கட்டுக்குடிப்பட்டி - 630410

கட்டுக்குடிப்பட்டி - 630410 Kattukudipatti is a Beautiful village placed between Temple City Madurai and Rockfort City Trichy.

நமது ஊரில் 4 ஆவது நாளாக இன்றும் கனமழை...அந்த கர்நாடகா காரனுக்கு எவ்வளவு தண்ணி வேணும்ணு கேளு Moment..😁
29/08/2022

நமது ஊரில் 4 ஆவது நாளாக இன்றும் கனமழை...அந்த கர்நாடகா காரனுக்கு எவ்வளவு தண்ணி வேணும்ணு கேளு Moment..😁

 ்டுக்குடிபட்டி_கபாடி திருவிழா 🔴LIVE IN   நேரலைவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொன்.உதயகுமார் பிள்ளை அவர்களது நினைவாக வர...
27/08/2022

்டுக்குடிபட்டி_கபாடி திருவிழா
🔴LIVE IN
நேரலை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொன்.உதயகுமார் பிள்ளை அவர்களது நினைவாக வருகின்ற 3/9/2022 அன்று அதிகாலை மாபெரும் கபாடி போட்டி துவங்க இருக்கிறது அனைத்து ஒரு ஊர் கபாடி அணிகளும் கலந்து கொண்டு கபடி போட்டியினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இவன் S.V.R இளைஞர் நற்பணி மன்றம் கபடி குழு கட்டுக்குடிப்பட்டி

27/08/2022

நேற்று மற்றும் அதற்கு முன்தினம் பெய்த மழையால் நமது ஊர் பிரமன் குளம் நிரம்பியது

Welcome to all
12/01/2022

Welcome to all

கட்டுக்குடிப்பட்டி Jolly Boys Cricket Club நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி. #நாள்: 13/01/2022  #இடம்: மணலிக்கண்மாய்,...
11/01/2022

கட்டுக்குடிப்பட்டி Jolly Boys Cricket Club நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி.
#நாள்: 13/01/2022
#இடம்: மணலிக்கண்மாய், கட்டுக்குடிப்பட்டி
#நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை.

நமது ஊர் பிரமன்குளம் 95% நிரம்பியதை அடுத்து, செட்டிகுளம் நிரம்ப வழிவகை செய்யும் நோக்கில் இன்று நமது ஊர் இளைஞர்கள் தாமாக ...
26/11/2021

நமது ஊர் பிரமன்குளம் 95% நிரம்பியதை அடுத்து, செட்டிகுளம் நிரம்ப வழிவகை செய்யும் நோக்கில் இன்று நமது ஊர் இளைஞர்கள் தாமாக முன் வந்து உதவியதன் விளைவாக மணல் மூட்டை மூலம் பிரமன்குளம் வரத்து நீர் தடுக்கப்பட்டு,செட்டிகுளம் செல்லும் வரத்து கால்வாய் சீர் செய்யப்பட்டு வருகிறது...

நிரம்பி தலும்பும் தருவாயில் நமது ஊர் பிரமன் குளம்...
26/11/2021

நிரம்பி தலும்பும் தருவாயில் நமது ஊர் பிரமன் குளம்...

03/09/2021
17/08/2021

நம் ஊரில் இன்று நல்ல மழை...

07/02/2021

இன்று வேந்தன்பட்டி ஜல்லிக்கட்டில் வாடிவாசல் களத்தை அலற வைத்த நம் கட்டுக்குடிப்பட்டி மண்ணின் மைந்தன் ராஜேஷ் *காக்கா* அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்......

🙏தைப்பூசம் ஸ்பெஷல்🙏சிவபெருமானிடம் இருந்தும், பிரம்மதேவனிடம் இருந்தும் கடும் தவத்தின் மூலமாக பல வரங்களைப் பெற்றனர், சூரபத...
27/01/2021

🙏தைப்பூசம் ஸ்பெஷல்🙏

சிவபெருமானிடம் இருந்தும், பிரம்மதேவனிடம் இருந்தும் கடும் தவத்தின் மூலமாக பல வரங்களைப் பெற்றனர், சூரபதுமனும் அவனது தம்பிகளான தாரகாசுரன் மற்றும் சிங்கமுகன் ஆகியோரும். அதில் முக்கியமானது, ‘தங்களது மரணம் நிகழ்ந்தால், அது சிவபெருமானுக்கு நிகரான சக்தியால்தான் நிகழ வேண்டும்’ என்பதாகும்.

