Adhavan Fitness Point-Manapparai

Adhavan Fitness Point-Manapparai No Pain No Gain

15/08/2025
ஒருவர் தனது விலை உயர்ந்த காரை தனது வீட்டின் முன்பாக வீதியில் நிறுத்தியிருந்தார்அந்த வழியாக ஓடிச்சென்ற தெரு நாய் ஒன்று அத...
31/08/2022

ஒருவர் தனது விலை உயர்ந்த காரை தனது வீட்டின் முன்பாக வீதியில் நிறுத்தியிருந்தார்
அந்த வழியாக ஓடிச்சென்ற தெரு நாய் ஒன்று அதன் மீது சிறுநீர் கழித்தது…
இதைப் பார்த்த கார் உரிமையாளர் சிரித்தார்
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ஐயா நீங்கள் ஏன் நாயைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று ஆச்சரியத்துடன் கேட்டதற்கு
அந்தக் காரின் உரிமையாளர் மிகவும் சாந்தமாக,
நாய் அதன் அறிவிற்கு எட்டியதைச் செய்கின்றது.
அதற்கு இக்காரின் மதிப்பைப் பற்றித் தெரியாது. சொன்னாலும் அதற்குப் புரியாது என்று சிரித்துக் கொண்டே கூறினார்
கேள்வி கேட்டவர் இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்ல
இது போலத் தான் உங்கள் வாழ்விலும் உங்கள் மதிப்பை அறியாதவர்கள் உங்களை அவமானப்படுத்தும் போதும், கேலி செய்யும் போதும் அவர்களைப் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்
உங்கள் கடமை எதுவோ அதைச் செய்யுங்கள் நீங்கள் செயல் வீரராக இருங்கள் அவர்களைக் கண்டு கொள்ளாதீர்கள்👁️

படித்ததில் பிடித்தது.

மாலத்தீவில் நடைபெற்ற 54ஆவது மிஸ்டர் ஆசிய ஆணழகன் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்று வெற்றி பெற்ற தமிழக வீரர்களை தமி...
23/07/2022

மாலத்தீவில் நடைபெற்ற 54ஆவது மிஸ்டர் ஆசிய ஆணழகன் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்று வெற்றி பெற்ற தமிழக வீரர்களை தமிழ்நாடு அமைச்சர் ஆணழகன் சங்கத்தின் சார்பாக வரவேற்பதற்கு வருகை புரிந்த அனைத்து உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் மற்றும் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்

அக்னி பாத் திட்டத்தில் தமிழக இளைஞர்கள் பெருமளவில் இணைய வேண்டும் வெறும் 10 லட்சம் சம்பாதிக்க 4 ஆண்டுகள் வெளிநாடு போய் கூல...
20/06/2022

அக்னி பாத் திட்டத்தில் தமிழக இளைஞர்கள் பெருமளவில் இணைய வேண்டும்

வெறும் 10 லட்சம் சம்பாதிக்க 4 ஆண்டுகள் வெளிநாடு போய் கூலி வேலைக்கு மாரடித்து வாழ்க்கையை தொலைப்பதை விட கெத்தாக இராணுவ பயிற்சி பெற்று மாதம் குறைந்தபட்சம் 25,000 சம்பளத்துடன் 4 ஆண்டுகள் முடிவில் 11.70 லட்சம் ரூபாயை மொத்தமாக தூக்கி தருவார்கள்.

அது தவிர ஏனைய பாதுகாப்பு சார்ந்த அரசு பணிகளுக்கு இந்த பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

17 வயதில் உள்ளே போய்விட்டு 21 வயதில் பயிற்சி முடிந்து வெளியே வந்து பிரகாசமான வாழ்க்கையை நோக்கி நகரலாம்...

