Myna Exports

Myna Exports Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Myna Exports, Bicycle shop, 1/820 Venkateshwara Nagar, 5Th Cross Street, Peruingudi, Chennai.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>பாலை நிலத்து மக்கள் வாழ்க்கை
10/05/2016

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பாலை நிலத்து மக்கள் வாழ்க்கை

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>நெய்தல் நிலத்து மக்கள் வாழ்க்கை
09/05/2016

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நெய்தல் நிலத்து மக்கள் வாழ்க்கை

>ஏரிகள் அல்லது ஆறுகளைச் சார்ந்திருந்தது மருத நிலம்.நில வளமும் நீர் வளமும் உள்ள மருத  நிலத்தில் மண் வளம் மிக்க வயல்களில் ...
08/05/2016

>

ஏரிகள் அல்லது ஆறுகளைச் சார்ந்திருந்தது மருத நிலம்.நில வளமும் நீர் வளமும் உள்ள மருத நிலத்தில் மண் வளம் மிக்க வயல்களில் நெல்லைப் பயிரிட்டார்கள்.எருதுகளையும்,எருமைகளையும் பூட்டிய ஏர்களினால் நிலைத்தை உழுது,பண்படுத்தி எருவிட்டு விதைவிதைத்து நீர்பாய்ச்சி நெல்லை விளைத்தார்கள்.கரும்பையும் பயிரிட்டார்கள்.காய்கறி முதலான உணவுப் பொருட்களையும் பயிரிட்டு .உணவுக்கு முட்டுப்படில்லாமல் வாழ்ந்த படியினால் மருத நிலத்து மக்கள் வாழ்க்கை மற்ற நிலத்து மக்கள் வாழ்க்கையை விட பல மடங்கு உயர்ந்திருந்தது .வாழ்க்கையில் அதிகம் கவலைப்படாமல் இருந்த இவர்களுக்கு ஓய்வும் கிடைத்தது.ஆகவே இவர்கள் நாகரிகமும் பண்பாடும் பெற்று வாழ வாய்ப்பிருந்தது.

உலகத்திலே எல்லாத் தேசங்களிலும் மக்கள் நாகரிகம் பெற்ற இடம் ஆற்றங்கரைகளிலும் ஏரிக்கரைகளிலுந்தான் என்று வரலாறு கூறுகிறது.இது உண்மையே. தமிழ் நாட்டிலும் மக்கள் நாகரிகம் பெற்று வளர்ந்த இடம் ஆற்றங்கரகளும்,ஏரிக்கரைகளுமே. ஆகவே மருத நிலத்திலேதான் தமிழருடைய நாகரிகமும் பண்பாடும் வளம்பெற்று வளர்ந்தன. கைத் தொழில்களும் கல்வியும் கலைகளும் வாணிகமும் செல்வமும் அரசியலும் அமைதியான வாழ்க்கையும் மருத நிலங்களிலே செம்மையாகச் செழித்து வளர்ந்தன.மருத நிலத்து மக்கள் கட்டடங்களையும் மாளிகைகளையும் அரண்மனைகளையும் அமைத்துக்கொண்டு நாகரிகமாகவும் நன்றாகவும் வாழ்ந்தார்கள்.

மயிலை.சீனி.வேங்கடசாமி

பதிவு : 04

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>முல்லை நிலத்து மக்கள் வாழ்க்கை >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>மலைகளின் அடிவாரத்தி...
07/05/2016

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
முல்லை நிலத்து மக்கள் வாழ்க்கை
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

மலைகளின் அடிவாரத்தில் உள்ளது முல்லை நிலம்.சிறு குன்றுகளும் காடுகளும் காட்டாறுகளும் இங்கே இருந்தன.முல்லை கொடிகளும் கொன்றை (சரக்கொன்றை) ,குருத்து முதலான மரங்களும் இங்கு உண்டு.கானக்கோழி,மயில்,முயல், மான் முதலானவை இங்கு இருந்தன.இங்கு வாழ்ந்த மக்கள் இடையர்,எயினர் (எயினர் - வேடர் ).இடையர் பசுக்களையும் ஆடுகளையும் எருமைகளையும் வளர்த்தார்கள்.அவைகளைக் காடுகளிலும் புற்றரைகளிலும் ஓட்டி மேய்த்தார்கள்.வரகு,கேழ்வரகு ஆகிய தானியங்களைப் பயிரிட்டார்கள்.அவரை,துவரை,போன்றவைகளையும்,பயிரிட்டார்கள்.குளங்களிலிருந்து நீர்ப் பாய்ச்சினார்கள்.இவை வானம் பார்த்த பயிர்கள்.மாழையை எதிர்ப்பார்த்தே பயிர் செய்தார்கள்.வரகு, கேழ்வரகு இவற்றை உணவாக உண்டார்கள் பால்,தயிர்,நெய்களையும் உணவாக உண்டார்கள்.

