2023

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் செய்திகள் அறிவிப்புகள் மற்றும் மேன்மையாளர்முனைவர்
தொல் .திருமாவளவன் அவர்களின் உரைகளை காண
நமது தாய்மண் தொலைக்காட்சியை subscribe செய்யவும்....👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://www.youtube.com/

27/10/2023

மறைந்த முதன்மைச் செயலாளர் உஞ்சைஅரசன் அவர்களின் பணிகளை போற்றும் வகையில் மாவட்டந்தோறும் அவருடைய நினைவேந்தல் கூட்டத்தை மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் ஒருங்கிணைத்து நடத்த வேண்டும்!

தலைவர் எழுச்சித்தமிழர்

வாத்தியாரே... நீ அதை பண்ணின இதை பண்ணின னு எத்தனையோ பேர் உன்னைய புகழலாம்... ஆனா எதை நீ பண்ணலயோ. அதோட வொர்த் இங்க எவனுக்கு...
27/10/2023

வாத்தியாரே... நீ அதை பண்ணின இதை பண்ணின னு எத்தனையோ பேர் உன்னைய புகழலாம்... ஆனா எதை நீ பண்ணலயோ. அதோட வொர்த் இங்க எவனுக்குமே தெரில...

ஒத்த ஆளா பல லட்சக்கணக்குல ஜனத்த கூட்ட உன்னால முடியும்... இங்க இருக்கற அநீதியை ஒழிக்க அந்த கூட்டத்தை வைச்சி கலவர புரட்சியை உன்னால ரொம்ப ஈசியா பண்ணிருக்க முடியும்... ஒரு தடவை கூட அந்த கூட்டத்தை வன்முறைக்கு பயன்படுத்தல பார்த்தியா... நீ கெத்து வாத்தியாரே...

இங்க மனுவாதம் இருக்கற வரைக்கும் மட்டுமில்ல... மனுவை அழிச்ச பிறகும் கூட உன் தேவை இங்க இருந்துட்டே இருக்கும்...

26/10/2023

வடசென்னை, மைய சென்னை, தென் சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை கூட்டம் விரைவில் நடத்தப்படும்.
அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்!

தலைவர் எழுச்சித்தமிழர்

25/10/2023

கட்சியின் கொடிகள் ஒரு வார காலத்திற்கு அரை கம்பத்தில் பறக்க வேண்டும் எழுச்சித்தமிழர் அறிவிப்பு

Address

Villupuram
604307

Telephone

+919585716789

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sekar Nisha Vck, posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sekar Nisha Vck,:

Share