மறவர் - முக்குலத்தோர்

மறவர் - முக்குலத்தோர் MARAVAR They ruled the vast land mass of Tamilnadu along with the Kallars. Both these tribes seems to have common origin. Prior to their annexation.

Maravar (Tamil: மறவர் or Maravan, Marava) are a Tamil community of the state of Tamil Nadu, southern India, and are one of the three branches of the Mukkulathor confederacy. Maravars are found predominantly in the Southern districts of Tamilnadu viz., Madurai, Theni, Sivagangai, Ramanathapuram, Dindigul, Virudhunagar, Thirunelveli, Thoothukudi and Kanyakumari districts of Tamil Nadu. The Southern

martial arts of Kalarippayattu, Silambam, Varma Kalai have been practiced primarily by Kallars, Maravars and Nairs of erstwhile Travancore areas.[1]In British times, the Ramnad and Sivaganga estates were administered by Maravars. Etymology

The term Maravar has diverse proposed etymologies;[2] it may come simply from a Tamil word maravar (warrior),[3] or a term meaning "bravery/ruthlessness".[4]
More complex etymological legends include descent from Indra through a mortal woman, with the child hidden in a maravu idam (secret place). Alternately, legends derive it from marani (sin), for the Maravar's sin of killing without pity.[3]


History

They are one of the oldest social groups to be mentioned by the Sangam Tamil literature.[citation needed] The writers of the Sangam Age place them in rural settlements withdrawn from cities. The Kingdom of Ramnad was a Maravar kingdom and was ruled by the Setupati Kings. Ramanathapuram , Sivagangai and Thirunelveli are Maravars homeland and the entire Southern district is Maravar stronghold from ancient times.[5]
Large number of Maravars served in the armies of many princely states of Kerala. But during the 18th and 19th centuries, most of them were assimilated in to the Tamil Padam Nair subcaste of the Nair community. The Maravar regiment of the Travancore army was known as "Maravar Padai", which supplemented Nair Pattalam, the larger indigenous military unit.[16] Tamil Padam Nair is recognized as a part of the Malayala Kshatriya social grouping. The Ramnad Zamindars are accorded the title Sethupathi (protector of the Sethu bridge) even to this day. The Maravar have close relation with Kalabhars even though they Maravars are a non-aryan, non-Kalabhar group. They were ancient rulers of Pandya kingdom of coastal land and inland from the First Sangam Tamil age. Their leaders were given the title "Meenavan" and "Pandyan" respectively. Edgar Thurston (1855–1935) a British museologist and ethnographer identified the use of the boomerang by Kallars and Maravars of South India.[5]
Most of the Maravars were very brave warriors of Chola & Pandyan Dynasties. The Maravars are the 'martial class' of ancient Tamilakkam.
[edit]Culture

The famed bull-baiting sport "Jallikattu" of Tamilnadu is practised by Maravars. The general title of the Maravans is Thevan, but some style themselves Thalaivan (chief), Servaikkaran (captain), Karaiyalan (ruler of the coast), or Rayar-vamsam (Raja's clan).
[edit]Sub-divisions

There are 2 major subdivisions among the Maravar community. One is Appa Nattu Kondyankottai Maravar and another one is Chembiya Nattu Maravar. The Kondyan Kottai Maravars are related to the Kongu Vellalars and are still maintaining Killai(branches) as their sub sects like them. The Killai is inherited from mother. So a boy or girl will not marry in their same Killai. It is assumed that they are brother & sister. Such a practice is no longer prevailing amongst other maravars. The married women of kondyankottai maravers wear "Thali" (Thirumangalyam) in the shape of Shiva lingam. So it is called "Linga Thali". Most of the Tamil castes wear the same type of "Linga Thali".

26/11/2025

கூழாங்கற்களுக்கும் குளத்திற்கும் இதில் சம்மந்தமே இல்லை.

சலனம் ஏற்படுத்துவது எல்லாம் கற்களை எறிபவனின் விரல்களே..

26/10/2025

ஒரு அரசர் தன் மகனுக்கு போர் பயிற்சி கொடுப்பதற்காக ஒரு பயிற்சியாளரிடம் சேர்ப்பிக்கிறார். ஆறு மாதங்கள் கழித்து வருமாறு பயிற்சியாளர் சொல்கிறார்.

ஆறு மாதங்கள் கழித்து ஞாபகமாக அரசரும் பயிற்சி பாசறைக்கு செல்கிறார்.