இந்திய ரானுவத்தில் தமிழ்நாட்டிற்கான பங்கும் அவசியம்

மனிதனின் ஆயுட்காலம் குறுக காரணங்கள் 1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை2. இரவில் கண் விழித்திருத்தல்3. காலை உணவை தவ...
12/09/2021

மனிதனின் ஆயுட்காலம் குறுக காரணங்கள்

1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை
2. இரவில் கண் விழித்திருத்தல்
3. காலை உணவை தவிர்த்தல்.
4. ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம்.
5. பணத்தை நோக்கிய ஓட்டம்
6. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்
7. கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்.

வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள். கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல.

நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது*
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடாக நீர் அருந்துங்கள்.

தினமும் ஒரு பழத்தையேனும் உண்ணுங்கள்.

போதியளவு நீர் அருந்துங்கள்.

பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும் உண்ணுங்கள்.

காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள்.

அளவாக உண்ணுங்கள்.
எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.

தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதை குறையுங்கள்.

உடற்பயிற்சி உணவை போல் அத்தியாவசியமான ஒன்று.

மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள்.

இறுக்கமாக இருக்காது சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருங்கள்.

உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள்.

அழுது வடியும் சீரியல்களை பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல், சிரிக்க வைக்கும் காட்சிகளை கண்டு களியுங்கள்

ஆளைக் கொல்லும் கவலைகளைப் புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாக அணியுங்கள்.

ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம்.  ஐபிஎல் வெற்றி பெற்றால் கொண்டாடுவோம் ஹாக்கி என்றான் புறந்...
08/08/2021

ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம்.

ஐபிஎல் வெற்றி பெற்றால் கொண்டாடுவோம் ஹாக்கி என்றான் புறந்தள்ளுவோம். நாம் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பது யாருக்கு எல்லாம் தெரியும்.

ஒலிம்பிக் வரலாற்றில் அரிதான நிகழ்வு; தங்கத்தை மிஞ்சிய நட்பு: உயரம் தாண்டுதலில் தங்கத்தைப் பகிர்ந்த கொண்ட கத்தார், இத்தால...
03/08/2021

ஒலிம்பிக் வரலாற்றில் அரிதான நிகழ்வு; தங்கத்தை மிஞ்சிய நட்பு: உயரம் தாண்டுதலில் தங்கத்தைப் பகிர்ந்த கொண்ட கத்தார், இத்தாலி வீரர்கள்

இந்து தமிழ்
02 Aug 2021

டோக்கியோ
உலகம் முழுவதும் நேற்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்ட நேரத்தில், ஒலிம்பிக்கில் நட்பை உயர்த்திப் பிடிக்கும் சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. உயரம் தாண்டுதலில் கத்தார், இத்தாலி வீரர்கள் இருவரும் தங்கத்தைப் பகிர்ந்துகொண்டு தங்களின் நட்பு தங்கத்தை விட உயர்ந்தது என நிரூபித்துள்ளனர்.
கத்தார் நாட்டின் முதாஸ் பார்ஷிம், இத்தாலியின் கியான்மார்கோ தம்பேரி ஆகியோர்தான் தங்கப் பதக்கத்தைப் பகிர்ந்து கொண்டனர். களத்தில் இரு வீரர்களும் எதிர் எதிர் நாட்டைச் சேர்ந்த போட்டியாளர்களாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் இருவரும் சிறந்த நண்பர்கள். இரு வீரர்களுக்கும் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது ஒலிம்பிக்கில் அரிதான நிகழ்வாகும்.

டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டி நேற்று நடந்தது. இதில் கத்தார் நாட்டு வீரர் முதாஸ் பார்ஷிம், இத்தாலியின் கியான்மார்கோ தம்பேரி, பெலாரஸ் வீரர் மாக்சிம் நெடாசேகு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில் முதாஸ் பார்ஷிம், கியான்மார்கோ இருவரும் 2.37 மீட்டர் உயரத்தைத் தாண்டி ஒரே புள்ளிகளைப் பெற்றனர். 2.39 மீட்டர் உயரத்தைத் தாண்டுவதற்கு இருவரும் 3 முயற்சிகள் செய்தும் அதில் இருவரும் 3 தவறுகளைச் செய்தனர். இதையடுத்து, இறுதியான வெற்றியாளரைக் கண்டுபிடிக்க கடைசியாக தாண்டுதலை நடத்த நடுவர் முடிவு செய்தார்.

