இயற்கையில் உள்ள அனைத்தும் அனைவருக்கும் சொந்தமடா

  • Home
  • India
  • Karungalpatti
  • இயற்கையில் உள்ள அனைத்தும் அனைவருக்கும் சொந்தமடா

இயற்கையில் உள்ள அனைத்தும் அனைவருக்கும் சொந்தமடா இயற்கை உடன் மருத்துவ முறையில் சேர்ந்து செயல்படுவோம்
SATHEESH
� Reflexology, Yoga & Naturopathy � 8

Shout out to my newest followers! Excited to have you onboard! Mythilijayam Mythili, Srinivasan, Chandrasekar Sambasivam...
07/08/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Mythilijayam Mythili, Srinivasan, Chandrasekar Sambasivam, Angapparaj A

06/08/2026

தலைவலி குணமாக 28 வகையான பாட்டி வைத்தியங்கள்...

தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. தலைவலி என்ற உடன் பலர்மாத்திரையை சாப்பிடும் பழககம் கொண்டுள்ளனர். முடிந்தவரை தலைவலிக்கு மாத்திரைகளை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.

தலைவலி சரியாக சில பாட்டி வைத்தியங்கள்...

1) கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விலகும்.

2) திருநீற்றுப பச்சிலைச் சாறு, தும்பைச்சாறு இரண்டையும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து நெற்றியில் தடவ தலைவலி தீரும்.

3) துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும்.

4) கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று போட தலைபாரம் குறையும்.

5) நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

6) துளசி இலைகளோடு ஒரு துண்டு சுக்கு, லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குறையும்.

7) கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.,

😎 வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும்.

9) முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும்.

10) கீழாநெல்லிச்சாறு, குப்பைமேனி இலைச் சாறு இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி நெற்றியில் தடவி வர தலைவலிஎலுமிச்சைப் பழச் சாற்றை இரும்பு சட்டியில் விட்டு காய்ச்சி நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.

11) இஞ்சிச் சாறை நல்லெண்ணெயில் காய்ச்சி தினமும் தலையில் தேய்த்து வர தலைவலி குறையும்.

12) ஓமவல்லி இலைச் சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை கலந்து நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.

13) அகத்தி இலையை அரைத்து நெற்றியில் பற்று போட தலை வலி குறையும்.

14) மிளகாய் , மிளகு, செம்மண் முன்றையும் சம அளவு எடுத்துத் தண்ணீர் விட்டு மைப்போல அரைத்துக் கொதிக்க வைத்து இளஞ் சூடாகப் பற்றுப் போட தலைவலி குறையும்.

15) இஞ்சியைத் தட்டி வலி உள்ள இடத்தில் பற்றுப் போட தலை வலி குறையும்.

16) வெற்றிலை, நொச்சி இலை, குப்பைமேனி இலை, மிளகு, சுக்கு இவற்றின் சாறை எடுத்து காய்ச்சி தலையில் தேய்த்து குளிக்க தலைவலி குணமாகும்.

17) சுக்குப் பொடியை பாலில் குழைத்து நெற்றியில் தடவ தலை வலி குறையும்.

18) மிளகை அரைத்து பாலுடன் கலந்து தலையில் தேய்த்து குளிக்க தலை வலி குறையும்.

19) கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையை நெற்றியில் தடவினால் தலைவலி குறையும்.

20) அகத்தி இலைச் சாறெடுத்து நெற்றியில் தொடர்ந்து தடவி வர தலை வலி குறையும்.

21) எலுமிச்சைப்பழச் சாற்றில் மிளகை மைய அரைத்து நெற்றியில் போட தலைவலி குறையும் .

22) குங்குமப்பூவை மைய அரைத்து நெற்றிப்பொட்டில் தடவ தலைவலி குணமாகும்.

23) நெல்லிக்காயை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி நீங்கும்.

24) இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்று சேர்த்துக் காய்ச்சி சீசாவில் வைத்துக் கொள்ளவும். தைலத்தை தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின் குளிக்க
தலைவலி குணமாகும்.

25) ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி விலகும்.

26) ஜாதிக்காய் விதைகளை அரைத்து அடிக்கடி தலையில் தேய்த்தால் தலைவலி நீங்கும்.

27) மிளகு, துளசி இரண்டையும் வாயில் போட்டு கொண்டால் தலை வலி விரைவில் குறையும் .

28) உப்பு,மிளகு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விரைவில் நீங்கும்...

*🍃Reflexology,Yoga & Naturopathy 🍃*

*🌱Alternative Therapist-Jai Satheesh 🌱*

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156*

https://chat.whatsapp.com/LLx2oLuI2qn3bQc7PuWCcV?s=cl&p=a&ilr=4&amv=3

*தமிழ் வழியில் இயற்கை வாழ்வியல் முறையை கற்றுக்கொள்ள Telegram* https://t.me/livealaive

https://www.facebook.com/jaisatheesh3956

Follow the 🍃வாழ்வை 🌱வாழ்வோம் 🌿 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaHoEl5DJ6HAWKxtWh2o

நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் Gpay No: 8754792156
UPI ID. jaisatheesh3956-2@okicici அனுப்பவும்.

