Vazhuvoorar Academy Of Arts & Culture

Vazhuvoorar Academy Of Arts & Culture "Dance is a conversation between body and soul" Lets appreciate the most ancient VAZHUVOOR BAANI

What would Kannan do?Once in Vrindavan, a Gopi went to the pond to fetch water. Krishna accompanied her, singing and dan...
04/09/2026

What would Kannan do?

Once in Vrindavan, a Gopi went to the pond to fetch water. Krishna accompanied her, singing and dancing along the way. The Gopi walked happily, delighting in Kannan’s playful childhood antics.

Upon reaching the pond, she filled the pots and placed them on the bank. After lifting one pot onto her waist, she asked Kannan to help lift the second pot onto her head. Kannan refused, saying, "Uh-uh! I won't put it on your head," and ran off. Despite her calling out to him repeatedly, he did not return.

Eventually, with the help of another Gopi passing by, she managed to carry the second pot of water on her head and walked towards her home. As she neared her house, she looked around to see if anyone might help her unload the heavy burden from her head—and was astonished to find Krishna standing right there before her. "Wait! Wait! Let me take that load off for you," he said, running over to lift the pot down from her head.

With mock anger, the Gopi said, "Oh Kannan! Here you are, acting like such a good boy and helping me unload the burden. Yet, back there, you ran away even when I called out to you! Is there no limit to your mischief?"

Kannan replied, "Amma, I only know how to help unload burdens from others; I don't know how to place burdens on their heads!" The Gopi exclaimed, "Kannan, my darling! There are a thousand meanings hidden even in your mischief...!" She then performed a ritual to ward off the evil eye and showered him with affection.

Wishing everyone a very happy Gokulashtami and Krishna Jayanthi!

Hare Krishna!

Vazhuvoor Guru Saravanan

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

கண்ணன் என்ன செய்வான்?ஒருமுறை பிருந்தாவனத்தில் கோபிகை  ஒருத்தி தண்ணீர் எடுப்பதற்காக குளத்திற்கு  சென்றாள். கிருஷ்ணன் ஆடிப...
04/09/2026

கண்ணன் என்ன செய்வான்?

ஒருமுறை பிருந்தாவனத்தில் கோபிகை ஒருத்தி தண்ணீர் எடுப்பதற்காக குளத்திற்கு சென்றாள். கிருஷ்ணன் ஆடிப்பாடி கொண்டு அவளுடன் சென்றான். கோபிகையும் மிகவும் மகிழ்ச்சியோடு கண்ணனின் பால லீலைகளை ரசித்துக்கொண்டே சென்றாள்.

குளத்திற்குச் சென்றதும், தண்ணீர் கொண்டு வந்து கரையில் வைத்தாள். இடுப்பில் ஒரு குடத்தை எடுத்துக் கொண்டவள், இன்னொரு குடத்தை தூக்கி தன் தலையில் வைக்குமாறு கண்ணனை கேட்டுக் கொண்டாள். கண்ணன், “ஊகூம்! நான் உன் தலையில் ஏற்ற மாட்டேன் என்று கூறி ஓடிவிட்டான். எவ்வளவோ கூவி, கூவி அழைத்தும் கண்ணன் வரவில்லை. .

ஒருவாறு அந்தப் பக்கம் வந்த இன்னொரு கோபிக்கையின் உதவியால் தன் தலையில் இன்னொரு தண்ணீர் கூடத்தை சுமந்து கொண்டு தனது வீட்டை நோக்கி நடந்தாள் கோபிகை. தனது வீட்டை நெருங்கியதும், தனது தலைசுமையை இறக்குவதற்கு யாராவது வருவார்களா என்று தேடிய கோபிகைக்கு ஒரே ஆச்சரியம். கிருஷ்ணன் அங்கே அவள் எதிரில் வந்து நின்று, “இரு! இரு! நான் உன் சுமையை இறக்கி வைக்கிறேன்” என்று ஓடிவந்து அவளது தலையில் இருந்த குடத்தை இறக்கி வைத்தான்.

கோபிகை செல்ல கோபத்துடன், “ஏண்டா கண்ணா! இவ்வளவு நல்ல பிள்ளையாக இங்கு வந்து சுமையை இறக்குகிறாய். அங்கே கூவி அழைத்தும் ஓடி விட்டாயே! உனது குறும்புக்கு அளவே கிடையாதா” என்றாள்.

