26/06/2026
நன்றி! நன்றி!! நன்றி!!!
திருவெறும்பூர் தொகுதி, துவாக்குடி நகராட்சி தலைவர் திரு. E. காயம்பு அவர்கள் எங்களின் GPT விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்து மீண்டும் விளையாட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைக்கு உடனடியாக நல்ல வரவேற்பும், ஆர்வமும் காட்டியதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று முதல் மைதானத்தை சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன என்பது எங்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்த பணிக்கு தொடர்ந்து ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்கி, GPT மைதானத்தை முழுமையாக மீட்டெடுக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
எங்கள் குழுவின் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள், ஐயா!