அப்போது, ஒலிம்பிக் போட்டி நடுவரிடம் பார்ஷிம், “ இரு தங்கப்தக்கம் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா, இருவரும் தங்கத்தை ஷேர் செய்ய முடியுமா” எனக் கேட்டார்.

இதற்கு நடுவரும் தங்கத்தைப் பகிர்ந்து அளிக்க சம்மதம் தெரிவித்தார். இதைக் கேட்டவுடன் பார்ஷிம், கியான்மார்கோவும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.
கடந்த 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலமும், ரியோவில் வெள்ளியும் வென்றவர் பார்ஷிம். ஆனால், கடந்த 2018-ம் ஆண்டில் காலில் ஏற்பட்ட காயத்தால் பெரும்பாலும் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. அந்த நேரத்தில் பார்ஷிம் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் விளையாடவருவதற்கு கியான்மார்கோ பெரும் ஆதரவு அளித்துள்ளார்.

தங்கப்பதக்கம் குறித்து பார்ஷிம் கூறுகையில், “இது எனக்குக் கனவு போன்றது. இதிலிருந்து கண்விழிக்க நான் விரும்பவில்லை. இந்த நாளுக்காகத்தான் 5 ஆண்டுகள் காத்திருந்தேன். பல காயங்கள் பின்னடைவுகள். இன்று இருவரும் இந்த தருணத்தைப் பகிர்ந்துகொண்டோம். இது உண்மையில் மதிப்பு மிகுந்தது” எனத் தெரிவித்தார்.

பெலாரஸ் வீரர் மாக்சிம் நெடாசேகுவுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.

2010-ம் ஆண்டு உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் உயரம் தாண்டுதல் போட்டி கனடாவில் நடந்ததில் இருந்து பார்ஷிம், தாம்பேரி இருவரும் சிறந்த நண்பர்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரின் நட்பு தொடர்ந்து வருகிறது. களத்தில் இருவரும் போட்டியாளர்களாக இருந்தாலும் வெளியே சிறந்த நண்பர்கள் என்பதை ஒலிம்பிக்கிலும் நிரூபித்துவிட்டனர்.

"வீணாக்காதீர்கள்.."உலகில் உள்ள பணக்கார நாடுகளில் ஒன்று ஜெர்மனி. அந்த நாட்டிற்கு புதிதாக சென்ற நம் இந்தியர் ஒருவர் அங்குள...
13/02/2021

"வீணாக்காதீர்கள்.."

உலகில் உள்ள பணக்கார நாடுகளில் ஒன்று ஜெர்மனி. அந்த நாட்டிற்கு புதிதாக சென்ற நம் இந்தியர் ஒருவர் அங்குள்ள ஓட்டல் ஒன்றுக்கு தனது குடும்பத்தோடு இரவு உணவு உண்பதற்காக சென்றார்.

ஏகப்பட்ட அயிடங்களுக்கு ஆர்டர் கொடுத்தார். குழந்தைகளும் மனைவியும் சரியாய் சாப்பிடாததால் பாதிக்கு மேல் மீந்துவிட்டன. நம் இந்தியர் பில் கேட்டார். சிறிது நேரத்தில் பரிமாறியவர் பில்லைக் கொண்டு வந்து கொடுத்தார்.

பில்லை பார்த்ததும் நம் இந்தியருக்கு அதிர்ச்சி காரணம் 500-மார்க்குக்கு பதிலாக 1000-மார்க் என்று இருந்தது. கடுப்பான நம் இந்தியர் கத்த ஆரம்பித்தார்.

