Oliravan Yoga Academy - Thiruvarur

Oliravan Yoga Academy - Thiruvarur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Oliravan Yoga Academy - Thiruvarur, Personal trainer, Thiruvarur.

01/05/2026

- Oliravan Yoga Academy, Thiruvarur 🧘‍♀️💪🔥

5 முக்கிய ஆசனங்கள் - தினமும் 20 நிமிடம் போதும்

1. சூரிய நமஸ்காரம்* ☀️
12 Steps × 5 Rounds = Full Body Fat Burn
வயிறு, தொடை, கை எல்லாம் கரையும். Metabolism ஏறும்.

2. நாவாசனம் - Boat Pose 🚤
30 Sec × 3 Sets
தொப்பைக்கு Best. Core Strong ஆகும். AIM - Implement பண்ணு.

3. புஜங்காசனம் - Cobra Pose 🐍
Hold 20 Sec × 5 Times
முதுகு தொப்பை, Stress ரெண்டும் குறையும்.

4. பலகாசனம் - Plank Pose 📏
1 Min × 3 Sets
மொத்த உடம்பும் Tight ஆகும். Calories நல்லா Burn ஆகும்.

5. கபாலபாதி பிராணாயாமம் 🌬️
5 Min தொடர்ந்து
வயிற்று கொழுப்புக்கு எதிரி. உடம்பு Heat ஆகி Fat உருகும்.

Oliravan Yoga Academy Tips:👇
Assess- இன்று உன் Weight, Waist அளந்துக்கோ
Implement - தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த 5-ம் செய்
Manifest- 30 நாளில் மாற்றத்தை பார்

உடம்பு உன் கட்டுப்பாட்டில் இருக்கணும், நீ உடம்போட கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது 💯

சேர்ந்து கலக்கலாமா?
Oliravan Yoga Academy, திருவாரூர்
Contact: 9788772591

Fat Lose Yoga Poses 🧘‍♀️💪🔥
01/05/2026

Fat Lose Yoga Poses 🧘‍♀️💪🔥

பூஜை அறையில் கடவுளுக்கு தண்ணீர் வைப்பதின் மறைந்த ஆன்மீக ரகசியம்!நமது வீட்டில் பூஜை செய்யும்போது, கடவுளுக்கு பழம், தேங்கா...
01/05/2026

பூஜை அறையில் கடவுளுக்கு தண்ணீர் வைப்பதின் மறைந்த ஆன்மீக ரகசியம்!

நமது வீட்டில் பூஜை செய்யும்போது, கடவுளுக்கு பழம், தேங்காய், மலர், தீபம், நைவேத்தியம் போன்றவற்றை வைத்து வழிபடுவது அனைவருக்கும் தெரிந்ததே.
ஆனால், ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து வழிபடுவது — இதன் பின்னால் உள்ள ஆழமான அர்த்தத்தை பலர் அறியாமல் இருக்கிறார்கள்.

“தண்ணீர் வைப்பது ஒரு வழக்கம் மட்டுமா?”
இல்லை… அது ஒரு ஆன்மீக அறிவு!

💧 தண்ணீர் — உயிரின் மூல ஆதாரம்

இந்த உலகில் எந்த உயிரும் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது.
தண்ணீர் என்பது உயிரின் தொடக்கம், வளர்ச்சி, பரிபூரணம் ஆகிய அனைத்திற்கும் அடிப்படை.

அதனால் தான், நமது முன்னோர்கள் தண்ணீரை வெறும் பொருளாக பார்க்கவில்லை…
அதை தெய்வீக சக்தியின் வடிவமாக கருதினர்.