இவர்கள் மூவரும் தாங்கள் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவர்களை சிறையில் அடைத்து வைத்து துன்புறுத்தினா். தேவர்களின் தலைவனான இந்திரனும் கூட, யாரும் அறியாத ஓரிடத்தில் போய் மறைந்து கொண்டான். சிறையில் வாடியபடியே தேவர்கள் அனைவரும் பிரம்மனையும், விஷ்ணுவையும் நோக்கி தங்கள் பிரார்த்தனையை வைத்தனர்.

அவர்கள் ஈசனால்தான் இதற்கு தீர்வு காண முடியும் என்று அவரிடம் சென்றனர். அங்கு ஈசன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அவரை தியானத்தில் இருந்து எழுப்பும் தைரியம் எவருக்கும் இல்லை. எனவே மன்மதனை அழைத்து, சிவபெருமான் மீது காம பாணம் வீசச் செய்தனர்.

இதனால் கண் விழித்த ஈசன், தன் நெற்றிக் கண்ணில் இருந்து தீப்பொறியை வெளிப்படுத்தினார். அவை ஆறு தீப்பொறிகளாகப் பிரிந்து கங்கையை அடைந்தது. அதனை வாயுதேவன், சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தார். அங்கு அந்த ஆறு தீப் பொறிகளும், ஆறு குழந்தைகளாக மாறின. அவரே முருகப்பெருமான்.

முருகப்பெருமான் அவதரித்தது வைகாசி விசாகம் ஆகும். அவர் சூரபதுமர்களை வதம் செய்தது ஐப்பசி மாதம் சஷ்டி திதியில். அன்றைய தினம்தான் கந்த சஷ்டி கொண்டாடப்படுகிறது. அப்படி சூரபதுமர்களை அழிப்பதற்காக, முருகப்பெருமானுக்கு பார்வதேவி ஞானவேல் வழங்கினார்.

☆பார்வதியிடம் இருந்து முருகன் ஞானவேல் பெற்ற தினத்தையே, தைப்பூசத் திருநாள் என்று பக்தர்கள் கொண்டாடுகிறார்கள்.☆

பழத்திற்காக கோபித்துக் கொண்டு, ஆண்டி கோலத்தில் முருகப்பெருமான் நின்ற இடம் பழனி. அந்தத் திருத்தலத்திற்குச் சென்றுதான், பார்வதி ஞானவேலை வழங்கியதாக புராணங்கள் சொல்கின்றன. எனவே தான், தைப்பூசத் திருநாள், பழனியில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

தேவர்களின் படைத் தளபதியாக பொறுப்பேற்று, அசுரர்களை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய ஞானவேலை தைப்பூச திருநாளில் வணங்கி வழிபட்டால், மாந்திரீகம், ஏவல், பில்லி, சூனியம் என எந்த கெட்ட சக்தியும் நம்மை நெருங்காது. முருகப்பெருமானுக்கு நடைபெறும் திருவிழாக்களிலேயே புகழ்பெற்றதும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் முதல் வெளிநாட்டவர் வரை மனம் விரும்பி கொண்டாடும் விழாவாகவும் தைப்பூசம் உள்ளது.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது சொல் வழக்கு. எனவே மலை மீது இருக்கும் முருகப்பெருமானை வழிபாடு செய்வதால் தைப்பூசத் திருநாளில் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

தைப்பூச திருநாளில் பழனி முருகனுக்கு காவடி எடுத்தால் எந்த தீய சக்திகளும், மாந்திரீகமும், பில்லி, சூனியம், ஏவல் என எதுவும் நம்மை நெருங்காது. அதனால் தான் ‘சுக்குக்கு மிஞ்சுன மருந்தும் இல்லை, சுப்ரமணியனுக்கு மிஞ்சுன கடவுளும் இல்லை’ என்று சொல்லி இருக்கிறார்கள். தைப்பூச திருநாளில் தான் உலகம் தோன்றியதாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

அதே போல் சிவபெருமான், பார்வதியுடன் இணைந்து தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆனந்த திருநடனம் புரிந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்ததும், இந்த தைப்பூசத் திருநாளில்தான். இரணியவர்மன் என்ற அரசன், தில்லையம்பலத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்தான். அவனுக்கு சிவபெருமான் காட்சியளித்தது இந்த தைப்பூசத் திருநாளே ஆகும். எனவே தைப்பூசம் அன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், இறைவனுக்கு அபிஷேக மற்றும் அலங்காரங்கள் செய்யப்படும்.

தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால், தைப்பூச தினத்தில் குரு வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை அளிக்கும்.

நமது ஊர் பிரமன் குளம்...இன்று காலை காட்சி
13/01/2021

நமது ஊர் பிரமன் குளம்...இன்று காலை காட்சி

Address

Singampunari/Ponnamaravathy Road
Tiruppattur
630410

Telephone

9876543210

Website

Alerts

Be the first to know and let us send you an email when கட்டுக்குடிப்பட்டி - 630410 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share