17/08/2023
Chief Minister of Tamil Nadu
M. K. Stalin
Ramanathapuram District Police
Thoothukudi District Police
அனுப்புநர்:-
திரு.K.ஆதித்தன்,
தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்,
மாவட்ட கவுன்சிலர் திருப்புல்லாணி ஒன்றியம் (கிழக்கு),
தலைவர் ஜல்லிக்கட்டு வடமாடு மற்றும் எருதுகட்டு விழா பேரவை,
இராமநாதபுரம் மாவட்டம்.
பெறுநர்:-
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,
முதலமைச்சர் தனிப்பிரிவு,
தலைமைச் செயலகம்,
சென்னை-600 009.
மதிப்பிற்குரிய ஐயா,
பாரம்பரிய வீரவிளையாட்டுகள் ஜல்லிகட்டு, வடமாடு, எருதுகட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கடுமையாக வாதாடி அரும்பாடுபட்டு அனுமதி வாங்கி கொடுத்ததால், தமிழக முதல்வருக்கு மக்களால் பல பாராட்டு விழாக்கள் நடைபெற்று வரும் இச்சூழ்நிலையில்.
இவ்விழாக்களில் பாதுகாப்பு வேண்டி, விழா தொடங்குவதற்கு சுமார் 20 நாட்களுக்கு முன்பு , விழா அழைப்பிதழை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் ஊர் முக்கியஸ்தர்கள் கொடுக்கும்பொழுது,
அதிகாரிகள் அந்த மனுவை வாங்கி வைத்துக் கொண்டு அதற்கு முறையான பதில் சொல்லாமல் , போய் வாருங்கள் பார்க்கலாம் என்று சொல்கின்றனர்.
ஆனால் விழா துவங்குவதற்கு முதல் நாள் இரவு, விழா நடத்தும் கிராமத்திற்கு வந்து விழாவை நிறுத்த சொல்கின்றனர்
மேலும் விழாக்களுக்கு அரசு அனுமதி இருப்பதே அவர்களுக்கு தெரியாதது போல்,
எந்த அரசு அனுமதி வழங்கியது? எப்போது வழங்கியது?
உச்ச நீதிமன்ற அனுமதி கடிதத்தை கொடுங்கள் என்று விழா நடத்தும் கிராமத்தினரிடம் கேட்கின்றனர்?
இதனால் விழா நடத்த முடியாமல், அனைவரும் அதிர்ச்சியையும் மன வேதனையும் அடைகின்றனர்.
இதுபோன்ற செயலால், பாரம்பரியமாக விழாக்கள் நடத்தி வரும் பலநூறு கிராமங்களை சேர்ந்த பல லட்சம் மக்கள் மிகுந்த மனவேதனையுடன் அவர்கள் வருத்தத்தை அரசின் மீது வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் அதிகாரிகளின் இந்த செயல்பாடு, தமிழக அரசின் முயற்சியை கொச்சைப்படுத்தும் வகையிலும்,
இந்த விழாக்கள் மீண்டும் தடை செய்யப்பட்டதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி
ஆட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது.
ஆகையால், இது போன்ற சில அதிகாரிகளால் அரசுக்கு ஏற்படும் அவப்பெயரை போக்கி,
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பெற்று தந்த அனுமதியின் பலன் மக்களை முழுமையாக சென்றடைந்து, மகிழ்ச்சியுடன் விழாக்கள் நடத்தும் வண்ணம், சம்பந்தப்பட்ட பகுதி காவல் நிலையத்திலேயே எளிமையான முறையில் அனுமதி வழங்க , உயர்திரு காவல்துறை கண்காணிப்பாளர் மூலம் சுற்றறிக்கை அனுப்ப ஆவண செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி
தங்கள் உண்மையுள்ள
K.ஆதித்தன்
செல்:-9442321617
Send a message to learn more