09/08/2026
தமிழ்நாடு அமெச்சூர் பளுதூக்கும் சங்கத்தின் (Tamil Nadu Amateur Weightlifting Association) பொதுக்குழுக் கூட்டம் (General Body Meeting) ஆகஸ்ட் 7, 2026 அன்று ஊட்டியில் உள்ள Ave Mariya Cottage வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு, பளுதூக்கும் விளையாட்டின் வளர்ச்சி, வீரர்–வீராங்கனைகளுக்கான பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகளை மேம்படுத்துதல், சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
மேலும், மாநில அளவில் பளுதூக்கும் விளையாட்டை மேலும் ஊக்குவிப்பது, திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவது தொடர்பாகவும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
கூட்டம் சிறப்பாக நடைபெற்று, தமிழ்நாட்டில் பளுதூக்கும் விளையாட்டின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.இக்கூட்டத்தில் நாமக்கல் அமெச்சூர் மாவட்ட பளுதூக்கும் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் முனைவர் மோ.மெய்ஞானம் மற்றும் உறுப்பினர் திருமதி கு.சசிபிரியா ஆகியோர் பங்கேற்றனர்.