அதற்கு கண்ணன், “அம்மா எனக்கு மற்றவர்களின் சுமையை இறக்கி வைக்கத்தான் தெரியுமே தவிர அவர்களின் தலையில் சுமையை ஏற்றத் தெரியாதே!” என்றான். கோபிகை, “கண்ணா என் செல்லமே! உனது குறும்பிலும் கூட ஆயிரம் அர்த்தங்கள்……….!” என்று கூறி அவனுக்கு திருஷ்டி கழித்து கொஞ்சினாள்.

அனைவருக்கும் கோகுலாஷ்டமி கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!!!

ஹரே கிருஷ்ணா!!!

வழுவூர் குரு சரவணன்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

தென்னாடுடைய சிவனே போற்றி...! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி...! திருச்சிற்றம்பலம்
05/08/2026

தென்னாடுடைய சிவனே போற்றி...!

என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

திருச்சிற்றம்பலம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் வழுவூர் அருள்மிகு வீரட்டேஸ்வர...

கனடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2025-ஆம் ஆண்டிற்கான  ‘அ. முத்துலிங்கம் இயல் விருது’ ஓவியர் டிராட்ஸ்கி ...
31/07/2026

கனடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2025-ஆம் ஆண்டிற்கான ‘அ. முத்துலிங்கம் இயல் விருது’ ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

நேர்த்தியான கோட்டோவியர் என்பதோடு அனிமேஷன் எனப்படும் இயங்குபடக் கலை, கணினி வரைகலை ஆகியவற்றிலும் தொடர்ந்து இயங்கி வந்த அவரது ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் தமிழ்நாடு அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத் தலைவராக கடந்த திமுக அரசு அவரை நியமித்தது.

2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் செய்தித்துறை வெளியிட்ட இலக்கிய மலரிலும் டிராட்ஸ்கி மருது அவர்கள் பங்களித்திருந்தார்.

தமிழ் மன்னர்கள் உண்மையில் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை வெளிப்படுத்தும் ஆர்வத்துடனும், அதுவரை இருந்து வந்த தவறான மனச்சித்திரங்களைக் கலைத்துப் போடும் வகையிலும் அவர் கொண்டு வந்த வாளோர் ஆடும் அமலை போன்ற பங்களிப்புகளால் தமிழர் வரலாற்றுக்கும் அவர் பெரும் பங்காற்றியுள்ளார்.

தமிழ் மரபை உலகின் நவீனச் சிந்தனைப் போக்குகளோடு இணைக்கின்ற பாலமாக விளங்கி வரும் ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களின் வாழ்நாள் சாதனைகளுக்கான தக்க அங்கீகாரமாக இவ்விருது வழங்கப்பட்டிருப்பதை அறிந்து வழுவூரார் கலை பண்பாட்டு குழுமத்தின் சார்பாக மனமார்ந்த மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

(சமீபத்தில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் திரு ஆர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ், டாக்டர் சுந்தர் கணேசன், திரு டிராட்ஸ்கி மருது அவர்களுடன் வழுவூர் குரு சரவணன்)

This treasure trove as a book is offered free of shipping charges for just Rs.250/- for the next one month from 19.07.20...
18/07/2026

This treasure trove as a book is offered free of shipping charges for just Rs.250/- for the next one month from 19.07.2026 to 18.08.2026.

This offer is valid only when you purchase it thru Notion online store below.

Please avail this golden opportunity and remember to share this joyful information amongst your family and friends.

The teachings of Gurudev Sri Ramakrishna Paramahamsa transcend the constraints of time; even today, they serve as valuable lessons and enlightens us to attain life's highest ideals. Sri Ramakrishna conveyed his teachings through simple stories, making them easily understandable for everyone. It is a...

Please Share...
18/07/2026

Please Share...

My article titled "Guru and Sishya: The sacred bond then and now" published in digital magazine on dance, 'NARTHAKI' dat...
18/07/2026

My article titled "Guru and Sishya: The sacred bond then and now" published in digital magazine on dance, 'NARTHAKI' dated 16th July 2026. Happy reading!

I sincerely thank 'NARTHAKI' for the same...

Article - Guru and Sishya: The sacred bond then and now - Vazhuvoor Saravanan

Guru and Sishya: The Sacred Bond Then and Now(Penned By Vazhuvoor Guru Saravanan)A Modern DilemmaA boy known to me was d...
11/07/2026

Guru and Sishya: The Sacred Bond Then and Now
(Penned By Vazhuvoor Guru Saravanan)

A Modern Dilemma

A boy known to me was deeply inclined to learn the Veena. After consistent prayers, he found his Guru in Besant Nagar near Adyar, Chennai. Both considered themselves lucky—the Guru found a devoted disciple, and the sishya a knowledgeable teacher.

