ஓம் ஸ்ரீ குரு போகம் பாதபங்கஜம் நமஹ
எல்லாம் வல்ல ஞான தண்டாயுதபாணி ஸ்வாமியின் அருளாலும் ஸ்ரீ போகர் சித்தர் பெருமானின் அருளாலும்
சித்தன் வாழ்வு வாசியோக மையம் திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கிறது
பழனாபுரிஎன்றும் வையாபுரி என்றும் சங்ககாலத்தில் அவ்வையாரால் சித்தன் வாழ்வு என்றும் தென்பொதினி நகரம் என்றும் போற்றப்பட்ட சித்தர்கள் பல தவம் புரிந்து ஸ்ரீ முருகப்பெருமான் திருவிளையாடல் புரிந்த இடமான பழனியின் ஆதிகாலம் தொட்டு போகர் ஸ்ரீ புலிப்பாணி நயினத்தை பண்டாரம் வழியாக பூஜை செய்தும் திருமஞ்சனம் புஷ்ப கைங்கரியங்கள் செய்தும் பரம்பரையாக தொண்டாற்றி வரும் வழிவந்த அடியேன் ஸ்ரீ குரு போகர் அருளாலும் ஸ்ரீ அகத்திய பெருமான் அருளாலும் பல யோக நிலைகளை அடைந்து தற்போது வாசி யோகம் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறேன்.
நமது உடம்பில் 72 ஆயிரம் நாடி நரம்புகள் இருக்கின்றன , அவற்றில் மிக முக்கியமான நாடிகளான இடைகலை பிங்கலை சுழிமுனை நாடிகளின் இயக்கமே மிக முக்கியமான இயக்கமாக கருதப்படுகிறது. இதில் இடைகலை நாடியிலும் பிங்கலை நாடியிலும் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை மூச்சின் இயக்கம் மாறி மாறி நடக்கின்றது. சுழி முனை நாடியில் மிகவும் குறைவாக 2 நிமிடமே ஒரு நாளைக்கு நடைபெறுகிறது. இடதுகலை சக்தியின் அம்சமாகவும் பிங்கலை சிவத்தின் அம்சமாகவும் செயல்படுகிறது. ஆனால் யோகிகளும் தவசிகளும் சுழிமுனை நாடியை இயக்கி விதியையும் வெல்லக்கூடிய மதியை பெறுகிறார்கள். மேலும் பாவ கர்மாவை அழிக்கும் நாடியாகவும் சுழிமுனா நாடி செயல்படுகிறது . இப்படி இயங்கக்கூடிய நாடிகளை தன் வசப்படுத்தி மிகப் பெரும் யோக நிலையை அடைய நமது பயிற்சி உதவுகின்றது. நமது பயிற்சியில் முதல் நாளிலேயே மூச்சின் கதி மாறுவதையும் ஏழு நாளின் முடிவில் மூச்சின் கதி வசப்பட்டு உள்முகமாக இயங்குவதையும் அனுபவபூர்வமாக உணர முடியும் . மேலும் 10 ஆம் வாசல் என்றும் பிரமரந்தரம் என்றும் கூறக்கூடிய ஊர்த்துவ நாடி செயல்படுவதையும் உணர முடியும். உள்கதி வசப்படுவதால் மூச்சின் அளவு குறையும் எனவே ஆயுள் நீடிப்பதை கண்கூடாக பார்க்க முடியும். உடம்பில் உள்ள நோய்கள் செல்ப்ஹீலிங் முறையில் தானாக குணப்படுவதையும் காண முடியும். கடும் தவப் பயிற்சியில் பெறக்கூடிய யோக நிலையை குறைந்த நாட்களிலேயே சித்தி அடைவதை உணர முடியும்.