அங்கு அவரது மகன் மிக ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கிறான். அவனது தோள்கள் திணவெடுத்து இருக்கின்றன.

அங்கிருக்கும் தூண்கள், பலகைகள் என்று அனைத்தையும் அவன் கைகள் பதம் பார்த்திருந்தன. அவனது உடலெங்கும் தழும்புகளால் நிறைந்திருந்தன. மிகுந்த திருப்தியுற்ற அரசர் பயிற்சியாளரிடம் சென்று நன்றி கூறி தனது மகனை அழைத்து செல்லலாமா என்று கேட்டார்.

அவன் இன்னும் தயாராகவில்லை இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார். அரசரும் குழப்பத்துடன் சரி என்று சொல்லி சென்றுவிட்டார்.

அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் சென்றார். அப்போது அவரது மகன், மாமிச மலை போல் இருந்த, அந்த பயிற்சி பாசறையிலேயே ‘மிகச்சிறந்த’ வீரனுடன் மோதிக்கொண்டிருந்தான்.

மாமிச மலை’ தான் வெல்வான் என்றிருந்த கணத்தில், சட்டென்று அவனை புரட்டிப் போட்டு வீழ்த்தி, சீற்றத்துடன் கர்ஜனை செய்தான் மகன். முகமெல்லாம் பூரிப்புடன் பயிற்சியாளரை பார்த்து, “இப்போது அவனை அழைத்து செல்லலாமா” என்றார்.

இல்லை அவன் இன்னும் தயாராகவில்லை, இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார். தயக்கத்துடன் விடைபெற்ற அரசர் குழப்பத்துடன் நாடு சேர்ந்தார்.

அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பயிற்சி பாசறைக்கு வந்தார். அப்போது அவரது மகன் சண்டை நடக்கும் இடத்தில இருந்து விலகி நண்பர்களுடன் மழையை ரசித்துக்கொண்டிருந்தான்.

அரசர் பயிற்சியாளரை சந்தித்த முதல் நிமிடத்திலேயே “இப்போது அவன் தயாராய் இருக்கிறான், நீங்கள் அழைத்து செல்லலாம்” என்றார்.

அவன் ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதெல்லாம் அவன் தயாரில்லை என்று சொன்ன நீங்கள், அவன் அமைதியாய் அமர்ந்திருக்கும் போது மட்டும் அழைத்து செல்ல சொல்கிறீர்களே ஏன்” என்று என்றார்.

அரைகுறையின் உச்சம் தான் ஆக்ரோஷம். வீரத்தின் உச்சம் என்றும் அமைதி தான்” என்றார் பயிற்சியாளர்.

புரியவில்லை” என்றார் அரசர்.

எப்பொழுது ஒருவனுக்கு திறமை குறைவாக இருக்கிறதோ, எப்பொழுது ஒருவனுக்கு தன் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறதோ அப்பொழுது தான் அவன் ஆக்ரோஷமாக இருப்பான். எப்பொழுது ஒருவனுக்கு மற்றவர் மேல் அன்பு வருகிறதோ, எப்பொழுது ஒருவன் முழு திறமையையும் அடைகிறானோ அப்பொழுது அவன் அமைதியில் ஐக்கியமாவான்.

அது தான் ஒரு தலைவனுக்குரிய தகுதி. உங்கள் மகன் நாடாளும் தகுதி பெற்று விட்டான் அவனை அழைத்து செல்லுங்கள்” என்றார்.........

02/09/2025

🌹

அருமையான கருத்து.

படிக்கத் தகுந்தது...

நான் இன்று காலை jogging ( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன்.

அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.

அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது.

நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன்.

சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.

சில நிமிடங்களுக்கு பிறகு ,

எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.

எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன்.

இறுதியாக, சாதித்து விட்டேன்!

அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன்.

எனக்குள் " அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன்.

ஆனால் அந்த நபருக்கு ,

நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை.

அவரைக் கடந்த பிறகு,
நான் அவரைக் கடப்பதிலே என்னுடைய கவனம் சென்றதால் உணர்ந்து கொண்டவை.....

1. என்னுடைய இல்லத்திற்கான வளைவில் நான் திரும்பவில்லை.

2.என்னுடைய உள் அமைதிக்கான கவனத்தை நான் இழந்து விட்டேன்.

3.என்னைச் சுற்றி இருக்கும் இயற்கை அழகை ரசிக்க மறந்துவிட்டேன்.