However, despite the boy's sincerity and perfect attendance, he soon experienced disheartening neglect. His Guru frequently took long breaks for personal commitments, leaving the student in tears.

On one occasion, the boy confirmed his class by phone a day before and again an hour in advance, only to travel to the teacher's house and be turned away at the door by the Guru’s husband, who stated she was suffering from a headache and resting.

The young boy was shattered—not by the tiring public commute, but by the callous treatment and lack of concern. Today, this mutual loss of respect and devotion between teacher and student has become all too common.

Teacher vs. Guru

A ‘Teacher’ imparts instructions to prepare students for a successful worldly life. A ‘Guru’, however, kindles a yearning for the ultimate truth and guides the deserving disciple toward spiritual liberation. Today when it has become scarce to find a devoted Teacher, a worshipful Guru is nowhere to be found.

The significance of this relationship is beautifully captured in Sage Vyasa's Guru Stotram:

akhaṇḍamaṇḍalākāraṁ vyāptaṁ yena carācaram।
tatpadaṁ darśitaṁ yena tasmai śrīgurave namaḥ॥

“Salutations are to that Guru who showed me the abode of the one who is to be known, whose form is the entire universe, and by whom all the movable and immovable are pervaded.”

And again:

Gururādiranādiśca Guruḥ paramadaivatam |
gurōḥ parataraṃ nāsti tasmai śrīguravē namaḥ ‖

“Salutations are to that Guru who is the beginning and the beginningless, who is the highest Deity and to whom there is none superior.”

While the disciple is devoted to the Guru, a true Guru is equally bound by the sacred tradition. In fact, true masters often yearn for devoted disciples just as much as sishyas seek them.

It is said that Sri Ramakrishna Paramahamsa cried profusely, praying to the Divine Mother to bring his disciples to him. Once Narendranath Dutta (later Swami Vivekananda) arrived, Ramakrishna could never bear to be separated from him.

The Golden Standard: Natyacharya Vazhuvoor Sri B. Ramaiah Pillai

An inspiring contrast to modern indifference is the story of Natyacharya Vazhuvoor Sri B. Ramaiah Pillai. His disciples, Vijaya (Rajan) and Hemalatha (Sharma), were entrusted to him after their previous Guru, Kattumannarkoil Sri Muthukumara Pillai, grew too old to teach.

Vijaya’s mother recalls Pillai's dedication: "He started coming home to teach. He said, 'since they have learnt under Muthukumara Pillai, the adavu-s are neat. We can conduct their arangetram in six months.' And he did what he claimed."

Remembering his teaching style, the disciples noted:

• Patience & Strictness: He never scolded or lost his temper, but he was strict and never allowed their attention to wander.

• Dedication: He would sometimes arrive as late as 8:30 PM, and though the girls were sleepy, his teaching remained stellar.

• Broadmindedness: He recognized the foundation laid by their previous Guru and adapted his instruction accordingly. He was never overly critical, focusing on artistic growth instead.

Lessons Through Magic

Anandhi (Kalki) and Radha, two other devoted disciples, also shared fond memories of their Guru Sri Ramaiah Pillai who had an intuitive understanding of children.

One day at Kalki Gardens in Kilpauk, Madras, the Master gathered the local children. Placing two tiny dolls on a blue dhurree at dusk, he said, "Watch the magic." As he sang rhythmically, the dolls danced and jumped up and down. Sitting three feet away, the children were amazed, completely unaware that he was manipulating the dolls with a black string. "Even now, when I think of it, I laugh," Anandhi recalls.

This deep, intuitive, and magical connection between a worshipful Guru and a devoted Sishya is the very essence of learning classical arts.

குருவும் சிஷ்யனும்: ஒரு புனிதமான பிணைப்பு - அப்போதும் இப்போதும்(எழுதியவர்: வழுவூர் குரு சரவணன்)**நவீன காலத்துச் சிக்கல்*...
11/07/2026

குருவும் சிஷ்யனும்: ஒரு புனிதமான பிணைப்பு - அப்போதும் இப்போதும்
(எழுதியவர்: வழுவூர் குரு சரவணன்)

**நவீன காலத்துச் சிக்கல்**

எனக்குத் தெரிந்த ஒரு சிறுவன் வீணை வாசிக்கக் கற்றுக்கொள்ள மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான். தொடர்ச்சியான பிரார்த்தனைகளுக்குப் பிறகு, சென்னை அடையாறு பகுதியில் அவனுக்கு ஒரு குரு கிடைத்தார். அர்ப்பணிப்புள்ள ஒரு சீடர் கிடைத்ததில் குருவும், சிறந்த அறிவாற்றல் கொண்ட ஆசிரியர் கிடைத்ததில் அந்தச் சீடரும் தங்களை அதிர்ஷ்டசாலியாகக் கருதினர்.

