02/08/2026
ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி...
அ.செல்லத்துரை ஆசிரியர் என்னும் மகா கலைஞன் இறந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது...
காலங்கள் எப்படி உருண்டோடுகிறது... வேக வேகமாக...........................................ஆசிரிய/கலைஞனின் மறைவை ஒவ்வொரு ஆண்டிலும், வடக்கு அழகு நாட்சிய புரத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் நினைவேந்தல் நிகழ்வாக பழைய மாணவர் சங்க 7ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வில் ஆரம்பித்து, முதலாம் ஆண்டு - தனது வாழ்வையே கல்விக்காக அளித்து, தனது ஓய்வு நிதியில் கட்ட பட்ட இந்து தொடக்க பள்ளியில் பட திறப்பு நிகழ்வாக... பல்வேறு ஆசிரியர்கள், உலக தமிழ் கழக உறவுகள், கலை பயண நண்பர்கள்... என பல்வேறு ஆளுமைகளுடன்.
இரண்டாம் ஆண்டு முதல் கலைஞர்களின் பேரன்பை வெளி படுத்தும் வகையில் சங்கரன் கோவில் வட்டார, மூன்று அழகு நாட்சியா. புர கலைஞர்கள் இணைந்து நடத்திய கலைவிழா 2022, 2023 (இந்து தொடக்க பள்ளி மாணவர்களின் பொருளாதார உதவியால்), 2024 மற்றும் 2025 பல்வேறு நிகழ்வுகள்...
ஒவ்வொரு ஆண்டிலும் புதிய சிந்தனைகளை (கலை/ இலக்கியம்/ விளையாட்டு என) கொண்டு... ஆசிரியர் யார், யாருக்காகவெல்லாம் தன் வாழ்வை... வாழ்வின் ஒரு சிறு பகுதியை செலவழித்து இருந்தாரோ அவர்கள் அத்தனை பேரும் அவர்களின் நன்றி கடன் மறவாது தம்மால் இயன்ற பங்களிப்பை செய்தனர்.
உங்கள் எல்லாருக்கும் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியராக தனித்துவமாக விளங்கிய ஆசிரியரின், மாபெரும் கலைஞனின் ஆசீர்வாதம் இருக்கும்...
எங்கே இருந்தாலும் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கு பெற்றுவிட வேண்டும் என்ற வேட்கையுடன் ஒவ்வொரு ஆண்டும் பங்கு பெற்ற கலைஞர்களுக்கும், முன்னிலை வகித்து கொடுத்த அண்ணன். குருசந்திரன், பெரிய இலை மனோகர் ஐயா அவர்களுக்கும், எந்த விதமான இக்கட்டுகள் வந்தாலும் சமாளிக்கலாம் என எல்லாவற்றிலும் எப்போதும் துணை நின்ற/ தலைமை தாங்கி நடத்தி கொடுத்த பஞ்சாயத்து தலைவர் மாமா இராஜேந்திரன் அவர்களுக்கும், வடக்கு அழகு நாட்சிய புரத்தின் சங்க தலைவர். விஜயராஜ் மாமா, பொருளாளர். முத்துகுமார் மச்சான் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும், தோளோடு தோள் நின்று கவன சிரத்தையுடன் வரவேற்பிதழையும், சுவரொட்டியையும், Flex ஐயம் தயார் செய்து கொடுக்கும் மாப்பிளை பாலா விற்கும், விளம்பர உதவி செய்து கொடுத்த ஒப்பந்தாரர் சுந்தர பாண்டியன் மாப்பிள்ளைக்கும், இவை அனைத்தும் நடைபெற ஓய்வறியாது உழைத்த சகோதரர்க...