தண்ணீருக்கு உள்ள மூன்று முக்கியமான பண்புகள்:

🔹 சுத்திகரிக்கும் தன்மை – உடல் மட்டுமல்ல, மனதையும் சுத்தப்படுத்தும்
🔹 ஓட்டம் – நின்று விடாமல் ஓடும் தன்மை, வாழ்க்கை முன்னேற வேண்டும் என்பதைக் கற்பிக்கும்
🔹 ஆற்றல் உறிஞ்சும் தன்மை – சுற்றுப்புறத்தில் உள்ள எதிர்மறை சக்திகளை உட்கிரகித்து, அமைதியை தரும்

🪔 பூஜை அறையில் தண்ணீர் வைப்பதன் அர்த்தம்

நாம் கடவுளுக்கு தண்ணீர் வைத்து வழிபடும்போது, அது வெறும் சமர்ப்பணம் அல்ல…

👉 “என் வாழ்க்கையும் இத்தண்ணீரைப் போல தூய்மையாக இருக்க வேண்டும்” என்ற ஒரு உள்ளார்ந்த வேண்டுதல்.
👉 “என் மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் கழுவி செல்லட்டும்” என்ற ஆன்மீக நோக்கம்.

இந்த வழிபாடு நமக்குள்:

✨ அமைதி
✨ தெளிவு
✨ நேர்மறை எண்ணங்கள்
✨ மன நிறைவு

இவற்றை உருவாக்குகிறது.

🌿 துளசி நீரின் சிறப்பு

சிலர், சாதாரண தண்ணீருக்கு பதிலாக துளசி நீர் வைத்து வழிபடுவார்கள்.

துளசி — தெய்வீக தாவரம்.
அதன் வாசனையும், சக்தியும் சூழலை தூய்மையாக்கும்.

பூஜை முடிந்தபின், அந்த நீரை:

🔸 தீர்த்தமாக அருந்தலாம்
🔸 வீட்டில் தெளிக்கலாம்

இதனால்:

✔️ எதிர்மறை ஆற்றல்கள் அகலும்
✔️ உடலுக்கும் மனதுக்கும் சுத்தம் கிடைக்கும்
✔️ வீட்டில் தெய்வீக அதிர்வு அதிகரிக்கும்

🏺 எந்த பாத்திரத்தில் தண்ணீர் வைக்க வேண்டும்?

நமது முன்னோர்கள் குறிப்பிட்ட வழிமுறை:

✔️ வெள்ளி
✔️ தாமிரம் (செம்பு)
✔️ பித்தளை
✔️ மண் பாத்திரம்

இவற்றில் தண்ணீர் வைப்பது மிகவும் சிறந்தது.

❌ இரும்பு பாத்திரம் தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் அது ஆன்மீக ஆற்றலை தக்கவைக்காது என்று நம்பப்படுகிறது.

🔄 தினமும் தண்ணீர் மாற்ற வேண்டியதன் காரணம்

பூஜை அறையில் வைக்கப்படும் தண்ணீர், சுற்றுப்புற ஆற்றலை உறிஞ்சும் தன்மை கொண்டது.

அதனால்:

👉 தினமும் அதை மாற்றுவது அவசியம்
👉 பழைய நீரை வெளியே ஊற்றிவிட்டு, புதிய நீரை வைக்க வேண்டும்

இதனால் வீடு முழுவதும் புத்துணர்ச்சி ஏற்படும்.

📍 எங்கு வைக்க வேண்டும்?

வாஸ்து முறையின் படி:

👉 வடக்கு திசை தண்ணீருக்கான திசை என கருதப்படுகிறது
👉 அதனால் பூஜை அறையில் தண்ணீரை வடக்கு பக்கத்தில் வைப்பது நல்லது

🌸 தண்ணீரை தெய்வீகமாக மாற்றும் சிறிய ரகசியம்

பூஜை அறையில் வைக்கும் தண்ணீரில்:

🌿 ஒரு துளசி இலை
🌿 ஒரு ஏலக்காய்
🌿 சிறிதளவு வெட்டிவேர்
🌿 ஒரு துண்டு பச்சை கற்பூரம்

இவற்றை சேர்த்து வைத்தால்…

அந்த நீர் ஒரு சாதாரண தண்ணீர் அல்ல —
அது ஒரு தெய்வீக ஆற்றல் நிறைந்த தீர்த்தமாக மாறும்!

