ராபின் கிரிக்கெட் கிளப், வடமட்டம்

  • Home
  • India
  • Kumbakonam
  • ராபின் கிரிக்கெட் கிளப், வடமட்டம்

ராபின் கிரிக்கெட் கிளப், வடமட்டம் வடமட்டம் வாழ் நன்பர்களும், வடமட்டம் ?

19/11/2023

உலகக்கோப்பை - வெற்றி இலக்கில் இந்தியா!!!

களத்தில் நின்று போராடு,
கார்னர்[edge] ஷாட்டில் நாளோடு[4]

உளத்தில் மூன்று குறியோடு,
ஒன்று, இரண்டு, ஆறோடு,
உறுதியோடு நீயாடு,

வலக்கை சீமை[seam] பலத்தோடும்
இடக்கை சுழற்-ஸ்பின்[spin] திடத்தோடும்
எல்லா பாலையும்[ball] துணிவோடு
எல் பி - இன்றி நீயாடு,

வில்லாய் வலைந்து விளையாடு
வெற்றி உண்டு உன்னோடு
தில்லாய் வெல்வாய் பதினொன்றும்
சிகரம் தொடுவாய் நீஎன்றும்

உலகக்கோப்பை ஐசிசி, உயர்த்திப் பிடிக்கும் பிசிசி
அழகாய் நடத்தி முடிப்பாரே, அகிலத் துடிப்பை அறிவாரே
இலக்கை எட்டிப் பிடிப்பாரே, இறுதியில் இந்தியர் வெல்வாரே
பலத்தை காட்டி விளையாட்டில் பரிசை தட்டிச் செல்வாரே

கோலியாடுவார் குஷியோடு, வேலி-தாண்டும் பாலோடு,
ஜாலி-யாக ஜடேஜாவும், தூளிக்கட்டி கேட்ச் பிடிப்பார்,
வாளிபோல கைகுவித்து வளைந்து பிடிப்பார் ராகுலுமே,
காலிசெய்ய ஷமி-வருவார், ஜோலிமுடிப்பார் ஏழோடு,

ரோலில் முதல்வர் ரோகித்தும், புயலை கிளப்பிப் போவாரே
நீலி-நிறத்தில் கடல்போல, நின்றே பார்ப்பார் ஸ்டேடியத்தில்
வாலில்லாத பட்டம்-போல், வானம் தொடுமே ஐயர் பால்
காலில்-போட்ட பாலையுமே, கில்லி-போல கில் ஆறடிபார்

பவுலிங்-சீமில் பூம்ராவும், பந்தால் பேசும் சீ-ராஜும்
பெவிலின் கிளம்ப செய்வாரே, பெருசாய் ரன்கள் கொடுக்காது
கவுளிக்-கணக்கில் ராகுலோடு கலந்து அடிப்பார் சூர்யாவும்
லவ்லியாக குல்தீப்பும் மவுளிசூட உழைப்பாரே

தெளிவாய் டிப்சை தந்துவிட்டு, வெளியில் நிற்பார் அஸ்வினுமே
ஒளியை ஒலியை கலந்தடித்து, மலிவாய் தந்தார் ஹாட்-ஸ்டாரே
சளியா உழைப்பால் சாகசமே, பொளிவாய் காட்டி மகிழ்வித்து
எளிதாய் மனதை கவர்ந்தாரே, எல்லாபுகழும் ஸ்டார்-ஸ்போர்ட்ஸ் -தமிழுக்கே.

நீலச்சட்டை ரோகித்தும், தலைமை ஏற்றார் இதை வெல்ல
பலமாய் நின்றார் பதின்மூவர், பாரதத் தாயின் தவப்புதல்வர்
குலமே கூடி கொண்டாட, கொண்டு வந்தார் நேரலையாய்
நலமாய் டென்சன் இல்லாமல், நாளும் ஸ்டார்-ஸ்போர்ட்ஸ் பார்த்தோமே

இலக்கை எட்டிட மோதிப்பார், இந்தியா வெல்லும் மோதியில் பார்
சுலபக் கணக்கு அது இல்ல, ஜகமே சொல்லும் இச் சொல்ல
கலக்கிப் புட்டார் பதி-னொருவர், மலைக்கவே வென்றார் பதி-னொன்றும்
விளக்கி கேட்பார் ஹேஷ்-ஸ்டாரை வெற்றியை பார்ப்பார் ஹாட்-ஸ்டாரில்

-ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் நேயர்கள்
நன்றி - Star Sports - Tamil channal
vijayashyamala-17.11.2023

19/11/2023

உலகக்கோப்பை - வெற்றி இலக்கில் இந்தியா!!