இவர்கள் தங்கள் வீடுகளைக் குடில்களாகக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.வரகுத்தாள் ,கேழ்வரகுத்தாள்களைக் கூரையாக வேய்ந்தார்கள்.இவர்களுடைய வீடுகள் ,குறிஞ்சி மக்களின் வீடுகளை விட உயரமாகவும் நன்றாகவும் இருந்தன.பால்.தயிர் மோர்,நெய்களை விற்றார்கள்.இவற்றைப் பெரும்பாலும் பண்டமற்றாகவே விற்றார்கள்.முல்லை நிலத்து மக்கள் வாழ்க்கை,குறிஞ்சி நிலத்து மக்கள் வாழ்கையை விடச் சற்று உயர்ந்திருந்தது.இவர்கள் அவர்களை விட நன்றாகவும் நாகரிகமாகவும் வாழ்ந்தார்கள்.

மயிலை.சீனி.வேங்கடசாமி

பதிவு : 03

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>குறிஞ்சி நில மக்கள் வாழ்க்கை >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>மலைகளும் குன்றுகளும் அவற்றைச் சார...
06/05/2016

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
குறிஞ்சி நில மக்கள் வாழ்க்கை
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மலைகளும் குன்றுகளும் அவற்றைச் சார்ந்த இடங்களும் குறிஞ்சி நிலம் என்று கூறினோம். இங்கு இருந்த ஊர்களுக்குக் குறிஞ்சி என்றும் சிறுகுடி என்றும் பெயர்.இங்கு வாழ்ந்த மக்கள் குறவர் என்றும் குன்றவர் என்றும் இரவுளர் என்றும் அழைக்கப்பட்டார்கள்.இறவுளர் என்பவர் இக்காலத்தில் இருளர் என்று கூறப்படுகின்றனர்.இங்குச் சுனை நீர் உண்டு.மலையருவிகளும் உண்டு.பொதுவாக அருவிகள் வேனில் காலத்தில் வறண்டுவிடும்.எக்காலமும் ஓடிக்கொண்டிருக்கிற அருவிகள் மிகச் சிலவே.மலைப் பாறைகளுக்கிடையே செடி கொடி மரங்கள் உண்டு.குறிஞ்சி செடிகளும் காந்தள் செடிகளும் குறிப்பிடத்தக்கவை.மூங்கிற் புதர்கள் உண்டு.வேங்கை,திமிசு,தேக்கு,சந்தனம்,அகில்,கடம்பு,கருங்காலி முதலான மரங்கள் வளர்ந்தன.பறவைகளில் மயிலும் கிளியும் குறிப்பிடத்தக்கவை.புலி,யானை,சிறுத்தைப்புலி,கரடி,காட்டுப்பன்றி,குரங்கு முதலான மிருகங்கள் இருந்தன.
மலைகளிலும்,மலச்சாரல்களிலும் ஐவன நெல்லையும்,.திணை என்னும் அரிசியையும் பயிர் செய்தார்கள்.மரம் செடி கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தி வேர்களைக் கிளறிக் கொத்தி நிலைத்தை பயன்படுத்தினார்கள்.பண்படுத்திய நிலத்தை ஏரினால் உழாமல் மண்வெட்டியால் கொத்திக் கிளறி ஐவன நெல்லையும் தினையையும் பயிர் செய்தார்கள்.இவை வானம் பார்த்த பயிர்கள்.பெரும்பாலும் மழையை எதிர்பார்த்துப் பயிரிடப்பட்டவை.
மலையுச்சியிலுள்ள பாறைகளில் மலைத்தேன் கிடைத்தது.வள்ளிக் கிழங்கு பயிராயிற்று பலாப் பழங்கள் கிடைத்தன.யானைகளையும் காட்டுப்பன்றிகளையும் வேட்டையாடினார்கள்.தேனை மூங்கிற் குழாய்களில் ஊற்றிப் பதப்படுத்தி ஒருவகை மதுவை உண்டாக்கினார்கள்.மிகத் தாழ்வான சிறிய குடில்களைக் கட்டி அதன் மேல் தினத்தாளையும் ஐவன நெல்லின் தாளையும் கூரையாக வேய்ந்த குடில்களில் வசித்தார்கள்.இவர்களுடைய வாழ்க்கை கடின வாழ்க்கையாக இருந்தது.இவர்களுடைய உணவு உற்பத்தி போதுமானவையன்று பற்றாக் குறையாகவே இருந்தது.மலைத்தேன்,யானைத் தந்தம் ,புலித்தோல்,அகில் கட்டை,சந்தனக் கட்டை ஆகியவற்றை விற்றார்கள்.இவர்களுடைய வாணிகம் பண்டமாற்றாக இருந்தது.இவர்களுடைய இயற்கைச் சூழ்நிலை நாகரிகம் பெறுவதற்கு ஏற்றதாக இல்லை.

மயிலை.சீனி.வேங்கடசாமி

பதிவு : 02

*******************பழங்காலத் தமிழர் வாணிகம்*******************----------------------------------------------------------...
05/05/2016

*******************பழங்காலத் தமிழர் வாணிகம்*******************
----------------------------------------------------------------------------------
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
-----------------------------------------------------------------------------------

சங்க கால மக்கள் வாழ்க்கை
@@@@@@@@@@@@@@
கி. பி 250க் முற்பட்ட காலம்.