அதன் வாசனை:

✨ வீட்டை கோவில் போல மாற்றும்
✨ மனதை அமைதியாக்கும்
✨ ஆன்மீக உணர்வை அதிகரிக்கும்

🧘‍♂️ இந்த வழிபாட்டின் ஆழமான உண்மை

தண்ணீர் வைத்து கடவுளை வழிபடுவது —
கடவுளுக்காக அல்ல…

👉 நம்முடைய உள்ளத்தை சுத்தப்படுத்திக்கொள்ளும் ஒரு வழி!

நீர் வெளியில் இருக்கும் தூசியை கழுவுவது போல,
இந்த வழிபாடு நம் உள்ளத்தில் இருக்கும் குழப்பங்களையும் கழுவுகிறது.

கருவில் இருந்து பூமியை அடைய காத்திருந்த நீங்கள். அணைத்து விஷயத்திலும் காத்திருக்க வேண்டும். உங்கள் பிரார்த்தனை சரியான நே...
08/04/2026

கருவில் இருந்து பூமியை அடைய காத்திருந்த நீங்கள்.
அணைத்து விஷயத்திலும் காத்திருக்க வேண்டும்.
உங்கள் பிரார்த்தனை சரியான நேரத்தில் சரியான காரணத்துடன்
இறைவனால் நிறைவேற்றப்படும்.🥰

 #ஆரூரா_தியாகேசாதிருவாரூர் அருள்மிகு  #தியாகராஜசுவாமிதிருக்கோயில்  #பங்குனிஉத்திர பெருவிழாவின் ஏழாம் நாளான   (12.03.2026...
13/03/2026

#ஆரூரா_தியாகேசா

திருவாரூர் அருள்மிகு #தியாகராஜசுவாமிதிருக்கோயில் #பங்குனிஉத்திர பெருவிழாவின் ஏழாம் நாளான (12.03.2026) இரவு அருள்மிகு ஐங்கலகாசு வினாயகர், அமி சுப்ரமணியர் மற்றும்
ஆதி சண்டிகேஸ்வரர் திருவீதி எழுந்தளினார்கள்

சுட்டதிரு நீறெடுத்து  வேல் வேல்சுட்டதிரு நீறெடுத்துத் தொட்டகையில் வேலேடுத்துதோகைமயில் மீதமர்ந்த சுந்தரம்-அந்தக்கட்டழகு க...
21/02/2026

சுட்டதிரு நீறெடுத்து
வேல் வேல்

சுட்டதிரு நீறெடுத்துத் தொட்டகையில் வேலேடுத்து
தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம்-அந்தக்
கட்டழகு கொண்டதொரு கந்தவடி வேலவனைச்
சாற்றுவது ஆறெழுத்து மந்திரம்

ஆறெழுத்து மந்திரத்தைத் தந்ததொரு சுந்தரத்தை
அந்திபகல் சிந்தனைசெய் நெஞ்சமே-அந்த
ஆறெழுந்து மந்திரத்தை யாரெடுத்து ஓதினாலும்
ஆறுமுகம் வந்துநிற்கும் முன்னமே

கந்தனடியே நினைந்து சங்கத்தமிழ் மாலைகொண்டு
வந்தனை செய்வோர்கள் மனம் ஆறுமே-பரங்
குன்றுவளர் குகனோடு தங்கிவரவே நமக்குள்
பொங்கிவரும் செல்வம் பதினாறுமே

18/02/2026

எந்த மறைமுக நோக்கமும் இல்லாமல் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர நீங்கள் நினைக்கும் போது,
அது உங்களுக்கு மிகுந்த திருப்தியையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

18/02/2026

அன்பு என்பது குணங்களை அடிப்படையாகக் கொண்டால், அது நிலையற்றது;
அவை உங்களுக்குச் சொந்தமானவை ஏனெனில்,
அது நிபந்தனையற்றது.
Gurudev Sri Sri Ravi Shankar
The Art of Living
#குருதேவ் #ஶ்ரீஶ்ரீரவிசங்கர்

