14/02/2025
வள்ளியூரில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.
நெல்லை மாவட்ட வள்ளியூரில் திருச்சிலுவை நடுநிலைப் பள்ளியில் வைத்து நேதாஜி சிலம்பம் பயிற்சி மையம் சார்பாக மாவட்ட அளவிலான நடசாரி சிலம்பம் போட்டி நெல்லை மாவட்ட நடசாரி சிலம்பம் விளையாட்டுக்கழக மாவட்ட பொதுச் செயலாளர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் நேதாஜி பள்ளியின் தாளாளர் முத்துராமலிங்கம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியை வள்ளியூர் திருச்சிலுவை நடுநிலைப் பள்ளியின் தாளாளர் ஜாண்சன் சேசுதுரை, வள்ளியூர் காவல் ஆய்வாளர் நவீன் போக்குவரத்து துறை ஆய்வாளர் சுடலைமுத்து ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் வள்ளியூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகன், வள்ளியூர் பசுமை இயக்க தலைவர் சித்திரை, பத்திரிகையாளர் கலைமணி தமிழ்நாடு நடசாரி சிலம்பம் விளையாட்டு கழக மாநில பொதுச் செயலாளர் ஜெயராஜ், வள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராபின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
போட்டியில் வள்ளியூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 210 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் 130 மாணவர்களும், 90 மாணவிகளும் ஆகும்.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு கேடயங்களும், சான்றிதழ்களையும் வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர், மாணிக்கம் வள்ளியூர் பசுமை இயக்க தலைவர் சித்திரை, திருச்சிலுவை நடுநிலைப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் ஆகியோர் வழங்கினர்.