சங்க கால மக்கள் வாணிகத்தைப் பற்றிப் பேசும்போது அக்காலத்து மக்களின் வாழ்க்கை நிலை எப்படி இருந்தது என்பதையும் அறியவேண்டும்.சங்க காலம் என்பது கடைச் சங்க காலம். அது கி. பி 250க் முற்பட்ட காலம். .இக்காலத் தமிழர் வாழ்க்கைக்கும் அக்காலத்துத் தமிழர் வாழ்க்கைக்கும் அதிக வேறுபாடு உண்டு.இப்போதுள்ள நாகரிகம் அக்காலத்தில் இல்லை.அக்காலத்தில் எல்லா நாடுகளிலும் மனித வாழ்க்கையும் நாகரிகமும்,மட்டமாகவும் தாழ்ந்த நிலையிலும் இருந்தன.வாழ்ந்த இடத்துக்கும் சூழ்நிலைகளும் ஒரே மாதிரி இல்லாமல் வெவ்வேறு வகையாக இருந்தபடியால் அவர்களுடைய வாழ்க்கை வெவ்வேறு விதமாகத் துன்பமாக அல்லது எளிதாக இருந்தது.

அந்தக் காலத்தில் மனிதர் எந்தெந்த இடங்களில் எவ்வெப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிவதற்குச் சங்க இலக்கியங்கள் மிகவும் பயன்படுகின்றன. .நிலத்தினுடைய இயற்கையமைப்புக்குத் தக்கபடி அக்காலத்து மக்கள் வாழ்க்கை ஐந்து விதமாக அமைந்திருந்தது.குறிஞ்சி நிலம்,முல்லை நிலம்,மருத நிலம்,நெய்தல் நிலம்,பாலை நிலம் என்னும் நிலைப் பிரிவுப்படி அவர்களுடைய வாழ்க்கையும் ஐந்து.வகையாக இருந்தது.மலையும் குன்றுகளும் உள்ள இடங்கள் குறிஞ்சி நிலம் என்று பெயர் பெற்றன.மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் தமிழ் நாட்டில் அமைந்துள்ளன.மலைகளின் மேலும் மலைச்சாரல்களில் மக்கள் வாழ்ந்து வந்தார்கள்.

மலைகளுக்குக் கீழே இருந்த காடுகளும்,காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலம் என்று பெயர் பெற்றன.இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை,மலைகளில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கையைவிட வேறு விதமாக இருந்தது.ஆறுகள் பாய்கிறதும் அல்லது ஏரி குளங்கள் உள்ளதுமான சமவெளிகள் மருதம் என்று பெயர் பெற்றன.
இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை ,மற்றவர்களுடைய வாழ்க்கையை விட மேலானதாக இருந்தது.கடற்கரையோரமாக இருந்த நிலங்கள் நெய்தல் நிலம் என்று பெயர் பெற்றன.சங்க காலத்தில் மிக நீண்ட கடற்கரை தமிழகத்துக்கு இருந்தது.அக்காலத்தில்,மேற்க்குகடர்கரையையடுத்திருந்த சேரநாடும் (இப்போதைய மலையாள நாடு) துளுநாடும் (இப்போதைய தென் கன்னட வாடா கன்னட மாவட்டங்கள்) தமிழ் நாடக இருந்தபடியால்,பலந்தமிழகத்துக்கு மிக நீண்ட கடற்கரை இருந்தது.கடற்கரையான நெய்தல் நிலத்தில் வசித்தவர் வாழ்க்கை துன்பகரமான வாழ்க்கை.அவர்கள் நாள்தோறும் கடலில் வெகுதூரம் சென்று மீன் பிடித்து வந்து வாழ்க்கையை நடத்தினார்கள் .

இந்த நால்வகையான இயற்கை நிலம் அல்லாத வறண்ட பிரதேசம் பாலை நிலம் என்று பெயர். இங்கு இயற்கையாக மக்கள் வாழவில்லை. யாரேனும் இங்கு வசித்தார்கள் என்றால் அவர்களுடைய வாழ்க்கை மிருக வாழ்க்கை போல இருந்தது.இவ்வாறு இயற்கையாக அமைந்த வெவ்வேறு சூழ்நிலைகளில் வசித்த அக்காலத்துத் தமிழ் மக்களுடைய வாழ்க்கை வெவ்வேறு வகையாக இருந்தது. அவர்களுடைய தொழிலும் உணவும் உடையும் பண்பாடும் வெவ்வேறு விதமாக இருந்தன.அவற்றைச் சுருக்கமாகக் கூறுவோம்.

மயிலை. சீனி . வேங்கடசாமி பதிவு : 01

Address

1/820 Venkateshwara Nagar, 5Th Cross Street, Peruingudi
Chennai
600096

Alerts

Be the first to know and let us send you an email when Myna Exports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Myna Exports:

Share

Category