இருப்பினும், அந்தச் சிறுவனின் நேர்மை மற்றும் வகுப்பிற்குத் தவறாமல் வரும் ஒழுக்கம் இருந்தபோதிலும், அவன் விரைவில் மனச்சோர்வை ஏற்படுத்தும் வகையிலான புறக்கணிப்பைச் சந்திக்க நேர்ந்தது. அவனது குரு அடிக்கடி தனிப்பட்ட காரணங்களுக்காக நீண்ட இடைவெளிகளை எடுத்துக்கொண்டார்; இதனால் அந்தச் மாணவன் கண்ணீர் சிந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டான்.

ஒருமுறை, வகுப்பிற்குச் செல்வதற்கு முந்தைய நாளும், பின்னர் ஒரு மணி நேரத்திற்கு முன்பும் தொலைபேசி வாயிலாக வகுப்பை உறுதிப்படுத்திக்கொண்டு அவன் ஆசிரியரின் வீட்டிற்குச் சென்றான். ஆனால், அங்கு சென்றபோது ஆசிரியரின் கணவர் அவனை வாசலிலேயே திருப்பி அனுப்பினார்; ஆசிரியர் தலைவலியால் அவதிப்படுவதாகவும் ஓய்வெடுப்பதாகவும் அவர் கூறினார்.

அந்தச் சிறுவன் மனமுடைந்து போனான்—பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்த களைப்பினால் அல்ல, மாறாக அந்த அலட்சியமான நடத்தையாலும் அக்கறையின்மையாலும் அவன் மனம் நொந்துபோனான். இன்று, ஆசிரியர் மற்றும் மாணவர் இடையே இருக்க வேண்டிய பரஸ்பர மரியாதையும் பக்தியும் குறைந்துபோன நிலை மிகவும் சாதாரணமாகிவிட்டது.

**ஆசிரியர் மற்றும் குரு - ஒரு வேறுபாடு**

ஒரு 'ஆசிரியர்' (Teacher) மாணவர்களை வெற்றிகரமான உலகியல் வாழ்க்கைக்குத் தயார்படுத்தும் வகையில் அறிவுரைகளை வழங்குகிறார். ஆனால், ஒரு 'குரு' (Guru) உன்னதமான உண்மையை அறியும் தாகத்தைத் தூண்டி, தகுதியுள்ள சீடரை ஆன்மீக விடுதலைப் பாதையில் வழிநடத்துகிறார். இன்று அர்ப்பணிப்புள்ள ஒரு ஆசிரியரைக் காண்பதே அரிதாகிவிட்ட நிலையில், வணக்கத்திற்குரிய ஒரு குருவை எங்கும் காண முடிவதில்லை.

இந்த உறவின் முக்கியத்துவத்தை வியாச முனிவரின் 'குரு ஸ்தோத்திரம்' அழகாக எடுத்துரைக்கிறது:

அகண்டமண்டலாகாரம் வ்யாப்தம் யேன சராசரம் |
தத்பதம் தர்சிதம் யேன தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ ||

"முழுப் பிரபஞ்சத்தையும் தன் வடிவமாகக் கொண்டவரும், அசையும் மற்றும் அசையாத அனைத்துப் பொருட்களிலும் நிறைந்திருப்பவருமான அந்தப் பரம்பொருளின் இருப்பிடத்தை எனக்குக் காட்டிய குருவிற்கு நமஸ்காரம்."

மேலும்:

குருராதிரனாதிஸ்ச குரு: பரமதைவதம் |
குரோ: பரதரம் நாஸ்தி தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ ||

"தொடக்கமாகவும் தொடக்கமற்றவராகவும், மிக உயர்ந்த தெய்வமாகவும் திகழும், தனக்கு மேலாக வேறு யாரும் இல்லாத அந்த குருவிற்கு நமஸ்காரம்."

