Eternal Sports Academy

Eternal Sports Academy Judo, Karate, Takewondo, Boxing, MMA, Skating & Silambam

07/07/2025
நாமக்கல்: சிறப்பு ஜூடோ பயிற்சி முகாம் - 80 மாணவ, மாணவிகள் பங்கேற்புநாமக்கல் மாவட்டம், எரணாபுரம், ஸ்பைரோ பிரைம் பப்ளிக் ப...
07/07/2025

நாமக்கல்: சிறப்பு ஜூடோ பயிற்சி முகாம் - 80 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம், எரணாபுரம், ஸ்பைரோ பிரைம் பப்ளிக் பள்ளி (சி.பி.எஸ்.இ) வளாகத்தில் ஜூலை 6, 2025 அன்று ஒரு நாள் சிறப்பு ஜூடோ பயிற்சி முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஜூடோ விளையாட்டு சங்கம், தமிழ்நாடு ஜூடோ சங்கம் மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டு நடத்தப்பட்ட இம்முகாமில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ/மாணவிகள் என 80 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில், ஜூடோவின் அடிப்படை நுட்பங்கள், தற்காப்பு கலை உத்திகள் மற்றும் உடற்பயிற்சிகள் குறித்து அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இம்முகாமை, நாமக்கல் ஜூடோ சங்கத்தின் தலைவர் திரு. எஸ். எம். உதயாக்குமார், நாமக்கல் ஜூடோ சங்கத்தின் துணைத் தலைவர் திரு. எம். அசோக் குமார், நாமக்கல் judo சங்க பொதுசெயலாளர் சிந்திய k பாபு, இந்திய நடுவர் சென்செய் கே. முரளி ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தனர். ஸ்பைரோ கல்வி நிறுவனத்தின் தலைவர் திரு. எஸ். வி. உதயாக்குமார் மற்றும் எடர்னல் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைமைப் பயிற்சியாளர் திரு சிந்தியா k. பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.
மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தையும், தற்காப்பு திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாம், பங்கேற்ற அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்தது. நாமக்கல் மாவட்ட judo செயலாளர் திரு சிந்தியா கே. பாபு அவர்கள் நன்றி கூறினார்.

28/10/2023
29/04/2023

Address

37 South Car Street, Cynthiya Studio
Tiruchengode

Telephone

+919842025522

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eternal Sports Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share