4.தியானத்தை தேடிக் கொண்டிருந்த என் ஆன்மாவை இழந்து விட்டேன்.

5.தேவையற்ற அவசரத்தில், பக்க வாட்டில் இருந்த நடைப் பாதையில் 2,3 முறை கால் இடற நேர்ந்தது. ஏன் கால்கள் கூட உடைந்திருக்கும்.

அப்பொழுது தான் எனக்கு ஞானோதயம் வந்தது.
நம் வாழ்க்கையிலும் இதே போலத் தானே?

நம் உடன் பணிபுரிபவர்கள், அருகில் வசிப்பவர்கள், நண்பர்கள், குடும்பத்தாருடன் போட்டியிட்டு அவர்களை விட முன்னேற வேண்டும், அவர்களை விட வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என பேசி நம்முடைய ஆனந்தத்தை நம்மாலேயே இழந்து கொண்டிருக்கிறோம் என்று.

நம்முடைய நேரத்தையும், ஆற்றலையும் இவ்வாறு ஓடுவதிலேயே தொலைத்து நாம் சேர வேண்டிய உண்மையான இலக்கிற்கான பாதையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஆரோக்கியமற்ற போட்டியானது ,
ஒரு முடிவில்லாமல் சுழலும் சக்கரம் போல தொடர்ந்து தொல்லை தரும்.

எப்பொழுதும் உங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு வகையில் யாராவது ஒருவர் முன்னுக்கு சென்று கொண்டிருப்பார்கள்.

உங்களை விட நல்ல வேலை.
நல்ல கார்.
வங்கியில் நிறைய பணம்.
நல்ல படிப்பு.
அழகிய மனைவி.
அழகான கணவன்.
நல்ல குழந்தைகள்.
நல்ல சுற்றுப்புற சூழ்நிலை.
நல்ல நிலை..........

ஆனால் நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால்,

நீங்கள் யாருடனும் போட்டி போடாத பொழுது, நீங்கள் நீங்களாகவே இருக்கும் பொழுது தான் நீங்கள் மிகச் சிறந்தவர் ஆகின்றீர்கள்.

சிலர் தங்கள் கவனத்தை,

அடுத்தவர்கள் எப்படி இருக்கின்றார்கள்,? எங்கே செல்கின்றார்கள்,? என்ன அணிகிறார்கள்,? என்ன வாகனம் ஓட்டுகிறார்கள்,? என்ன பேசுகிறார்கள் என்பதிலேயே செலுத்துவதால் பாதுகாப்பின்மை உணருகின்றார்கள்.

உங்களுடைய உயரம், எடை, தோற்றத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் அதை உள்ளது உள்ள படியே ஏற்று நீங்கள் ஆசிர்வாதம் பெற்றவர் என்பதை உணருங்கள்.

கவனத்துடனும், விழிப்புணர்வுடன் ஆரோக்கியமான ஒரு வாழ்வை வாழுங்கள்.

நாம் யாருடனும் போட்டி அல்ல. அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.

*ஒப்பீடு செய்தலும், போட்டி மனப்பான்மை யும் நம் மன மகிழ்ச்சியை திருடுபவை. அவை உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் கொல்ல கூடியது.*

உங்களுடனே நீங்கள் போட்டியிட்டு அமைதியாக, ஆனந்தமாக, ஸ்திரமாக வாழுங்கள்.

🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹

30/08/2025

முயல், ஆமை கதையின் லேட்டஸ்ட் வெர்ஷன்.!

முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் வைக்கின்றன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் தூங்கிவிட, ஆமை மெதுவாகச் சென்றாலும் தூங்கும் முயலைத் தாண்டிச் சென்று பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறது.

நீதி: தலைக்கனம் கூடாது. வேகத்தைவிட, நிதானம் முக்கியம் ஜெயிக்க!

வெயிட்... இனிதான் கதையே ஆரம்பம்!

தோல்வியை நினைத்து மனவேதனை அடைந்த முயல், ‘நாம ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்ததாலதான் தோத்துட்டோம்’ என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் ஆமையைப் பந்தயத்திற்கு அழைக்கிறது. ஆமையும் ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது. முயல், இடையில் எங்கேயும் தூங்காமல் ஓடிச் சென்று, ஜெயிக்கிறது.

நீதி2: நிதானம் முக்கியம் தான், ஆனால் வேகம் அதை விட சிறப்பானது!

