BASHA's VLOG

BASHA's VLOG Welcome To The Official Page Of BASHA VLOGS
அன்பை நேசிப்பவன்
https://www.facebook.com/basha.s.151730

தொடர்ந்து 2வது முறையாக ரோகித் டக்.. கடுப்பான ரசிகர்கள்.. டி20யில் ரோகித்தின் மோசமான சாதனைஇந்தூர் : ஆப்கானிஸ்தானுக்கு எதி...
14/01/2024

தொடர்ந்து 2வது முறையாக ரோகித் டக்.. கடுப்பான ரசிகர்கள்.. டி20யில் ரோகித்தின் மோசமான சாதனை

இந்தூர் : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது t20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறி இருப்பது ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. இதன் மூலம் இந்த தொடரில் தொடர்ந்து இரண்டு முறை ரோகித் சர்மா டக் அவுட் ஆகியிருக்கிறார்.

இந்தூரில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் முதல் பாலே ரோகித் கோல்டன் டக் ஆகி வெளியேறி இருக்கிறார். டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு இந்தியா விளையாடப் போகும் கடைசி தொடர் இது என்பதால் இந்திய அணி வீரர்களின் ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு பிறகு ரோகித் சர்மா விராட் கோலி ஆகியோர் இந்த தொடருக்கு திரும்பி இருக்கிறார்கள். 14 மாதங்களுக்கு பிறகு திரும்பி உள்ள ரோகித் சர்மா தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி இருந்தது. இதனால் t20 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா பட்டையை கிளப்பி பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது சரிதான் என்பதற்கு ஏற்றவாறு ரோகித் சர்மா தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும் டக் அவுட் ஆகி வெளியேறி இருக்கிறார்.

கில் சரியாக விளையாட மாட்டுகிறார் என்ற காரணத்தினால் தான் அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். ஆனால் அவருக்கு பதில் களம் இறங்கிய ரோகித் சர்மாவே சரியாக விளையாடாமல் இருப்பது அவர் மீதான நெருக்கடியை அதிகப்படுத்தி இருக்கிறது.

டி20 கிரிக்கெட் பொறுத்த வரையில் அதிக முறை டக் அவுட் ஆன இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா படத்திருக்கிறார்.ரோஹித் சர்மா இதுவரை 12 முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். கேஎல் ராகுல் ஐந்து முறையும், விராட் கோலி,ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 4 முறையும் டக் அவுட்டாகி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

14/01/2024

1. கலிமா (Faith)
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை.
முஹம்மத் நபி (ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராக இருக்கிறார்கள்.

2. தொழுகை (Prayer)
ஒவ்வொரு நாளும் 5 முறை கண்டிப்பாக தொழ வேண்டும்.

3. நோன்பு (Fasting)
ரமதான் மாதத்தில் பகல் நேரங்களில் உணவு மற்றும் பானங்களை கைவிட வேண்டும்.

4. ஜகாத் (Almsgiving)
செல்வத்தில் ஒரு பங்கை தேவைப்படும் மக்களுக்கு (வரையறைக்குட்பட்டு) உதவ வேண்டும்.

5. ஹஜ் (Pilgrimage)
வாழ்நாளில் ஒரு முறையாவது மக்காவிற்கு புனித பயணம் மேற்கொள்ள வேண்டும்.

14/01/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.

தினம் ஒரு தகவல்

Address

STS
Melapalayam
627005

Alerts

Be the first to know and let us send you an email when BASHA's VLOG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category