தலைவலி குணமாகஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டா...
01/08/2026

தலைவலி குணமாக

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில்

பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு குணமாக

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொடர் விக்கல் நிற்க

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

உதட்டு வெடிப்பு

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண் ஆற
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி குணமாக

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு குணமாக

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு குணமாக

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலம்
கரணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

*🍃Reflexology,Yoga & Naturopathy 🍃*

*🌱Alternative Therapist-Jai Satheesh 🌱*

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156*

https://chat.whatsapp.com/KlGdkR4kpPhFVf2XHXA2hv?s=cl&p=a&ilr=4

*தமிழ் வழியில் இயற்கை வாழ்வியல் முறையை கற்றுக்கொள்ள Telegram* https://t.me/livealaive

https://www.facebook.com/jaisatheesh3956

Follow the 🍃வாழ்வை 🌱வாழ்வோம் 🌿 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaHoEl5DJ6HAWKxtWh2o

நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் Gpay No: 8754792156
UPI ID. jaisatheesh3956-2@okicici அனுப்பவும்.

WhatsApp Group Invite

*அருமையான பதிவு* *காய்கறிகள் :- பயன்களும்,* *பக்கவிளைவுகளும் !*  *கத்தரிக்காய்*  *என்ன இருக்கு:* * விட்டமின் சி, மற்றும்...
31/07/2026

*அருமையான பதிவு* *காய்கறிகள் :- பயன்களும்,* *பக்கவிளைவுகளும் !*

*கத்தரிக்காய்*
*என்ன இருக்கு:*
* விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து

*யாருக்கு நல்லது* :

* ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்க வைக்கும்.

*யாருக்கு வேண்டாம்:*
* சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அரிப்பைத் தூண்டும். அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் சாப்பிடக்கூடாது.

*பலன்கள்:*
* நரம்புகளுக்கு வலுவூட்டும் சளி, இருமலைக் குறைக்கும்.

*முருங்கைக்காய்*

*என்ன இருக்கு:* கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி

*யாருக்கு நல்லது:* குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.

*யாருக்கு வேண்டாம்:* முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும்.
பலன்கள்: நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும்.
https://chat.whatsapp.com/DIAIPkzfVoQIFN3GLdigcc?s=cl&p=a&ilr=4&amv=3

*மாங்காய்*
*என்ன இருக்கு:* நார்ச்சத்து, விட்டமின் ஏ

*யாருக்கு வேண்டாம்:* சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்.

*பலன்கள்:* மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். தாது பலம் பெறும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.

*அவரைக்காய்*

*என்ன இருக்கு:* உயர்நிலை புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து.

*யாருக்கு நல்லது:* நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு.

*யாருக்கு வேண்டாம்:* யாரும் இரவில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் ஆகாது.

*பலன்கள்:* உடலுக்கு தேவையான புரதச் சத்தினை அளிக்கவல்லது.

*அத்திக்காய்*

*என்ன இருக்கு :* விட்டமின் சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து

*யாருக்கு நல்லது :* மூலநோய் உள்ளவர்களுக்கு.

*பலன்கள் :* மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.

*பீர்க்கங்காய்*

*என்ன இருக்கு :* நீர்ச்சத்தும் தாது உப்புகளும்

*யாருக்கு வேண்டாம் :* யாரும் இரவில் சாப்பிடக் கூடாது. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும்.

*பலன்கள் :* உடலுக்கு குளிர்ச்சியைத் தரும

*கோவைக்காய்*

*என்ன இருக்கு :* விட்டமின் ஏ

*யாருக்கு நல்லது :* நீரிழிவு நோயாளிகளுக்கு

*பலன்கள் :* வாய்ப்புண், வயிற்று ரணம், நாக்குக் கொப்புளம் ஆகியவற்றை போக்கும்.

*புடலங்காய்*

*என்ன இருக்கு :* உயர்நிலை புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து.

*யாருக்கு நல்லது :* மூலநோய் உள்ளவர்களுக்கு.

*யாருக்கு வேண்டாம் :* ஆஸ்துமா, மூட்டுவலி, தலைவலி, சளி மற்றும் காய்ச்சல் உடம்பில் குத்தல் குடைச்சல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

*பாகற்காய்*

*என்ன இருக்கு:* பாலிபெப்டுடைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது

*யாருக்கு நல்லது:* சர்க்கரை நோயாளிகளுக்கு

*யாருக்கு வேண்டாம்:* வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும். அடிக்கடி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும்.

*பலன்கள்:* தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும்.

*சுரைக்காய்*
*என்ன இருக்கு:* நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து. இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.
யாருக்கு நல்லது: எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம்

*யாருக்கு வேண்டாம்:* சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு

*பலன்கள்:* இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.