கதை முடிந்துவிட்டது என்று நினைத்தால்... அதுதான் இல்லை!
காலங்காலமாக ஜெயித்து வந்த ஆமையால் இந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இம்முறை அது முயலை பந்தயத்துக்கு அழைக்கிறது. இங்குதான் ஒரு ட்விஸ்ட்! பந்தயம் வழக்கமான பாதையில் இல்லை என்று ஆமை சொல்ல, முயலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது (!).

ஒன்... டூ... த்ரீ...

முயல் இடையில் எங்கேயும் இளைப்பாறாமல் ஓட, ஆமை மெதுவாகச் சென்றது. முயல் ஒரு இடத்தில் சடன் பிரேக் போட்டாற்போல நிற்கிறது. பார்த்தால் அங்கே ஒரு ஆறு!
அதைக் கடந்தால் தான் பந்தய இலக்கை அடைய முடியும். ஆற அமர வந்து சேர்ந்த ஆமை அசால்ட்டாக ஆற்றை நீந்தி கோட்டைத் தொட்டு பந்தயத்தில் ஜெயிக்கிறது!

நீதி3: நாம் போட்டியிடும் போது எதிரியின் பலம் அறிந்து, ஆடுகளத்தை நம் பலத்துக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இன்னும் கதை முடியவில்லை மக்களே.!

ஒரு வழியாக ஆமையும் முயலும் நண்பர்கள் ஆகி, இருவரும் சேர்ந்து பேசி, ஒரு பந்தயம் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆமை டிவிஸ்ட் வைத்த அதே பாதையில்தான் இம்முறையும் பந்தயம். முயல் வேகமாக ஓட, ஆமை மெதுவாக நகர்கிறது... ஆற்றின் கரை வரை. அதற்குப் பின்..?

ஆமை ஆற்றில் நீந்துகிறது. அப்படியென்றால் முயல்? ஆமையின் முதுகில். கரை சேர்ந்ததும், மீதம் உள்ள தூரத்தை, ஆமையை தன் முதுகில் வைத்தவாறு முயல் ஓடிக் கடக்கிறது. இருவரும் ஒரே நேரத்தில் பந்தயக் கோட்டை அடைகிறார்கள்; இருவரும் வெல்கிறார்கள்!

நீதி4: டீம் வொர்க் வின்ஸ்!

டீம்_வொர்க்

‘‘கணிதத்தில் 1+1 = 2. ஆனால், வாழ்வில் 1+1 = 3. அதாவது, இருவரின் பலம் சேரும்போது, அது ஒரு புது பலத்தை உருவாக்கும். அதனால்தான் நிறுவனங்களில் பணியாட்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களின் டீம் வொர்க் திறனை முக்கியமாகச் சோதிக்கிறார்கள்.அலுவலக வேலைகளுக்கு மட்டும் இல்லை, வீடுகளிலும் டீம் லிவ்ங் இருந்தால்தான், ஒரு குடும்பம் சிறப்பாகச் செயல்படும். எல்லோரின் பங்களிப்பும் தேவை குடும்பத்தில். எனவே, டீம் வொர்க் வளர்ச்சிக்கு மட்டும் இல்ல, வாழ்வதற்கும் மிக முக்கியம்.

இந்த லேட்டஸ்ட் முயல், ஆமை கதையில் வரும் எல்லா கருத்துக்களுமே ஜெயிக்க முக்கியமானவை. நிதானம் முக்கியம், வேகம் முக்கியம், புதுப்புது வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம், இந்த கதை இறுதியாக உணர்த்தும் ‘யூ வின், ஐ வின்!’ அப்ரோச் முக்கியம். மொத்தத்தில், இதுபோல மல்டி ஸ்கில் முக்கியம். அதை கற்றுக் கொடுப்பதும் டீம் வொர்க்கே!
வாழ்க்கையில் முயலும் ஜெயிக்கும், ஆமையும் ஜெயிக்கும்.

முயலாமை மட்டுமே ஜெயிக்காது.
முயன்று தோற்றால் அனுபவம்.
முயலாமல் தோற்றால் அவமானம்.
வெற்றி நிலையல்ல,தோல்வி முடிவல்ல..
முயற்சியை பொறுத்து தான் வெற்றி, தோல்வி..!!

