Vekan Martial Arts Sports Academy

Vekan Martial Arts Sports Academy We offer Karate, Silambam, Archery for all age groups. Self- Defence Program for Girls and Women.

Additionally we do offer Weight Management Program for Women and kids

வேகன் தற்காப்பு கலைக்கூடம்பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நாள்: 07 ஏப்ரல் 2023.திருவண்ணாமலை மாந்தோப்பில் இ...
12/04/2023

வேகன் தற்காப்பு கலைக்கூடம்
பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா

நாள்: 07 ஏப்ரல் 2023.

திருவண்ணாமலை மாந்தோப்பில் இயங்கி வரும் வேகன் தற்காப்பு கலைக்கூடத்தில் 07 ஏப்ரல் 2023 அன்று கராத்தே பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த கலைக்கூடத்தில் கராத்தே, சிலம்பம், வில்வித்தை, யோகா, மற்றும் பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி ஆகியவை மிக சிறப்பான முறையில் திறமை வாய்ந்த தேசிய நடுவர் மற்றும் பயிற்சியாளர்களால் அளிக்கப்படுகிறது.

மாணவ மாணவியர்களுக்கு இந்த பெல்ட் தேர்வினை சென்னையில் இருந்து வருகை புரிந்த தேசிய நடுவர் திரு s. பிரபாகரன் அவர்கள் நடத்தினார். ஜப்பான் ஷிடோ ரியு கராத்தே பயிற்சி பள்ளியின் கீழ் இயங்கும் வேகன் தற்காப்பு கலைக்கூடத்தின் பெல்ட் அளிக்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு பெ.சு.தி. சரவணன் M.A., MLA அவர்கள் கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்தி பேசினார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கப்பட்ட இவ்விழாவில் வேகன் தற்காப்பு கலைக்கூடத்தின் நிறுவனரும் இப்பயிற்சி பள்ளியின் தலைமை பயிற்சியாளருமான ரென்ஷி வேக. நாகராஜன் B.C.A., DFN., சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பேசினார்.

இவ்விழாவில் சிறப்பு அம்சமாக 100 மாணவ மாணவியர் மற்ற நிற பெல்ட்டுகளையும், 6 மாணவ மாணவியர் கருப்பு நிற பெல்ட்டுகளையும் பெற்றனர். இந்த தேர்வினில் திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், மற்றும் புதுப்பாளையம் ஆகிய ஒன்றியங்களை சார்ந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு நம் வேகன் தற்காப்பு கலைக்கூடத்தின் சார்பாக இலவச பயிற்சி அளிக்கப்பட்டு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பிளாக் பெல்ட் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரம்
S.தருண். L. அய்யனார். S. சாய் அனிஷ், J.N. ஸ்வர்ண பாரதி, K.S. கனிஷ்கா, தினேஷ்ராஜ் மாணிக்கராஜ் ஆவர்.

முன்னதாக வேகன் தற்காப்பு கலைக்கூடத்தின் மாணவர்கள் சார்பாக தற்காப்பு பயிற்சி செயல்முறை விளக்கத்தோடு காட்டப்பட்டது.

இறுதியாக விழாவிற்கு வருகை புரிந்த அனைவருக்கும் ரென்ஷி வேக. நாகராஜன் B.C.A., DFN., நன்றி கூறினார்.

தேசிய கீதத்தோடு பெல்ட் தேர்வு விழா நிறைவுபெற்றது.

                World Karate Federation
09/09/2022



World Karate Federation

Renshi VeKa Nagarajan B.C.A., DFN.,
24/05/2022

Renshi VeKa Nagarajan B.C.A., DFN.,

Address

# 9/18, P. U.S. Nagar, Manthoppu, (Opp To Hotel Ramakrishna)
Tiruvannamalai
606601

Alerts

Be the first to know and let us send you an email when Vekan Martial Arts Sports Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vekan Martial Arts Sports Academy:

Share