*பூசணிக்காய்*
*என்ன இருக்கு:* புரதம், கொழுப்பு

*யாருக்கு வேண்டாம்:* ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது

*யாருக்கு நல்லது:* குழந்தைகளுக்கு. மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது

*பலன்கள்:* நரம்புகளுக்கு வலுவூட்டும். வயிற்றுப் புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண்பூசணியே நல்லது.

*கொத்தவரைக்காய்*
*என்ன இருக்கு :* நார்ச்சத்து

*யாருக்கு நல்லது :* நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு.

*யாருக்கு வேண்டாம்*: சிறுவர்கள், நோயுற்றோர் இதனை தவிர்ப்பது நல்லது. குறிப்பிடும்படியான சத்துக்கள் இல்லை. வாயுத் தொல்லை, லேசான நெஞ்சுவலியை உண்டாக்கும்.

*பலன்கள்:* மலச்சிக்கலை உடைக்கும்.

*வாழைக்காய்*

*என்ன இருக்கு:* கொழுப்புச் சத்து, விட்டமின் இ.
யாருக்கு நல்லது: வயிற்றுப்புண், ரத்தமூலம் உள்ளவர்களுக்கு பிஞ்சாக சாப்பிட நோய் கட்டுப்படும்

*யாருக்கு வேண்டாம்:* வாய்வு, இதய, மூட்டுவலியுள்ளவர்கள் சாப்பிடக்கூடாது

*பலன்கள்:* உடலுக்கு உரம் அளிக்கும். மலச்சிக்கலை உடைக்கும்.

*வெள்ளரிக்காய்*

*என்ன இருக்கு:* விட்டமின் ஏ, பொட்டாசியம்
யாருக்கு நல்லது: சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்

*யாருக்கு வேண்டாம்:* ஆஸ்துமா நோயாளிகளுக்கு

*பலன்கள்:* உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்.

*சுண்டைக்காய*
*என்ன இருக்கு:* விட்டமின் சி

*யாருக்கு நல்லது :* சிறுவர்கள் வாரம் இருமுறை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி சேராது. ஆஸ்துமா நோயாளிகள் தினசரி சாப்பிட மூச்சுத்திணறல் குறையும். கர்ப்பிணிப் பெண்கள் மாதம் ஒரு நாள் சாப்பிடலாம்

*பலன்கள்*: கிருமிகளை, வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். நுரையீரலுக்கு செயல் திறன் தரும். சளியைக் கரைக்கும்.

*பலாக்காய்*

*என்ன இருக்கு :* சுண்ணாம்புச்சத்து

*யாருக்கு வேண்டாம் :* வாத நோய், அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு

*பலன்கள் :* செக்ஸ் உணர்வைத் தூண்டும். போதை நச்சுக்களை முறிக்கும். பால்வினை நோய்களை மட்டுப்படுத்தும்.

*பப்பாளிக்காய்*
*என்ன இருக்கு :* விட்டமின் ஏ, கைபோ பாப்பைன் என்சைம்.

*யாருக்கு நல்லது :* மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும்

*யாருக்கு வேண்டாம் :* கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.

*பலன்கள் :*
சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.
பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும். பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

*களாக்காய்*
*என்ன இருக்கு :* விட்டமின் ஏ, சி.

*யாருக்கு நல்லது :* மந்தமான பசி, மசக்கை வாந்தி, அதிக பித்த எரிச்சல், பித்த
மயக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு.

*யாருக்கு வேண்டாம் :* தொண்டைவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

*பலன்கள் :* கண் பார்வையைத் தெளிவாக்கும். சாப்பாடு ஏற்கும் திறனை அதிகரித்து, பித்தத்தை கட்டுப்படுத்தும்.

*நெல்லிக்காய்*
என்ன இருக்கு : விட்டமின் சி, செல்லுலோஸ், கார்போ ஹைட்ரேட், கால்சியம்,பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் நிகோடினிக் ஆசிட
யாருக்கு நல்லது : பிளட் பிரஷர், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.எல்லோருக்கும் உகந்த அமிர்தக்கனி.
பலன்கள் : இளமையை நீடிக்கச் செய்யும். தலைமுடி, தோல், கண் பார்வையை
பாதுகாக்கும். இதயம் நுரையீரலை வலுவூட்டும்.

*காரட்*
என்ன இருக்கு : விட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள்.
யாருக்கு நல்லது : அசிடிட்டி தொந்தரவு உள்ளவர்களுக்கு குழந்தைகளுக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கு.
யாருக்கு வேண்டாம் : குழந்தை பேறு இல்லாதவர்கள் அதிகம் சேர்க்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : கண் பார்வைக்கு உகந்தது. உடல் பருமனாகாமல் காக்கும். காரட் சாறுடன் பத்து மிளகு சேர்த்து சாப்பிட்டுவர உடல் கழிவுகள் வெளியேறும்.

