15/08/2023
சேவூரில், மாநில அளவிலான கால்பந்து போட்டி.
சேவூரில், மாநில அளவிலான ஏழாவது ஆண்டு ஐவர் கால்பந்து போட்டி. கடந்த 12 மற்றும் 13 -ந்தேதி (இரண்டு நாட்கள்) நடைபெற்றது.
சேவூர் கால்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி, சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி (சத்தி சாலை) அருகில் நடைபெற்றது. இதில், 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. இதில் திருப்பூர் ஜூனியர்ஸ் அணி முதல் பரிசை தட்டிச்சென்றது. இரண்டாவது பரிசாக சேவூர் கால்பந்து கழக அணியும், மூன்றாவது பரிசாக பல்லடம் அகரம் அணியும், நான்காவது பரிசாக கோவை நேரு கல்லூரி அணியும் வெற்றி பெற்றது.
மேலும் சிறந்த ஆட்டக்காரர்களுக்கான விருது திருப்பூர் ஜூனியர் அணி வீரர் சுரேஷ்க்கும், சிறந்த தடுப்பாட்டக்காரர் விருது, சேவூர் கால்பந்து கழக அணி வீரர் திவாகருக்கும், சிறந்த கோல்கீப்பர் விருது, சேவூர் கால்பந்து கழக அணி வீரர் ஞானசேகருக்கும் வழங்கப்பட்டது.
*பரிசுகள்*
வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசு 15 ஆயிரம் மற்றும் கோப்பையும், இரண்டாம் பரிசு ரூ 10 ஆயிரம் மற்றும் கோப்பையும், மூன்றாம் பரிசாக ரூ.7 ஆயிரம் மற்றும் கோப்பையும், நான்காவது பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது
மேலும் சிறந்த ஆட்டநாயகன் விருது, தடுப்பாட்டக்காரர் விருது மற்றும் கோல்கீப்பர் விருதுகள் வழங்கப்படடன. இந்நிகழ்ச்சியில், சேவூர் கால்பந்து கழக தலைவரும், முறியாண்டம்பாளையம் ஊராட்சி மன்ற துணைத்தலைவருமான எஸ்.கே.கனகராஜ், முதல் பரிசுக்கான தொகை ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கினார்.சேவூர் கால்பந்து கழக தலைவர் எஸ்.கே.கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சேவூர் கால்பந்து கழக துணைத்தலைவரும், முறியாண்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவருமான ப.ரவிக்குமார் வெற்றி பெற்ற அணிகளுக்கு,பரிசுகளை வழங்கினார்.இரண்டு நாட்கள் நடைபெற்ற கால்பந்து போட்டி நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு
போட்டிகளை பார்வையிட்டு, கால்பந்து வீரர்களை
உற்சாகப்படுத்தினர்.