Thoothukudi District Volleyball Association

Thoothukudi District Volleyball Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thoothukudi District Volleyball Association, Stadium, arena & sports venue, No. 106K/15C, Chinnamani Nagar, Thoothukudi.

11/09/2016
11/09/2016

தூத்துக்குடி மாவட்ட கைப்பந்துக் கழகம் நடத்தும்
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சுழற்கோப்பைக்காக
25வது அகில இந்திய கைப்பந்து போட்டி பெண்கள் பிரிவில் கே.எஸ்.இ.பி. அணி வெற்றி

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் கோப்பைக்காக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியும் தூத்துக்குடி கைப்பந்துக் கழகமும் இணைந்து நடத்தும் 25வது அகில இந்திய கைப்பந்துப் போட்டி பெண்களுக்கான இறுதி ஆட்டத்திற்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பொது மேலாளர், வர்த்தக பிரிவு திரு.எம்.குணசேகரன் அவர்கள் தலைமை தாங்கி போட்டியை துவக்கி வைத்தார்.

பெண்களுக்கான இறுதி ஆட்டத்தில் கேரளா மின் வாரியம் (கே.எஸ்.இ.பி.) அணியினரும் இந்தியன் சாய் அணியினரும் மோதினார்கள்.

இறுதிப் போட்டி முடிவு:

1 செட் - 25 - 22
2 செட் - 20 - 25
3 செட் - 25 - 18
4 செட் - 25 - 18

கேரளா மின் வாரியம் (கே.எஸ்.இ.பி.) அணி 3 : 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக தலைவர் திரு. ஜான் வசீகரன் செயலாளர் திரு. ரமேஷ்குமார், பொருளாளர் ரவிராஜன் மற்றும் கழக உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

10/09/2016

தூத்துக்குடி மாவட்ட கைப்பந்துக் கழகம் நடத்தும்
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சுழற்கோப்பைக்காக
25வது அகில இந்திய கைப்பந்துப் போட்டி
ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம். அணியும் இந்தியன் இன்கம்டாக்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி.
பெண்கள் பிரிவில் கேரளா மின் வாரியம் (கே.எஸ்.இ.பி.) அணியும் இந்தியன் சாய் அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி.

ஆறாம் நாள் (10-09-2016)

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் கோப்பைக்காக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியும் தூத்துக்குடி கைப்பந்துக் கழகமும் இணைந்து நடத்தும் 25வது அகில இந்திய கைப்பந்துப் போட்டி ஆறாம் நாள் அரை இறுதிப் போட்டி ஆட்டத்திற்கு திருநெல்வேலி மாவட்ட கைப்பந்துக் கழக தலைவர் திரு.பிரபாகரன் அவர்களும், திருநெல்வேலி மாவட்ட கைப்பந்துக் கழக செயலாளர் திரு.ரவீந்திரன் அவர்களும் மற்றும் தமிழ்நாடு கைப்பந்துக் கழக துணைத் தலைவர் திரு.பி.பாலசந்திரன் அவர்களும் தலைமை தாங்கி போட்டியை துவக்கி வைத்தனர்.

மூன்றாவது ஆட்டத்தில் ஆண்களுக்கான அரை இறுதிப் போட்டியில் இந்தியன் இன்கம்டாக்ஸ் அணியும் அவர்களை எதிர்த்து ஐ.ஓ.பி. அணியும் மோதினார்கள்.

மூன்றாவது போட்டி முடிவு:

1 செட் - 20 - 25
2 செட் - 25 - 21
3 செட் - 29 - 27
4 செட் - 25 - 17

இந்தியன் இன்கம்டாக்ஸ் அணி 3 : 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக தலைவர் திரு. ஜான் வசீகரன் செயலாளர் திரு. ரமேஷ்குமார், பொருளாளர் ரவிராஜன் மற்றும் கழக உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

10/09/2016

தூத்துக்குடி மாவட்ட கைப்பந்துக் கழகம் நடத்தும்
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சுழற்கோப்பைக்காக
25வது அகில இந்திய கைப்பந்துப் போட்டி
ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம். அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி.
பெண்கள் பிரிவில் கேரளா மின் வாரியம் (கே.எஸ்.இ.பி.) அணியும் இந்தியன் சாய் அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி.

ஆறாம் நாள் (10-09-2016)

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் கோப்பைக்காக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியும் தூத்துக்குடி கைப்பந்துக் கழகமும் இணைந்து நடத்தும் 25வது அகில இந்திய கைப்பந்துப் போட்டி ஆறாம் நாள் இரண்டாம் ஆட்டத்திற்கு ராலி இஞ்சினியரிங் உரிமையாளர் திரு.லெனின் அவர்கள் தலைமை தாங்கி போட்டியை துவக்கி வைத்தார்.

இரண்டாம் ஆட்டத்தில் பெண்களுக்கான போட்டியில் இந்தியன் சாய் அணியும் இவர்களை எதிர்த்து கேரளா போலீஸ் அணியும் மோதினார்கள்.

இரண்டாம் போட்டி முடிவு:

1 செட் - 25 - 15
2 செட் - 25 - 22
3 செட் - 25 - 19

இந்தியன் சாய் அணி 3 : 0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக தலைவர் திரு. ஜான் வசீகரன் செயலாளர் திரு. ரமேஷ்குமார், பொருளாளர் ரவிராஜன் மற்றும் கழக உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

10/09/2016

தூத்துக்குடி மாவட்ட கைப்பந்துக் கழகம் நடத்தும்
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சுழற்கோப்பைக்காக
25வது அகில இந்திய கைப்பந்துப் போட்டி
ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம். அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி.

