Parangipettai Sports Federation

Parangipettai Sports Federation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Parangipettai Sports Federation, Amateur Sports Team, Vathiya Palli, Parangipettai.

கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் தலைமையின் கீழ் இயங்கும் Parangipettai Sports Federation (PSF)யின் 'பெருநாள் கொண்டாட்டம்' (EID ...
14/09/2017

கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் தலைமையின் கீழ் இயங்கும் Parangipettai Sports Federation (PSF)யின் 'பெருநாள் கொண்டாட்டம்' (EID Fiesta 2K17) கடந்த 03/09/17 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இரண்டாம் சுற்று சிறப்பான முறையில் நடைபெற்றது.

முதல் சுற்றில் Running Race, Long Jump, Shot Put மற்றும் Kabbadi ஆகிய விளையாட்டு போட்டிகள் தேர்ச்சி பெற்ற வீரர்களுக்கு இரண்டாம் சுற்று நடைபெற்றது.

இதனை தொடர்ந்து வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் தலைவர் ஜனாப் கிங் காலித் அவர்கள் தலைமை வகித்தார். மேலும், கடலூர் மாவட்ட Sports Development Authority of Tamilnadu அமைப்பின் மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் (DSO) திரு. எம்.ராஜா அவர்கள், பரங்கிப்பேட்டை காவல் துறை ஆய்வாளர் திரு. டி. செல்வம் அவர்கள், கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் ஜனாப் ஹாஜி டாக்டர். எம்.எஸ். முஹம்மத் யூனுஸ் அவர்கள் மற்றும் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் ஜனாப். எஸ்.ஓ. செய்யது ஆரிப் அவர்கள் மற்றும் அல்ஹஸனாத் மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் தாளாளர் ஜனாப் எஸ்.ஐ. அப்துல் காதர் மதனி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கினர்.

இறுதியில் mypno.com தளத்தின் ஆசிரியர் ஜனாப். Abdul Rahman Ibnu Hanifa அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் தலைமையின் கீழ் இயங்கும் Parangipettai Sports Federation (PSF)யின் 'பெருநாள் கொண்டாட்டம்' கடந்த...
02/09/2017

கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் தலைமையின் கீழ் இயங்கும் Parangipettai Sports Federation (PSF)யின் 'பெருநாள் கொண்டாட்டம்' கடந்த 27/08/17 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முதல் சுற்று சிறப்பான முறையில் நடைபெற்றது.

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் ஜனாப் எஸ்.ஓ. செய்யது ஆரிப் அவர்கள் போட்டிகளை துவக்கிவைத்தார்.
முதல் சுற்றில் Running Race, Long Jump, Shot Put மற்றும் Kabbadi ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

கபடி போட்டியை, பரங்கிப்பேட்டை தீ அனைப்பு துறை ஆய்வாளர் திரு. பிரபாகரன் அவர்கள் துவக்கி வைத்தார். கலிமா மேல்நிலை பள்ளி, மூனா மேல்நிலை பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, Oxford School, முட்லூர் ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் கலந்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து, இறுதிச் சுற்று வர இருக்கும் 03/09/17 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

PSFயின் சுவர் விளம்பரங்கள், பரங்கிப்பேட்டை முழுவதும்‌.
22/08/2017

PSFயின் சுவர் விளம்பரங்கள், பரங்கிப்பேட்டை முழுவதும்‌.

பரங்கிப்பேட்டை வரலாற்றில் முதன்முதலாக பெருநாள் கொண்டாட்டம்.ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை நல்ல உடல் நலம். அதாவது ஆரோக்கியம...
22/08/2017

பரங்கிப்பேட்டை வரலாற்றில் முதன்முதலாக பெருநாள் கொண்டாட்டம்.

ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை நல்ல உடல் நலம். அதாவது ஆரோக்கியம். ஆரோக்கியத்தைப் பெற நம் உடல் வலிமையாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்வுதான் அருள் பெற்ற வாழ்வு. இஸ்லாம் ஆரோக்கியத்திற்கு அளவு கடந்த முக்கியத்துவம் அளிக்கிறது. நம் தலைவர் தாஹா நபி (ஸல்) அவர்கள் உடல்நலத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளார்கள். வலிமையானவர்களாக வாழ்ந்துள்ளார்கள். சிறந்த மல்யுத்த வீரராகத் திகழ்ந்துள்ளார்கள்.

