30/09/2024
டீம் ஷடோவ் காய் கராத்தே பள்ளி மாணவன் மாஸ்டர் சந்தோஷ் .M -58kg எடைப்பிரிவில் 17 வயதுக்கு உட்பட ஆடவர்களுக்கான சண்டை பிரிவில் முதல்லிடம் பிடித்து இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் நேஷனல் ஸ்கூல் கேம்ஸில் பங்குபெற தகுதி ஆகியுள்ளார் என்பதை மிக்கமழிச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த மாணவனின் வெற்றியை அங்கீகரித்த தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டூ அசோஸியேஷன்(TSKA) பொறுப்பாளர்களுக்கும் Althaf Alam ,திருப்பூர் மாவட்ட விளையாட்டு கராத்தே அசோஸியேஷன்(TDSKA) பொறுப்பாளர்களுக்கும்,
டீம் ஷடோவ் காய் கராத்தே பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை 🙏 தெருவித்துக்கொள்கிறோம்.
திருப்பூரில் 30 ஆண்டுகாலமாக கராத்தே பயிற்சில் பல சாதனையாளர்களையும் பல சர்வதேச பயிற்சியாளர்களையும் உருவாகிவரும் ஓரே கராத்தே பயிற்சி பள்ளி டீம் ஷடோவ் காய் கராத்தே பள்ளியாகும்.
இப்பள்ளியில் இருந்து இந்திய கராத்தே (KIO-INDIA) டீமிற்க்கு மாணவிகள் தேர்வாகி ஆஃபீசியல் கேம்ஸ் என அழைக்கப்படும் ஆசிய கராத்தே அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தெற்கு ஆசிய கராத்தே போட்டியில் பங்குபெற்று இந்திய நாட்டிற்கு பதக்கம் வென்று பெருமை சேர்த்தியுள்ளார்கள் என குறிப்பிடத்தக்கது.
மேலும் 2021லிருந்து தொடர்ச்சியாக மாணவ மாணவிகளை உலக கராத்தே அமைப்பு (WKF) அங்கீகரிக்க பட்ட நேஷனல் கூட்டமைப்பு (KIO - NATIONAL) கேம்ஸ்ற்கு தமிழ்நாடு (TSKA) சார்பாக விளையாட தேர்ச்சிபெற்று நம் தமிழ்நாட்டிற்கு பதக்கங்கள் வெல்லும் கராத்தே பள்ளியாகும்.