குருவின்றி சாதனைஆன்மீகப் பாதையில் ஒரு நுண்ணிய அபாயம்பாரத ரிஷி மரபில் ஆன்மீகம் என்பது வெறும் தத்துவக் கோட்பாடு அல்ல; அது ...
18/02/2026

குருவின்றி சாதனை

ஆன்மீகப் பாதையில் ஒரு நுண்ணிய அபாயம்

பாரத ரிஷி மரபில் ஆன்மீகம் என்பது வெறும் தத்துவக் கோட்பாடு அல்ல; அது ஒரு உணர்வுநிலை அறிவியல் (Science of Consciousness). அந்த அறிவியலின் அடிப்படை விதி: "அனுபவம் வழிகாட்டும்; குரு திருத்துவார்."

வேதம், உபநிஷத், ஆகமம், தந்திரம் என எந்த மரபை எடுத்தாலும் ஒரு உண்மை மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது: தன்னிச்சையாகச் செயல்படும் 'மனம்' தான் முதலில் மாற்றப்பட வேண்டிய கருவி.

ஆனால், நவீன சாதகர்கள் பலரும் இதற்கு நேர்மாறாகச் சிந்திக்கிறார்கள்: "எனக்குத் தெரியும், நான் வாசித்திருக்கிறேன், நான் உணர்கிறேன்; எனக்கு வழிகாட்டுதல் எதற்கு?"

இங்குதான் ஆன்மீகப் பயணம் தொடங்குவதற்கு முன்பே, அகங்காரம் ஆன்மீக ஆடை அணிந்து தனது ஆட்டத்தைத் தொடங்குகிறது.

1. குருவிடம் ஆலோசிக்காத மாணவரின் உளவியல்
குருவைத் தவிர்த்துத் தானாகவே சாதனை செய்யும் மாணவன் தீயவன் அல்ல; அவன் தேடுபவன் தான். ஆனால், அவன் தவறான திசையில் பயணிக்கிறான். இவர்களின் மனநிலை பொதுவாக மூன்று நிலைகளில் சிக்கியிருக்கும்:

அறிவின் அகங்காரம் (Intellectual Ego): நூல்களைப் படித்து மந்திரங்கள், சக்ராக்கள், குண்டலினி எனப் பல தகவல்களைச் சேகரித்து வைத்திருப்பார். இவர் தேடுவது ஞானத்தை அல்ல, அறிவின் மூலம் கிடைக்கும் 'கட்டுப்பாட்டை' (Control). குருவிடம் சரணடைந்தால் தனது 'தெரிந்தவர்' என்ற பிம்பம் உடைந்துவிடுமோ என்ற பயத்தில், குருவை மதித்தாலும் அவரிடம் எதையும் கேட்க மாட்டார்.

அனுபவ மயக்கம் (Experience Intoxication): பயிற்சியின் போது உடலில் ஏற்படும் வெப்பம், அதிர்வு, கண்ணீர் அல்லது சில கனவுகளைக் கண்டு, "எனக்கு ஏதோ நிகழ்கிறது, அதனால் நான் சரியான பாதையில் இருக்கிறேன்" என்று முடிவு செய்வார். ஆனால் ரிஷி மரபு சொல்வது: "அனுபவம் என்பது முடிவல்ல; அது மனதின் ஒரு எதிர்வினை (Reaction) மட்டுமே." குரு இருந்தால் அந்த அனுபவத்தைக் கடந்து செல்லச் சொல்வார்; குரு இல்லையெனில் மாணவன் அனுபவத்தையே இலக்காக்கி அங்கே தேங்கிவிடுவான்.

மறைமுக பயம் (Hidden Fear): தான் செய்யும் ஏதோ ஒன்று தவறு என்று குரு சுட்டிக்காட்டிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் மாணவனுக்குள் இருக்கும். இதனால் குருவிடம் ஒரு பகுதி உண்மையை மட்டுமே பகிர்ந்து கொள்வார். இந்த ஒளிவுமறைவு ஆன்மீக வளர்ச்சியின் பெரும் தடையாகும்.