உலகக்கோப்பை கிரிக்கெட்டில்,
ஒளிபரப்பாகும் ஸ்டார் ஸ்போர்ட்சில்,
கலக்கிப் பேசுவார் சீகாவும்,
கருத்தை வீசுவார் நானியுமே,

மந்திரம் போடும் பாலாஜும்,
தந்திரம் பேசும் யோமியோடு,
சந்திரச் ஸ்டாராய் ஜொலிபாரே,
சுந்தர கமெண்ட்ரி கொடுபாரே,

புயலாய் புகழும் ரமேஷ்சுடனே,
வயலாய் விளைவார் பத்ரியுமே
நிழலாய் தொடரும் ரசலோடு
பழமாய் இனிப்பார் பதானியுமே

முறையாய் முதலாய் முன்வந்து
முத்து தொடர்வார் கருத்தோடு
திரையை போடும் நேரத்திலும்
தெளிவை தருவார் எல்லோரும்

கலந்து தொகுக்கும் பாவ்னாவை
காதில் ஒலிக்கும் கமென்ட்ரியை
நினைத்துப் பார்த்தேன் பரவசமாய்
மலைத்துப் போனேன் நவரசமே!

நேரலையில் இதை அளிக்க
நித்தம் நித்தம் எத்தனைபேர்
அறையில் களத்தில் பலரிருந்து
முறையாய் முழுதாய் தந்தார்கள்

நிறைய கலைஞர் பின்இருக்க
மறைவாய் நின்றது தொழில்நுட்பம்
விரைவாய் தெளிவாய் ஒளிபரப்பி
நிறைவை மனதில் தந்தார்கள்

இரவை பகலை தனதாக்கி
உறவை நட்பை வளர்த்தார்கள்
குறையே சொல்ல வாய்பில்லை - மன
நிறைவில் வாழ்த்தி மகிழ்கின்றோம்

-ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் நேயர்கள்
நன்றி - Star Sports - Tamil channal
vijayashyamala 17.11.2023

19/11/2023
திருமிகு சுபாஷ் சந்திரபோஸ் V.S.T. - வடமட்டம்.[திரு. பாலசந்தர் - திரு சிவகுமாரின் தந்தை]இரங்கல் மடல்இனிய தென்றல் இனியில்ல...
25/10/2023

திருமிகு சுபாஷ் சந்திரபோஸ் V.S.T. - வடமட்டம்.
[திரு. பாலசந்தர் - திரு சிவகுமாரின் தந்தை]
இரங்கல் மடல்

இனிய தென்றல் இனியில்லை,
மணி அசையும் ஓசையில்லை,
கனி பழுக்கும் சுவையில்லை,
இனி செய்வது ஏதுமில்லை,

தனியாயும் வருவார்கள்,
அணி அணியாயும் வருவார்கள்,
தொனி இழந்து அழுவார்கள்,
இனி இவர்பேச என்செய்வேன்,

பனிபோல குளிர்வித்து,
கனியாக இனிபித்து,
நனியாக தனை அர்ப்பித்த,
புணிதர் இவர் மனம்விட்டு போகவில்லை,

போகுமிடம் தெரியாதே,
போனபின்னே தேடுவதோ,
ஏகும்காலம் இதுதானோ,
என்னசொல்லி அழுவேனே!

எங்கு போய் தேடுவதோ!
அங்கு அவரை கேட்பதோ!
மங்காத மாண்போடு மண்வாழ்ந்தார் - இனி
தங்குமிடம் எத்தரனி தேடிநான் ஓடுவதோ

நாவரசர் மூத்தபிள்ளை நானிலத்து நல்லபிள்ளை
பூமீது பூத்தபிள்ளை போஸ்என்னும் செல்லபிள்ளை
காதாயி காத்தபிள்ளை கருத்தொத்த மாப்பிள்ளை
சேய்இரண்டை பெத்தபிள்ளை சீலம்மிகு தாய்பிள்ளை

வாய்திறந்தால் வாழ்தொலிரும் வணக்கம்எனும் முத்தொலிரும்
காய்கனிந்த வார்த்தையாலே தாய்அன்பின் பேச்சொலிரும்
பாய்கின்ற குணம்கூட இவரை பார்த்தபின்னே பசுவாகும்
தேய்கின்ற நிலவுகூட பூப்பதுவாய் திருவாளர் பிறப்பாரே.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - HAPPY NEW YEAR 2022
01/01/2022

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - HAPPY NEW YEAR 2022

ஆழ்ந்த இரங்கல் - வருந்துகின்றோம்
12/06/2021

ஆழ்ந்த இரங்கல் - வருந்துகின்றோம்

02/06/2020

Address

Kumbakonam
612201

Website

Alerts

Be the first to know and let us send you an email when ராபின் கிரிக்கெட் கிளப், வடமட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category