Alif_power_club

Alif_power_club THE SPORTS SCIENCE ACADEMY

21/12/2021

The Strong Resulting Brand always BEAST FIRE Nutrition ..
Call for Nutritional support 9384305938 / 8220927461

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள காவலர் திரு நாகநாதனை ஊக்கப்படுத்தும் விதமாக  அவரது பெற்றோர்களை நேரில் வரவழைத்து  சி...
09/07/2021

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள காவலர் திரு நாகநாதனை ஊக்கப்படுத்தும் விதமாக அவரது பெற்றோர்களை நேரில் வரவழைத்து சிறப்பு உதவிகளை வழங்கி வாழ்த்திய தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர்.C.சைலேந்திர பாபு¸ இ.கா.ப அவர்கள்..

கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு திரு.P.சுப்பிரமணியன் என்ற காவல் உதவி ஆய்வாளர் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு பங்கேற்றுள்ளார்.
அதன் பிறகு இவ்வாண்டு இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுக்காவில் உள்ள சிங்கபுலியப்பட்டி கிராமம் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த காவலர் திரு.P.நாகநாதன் பாண்டி என்பவர் சென்னை பெருநகர காவல்துறையில் இருந்து டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் விளையாட தகுதி பெற்று தற்போது போபாலில் பயிற்சியில் உள்ளார்.அவரது திறமையை பாராட்டும் வகையில் அவரது தந்தை திரு.பாண்டி மற்றும் தாய் திருமதி.பஞ்சவர்ணம் ஆகியோரை அழைத்து காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர்.C.சைலேந்திர பாபு¸ இ.கா.ப அவர்கள் தமிழக காவல்துறை சார்பாக பாராட்டுக்களையும் வெகுமதியையும் வழங்கினார்கள்.

கான்ஸ்டபிள் To கமிஷனர்ஃபைரோஸ் ஆலம் ஐபிஎஸ்....உ.பி.யில் ஹாபூர் மாவட்டத்தில் பில்குவா கிராமத்தைச் சேர்ந்தவர்..பழைய இரும்பு...
03/06/2021

கான்ஸ்டபிள் To கமிஷனர்
ஃபைரோஸ் ஆலம் ஐபிஎஸ்....

உ.பி.யில் ஹாபூர் மாவட்டத்தில் பில்குவா கிராமத்தைச் சேர்ந்தவர்..
பழைய இரும்பு வியாபாரியின் மகனான ஃபைரோஸ் ஆலம் பள்ளியில் படிக்கும் போதே காவல்துறையில் பணியாற்ற வேண்டும் எனும் ஆர்வத்தில் கல்லூரி படிப்புக்கு பின்னர் தேர்வெழுதி 2011 ல் டெல்லி காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்தார்...

கான்ஸ்டபிளாக பணியை தொடரும் நிலையில் ஒவ்வொரு முறையும் உயர் போலீஸ் அதிகாரிகளை காணும் போது விரைப்பாக நின்று எல்லோரும் சல்யூட் அடிப்பதை பார்த்து தன்னையும் அந்த இடத்தில் வைத்து எண்ணிப்பார்த்தார்...

2014 முதல் அதற்கான தயாரிப்பில் ஈடுபட்ட ஃபைரோஸ் ஆலம், தனது கான்ஸ்டபிள் பணிச்சுமைக்கு இடையிலும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சியிலும் ஈடுபட்டார்...
தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் UPSC தேர்வெழுதி தோல்வியை சந்தித்த போதும் துவளாமல் ஆறாவது முறையாக எழுதியதில் 2019ல் நல்ல ரேங்குடன் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார்...
வெற்றிகரமான ஓராண்டு பயிற்சி முடித்து, ஃபைரோஸ் ஆலம் ஐபிஎஸ் எனும் அந்தஸ்துடன் டெல்லி மாநகர காவல்துறையில் உதவி ஆணையராக பதவி ஏற்கவுள்ளார்...

💐💐 வாழ்த்துக்கள் ஒருவர் இளையராஜா மகன்ஒருவர் ஏ.ஆர்.றஹ்மான் மகன்...இசைத்துறை ஜாம்பவான்களின் வாரிசுகளான இளையராஜா மகன் யுவன்...
16/05/2021

💐💐 வாழ்த்துக்கள்

ஒருவர் இளையராஜா மகன்
ஒருவர் ஏ.ஆர்.றஹ்மான் மகன்...

இசைத்துறை ஜாம்பவான்களின் வாரிசுகளான
இளையராஜா மகன் யுவன் சங்கர் ராஜாவும், ஏ.ஆர்.றஹ்மானின் மகன்
ஏ.ஆர் அமீனும் இணைந்து ஒரு புதிய இசை ஆல்பம் வெளியிட்டுள்ளனர்...

இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்)
மதீனா வருகையின் போது மதீன மாநகரத்து மக்கள் வரவேற்று பாடிய பாடல் வரிகளை தமிழில் மெட்டமைத்து பாடியுள்ளதாகவும்,
இந்த பாடல் விற்பனை மூலம் வரும் வருமானம் முழுவதும் ஏழை எளியவர்களுக்கு வழங்கப்படும் என்றும் யுவனும், அமீனும் தெரிவித்துள்ளனர்...
இருவருக்கும் துஆவுடன்

வாழ்த்துக்கள்...