2. குருவின்றி சாதனை புரிவதால் ஏற்படும் விளைவுகள்
மனக் குழப்பம் (Psychic Confusion):

தனக்கு ஏற்படுவது ஆனந்தமா, சக்தியா அல்லது பிரமையா என்ற அளவுகோல் மாணவனுக்கு இருக்காது. வழிகாட்டுதல் இல்லாத அனுபவம் வெறும் மாயையாக முடிந்துவிடும்.

ஆன்மீக அகங்காரம் (Spiritual Ego): இது சாதாரண அகங்காரத்தை விட ஆபத்தானது. "எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது" என்று நினைக்கும் கணமே ஒருவனின் ஆன்மீக வளர்ச்சி முற்றுப்பெறுகிறது. இத்தகையவர்கள் மற்றவர்களைத் தாழ்வாகக் கருதத் தொடங்குவார்கள்.

சக்தி சமநிலை குலைவு (Energy Imbalance): பிராணாயாமம், தந்திரம் போன்ற பயிற்சிகள் நரம்பு மண்டலத்தோடும் ஆற்றல் வளையங்களோடும் நேரடியாகத் தொடர்புகொள்பவை. முறையான மேற்பார்வை இன்றி இவற்றைச் செய்யும்போது தூக்கமின்மை, தேவையற்ற பயம், உணர்ச்சி வசப்படுதல் அல்லது ஒருவித 'துறவுப் பைத்தியம்' போன்ற நிலைகள் ஏற்படக்கூடும்.

தவறான முடிவுகள்: குரு இல்லாத சாதகர் அனுபவத்தை இலக்காகவும், சோம்பலைச் சமாதி நிலையாகவும், வெறும் அமைதியை அடக்கமாகவும் தவறாகப் புரிந்துகொள்வார்.

3. ஏன் குரு அவசியம்?
குரு என்பவர் வெறும் பாடங்களை நடத்துபவர் அல்ல. மாணவன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் இடங்களைச் சுட்டிக்காட்டுபவரே குரு. மாணவன் காணத் தவறும் சில விஷயங்களை குரு துல்லியமாகப் பார்க்கிறார்:

அனுபவத்தின் பின்னால் மறைந்துள்ள ஆசை.

அமைதிக்கு பின்னால் ஒளிந்துள்ள பயம்.

பக்தியின் பின்னால் இருக்கும் அடையாளத் தேவை.

குரு வழிகாட்டுவது உங்களின் 'சாதனை முறையை' அல்ல; உங்களின் 'மனதின் மறைமுக இயக்கத்தை'.

4. உண்மையான சிஷ்யனின் இலக்கணம்

சிஷ்யன் என்பவன் குருவுக்குக் கீழ்ப்படிந்து அடிமையாக இருப்பவன் அல்ல.

அவன்:

தனது அனுபவங்களைச் சரியாகவோ தவறாகவோ தற்காத்துப் பேச மாட்டான்.

தவறு என்று உணர்த்தப்பட்டால் கணம் இன்றித் திருத்திக்கொள்வான்.

புரியாததை மறைக்க மாட்டான். அவன் குருவிடம் பேசுவது அறிவைப் பெறுவதற்காக அல்ல, தன்னைத் தவறான பாதையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள.

இறுதி உண்மை

ஆன்மீகப் பாதையில் மிகப் பெரிய தடை பாவமோ அல்லது அறியாமையோ அல்ல; தனது அறியாமையையே தனக்கு வழிகாட்டியாக்குவதுதான்.

ரிஷி மரபு ஒரு பொன்மொழியைக் கூறுகிறது:

"தியானம் செய்யும் முன் மனதை குருவிடம் ஒப்படை; இல்லையெனில் உனது மனமே உனக்கு குருவாகி உன்னைத் தவறாக வழிநடத்தும்."

ஆன்மீகம் ஒரு தனிப்பயணம் தான், ஆனால் அது தனியாகச் செய்யும் பயணம் அல்ல. குரு அறிவுக்காகத் தேவைப்படுவதில்லை; உங்களின் பாதுகாப்புக்காகத் தேவைப்படுகிறார்.