ஆறாம் நாள் (10-09-2016)

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் கோப்பைக்காக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியும் தூத்துக்குடி கைப்பந்துக் கழகமும் இணைந்து நடத்தும் 25வது அகில இந்திய கைப்பந்துப் போட்டி ஆறாம் நாள் அரை இறுதிப் போட்டி முதல் ஆட்டத்திற்கு மத்தியபாகம் காவல் துறை உதவி ஆய்வாளர் திரு.இரவிக்குமார் அவர்களும் மற்றும் பழையகாயலைச் சேர்ந்த முன்னாள் கைப்பந்து விளையாட்டு வீரர் திரு.ராமச்சந்திரன் அவர்களும் தலைமை தாங்கி போட்டியை துவக்கி வைத்தனர்.

முதல் ஆட்டத்தில் ஆண்களுக்கான போட்டியில் எஸ்.ஆர்.எம் அணியும் இவர்களை எதிர்த்து கேரளா மின் வாரியம் (கே.எஸ்.இ.பி.) அணியும் மோதினார்கள்.

முதல் போட்டி முடிவு:

1 செட் - 25 - 16
2 செட் - 25 - 16
3 செட் - 25 - 22

எஸ்.ஆர்.எம் அணி 3 : 0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக தலைவர் திரு. ஜான் வசீகரன் செயலாளர் திரு. ரமேஷ்குமார், பொருளாளர் ரவிராஜன் மற்றும் கழக உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

09/09/2016

தூத்துக்குடி மாவட்ட கைப்பந்துக் கழகம் நடத்தும்
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சுழற்கோப்பைக்காக
25வது அகில இந்திய கைப்பந்துப் போட்டி ஆண்கள் பிரிவில் ஐ.ஓ.பி. , கேரளா மின் வாரியம் (கே.எஸ்.இ.பி.), இந்தியன் இன்கம்டாக்ஸ் மற்றும் எஸ்.ஆர்.எம். அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி.

ஐந்தாம் நாள் (09-09-2016)

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் கோப்பைக்காக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியும் தூத்துக்குடி கைப்பந்துக் கழகமும் இணைந்து நடத்தும் 25வது அகில இந்திய கைப்பந்துப் போட்டி ஐந்தாம் நாள் மூன்றாம் ஆட்டத்திற்கு தமிழ்நாடு கூடைப்பந்து கழகத் துணைத் தலைவர் திரு.டி.ஆர்.பாலமுருகன் அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழக பொருளாளர் திரு.எஸ்.நாட்டன் அவர்களும் தலைமை தாங்கி போட்டியை துவக்கி வைத்தனர்.

மூன்றாவது ஆட்டத்தில் ஆண்களுக்கான போட்டியில் ஐ.ஓ.பி. அணியும் அவர்களை எதிர்த்து கேரளா மின் வாரியம் (கே.எஸ்.இ.பி.) அணியும் மோதினார்கள்.

மூன்றாவது போட்டி முடிவு:

1 செட் - 23 - 25
2 செட் - 25 - 19
3 செட் - 25 - 17
4 செட் - 25 - 18

அணி 3 : 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக தலைவர் திரு. ஜான் வசீகரன் செயலாளர் திரு. ரமேஷ்குமார், பொருளாளர் ரவிராஜன் மற்றும் கழக உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

09/09/2016

தூத்துக்குடி மாவட்ட கைப்பந்துக் கழகம் நடத்தும்
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சுழற்கோப்பைக்காக
25வது அகில இந்திய கைப்பந்துப் போட்டி ஆண்கள் பிரிவில் ஐ.ஓ.பி. , கேரளா மின் வாரியம் (கே.எஸ்.இ.பி.), இந்தியன் இன்கம்டாக்ஸ் மற்றும் எஸ்.ஆர்.எம். அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி.

ஐந்தாம் நாள் (09-09-2016)

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் கோப்பைக்காக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியும் தூத்துக்குடி கைப்பந்துக் கழகமும் இணைந்து நடத்தும் 25வது அகில இந்திய கைப்பந்துப் போட்டி ஐந்தாம் நாள் இரண்டாம் ஆட்டத்திற்கு அகில இந்திய தொழில் வர்த்தக சங்க பொதுச் செயலாளர் திரு.ஜி.பி.ஜோ பிரகாஷ் அவர்களும் மற்றும் செயின்ட் ஜான் ப்ரைட் சிஸ்டம்ஸ் துணைத் தலைவர் திரு. டேவிட் ராஜா அவர்களும் தலைமை தாங்கி போட்டியை துவக்கி வைத்தனர்.

இரண்டாம் ஆட்டத்தில் பெண்களுக்கான போட்டியில் கேரளா மின் வாரியம் (கே.எஸ்.இ.பி.) அணியும் இவர்களை எதிர்த்து வெஸ்டர்ன் ரயில்வே அணியும் மோதினார்கள்.

இரண்டாம் போட்டி முடிவு:

1 செட் - 25 - 18
2 செட் - 25 - 10
3 செட் - 25 - 13

கேரளா மின் வாரியம் (கே.எஸ்.இ.பி.) அணி 3 : 0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக தலைவர் திரு. ஜான் வசீகரன் செயலாளர் திரு. ரமேஷ்குமார், பொருளாளர் ரவிராஜன் மற்றும் கழக உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Address

No. 106K/15C, Chinnamani Nagar
Thoothukudi
628008

Telephone

0461-2392235

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thoothukudi District Volleyball Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share