கொரோனா கட்டளை மையம்ஒருங்கிணைப்பாளராகடாக்டர் தாரேஸ் அஹ்மத் நியமனம்...தமிழக அரசில் பணிபுரியும்துணிச்சலும் நேர்மையும் மிக்க...
09/05/2021

கொரோனா கட்டளை மையம்
ஒருங்கிணைப்பாளராக
டாக்டர் தாரேஸ் அஹ்மத் நியமனம்...

தமிழக அரசில் பணிபுரியும்
துணிச்சலும் நேர்மையும் மிக்க அதிகாரிகளில் ஒருவரான
கேரள மாநிலம் மஞ்சேரியை சார்ந்த தாரேஸ் அஹ்மத் மருத்துவத்தில் முதுகலை பட்டத்துடன் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி ஐஏஎஸ் ஆனவர்..

தற்போது முதல்வரின் தனிச்செயலாளராக பதவி ஏற்றுள்ள உதயசந்திரன் மதுரை மாவட்ட ஆட்சியராக பணி புரிந்த சமயத்தில் தாரேஸ் அஹ்மத் பயிற்சி ஆட்சியராக இருந்தவர்..
பல்லாண்டுகளாக தொடர்ந்து நடத்த முடியாமல் இருந்த பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்து தேர்தலை பெரும் சவால்களை எதிர்கொண்டு ஆட்சியர் துணையோடு நடத்தி முடித்து தேர்தல் ஆணையத்தின் பாராட்டுக்களை பெற்றவர்..

2011 ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, எளிய மக்களுக்கும் அரசின் திட்டங்கள் வெளிப்படையாக கிடைக்கும் வகையில் செயல்பட்டு
"Hero of Perambalur" என்று புகழப்பட்டவர்..
பொது நிர்வாகத் துறையின் சிறந்த ஆட்சியருக்கான பிரதமர் விருது 2015ல் பெற்று தேசிய அளவில் கவுரவிக்கப்பட்ட தாரேஸ் அஹ்மத், மத்திய அரசின் சார்பில் அனுப்பப்பட்டு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் ஊரக மேம்பாடு குறித்து சிறப்பு பயிற்சி பெற்றவர்...

திறமையான அதிகாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வரும்
தமிழக முதல்வர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் விரைவுபடுத்த மாநில அளவில் அனைத்து துறைகளையும் இணைத்து துவங்கியுள்ள
"கொரோனா கட்டளை மையம்"
மாநில ஒருங்கிணைப்பாளராக தாரேஸ் அஹ்மத் அவர்களை நியமித்துள்ளார்...

#வாழ்த்துக்கள் 👌

 தாயோடு இன்று பேசினேன். கொரோனா தொற்றிடமிருந்து பாதுகாப்பாக இருக்க உத்தரவிட்டார்கள். அன்னையின் ஆணையை மீற முடியுமா? Spoke ...
09/05/2021


தாயோடு இன்று பேசினேன். கொரோனா தொற்றிடமிருந்து பாதுகாப்பாக இருக்க உத்தரவிட்டார்கள். அன்னையின் ஆணையை மீற முடியுமா? Spoke to my mother, she ordered me to be safe. Can i disobey her command?

33 இலட்சம் மரக்கன்றுகள் நட்ட மாமனிதனுக்கு எங்கள் நிறுவனம் அஞ்சலி செலுத்துகிறது.
17/04/2021

33 இலட்சம் மரக்கன்றுகள் நட்ட மாமனிதனுக்கு எங்கள் நிறுவனம் அஞ்சலி செலுத்துகிறது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக பொறுப்பேற்க உள்ள செல்வநாகரத்தினம் ips அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐
01/04/2021

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக பொறுப்பேற்க உள்ள செல்வநாகரத்தினம் ips அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐

திருச்சி மாவட்ட ஆட்சியராக திவ்யதர்ஷினி மற்றும் எஸ்பியாக மயில்வாகனன் நியமனம்!
26/03/2021

திருச்சி மாவட்ட ஆட்சியராக திவ்யதர்ஷினி மற்றும் எஸ்பியாக மயில்வாகனன் நியமனம்!

Proud to be Vellorian!!
05/03/2021

Proud to be Vellorian!!

❤️வாழ்த்துக்கள் அய்யா!!
04/03/2021

❤️வாழ்த்துக்கள் அய்யா!!

இன்று கன்னியாகுமரியில் நடந்த உலக சாதனை முயற்சி என்ற சோழன் ஒர்ல்டு ரெகார்ட் , நடத்திய "The longer distance with 2 bikes "...
03/03/2021

இன்று கன்னியாகுமரியில் நடந்த உலக சாதனை முயற்சி என்ற சோழன் ஒர்ல்டு ரெகார்ட் , நடத்திய "The longer distance with 2 bikes " என்ற தலைப்பில் நடந்த போட்டியில் thiru Kannan Strong Man India அவர்கள் உலக சாதனை படைத்தார், அதில் நிறுவனத்தை சேர்ந்த திரு. #மொய்னுதீன் ( Alif Moinudheen ) அவர்கள் நேரில் சென்று பட்டம் வாங்கிய கண்ணன் அவர்களை ஊக்கப்படுத்தி மற்றும் வாழ்க்கையில் பல சாதனைகளை படைக்க வாழ்த்தினார்...



Address

Vellore
632012

Alerts

Be the first to know and let us send you an email when Alif_power_club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share