23/12/2025
💥எல்லை பாதுகாப்பு படையில் வேலை வாய்ப்பு .
💥கபாடி விளையாட்டில் தேவையான இடங்கள்:4 பெண் கபாடி வீரங்கனைகள்,2 ஆண் கபாடி வீரர்கள் .
💥லெவல் -3 ,கான்ஸ்டபுள்,
💥சம்பளம் -21,700 இருந்து 69,100 வரை +படித்தொகை.
💥வயது வரம்பு -18 முதல் 23 வரை ,மற்ற என்ன தகுதிகள் வேண்டும் என்பதை அந்த இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் .
💥இணையவழி விண்ணப்பம் தொடங்கும் நாள் 27.12.2025 முதல் 15.1.2026 வரை .
💥கீழ் கண்ட இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் https://rectt.bsf.gov.in .
💥சம்பளமோ,பொசிசனோ குறைவாக இருக்கு என்று பார்க்காதீர்கள் ,நீங்கள் தேசிய போட்டி ஆடி பதக்கம் பெற்றால் அடுத்த,அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டே இருப்பீர்கள்,உங்கள் சம்பளமும் உயர்ந்து கொண்டே இருக்கும் .
💥Icf வேலைவாய்ப்பு வந்த பொழுது கூட சம்பளம் குறைவு என்ற குற்றசாட்டு வந்தது ,ஆனால் அட்சயா இந்தியா ரயில்வே சார்பாக விளையாடி தேசிய சீனியர் வெள்ளி பதக்கம் வென்றார் ,அதன் காரணமா அவர் அடுத்த கட்ட இடத்துக்கு செல்ல வாய்ப்பு கிடைத்து உள்ளது ,அப்படி முன்னேற்றம் வந்து கொண்டே இருக்கும் அதை கணக்கில் கொண்டு இந்த மாதிரி வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள் .