*பீன்ஸ்*
என்ன இருக்கு : புரதம், கார்போ ஹைட்ரேட், விட்டமின் ஏ, தாது உப்புகள்.
யாருக்கு நல்லது : ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
யாருக்கு வேண்டாம் : குடைச்சல், ஏப்பம், வயிற்று வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். ஜீரணத் தொந்தரவு ஏற்படும்.
பலன்கள் : பித்தம் தணியும், பார்வை தெளிவு, சருமப் பளபளப்புக்கு உதவும். வாயு நீக்கும்.

*பீட்ரூட்*
என்ன இருக்கு: க்ளூகோஸ்
யாருக்கு நல்லது : ரத்தச் சோகை உள்ளவர்கள் தொடர்ந்து 45 நாட்கள் பீட்ரூட் சூப் சாப்பிட்டு வர சோகை அடியோடு விலகும். வளரும் குழந்தைகள் அடிக்கடி சாப்பிட்டால் கண், நகம், பல் நன்கு வளரும்.
யாருக்கு வேண்டாம் : சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : ரத்தத்தை வளப்படுத்தும். சுறுசுறுப்பை அளிக்கும். மேனி நிறம் பெறும்.

*நூல்கோல்*
என்ன இருக்கு : சுண்ணாம்புச் சத்து
யாருக்கு நல்லது : ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு,சர்க்கரை நோயாளிகளுக்கு.
யாருக்கு வேண்டாம் : உப்புச் சத்து அதிகம் உள்ளவர்களுக்கு.
பலன்கள் : ரத்தச் சிவப்பணுக்களை பெருக்கும். ரத்தச் சோகையை நீக்கும்.

*முள்ளங்கி (வெள்ளை)*
என்ன இருக்கு : நீர்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து.
யாருக்கு நல்லது : சீறுநீரகக் கல் அடைப்பு, பித்தப்பை கல் உள்ளவர்கள் வாரம் இரண்டு நாள் சாப்பிட்டுவர, கல் கரைந்து வெளியேறும்.
யாருக்கு வேண்டாம் : ஆஸ்துமா நோயாளிகளுக்கு.
பலன்கள் : அதிகம் குளிர்ச்சி தரும். வாயுவை வெளியேற்றும்.

*முள்ளங்கி (சிவப்பு)*
என்ன இருக்கு : கந்தகம், கால்சியம், விட்டமின் சி.
யாருக்கு நல்லது : ஹைபர் அசிடிட்டி உள்ளவர்களுக்கு.
பலன்கள்: கை, கால், மூட்டு வீக்கத்தைக் குறைக்கும். ரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவைக் குறைக்கும். மித உஷ்ணம் தரும். சிறுநீரை வெளியேற்றும்.

*காலிஃபிளவர்*
என்ன இருக்கு : பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், விட்டமின் ஏ, இ.
யாருக்கு நல்லது : புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு. எதிர்ப்பு சக்தியைத் தரும். புற்றுநோய் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்.
பலன்கள் : மலச்சிக்கலை போக்கும். உடலை இளைக்கச் செய்யும்.

*முட்டைக்கோஸ்*
என்ன இருக்கு : சோடியம், இரும்பு பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின் ஏ, இ.
யாருக்கு நல்லது : சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்லது.
யாருக்கு வேண்டாம் : பனிக்காலத்தில் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடக்கூடாது. கருப்பையில் திசு வளர்ச்சி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். கிரேக்க நாட்டின் அந்தக் கால வயாக்ரா. மலச்சிக்கலை விலக்கிடும். தாது பலம் பெருகும். இளமையை தக்க வைக்கும்.

*நார்த்தங்காய்*
என்ன இருக்கு : சிட்ரஸ் ஆசிட்
யாருக்கு நல்லது : அஜீரண கோளாறு உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம் : வயிற்றுப்புண் அல்சர் நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : வாயுத் தொல்லையை விலக்கி நெஞ்சுக் கரிப்பை நீக்கும். அதிகப்படியான அமில சுரப்பை கட்டுப்படுத்தும்

*🍃Reflexology,Yoga & Naturopathy 🍃*

*🌱Alternative Therapist-Jai Satheesh 🌱*

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156*

https://chat.whatsapp.com/DIAIPkzfVoQIFN3GLdigcc?s=cl&p=a&ilr=4&amv=3

*தமிழ் வழியில் இயற்கை வாழ்வியல் முறையை கற்றுக்கொள்ள Telegram* https://t.me/livealaive

https://www.facebook.com/jaisatheesh3956

Follow the 🍃வாழ்வை 🌱வாழ்வோம் 🌿 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaHoEl5DJ6HAWKxtWh2o

நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் Gpay No: 8754792156
UPI ID. jaisatheesh3956-2@okicici அனுப்பவும்.