சீடர் குருவின் மீது பக்தி கொண்டிருப்பது போலவே, ஒரு உண்மையான குருவும் புனிதமான பாரம்பரியத்தின் நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டவராகவே திகழ்கிறார். சொல்லப்போனால், சீடர்கள் குருவைத் தேடி வருவது போலவே, உண்மையான குருக்களும் தங்களுக்கு ஏற்ற அர்ப்பணிப்புள்ள சீடர்கள் கிடைக்க வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறார்கள்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், தனது சீடர்களைத் தன்னிடம் வந்து சேரும்படி அன்னை காளியியிடம் வேண்டிப் பலமுறை கண்ணீர் மல்கப் பிரார்த்தித்ததாகக் கூறப்படுகிறது. நரேந்திரநாத் தத்தா (பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர்) வந்தடைந்த பிறகு, அவரிலிருந்து பிரிந்திருப்பதை ராமகிருஷ்ணரால் ஒருபோதும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

ஒரு சிறந்த முன்னுதாரணம்: நாட்டியாச்சாரியார் வழுவூர் திரு பி. இராமையா பிள்ளை அவர்கள்.

இக்காலகட்டத்தின் அக்கறையற்ற போக்குக்கு நேர்மாறான, ஊக்கமளிக்கும் ஒரு உதாரணமாக நாட்டியாச்சாரியார் வழுவூர் திரு பி. ராமையா பிள்ளையின் கதையைச் சொல்லலாம்.

பழம்பெரும் நாட்டிய குருவான காட்டுமன்னார்கோவில் திரு முத்துக்குமார பிள்ளை வயது முதிர்வு காரணமாகக் கற்பிக்கும் நிலையில் இல்லாதபோது, ​​விஜயா (ராஜன்) மற்றும் ஹேமலதா (சர்மா) ஆகிய சீடர்கள் வழுவூர் திரு பி. ராமையா பிள்ளையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ராமையா பிள்ளையின் அர்ப்பணிப்பு உணர்வை விஜயாவின் தாயார் இவ்வாறு நினைவு கூர்கிறார்: "அவர் வீட்டிற்கே வந்து கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். 'முத்துக்குமார பிள்ளையிடம் அவர்கள் ஏற்கனவே பயின்றிருப்பதால், அவர்களின் அடவுகள் (நடன அசைவுகள்) நேர்த்தியாக உள்ளன. ஆறு மாதங்களுக்குள் அவர்களின் அரங்கேற்றத்தை நடத்திவிடலாம்' என்று அவர் கூறினார். சொன்னபடியே அதைச் செய்து முடித்தார்."

அவரது கற்பித்தல் முறையை நினைவுகூர்ந்த சீடர்கள் பின்வருமாறு குறிப்பிட்டனர்:

• பொறுமை மற்றும் கண்டிப்பு: அவர் ஒருபோதும் திட்டுவதோ அல்லது கோபப்படுவதோ இல்லை; அதே சமயம் அவர் கண்டிப்புடன் இருந்தார், மேலும் அவர்கள் கவனச்சிதறல் அடைய ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

• அர்ப்பணிப்பு: சில சமயங்களில் அவர் இரவு 8:30 மணிக்குக்கூட வருவார்; சிறுமிகளுக்குத் தூக்கம் வந்தாலும், அவரது கற்பித்தல் மிகச் சிறப்பாகவே இருக்கும்.

• பரந்த மனப்பான்மை: முந்தைய குரு அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை அவர் அங்கீகரித்தார், அதற்கேற்பத் தனது கற்பித்தல் முறையை அமைத்துக்கொண்டார். அவர் ஒருபோதும் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டவில்லை; மாறாக, கலைசார்ந்த வளர்ச்சியிலேயே கவனம் செலுத்தினார்.

மாயாஜாலம் மூலம் பாடங்கள்

ஆனந்தி (கல்கி) மற்றும் ராதா ஆகிய மேலும் இரு அர்ப்பணிப்புள்ள சீடர்களும், குழந்தைகளின் மனதை இயல்பாகவே புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்ட தங்கள் குரு ஸ்ரீ ராமையா பிள்ளை குறித்த இனிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

ஒரு நாள், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்கி கார்டனில், எங்கள் குரு அப்பகுதி குழந்தைகளை ஒன்று திரட்டினார். அந்தி வேளையில் நீல நிற விரிப்பின் மீது இரண்டு சிறிய பொம்மைகளை வைத்துவிட்டு, "இந்த மாயாஜாலத்தைப் பாருங்கள்" என்று கூறினார். அவர் தாளகதியில் பாட, அந்தப் பொம்மைகள் நடனமாடியபடியே மேலே எழும்பித் துள்ளிக் குதித்தன. மூன்று அடி தூரத்தில் அமர்ந்திருந்த குழந்தைகள் வியப்பில் ஆழ்ந்தனர்; ஒரு கருப்பு நூலைக் கொண்டு அவர் அந்தப் பொம்மைகளை இயக்குகிறார் என்பது அவர்களுக்குத் துளியும் தெரியவில்லை. "இப்போதும் அதைப் பற்றி நினைக்கும்போது எனக்குச் சிரிப்பு வருகிறது," என்று ஆனந்தி நினைவுகூர்கிறார்.

