VSM.Sports club Natham

VSM.Sports club Natham Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from VSM.Sports club Natham, Sports Club, Natham.

பாவியென்றன் விதியைநொந்து பாழுமுள்ளம் துடிக்கிறதேதாவிவரும் நினைவலைகள் தத்தளிக்க வைத்திடுதேதீவினையோ வல்வினையோ தீராத சோகமித...
28/12/2024

பாவியென்றன் விதியைநொந்து பாழுமுள்ளம் துடிக்கிறதே
தாவிவரும் நினைவலைகள் தத்தளிக்க வைத்திடுதே
தீவினையோ வல்வினையோ தீராத சோகமிதே !
கல்தூணாய் நீயிருந்தாய் கவலையின்றி மகிழ்ந்திருந்தோம்
இல்லாமற் போனாயே இனியென்ன செய்திடுவோம்
பல்லக்கில் அனுப்பிவிட்டுப் பரிதவித்துக் கிடக்கின்றோம்
சொல்லியழ வார்த்தையின்றித் துயர்நெஞ்சை அடைத்திடுதே !
முட்டிமுட்டி அழுதாலும் முன்னேநீ வரவில்லை
எட்டியுனைப் பிடித்திழுக்க இருக்குமிடம் தெரியவில்லை !

ஊற்றெடுக்கும் உன்நினைவு உள்ளத்தை அரித்திடுதே
ஆற்றவொணாத் துயராலே அன்றாடம் துடிக்கிறதே
காற்றினிலே மிதந்துவந்து கண்ணீரைத் துடைத்திடுவாய்
கூற்றுவனை இறைஞ்சிடுவேன் கூப்பிடவே சடுதியிலே !🙏🙏🙏

13/04/2022
https://youtu.be/HkkBdAT1tag
13/04/2022

https://youtu.be/HkkBdAT1tag

நத்தம் ஜல்லிக்கட்டு கார்த்திக்வாடிவாசலின் நாயகன்வீரத்திற்கு பெயர் பெற்றவர்காளைகளின் காதலன்வாடிவாசலில் வி.....

https://youtu.be/059zsAhmN5M
10/04/2022

https://youtu.be/059zsAhmN5M

நத்தம் ஜல்லிக்கட்டு கார்த்திகின் வீரத்தின்அடையாளமும் , வீரத்திற்கு கிடைத்த பரிசுகளும் 🔥 #நத்தம்ஜல்லிக்கட்டு....

 #சிறுகதைஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப்போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு...
21/03/2022

#சிறுகதை

ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப்போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது.
அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது.

நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.

அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வேணும்"னுது.

புலிக்கு ஏக சந்தோஷம் இந்த தேனி என்னமா யோசிக்குது நமக்கு இவ்வளவுநாளா இது தோனலையேன்னு ஒரு முயலை செக்ரட்டரியாக்குச்சு. அத்தோட புலியார் நமக்கும் கொஞ்சம் தெரியும்னு காட்டிக்க, "ஆள் போட்டாச்சு இனிமே எனக்கு தினமும் வேலை முன்னேற்றம் குறித்து ரிப்போர்ட் வரைபடமாவும் அட்டவனையாவும் கொடுக்கனும்"னுது.

"ஓகே பாஸ் அதுக்கென்ன, பிரமாதமா செஞ்சிடலாம் அதுக்கு ஒரு கம்ப்யூட்டர், பிரின்டர், புராஜக்டர் எல்லாம் வேணுமே"ன்னது, அப்படியே வாங்கிகிச்சு ஒரு கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்டும் பூனை ஒன்றின் தலைமையில் அமைச்சாச்சு.

இப்போ ஏகப்பட்ட கெடுபிடி நெருக்கடிகளால் விரக்தியடைந்த அந்த எறும்போட வேலையில் ஒரு தொய்வு வந்துச்சு. உற்பத்தி குறைந்தது. புலி நினைச்சுது, எல்லாம் சரியா இருந்தும் ஏனிப்படி? தேனியோட ஐடியாக்களை எறும்புக்கு விளக்கமா எடுத்துச்சொல்ல ஒரு தொழில்நுட்ப ஆலோசகரை போடுவோம்னு ஒரு குரங்குக்கு அந்த வேலையை கொடுத்தது. ஏற்கனவே டல்லான எறும்பை இப்போது குரங்கும் அதன் பங்குக்கு குழப்ப அன்றய தினத்துக்காக திட்டமிடப்பட்ட வேலைகளை அன்றைக்கே முடிக்காமல் போனது எறும்பு. மேலும் உற்பத்தி குறைவு நஷ்டத்தில் இயங்கியது ஃபேக்டரி.