WhatsApp Group Invite

*குடல் இறக்கம் சரி செய்வது எப்படி?*வயிற்றில் உண்டாகும் நோய்களில் வயிற்றுக்கு வெளியே தெரியும் நோய்கள் சில உள்ளன. அவற்றுள்...
31/07/2026

*குடல் இறக்கம் சரி செய்வது எப்படி?*

வயிற்றில் உண்டாகும் நோய்களில் வயிற்றுக்கு வெளியே தெரியும் நோய்கள் சில உள்ளன. அவற்றுள் ‘குடல் இறக்கம்’ முக்கியமான ஒன்று. சிலருக்கு குடலின் ஒரு பகுதி, வயிற்றுக்கு முன்புறம் உள்ள தசைச் சுவரின் வலு குறைந்த பகுதி வழியாக வெளியே பிதுங்கித் தெரியும். அதைத்தான் ‘குடல் பிதுக்கம்’ அல்லது ‘குடல் இறக்கம்’ (Hernia) என்று அழைக்கிறோம்.

சாதாரண பலூனில் காற்றை ஊதும்போது, அது நல்ல பலூனாக இருந்தால், ஒரே சீராக விரிவடையும். ஆனால், சில பலூனில் வலுவிழந்த பகுதிகளில் காற்றின் அழுத்தம் அதிகமாகும் போது புடைப்பு அல்லது பிதுக்கம் ஏற்படுகிறது. இதுமாதிரிதான் நம் வயிற்றிலும் குடல் பிதுக்கம் ஏற்படுகிறது.

வயிற்றின் அமைப்பு

வயிறு மற்றும் முதுகுப் பகுதிகள் பல தசைகளால் ஆனவை. இவற்றில் முதுகுப்பகுதி உறுதியான முதுகெலும்பு மற்றும் வலு மிகுந்த தசைகளால் ஆனது. எனவே, குடலானது வயிற்றின் பின்புறமாக பிதுங்குவதற்கு வழியில்லை. ஆனால், வயிற்றுப்பகுதியோ சற்றே வலுக்குறைந்த தசைகளால் ஆனது.

வயிற்றுக்குள் உள்ள உறுப்புகளைப் பாதுகாப்பதற்கு ஒரு சுவர் போல் அமைந்திருக்கும் இத்தசைகள், நாம் சுவாசிக்கும் போது உப்பி மீண்டும் பின்னிலைக்குத் திரும்ப வேண்டும். இதற்கு உதவும் வகையில் இந்தத் தசைகள் அமைந்துள்ளன. இவற்றில் சில தசைப்பகுதிகள் மட்டும் நம் உடற்கூறு அமைப்பின்படி வலு குறைந்து காணப்படுகின்றன. இவ்விடங்களில்தான் குடல் இறக்கம் ஏற்படுகிறது.

குடல் இறக்கம் ஏற்படும் பகுதிகள்

1. ‘கவட்டைக் கால்வாய்’ பகுதி (Inguinal region) : வயிற்றில் உள்ள உறுப்புகள் ஒரு மெல்லிய உறையால் சூழப்பட்டுள்ளது. இதற்கு வயிற்றறை உட்சுவர் (Peritoneum) என்று பெயர். இந்தச் சுவரின் கீழ்ப்பகுதியில், அதாவது, வயிறும் தொடையும் இணைகிற இடத்தில், ‘கவட்டைக் கால்வாய்’ உள்ளது.
https://chat.whatsapp.com/DIAIPkzfVoQIFN3GLdigcc?s=cl&p=a&ilr=4&amv=3
வயிற்றையும் விரைப்பையையும் இணைக்கின்ற பாதை இது. ஆண்களுக்கு இதன் வழியாக வயிற்றிலிருந்து விந்துக்குழாய், விரைக்கு இரத்தம் வழங்கும் இரத்தக் குழாய்கள், நரம்புகள், நிணநீர்க்குழாய்கள் ஆகியவை விரைப்பைக்குச் செல்கின்றன. பெண்களுக்கு கருப்பையின் ‘உருண்டைப் பிணையம்’ (Round ligament) இதன் வழியாகச் செல்லும்.

பொதுவாக, ஆண்களுக்குக் கவட்டைக் கால்வாய் மிகவும் இறுகலாக இருக்கும். விந்துக் குழாய், விரை இரத்தக் குழாய்கள், நரம்புகள், நிணநீர்க்குழாய்கள் தவிர வேறு எந்த உறுப்பும் இதன் வழியாக வெளியே வர முடியாது.

சில நேரங்களில் வயிற்றறை உட்சுவர் தளர்ந்து போகும்போது, கவட்டைக் கால்வாயும் சற்று தளர்ந்து போகும். இதன் விளைவாக, வயிற்றிலிருந்து குடலின் ஒரு பகுதியும் வயிற்றுக் கொழுப்புறையும் (Omentum) கவட்டைக் கால்வாயைத் துளைத்துக் கொண்டு விரைப்பைக்குள் பிதுங்கும். இது ஆரம்பத்தில் விரைப்பையின் மேல்பகுதியில் ஒரு எலுமிச்சைப் பழம் அளவுக்குப் புடைப்பாகத் தெரியும்.