வழிபாட்டிற்குரிய குருவுக்கும் பக்திமிக்க சீடருக்கும் இடையிலான இந்த ஆழமான, உள்ளுணர்வு சார்ந்த, பாசப்பிணைப்பே செவ்வியல் கலைகளைக் கற்றுக்கொள்வதன் சாராம்சமாகும்.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சென்னை, தரமணியில் அமைந்துள்ள ஒரு தமிழ் நூலகம் ஆகும். இந்நூலகம் 1994 இல் நிறுவப்பட்டு, 199...
01/07/2026

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சென்னை, தரமணியில் அமைந்துள்ள ஒரு தமிழ் நூலகம் ஆகும்.

இந்நூலகம் 1994 இல் நிறுவப்பட்டு, 1996 இல் ஆராய்ச்சியாளர்களுக்கு திறக்கப்பட்டது.

இங்கு 120,000 மேற்பட்ட நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், துண்டறிக்கைகள், விளம்பரங்கள் உண்டு.

இந்த நூலகம் சிக்காகோ பல்கலைக்கழக ஆதரவோடு செயல்பட்டு வருகிறது .

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் (RMRL), ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன், நூலக அறக்கட்டளையின் அறங்காவலராகவும், சிந்து ஆராய்ச்சி மையத்தின் கௌரவ ஆலோசகராகவும் பணியாற்றுகிறார் . புகழ்பெற்ற கலைஞரான ட்ரொட்ஸ்கி மருது, நூலகத்தின் கலை மற்றும் வெளியீட்டு முயற்சிகளுக்கு ஒத்துழைக்கும் கலைஞர்/ஓவியராகவும் , தீவிர ஆலோசகராகவும் செயல்படுகிறார். இந்த ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக டாக்டர் சுந்தர் கணேசன் அவர்கள் பணியாற்றி வருகிறார்.

தொன்மை வாய்ந்த நமது பாரம்பரிய கலைகளின் வரலாறு குறித்த எனது ஆராய்ச்சி சம்பந்தமாக நேற்றைய தினம் (30/06/2026) இவர்களை சந்தித்து நீண்ட நேரம் உரையாட கூடிய சந்தர்ப்பம் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன் .

என் வாழ்நாளில் இது முக்கியமான மறக்க முடியாத நாள் மட்டுமல்ல தனிப்பட்ட முறையில் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்த நாளும் கூட. அறிவார்ந்த சமூகத்தில் கலந்து பணியாற்றுவதை பெரும் பேறாக கருதுகிறேன்.

தமிழ் மொழி சம்பந்தமான ஆவணங்கள், புத்தகங்கள், ஆடியோ டேப்புகள், கிராமபோன் ரெக்கார்டுகள் உள்ளிட்ட பழமையான எத்தகைய பொக்கிஷங்கள் நம்மிடம் இருந்தாலும் இவர்களுக்கு தந்து உதவலாம்.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் கட்டிட பணி நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ளவர்கள், தமிழ் மொழி பற்று கொண்டவர்கள், விலைமதிப்பற்ற மொழி ஆவணங்களை அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து, எடுத்துச் செல்ல விரும்புவர்கள் தங்களாலலான நன்கொடையை மனமுவந்து வழங்கலாம்.

இந்த ஆராய்ச்சி நூலகம் தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம் பிள்ளைகளோடு வாழ்க்கையில் ஒரு முறையேனும் அவசியம் காண வேண்டிய மதிப்புமிக்க இடம்.

இவர்களின் வலைத்தள முகவரி http://www.rmrl.in

புகைப்படத்தில் (இடமிருந்து வலம்) நான், திரு பாலகிருஷ்ணன், திரு ட்ராட்ஸ்க்கி மருது, டாக்டர் சுந்தர் கணேசன்

Address

Chennai
600115

Telephone

+919840992375

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vazhuvoorar Academy Of Arts & Culture posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vazhuvoorar Academy Of Arts & Culture:

Shortcuts

Share

Category