இஸ்லாத்தில் மார்க்க வரையறைக்குட்டுபட்டு சந்தோஷமாக கொண்டாட வேண்டிய பண்டிகைகள் நோன்பு பெருநாள், ஹஜ் பெருநாள். இந்த நாட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளையாட்டுக்காக அல்லாஹ்வால் அருளப்பட்ட நாட்கள் என்றே கூறியுள்ளளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த காலகட்டத்தில் மதீனாவாசிகள் இரண்டு நாட்களை தேர்வு செய்து அதிலே வியைடுபவர்களாக இருந்தார்கள. அப்போது நபி (ஸல்) அவர்கள் இது என்ன நாட்கள் என்று கேட்டார்கள்.அறியாமைக் காலத்திலிருந்து இந்த இரண்டு நாட்களில் தான் விளையாடிகொண்டு வருகிறோம் என்று அவர்கள் சொன்னார்கள் . அதற்கு நபி(ஸல்) அவர்கள் இதற்கு பதிலாக நோன்பு பெருநாள் ஹஜ் பெருநாள் என்ற இரண்டு நாட்களை (விளையாடுவதற்காக) அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான் என்று கூறினார்கள்

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: அஹ்மத்

இன்ஷா அல்லாஹ், இதனை கருத்தில் கொண்டு வரும் ஹஜ் பெருநாள் முன்னிட்டு நமதூர் பரங்கிப்பேட்டையின் தாய் சங்கமான கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் தலைமையின் கீழ் இயங்கும் Parangipettai Sports Federation (PSF) சார்பாக 'பெருநாள் கொண்டாட்டம்' என்ற தலைப்பில் Running Race, Long Jump, Shot Put, Relay மற்றும் Kabbadi ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது.

இப்போட்டியின் முதல் சுற்று வரும் ஞாயிற்றுக்கிழமை (27/08/17) அன்று பரங்கிப்பேட்டை, வாத்தியாப்பள்ளி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. தேர்ச்சி பெற்ற போட்டியாளர்களுக்கு வரும் 03/09/17 அன்று இறுதிச் சுற்று நடைபெற இருக்கிறது.

பள்ளி மாணவர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

13/08/2017

மாற்றத்தை நோக்கி பயணிப்போம் - Parangipettai Sports Federation

அன்பார்ந்த சகோதரர்களே, கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் (Crescent Welfare Organisation - CWO) கடந்த 24 ஆண்டுகலாக நம்மூரில் கல்வி, மருத்துவம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் முன்னேற்றம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறது. இன்னும் சொல்ல போனால், பரங்கிப்பேட்டையில் முதன்முதலாக பசுமை புரட்சி (Plantation Drive) செய்ததும் CWO தான். முதன்முதலில் பித்ரா வினியோகம் செய்தது CWO தான். இது போன்று இன்னும் பல ஆக்கபூர்வமான விஷயங்களை செய்ததும் CWO தான். CWO வின் செயல்களை பற்றி முழுமையாக கூறினால் எழுதும் எழுதுகோல் தாங்காது.

மேலும் தற்போது உள்ள CWO நிர்வாகத்தின் அடுத்த கட்ட முயற்சியாக, பரங்கிப்பேட்டையில் விளையாட்டுக்கு என்ற ஒரு அமைப்பு தேவை என்பதே. ஆம், நம்மூர் பரங்கிப்பேட்டையின் ஒவ்வொரு தெருக்களிலும் எண்ணற்ற சிறந்த விளையாட்டு வீரர்கள் இருக்கின்றனர். அவர்களை ஊக்கப்படுத்துவதற்கும், அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வதற்கும் மற்றும் அவர்களை மேம்படுத்துவதற்கும் ஒரு அமைப்பு இல்லை என்பதே ஒரு வேதனைக்கு உரிய செயல்.

அதனை நிறைவு செய்ய தான், பரங்கிப்பேட்டையின் தாய் சங்கமான கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் (CWO) தலைமையில் Parangipettai Sports Federation PSF என்ற Sports Wingயை துவங்கியுள்ளோம்.

பரங்கிப்பேட்டையில் மாவட்ட, தமிழகம் மற்றும் தேசிய அளவில் விளையாட்டு துறையில் சாதித்த வீரர்களை ஒருங்கிணைந்து அடுத்த தலைமுறையை வழிகாட்ட வேண்டும் என்கிற நோக்கத்துடன் மற்றும் அவர்களுக்கு அரசு துறையில் வேளை வாய்ப்புகளை பெற வழிவகுக்கும் என்கிற செயல் திட்டத்தில் இவ்வமைப்பு செயல்படும்.

இந்த அமைப்பின் மூலமாக மறைந்து போன வீர விளையாட்டுகளை கொண்டுவருவது. ஊரில் உடற்பயிற்சி மையத்தை அமைப்பது. மாதம் மாதம் மாணவர்களுக்கு இடையே போட்டிகள் நடத்துவது.

ஆன்ராய்டு கேம்ஸ்களிலும், சமூக வளைதளங்களிலும் மூழ்கி கிடக்கும் ரொனால்டோகளையும், தோனிகளையும், உசைன் போல்ட்'களையும் மீட்டு எடுப்போம்.

இன்ஷா அல்லாஹ்...

இதற்கு முழுமையான ஆதரவுடன் உதவி கரம் நீட்டுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் மக்கள் நல பணியில்

கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம்,
பரங்கிப்பேட்டை.

Amateur Sports Team

Address

Vathiya Palli
Parangipettai
608502

Alerts

Be the first to know and let us send you an email when Parangipettai Sports Federation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Parangipettai Sports Federation:

Share