07/07/2026
🥊 *பணி நிறைவு & மாபெரும் சாதனையாளர் பாராட்டு விழா அழைப்பிதழ்*
💐*அன்பு நண்பர்கள், சொந்தங்கள், மற்றும் விளையாட்டுத் துறையைச் சார்ந்த அனைத்து நல்லுலகங்களுக்கும் வணக்கம்!*
வேலூர் மாவட்ட குத்துச்சண்டை கழகம் பெருமையுடன் நடத்தும், நமது தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தின் மதிப்பிற்குரிய துணைத் தலைவரும், வேலூர் மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் தலைவரும், எனது *அன்பிற்குரிய ஆசானுமான
திரு. எஸ். மோகன்*(CTI / BG / I / SL / MAS)அவர்களின் *பணி நிறைவு மற்றும் மாபெரும் சாதனையாளர் பாராட்டு விழா* மிக விமசையாக நடைபெற உள்ளது.✨
*எனது ஆசானின் சாதனைகள்:🚂 ரயில்வே துறையில்*: 37 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் கூடிய கடமைப் பயணம்!
*🥊 குத்துச்சண்டைக் களத்தில்*: 40 ஆண்டுகள் தொடர் வீரப்பயணம்!
*🥇 தேசிய அளவில்*: தங்கம் வென்று தடம் பதித்த தேசிய சாதனையாளர்!
*🏆 விளையாட்டுத் துறையில்:* வேலூர் மண்ணில் 1000-க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்களை உருவாக்கி, பலரை அரசுத் துறைகளில் சாதனை படைக்க வைத்த மாபெரும் ஆசான்! வேலூரின் விடிவெள்ளி!
எங்கள் குடும்பத்திற்கும், விளையாட்டு உலகிற்கும் பெருமை சேர்த்த எனது குருநாதரின் இந்த முக்கிய வாழ்நாள் பொன்விழா நிகழ்வில், *அன்பு நண்பர்கள், சொந்தங்கள், மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்த தோழர்கள் அனைவரும் திரளாக வருகை தந்து, விழாவைச் சிறப்பித்து, அவரை வாழ்த்த வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்*.
📌 *விழா விபரங்கள்:📅 நாள்: 08.07.2026 புதன்கிழமை (நாளை)*
*🕚 நேரம்: காலை 11.00 மணி முதல்*
*📍 இடம்: பி லாப்ட் ஹோட்டல் (B LOFT HOTEL), ஈஸ்ட் காந்தி நகர், ஓடை பிள்ளையார் கோவில் டவுன், காட்பாடி, வேலூர்*
நமது அன்பிற்குரிய ஆசானின் இந்த விழாவை ஒரு மறக்கமுடியாத நாளாக மாற்ற உங்களின் வருகையும் வாழ்த்தும் எங்களுக்கு மிகவும் முக்கியம்!
*அனைவரையும் வருக வருக !! என அன்போடு வரவேற்கின்றோம்.*🤝
* *அன்புடன்*
* *பாக்சர் ராஜேஷ்,MA MPhil NIS Coach*
* *மாவட்ட செயலாளர்,
*வேலூர்*
*மாவட்ட குத்துச்சண்டை கழகம் மற்றும் மோகன் அவர்களின் அன்பு மாணவர்கள் & குடும்பத்தினர்*