14/01/2026

#நாட்டுமருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

#அருகம்புல் பொடி:
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி.

#நெல்லிக்காய் பொடி:
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது.

#கடுக்காய் பொடி:
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

#வில்வம் பொடி:
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது.

#அமுக்கரா பொடி:
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

#சிறுகுறிஞான் பொடி:
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

#நவால் பொடி:
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

#வல்லாரை பொடி:
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

#தூதுவளை பொடி:
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

#துளசி பொடி:
மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

#ஆவரம்பூ பொடி:
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

#கண்டங்கத்திரி பொடி:
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

#ரோஜாபூ பொடி:
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

#ஓரிதழ் தாமரை பொடி:
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை #வயாகரா.

#ஜாதிக்காய் பொடி:
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

#திப்பிலி பொடி:
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

#வெந்தய பொடி:
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

#நிலவாகை பொடி:
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

#நாயுருவி பொடி:
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

#கறிவேப்பிலை பொடி:
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது. ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரும்புச் சத்து உண்டு.

#வேப்பிலை பொடி:
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

#திரிபலா பொடி:
வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

#அதிமதுரம் பொடி:
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

#துத்தி இலை பொடி:
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

#செம்பருத்திபூ பொடி:
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

#கரிசலாங்கண்ணி பொடி:
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

சிறியா நங்கை பொடி:
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

#கீழாநெல்லி பொடி,:
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

#முடக்கத்தான் பொடி:
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

கோரைகிழங்கு பொடி:
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

குப்பைமேனி பொடி:
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

பொன்னாங்கண்ணி பொடி:
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

முருஙகை விதை பொடி:
ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி:
கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பொடி:
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

பாகற்காய் பவுட்ர்:
குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைத்தண்டு பொடி:
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

மணத்தக்காளி பொடி:
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சித்தரத்தை பொடி:
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

பொடுதலை பொடி:
பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

சுக்கு பொடி:
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆடாதொடை பொடி:
சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

கருஞ்சீரகப்பொடி:
சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பொடி:
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

வெள்ளருக்கு பொடி:
இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

நன்னாரி பொடி:
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நாவறட்சிக்கு சிறந்தது.

நெருஞ்சில் பொடி:
சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

பிரசவ சாமான் பொடி:
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

கஸ்தூரி மஞ்சள் பொடி:
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

பூலாங்கிழங்கு பொடி:
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

வசம்பு பொடி:
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

சோற்று கற்றாழை பொடி:
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

மருதாணி பொடி:
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

கருவேலம்பட்டை பொடி:
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும். ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை, இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும்.

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

நன்றி வாழ்க நலமுடன் வளமுடன்

 #ஆரூரின் சில அரிய தகவல்கள்:நாம் அடிகடி ஆரூர்  சென்று வந்திருந்தாலும் அத்தலத்து தகவல்களை முழுமையாக அறிந்திருக்க மாட்டோம்...
01/01/2026

#ஆரூரின் சில அரிய தகவல்கள்:

நாம் அடிகடி ஆரூர் சென்று வந்திருந்தாலும் அத்தலத்து தகவல்களை முழுமையாக அறிந்திருக்க மாட்டோம்.

அதனில் சில அரிய தகவல்களை காண்போம்.

#ஆரூர் திருக்கோயிலின் பிரதான வாயிலாம் 113 அடிகொண்ட கிழக்கு ராசகோபுரம் உள்ளது. இதனை கட்டியவன் #மூன்றாம் குலோத்துங்கன்.

இந்த ராச கோபுரத்துக்கு #மகா மதுரம் எனும் பெயர்.

தெற்கு கோபுரத்தின் பெயர் #தென்னன் திருவாசல் என்பதாகும்.

#இரண்டாம் பிரகாரத்தில் கிழக்கில் உள்ள கோபுரம் #ஆரியன் கோபுரம்.

#மந்திரமயமான மணிபுற்றில் எழுந்தருளும் இறைவர்க்கு முன்பு உள்ள கோபுரம் #அழகியான் கோபுரம்.