இதைத்தான் ‘கவட்டைக் குடல் இறக்கம்’ (Inguinal hernia) என்கிறோம். பெண்களுக்குப் பெண்ணுறுப்பின் மேல் பகுதியில் இப்புடைப்பு தெரியும். இந்தக் குடலிறக்கம் ஆண்களுக்கு 90 சதவிகிதமும் பெண்களுக்கு 50 சதவிகிதமும் ஏற்படுகிறது.

2. மேல் தொடைப் பகுதி (Femoral region) : மேல் தொடையும் முன்புற இடுப்பும் இணைகின்ற இடத்தில் ‘தொடைக் கால்வாய்’ (Femoral Canal) உள்ளது. இதன் வழியாக வயிற்றிலிருந்து காலுக்கு இரத்தக் குழாய்களும், நரம்புகளும், நிணநீர்க் குழாய்களும் செல்கின்றன. சிலருக்கு இதன் வழியாகவும் குடல் இறங்கி விடும். இந்த நிலைமையை ‘தொடைக் குடல் இறக்கம்’ (Femoral Fernia) என்கிறோம்.

3. தொப்புள் பகுதி (Umblical Region) : சிலருக்கு வயிற்றில் உள்ள தொப்புள் வழியாகக் குடல் இறங்கிவிடும். இதற்குத் தொப்புள் வழிக் குடல் இறக்கம் (Umbilical Hernia) என்று பெயர்.

4. ஏற்கனவே வயிற்றில் ஏதாவது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தழும்பு வழியாகவும் (Operative scar) குடலிறக்கம் ஏற்படலாம். காரணம், இவர்களுக்கு அறுவை சிகிச்சையின் போது தையல் போட்டிருப்பார்கள். நாளடைவில், இந்தத் தையல் போடப்பட்ட இடத்தைச் சுற்றியுள்ள தசைகள் பலவீனம் அடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

அப்படிப் பலவீனம் அடைந்துவிட்டால், அந்தப் பகுதிக்கு அருகில், வயிற்றிலிருக்கும் பகுதிகள் அந்தத் தழும்பு வழியாக வெளிப்பக்கத்தில் புடைக்கும். இதற்குத் ‘வெட்டுவழிக் குடல் இறக்கம்’ (Incisional Hernia) என்று பெயர்.

பெண்களுக்கு இவ்வகை குடலிறக்கம் அதிகமாக வருகிறது. காரணம், இவர்களுக்குக் குழந்தை பிறக்கும்போது ‘சிசேரியன் அறுவை சிகிச்சை’ செய்யப்படுவதாலும், கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்படுவதாலும் ‘வெட்டுவழிக் குடலிறக்கம்’ ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டாகின்றன.

5. இதுபோல ஏற்கனவே குடல் இறக்கத்துக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தழும்பிலேயே மீண்டும் குடல் இறக்கம் (Recurrent Hernia) ஏற்படுவதும் உண்டு.

*🍃Reflexology,Yoga & Naturopathy 🍃*

*🌱Alternative Therapist-Jai Satheesh 🌱*

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156*

https://chat.whatsapp.com/DIAIPkzfVoQIFN3GLdigcc?s=cl&p=a&ilr=4&amv=3

*தமிழ் வழியில் இயற்கை வாழ்வியல் முறையை கற்றுக்கொள்ள Telegram* https://t.me/livealaive

https://www.facebook.com/jaisatheesh3956

Follow the 🍃வாழ்வை 🌱வாழ்வோம் 🌿 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaHoEl5DJ6HAWKxtWh2o

நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் Gpay No: 8754792156
UPI ID. jaisatheesh3956-2@okicici அனுப்பவும்.

WhatsApp Group Invite

*பித்தப்பை கற்கள்  இயற்கை உணவு முறை* *பித்தப்பை கற்கள் என்றால் என்ன?*பித்தப்பையில் (Gallbladder) கொழுப்பு (cholesterol) ...
30/07/2026

*பித்தப்பை கற்கள் இயற்கை உணவு முறை*

*பித்தப்பை கற்கள் என்றால் என்ன?*

பித்தப்பையில் (Gallbladder) கொழுப்பு (cholesterol) அல்லது பித்த உப்புகள் சேர்ந்து கற்களாக மாறுவது தான் பித்தப்பை கற்கள்.