'எதைத்தான் தின்னா பித்தம் தெளியும்' என்ற மனநிலைக்கு ஆளான புலியார் நஷ்டத்தை சரி செய்ய என்ன செய்லாம்னு ஆராய ஆந்தையை நியமிச்சது. ஆந்தை மூன்று மாத ஆராய்ச்சிக்கு பின் கடைசியா இப்படி சொன்னது. "தொழிற்சாலையில் தேவைக்கு அதிகமா ஆள் இருப்பதே காரணம் யாரையாவது வேலையை விட்டு எடுத்துட்டா நிலைமை ஓரளவு சீராகும்"

"யாரை எடுக்கலாம் அதையும் நீயே சொல்லிடு" என்றது புலி. "அதிலென்ன சந்தேகம் சரியாக வேலை செய்யாத அந்த எறும்பைதான" அதிரடியாக சொன்னது ஆந்தை.

இப்படித்தான் உலகெங்கும் பொதுத்துறை மற்றும் தனியார்துறைகளில் எதுவும் செய்யாமலே படம் காட்டுபவன் பிழைத்துக் கொள்கிறான். வேறெதுவும் தெரியாது வேலையை மட்டுமே செய்பவன் பாதிப்புக்கு உள்ளாகிறான்.

காகம் மனிதர்களை போலவே "தற்கொலை" செய்துகொள்ளும்.! *காகத்தின் ஆயுட்காலம் 4 வருடம், *பெண் காகம், ஆண் காகத்தை நேசித்து அதாவத...
30/01/2022

காகம் மனிதர்களை போலவே "தற்கொலை" செய்துகொள்ளும்.!

*காகத்தின் ஆயுட்காலம் 4 வருடம்,

*பெண் காகம், ஆண் காகத்தை நேசித்து அதாவது அண்டங்காக்கையுடன் உறவு வைத்து கூடு கட்டி தனது முட்டைகளை அடைக்க, அப்போது பெண் காகம் எக்காரணத்தை கொண்டும் கூட்டை விட்டு வெளியே போகாது, பெண் காகத்திற்கு ஆண் காகம்தான் உணவு கொடுக்கும்,

*அடை காக்கும் அந்த 40 நாட்களில் பெண் காகம் தண்ணீரே குடிக்காது,

*முட்டையிலிருந்து குஞ்சிகள் வெளிவந்தவுடன் தனது துணையான ஆண் காகத்தை பெண் காகம் வெறுக்க ஆரம்பிக்கும், குஞ்சுகளுக்கு சிறகு முளைக்கும் வரை அதற்கு பெண் காகம்தான் இரை கொடுக்கும்,

*ஆண் காகத்தை முழுமையாக வெறுத்து அதை கொத்தி கொத்தி விரட்டிவிடும், அதற்கு பிறகு ஆண் காகத்துடன் சேரவே சேராது,

*இறுதியில் ஆண் காகத்திற்கு தனிமையே கிடைக்கும், தனிமையின் கொடுமையால் ஆண் காகம் மரக் கிளைகளில், அல்லது மின்சார கம்பிகளில், வாகனம்... தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டு இறந்துவிடும்.

*பறவை இனத்திலேயே தன் இனத்தின் ஒன்று இறந்தால் அதற்கு ஒப்பாரி வைக்கும் ஒரே பறவை காகம் மட்டும்தான்

https://youtu.be/FZ_EI4qNFvQ
17/01/2022

https://youtu.be/FZ_EI4qNFvQ

எங்கள் வீட்டின் பொங்கல் சீர்வரிசை ,பொங்கல் கொண்டாட்டங்கள் ,பிறந்தநாள் கொண்டாட்டம் ,நான் வரைந்த கோலங்கள் 😊 #பொங.....

27/12/2021

இன்று பிறந்தநாள் காணும்

" பிரபல மாடுபிடி வீரர் "

பிறவி குணமே வீரம் என்பதை
எந்த நேரத்திலும் எல்லா இடங்களிலும்
நிரூபித்திக் கொண்டே மென்மேலும்
வெற்றிப் பாதையை நோக்கிச்
சென்றுக் கொண்டேயிருக்கும்

* நத்தம் ஜல்லிக்கட்டு கார்த்திக் ( பேக்கா ) *
அவர்களுக்கு " குரலிசை FM "
இசைக்குடும்பத்தின் சார்பாக
" இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் "🎂
வாழ்க வளமுடன்💐

Address

Natham
624401

Website

Alerts

Be the first to know and let us send you an email when VSM.Sports club Natham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category