இது என்ன அநியாயம், அக்கிரமம்..? யார் உங்களது மேனேஜர் வரச்சொல் அவரை..! நான் புதியவன் என்பதால் எல்லோரும் என்னை ஏமாற்ற பார்க்கிறீர்களா? பில் தொகை இரண்டு மடங்காக இருக்கிறதே.. நான் போலீசைக் கூப்பிடுவேன் என்றார்.

மேனேஜர் வந்து அனைத்தையும் விசாரித்துவிட்டு மெல்ல சிரித்துக்கொண்டே கூறினார். தாராளமாய் கூப்பிடுங்கள். அவர்கள் வந்தால் மோசமாகப் போவது உங்கள் நிலைமைதான்.

உண்மையில் நீங்கள் சாப்பிட்டதற்க்கான பில் தொகை ஐநூறு மார்க்தான் மறுப்பதற்கில்லை, ஆனால் நீங்கள் சாப்பிடாமல் வீணடித்த உணவிற்காக அபராத தொகை ஐநூறு மார்க். பணம் உங்களுடையதுதான் அதில் சந்தேகமில்லை.

ஆனால் உங்களால் வீணடிக்கப்பட்ட இந்த உணவு பொருட்கள் உங்களுக்கு மட்டும் சொந்தமானது இல்லை,

அது இந்த சமுதாயத்தின் சொத்தும் கூட. நீங்கள் இப்படி வீணாக்காமல் இருந்திருந்தால் அது இன்னொருவரை சென்றுடைந்து அவருடைய பசியை தீர்த்திருக்கும்.

போதிய உணவு கிடைக்காமல் பசியால் வாடுவோர் உலகம் முழுவதும் இருக்க.., உங்களால் எவ்வளவு சாப்பிடமுடியுமோ அதற்குத்தான் நீங்கள் ஆர்டர் கொடுத்திருக்க வேண்டும்.

இப்படி உணவுப்பொருட்களை வீணடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எங்களது ஹோட்டலின் மெனுகார்டுக்கு கீழே எங்கள் ரெஸ்ட்டாரெண்ட்டின் விதிமுறைகளை எழுதியிருக்கிறோம்.

நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.
இங்கு மட்டுமல்ல ஜெர்மனியின் பெரும்பாலான ஹோட்டல்களில் இதே விதிமுறைகள் தான் வழக்கத்தில் உள்ளது.

இதில் இருக்கும் உண்மையை நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தினமும் இணையங்களின் வாயிலாக உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் எப்படி துன்பப்படுகிறார்கள் என்று புகைப்படங்கள் வாயிலாகவும் கட்டுரைகள் வாயிலாகவும் பார்க்கிறோம்.

ஆகையால்.. பொது இடங்கள், விழாக்கள் மற்றும் ஹோட்டல்களில் மட்டுமல்ல வீடுகளிலும் கூட உணவுப் பொருட்களை வீணடிப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும்..

ஆம்... சொந்தங்களே...

முதலில் அதனை நம்மிடம் இருந்து துவக்குவோம்.

இனி ஒருநாளும் எந்த இடத்திலும் உணவுப் பொருளை வீணடிப்பது இல்லை என்று இன்று முதல் உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.

நாம் ஒவ்வொருவரின் மொத்தம்தான் இந்த நாடு.

ஆகையால் இன்று நாம் திருந்தினால் நாடும் ஒருநாள் திருந்தும்......

பகிர்வு பதிவு

     BIDYBUILDING COMPETITION 24-01-2021 அன்று திருச்சி தேவர் மஹாலில் மாவட்ட ஆணழகன் போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது ...
25/01/2021





BIDYBUILDING COMPETITION

24-01-2021 அன்று திருச்சி தேவர் மஹாலில் மாவட்ட ஆணழகன் போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது ...

All friends family numbers have a day nice
14/01/2021

All friends family numbers have a day nice

Address

Kovilpatty Road, Manapparai
Manapparai
621305

Telephone

9994047532

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adhavan Fitness Point-Manapparai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adhavan Fitness Point-Manapparai:

Share