*பொதுவான அறிகுறிகள்*

வயிற்றின் வலது பக்கத்தில் வலி

உணவு சாப்பிட்டதும் உடல் நிறைவாக உணர்வு

வாந்தி / மயக்கம்

செரிமானக் கோளாறு

சிலருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கும்

இயற்கை வைத்தியம் (கற்கள் கரைய உதவும் முறைகள்)*

*எலுமிச்சை + ஆலிவ் எண்ணெய்*

காலையில் வெறும் வயிற்றில்

1 ஸ்பூன் Olive oil + 1 ஸ்பூன் Lemon juice
*பித்த ஓட்டத்தை அதிகரித்து கற்களை மெதுவாக கரைய உதவும்*

*ஆப்பிள் ஜூஸ்*

தினமும் 1–2 டம்ளர் Apple juice
*இதில் உள்ள malic acid கற்களை மெலிதாக்க உதவும்*

*புதினா கஷாயம்*

Mint leaves கொண்டு கஷாயம் செய்து குடிக்கவும்
*பித்த சுரப்பை சீராக்கும்*

*சீரகம் + வெந்தயம்*

இரவில் ஊறவைத்து காலை குடிக்கவும்
*செரிமானத்தை மேம்படுத்தி கற்கள் உருவாகாமல் தடுக்கும்*

*மஞ்சள்*

தினமும் சிறிதளவு Turmeric சேர்த்து உணவில் உட்கொள்ளவும்
அழற்சி குறைக்கும், பித்தப்பை ஆரோக்கியம் காக்கும்*

உணவு முறைகள்*

*சாப்பிட வேண்டியவை*

காய்கறிகள் (பசலை, முருங்கை, ப்ரோக்கோலி)

பழங்கள் (ஆப்பிள், பேரிக்காய்)

முழுதானியங்கள்

அதிக தண்ணீர் குடிக்கவும்

*தவிர்க்க வேண்டியவை*

அதிக எண்ணெய் உணவுகள்

தீப்பொரித்த உணவுகள்

அதிக கொழுப்பு (butter, cheese)

fast food, bakery items

*வாழ்க்கை முறை*

தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி

உடல் எடை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும்

திடீர் டயட் தவிர்க்கவும்

*முக்கிய ஆலோசனை*

கற்கள் பெரிய அளவில் இருந்தால் அல்லது கடுமையான வலி இருந்தால்
அது தொடர்பு கொள்ளவும்

*கற்களை முழுமையாக கரைக்க இயற்கை முறைகள் மட்டும் போதாது — மருத்துவர் பரிசோதனை அவசியம்*

ஆரம்ப நிலையில் இருந்தால் இந்த இயற்கை முறைகள் உதவும்

ஆனால் scan செய்து கற்களின் அளவு தெரிந்து கொள்ளுங்கள்

*🍃Reflexology,Yoga & Naturopathy 🍃*

*🌱Alternative Therapist-Jai Satheesh 🌱*

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156*

https://chat.whatsapp.com/DIAIPkzfVoQIFN3GLdigcc?s=cl&p=a&ilr=4&amv=3

*தமிழ் வழியில் இயற்கை வாழ்வியல் முறையை கற்றுக்கொள்ள Telegram* https://t.me/livealaive

https://www.facebook.com/jaisatheesh3956

Follow the 🍃வாழ்வை 🌱வாழ்வோம் 🌿 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaHoEl5DJ6HAWKxtWh2o

நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் Gpay No: 8754792156
UPI ID. jaisatheesh3956-2@okicici அனுப்பவும்.

WhatsApp Group Invite

30/07/2026

*மூச்சுத் திணறலை குணமாக்கும் வீட்டு வைத்தியம் மற்றும் வழிமுறைகள்:*

தூதுவளை: தூதுவளை இலைகளைப் பொடி செய்து அல்லது கஷாயமாகக் குடிப்பது ஆஸ்துமா மற்றும் மூச்சுத் திணறலைக் குணப்படுத்த உதவும்


இஞ்சி மற்றும் தேன்:

இஞ்சி சாற்றுடன் தேன் கலந்து குடிப்பது நுரையீரலில் உள்ள அடைப்புகளை நீக்கி சுவாசம் சீராக உதவுகிறது.

ஆவி பிடித்தல்:
சூடான நீரில் யூகலிப்டஸ் எண்ணெய் கலந்து ஆவி பிடிப்பது மூச்சுப்பாதையில் உள்ள சளியை நீக்கி சுவாசம் இலகுவாக வழிவகுக்கும்

யோகா மற்றும் தியானம்:
பிராணாயாமம் போன்ற சுவாசப் பயிற்சிகள் நுரையீரலை வலுப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கின்றன

உடல் பருமன் கட்டுப்பாடு: உடல் எடையைக் குறைப்பது இதயத்தின் மீதான அழுத்தத்தைக் குறைத்து மூச்சு வாங்குவதைக் கட்டுப்படுத்தும்.

தூங்கும் நிலை: தலைக்கு உயரமாக தலையணை வைத்துப் படுப்பது மூச்சு விடுவதை எளிதாக்கும்.