#புற்றிடம்கொண்டார் கருவறைக்கு முன்பு தூணோடு கூடிய மண்டபம்(அர்த்த மண்டபம்) உண்டு. இதற்கு #அந்தராள மண்டபம் எனப்பெயர். இந்த மண்டபத்தில் தான் அம்மை! #மணோன்மணி அமர்ந்திருப்பாள்.

#செங்கல் கோயிலாக இருந்த பூங்கோயிலை #கற்கோயிலாக அமைத்தவர் #மூன்றாம் குலோத்துங்கன் மனைவி பரவை ஆவாள்.

#இவள் கொடுத்த இரு பாவை விளக்கு இன்றும் சுவாமி சன்னதியில் உள்ளது.

அதன் பின் #மூன்றாம் குலோத்துங்கன் 42000 பலம் எடையுள்ள பொன் தகடுகளால் பூங்கோயில் கூரை மற்றும் சுவற்றை அலங்கரித்தான்.

#20634. பலம் எடையுள்ள பொன்னால் பூங்கோயில் கதவுகள் மற்றும் சாமரம், பூசைக்குரிய பாத்திரங்கள் ஆகியவற்றை செய்து கொடுத்தான்.

#சன்னதியை அடைக்கும் போது #தியாகேசனை சிவப்பு நிற திரையால் மறைப்பார்கள் இதற்கு #த்ரஸ்கரணி என பெயர்.

தியாகேசர் மேல் ஒன்பது விளக்குகள் எப்போதும் எரிந்த வண்ணம் இருக்கும். இவை #ஒன்பது நவகிரகங்களும் விளக்காக உருமாறி வந்து வழிபாடு செய்வதாக ஐதீகம்.

#தியாகேசகர்க்கு இருபுறம் விளங்கும் இருவாள்கள்

1.ஞானகட்கம்

2.வீரகட்கம்

சோமஸ்கந்தர் வடிவத்தில் ஈசரோடு உள்ள உமையாளுக்கு என்று தனி திருநாமம்(கொண்டி) கொண்ட ஒரே திருக்கோயில் #திருவாரூர் மட்டுமே.வேறு எங்கும் இல்லை.

#அதே போல் #நீலோத்பலம் மலரால் அர்ச்சனை நடப்பது தியாகேசர்க்கு மட்டுமே.

#புற்றிடங் கொண்டார் சன்னதியில் #நந்தி பெருமான் பின்னே பித்தளையால் ஆன கண்ணாடி உண்டு. இதனை கண்டபின்னே மூலவரை காண வேண்டும்.இந்த கண்ணாடி பிரமத்தி தோசம் உள்ளிட அனைத்து தோஷங்களை உள்வாங்கும் தன்மை உடையதாக நம்படுகிறது.

#பூங்கோயிலில் துவார பாலகர்ககளாக இருப்பது #முசுகுந்தரும் #இந்திரனும் இருப்பதாக ஐதீகம். இதனை திருக்கோயில் முகப்பிலும்(வெள்ளி திருக்கதவில்) காணலாம்.

#பூங்கோயில் தியாகேசரை தரிசிக்க (அர்த்த மண்டபம்) நுழையும் திருவாயில் பெயர் #திரு அனுக்கன் திருவாயில்.

#இறைவராம் ஈசர் இங்கு மட்டுமே இன்றும் #புலித்தோல் தரிக்கின்றார்.

#இந்த ஊரில் வழங்கபடும் திருநீறுக்கு மட்டுமே சிறப்பு
பெயர் உண்டு.
இங்கு தரும்
திருநீறுக்கு #திருமந்திரம்
என்று பெயர்.

Address

Thiruvarur

Opening Hours

Tuesday 6am - 7:30am
Thursday 6am - 7:30am
Saturday 6am - 7:30am

Telephone

+19788772591

Alerts

Be the first to know and let us send you an email when Oliravan Yoga Academy - Thiruvarur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oliravan Yoga Academy - Thiruvarur:

Share