*🍃Reflexology,Yoga & Naturopathy 🍃*

*🌱Alternative Therapist-Jai Satheesh 🌱*

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156*

https://chat.whatsapp.com/D3AYmBJVmDxI7KiAjndy5U?s=cl&p=a&ilr=4&amv=3

*தமிழ் வழியில் இயற்கை வாழ்வியல் முறையை கற்றுக்கொள்ள Telegram* https://t.me/livealaive

https://www.facebook.com/jaisatheesh3956

Follow the 🍃வாழ்வை 🌱வாழ்வோம் 🌿 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaHoEl5DJ6HAWKxtWh2o

நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் Gpay No: 8754792156
UPI ID. jaisatheesh3956-2@okicici அனுப்பவும்.

29/07/2026

🥜 **வறுத்த வேர்க்கடலையை விட ஊறவைத்த வேர்க்கடலை சிறந்ததா? இதோ உண்மை!** 💧

வேர்க்கடலையை வறுத்துச் சாப்பிடுவதை விட இரவில் ஊறவைத்துச் சாப்பிடுவது உடலுக்கு அநேக நன்மைகளைத் தரும் என்பது பலரும் அறியாத உண்மை. இதன் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்! 👇

*🥜 ஊறவைத்த வேர்க்கடலை என்றால் என்ன?*
வேர்க்கடலையை இரவில் நீரில் ஊறவைக்கும் போது, அதில் உள்ள **பயட்டிக் அமிலம் (Phytic Acid)** நீங்குகிறது. இதனால் அதில் நிறைந்துள்ள சத்துக்களை நம் உடல் முழுமையாக உறிஞ்ச முடிவதோடு, செரிமானமும் எளிதாகிறது.

*🌾 இது எவ்வாறு உடலுக்குப் பயனளிக்கிறது?*
* **சத்துக்கள் உறிஞ்சப்படுதல்:** பயட்டிக் அமிலம் நீங்குவதால், வேர்க்கடலையில் உள்ள **இரும்புச்சத்து** மற்றும் **கால்சியம்** உடலால் எளிதில் கிரகிக்கப்படுகிறது.
* **செரிமானக் கோளாறுகள் இல்லை:** ஊறவைப்பதால் இது செரிமான மண்டலத்திற்குப் பாரமாக இருக்காது; எளிதில் செரிமானமாகும்.
* **புரதச்சத்து நிறைந்தது:** தசை வளர்ச்சிக்குத் தேவையான **புரதச்சத்து (Protein)** இதில் மிகுதியாக உள்ளதால், இது காலை வேளைக்கு ஏற்ற ஒரு சிறந்த காலை உணவாகும்.

*❤️ ஆரோக்கிய நன்மைகளும் உண்மைகளும்*
* **இதய ஆரோக்கியம்:** இதில் உள்ள நல்ல கொழுப்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
* **நாள் முழுவதும் சுறுசுறுப்பு:** காலையில் ஊறவைத்த வேர்க்கடலையை உட்கொள்வது நாள் முழுவதும் உடலுக்குச் சீரான ஆற்றலையும், சுறுசுறுப்பையும் வழங்குகிறது.
* **வைட்டமின் உயர்வு:** நீரில் ஊறுவதன் மூலம் அதில் உள்ள ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் உயிர்ப்புடன் கிடைக்கின்றன.

*💡 உட்கொள்ளும் முறையும் குறிப்புகளும்*
ஊறவைத்த வேர்க்கடலையை உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டியவை:
* **ஊறவைக்கும் நேரம்:** இரவே நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் உட்கொள்வது மிகவும் சிறந்தது. 🌙
* **அளவு:** தினமும் ஒரு கைப்பிடி அளவு ஊறவைத்த வேர்க்கடலை போதுமானது. ✊
* **சிறந்த காலை உணவு:** காலை உணவோடு இதைச் சேர்த்துக்கொள்வது தசை வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்தது. 🥣

💪
---
வேர்க்கடலையை வெறும் நொறுக்குத் தீனியாக வறுத்து உண்பதை விட, இரவில் ஊறவைத்து உண்பதே ஊட்டச்சத்துக்களை முழுமையாகப் பெறச் சிறந்த வழியாகும். தினசரி உணவில் ஊறவைத்த வேர்க்கடலையைச் சேர்த்து ஆரோக்கிய வாழ்வை வாழ்வோம்!

*🍃Reflexology,Yoga & Naturopathy 🍃*

*🌱Alternative Therapist-Jai Satheesh 🌱*

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156*

https://chat.whatsapp.com/DCIsYOinLsKCloFQrb1jJt?s=cl&p=a&ilr=4&amv=3

*தமிழ் வழியில் இயற்கை வாழ்வியல் முறையை கற்றுக்கொள்ள Telegram* https://t.me/livealaive

https://www.facebook.com/jaisatheesh3956

Follow the 🍃வாழ்வை 🌱வாழ்வோம் 🌿 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaHoEl5DJ6HAWKxtWh2o

நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் Gpay No: 8754792156
UPI ID. jaisatheesh3956-2@okicici அனுப்பவும்.

Address

Karungalpatti
629157

Website

Alerts

Be the first to know and let us send you an email when இயற்கையில் உள்ள அனைத்தும் அனைவருக்கும் சொந்தமடா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category