29/08/2025

*இந்த மான் கதை என்னைக் கவர்ந்தது*

*ஒரு கருவுற்ற மான் தன் மகவை ஈயும் ஒரு நிலை..*

அது ஒரு அடர்ந்த புல் வெளியை கண்டது,
அதன் அருகே ஒரு பொங்கும் ஆறு.
இதுவே சரியான இடம் என்று அது சென்றது அங்கு.

*அப்போது கருமேகங்கள் சூழ்ந்தன.*

*மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன.*

*மான் தன் இடப்பக்கம் பார்த்தது..*

*அங்கே ஒரு வேடன் தன் அம்பை மானை நோக்கி குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்.*

*மானின் வலப்பக்கமோ பசியுடனான ஒரு புலி மானை நோக்கி வந்து கொண்டிருந்தது.*

ஒரு கருவுற்ற மான் பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது.மேலும் காட்டு தீயும் எரிய ஆரம்பித்து விட்டது.

*என்ன நடக்கும்.?*
*மான் பிழைக்குமா?*
*மகவை ஈனுமா?*

*மகவும் பிழைக்குமா?*

*இல்லை காட்டு தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?*

*வேடனின் அம்புக்கு இரையாகுமா?*

*புலியின் பசிக்கு புசியாகுமா?*

மான், தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறமும், மற்ற இருவரும் எதிர் புறமும்..
மான் என்ன செய்யும்?

*மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது..*

*ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல் அதன் கண்களில் இல்லை.*

*அப்போது நடந்த நிகழ்வுகள்.......*

*மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான்.*
*எய்தப்பட்ட அம்பு புலியை தாக்கி அது இறக்கிறது*
*தீவிர மழை காட்டு தீயை அழித்து விடுகிறது..*

*அந்த மான் அழகான குட்டி மானை பெற்றெடுக்கிறது*

*நம் வாழ்விலும் இப்படிபட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வந்திருக்கிறது..*
வரும்..அச்சூழலில் பல எதிர்மறை சிந்தனைகள் நம்மை சுற்றி நின்று அச்சுறுத்தும்..
*சில எண்ணங்களின் பலம் நம்மை வீழ்த்தி அவை வெற்றி பெற்று நம்மை வெற்றிடமாக்கும்...*

நாம் இம்மானிடம் இருந்து *மானிடம் கற்றுக்கொள்வோம்..*
அந்த மானின் முக்கியத்துவம் முழுதும், மகவை பெற்றிடுவதிலேயே இருந்தது..மற்ற எதுவும் அதன் கை வசம் இல்லை..மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்து இருந்தால் மகவும் மானும் மடிந்து இருக்கும்.

*இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்..*

எதில் என் கவனம்?
எதில் என் *நம்பிக்கையும் முயற்ச்சியும் இருக்க வேண்டும்?*

*வாழ்வின் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள்..*
*அவர் எப்போதும் எதிலும் நம்மை வருத்த செய்ய மாட்டார்.*

*கடவுள் தூங்குவதும் இல்லை..*
*துயரப்படுத்துபவரும் இல்லை..*
*உன் செயலில் நீ கவனம் செலுத்து..*
*மற்றவை நடந்தே தீரும்...*

*நன்றி*

*வாழ்க வளமுடன்*.
*வாழ் நாளெல்லாம்* .
💐💐💐💐🌺🌸🌸

21/07/2025

நீ இல்லாத பொழுது உன்னை பற்றி ஒருத்தன் தவறாக பேசி, அது உன் காதிற்கு வருமேயானால் _

அதைப்பற்றி அவனிடம் கேட்டுக் கொள்ளாதே

ஏனெனில் உன் முகத்திற்கு முன்னால் பேசினால் கடும் விளைவினை சந்திக்க நேரிடும் என்பது அவன் அறிந்திருக்கக் கூடும்.

27/03/2025

வேலிகள் இல்லாத துறைகளில் யார் வேண்டுமானால் உள்ளே நுழையலாம். சினிமா, யுடியூப், வணிகம், கிரிக்கட், அரசியல்...இதற்கு எந்த டிகிரியும் அவசியமில்லை., 18 வயசை தாண்டியிருப்பதே போதும்.

அதே எஞ்சினியர், டாகட்ர் எல்லாம் வேலி உள்ள துறைகள். அதனுள் டிகிரியும், அனுபவமும் இல்லாமல் நுழையமுடியாது. அந்த டிகிரி படிக்கவும் ஏகபட்ட செலவு ஆகும், அல்லது நிறைய மதிப்பெண் வேண்டும்

வேலி இல்லாத துறைகளில் கிளாமர் கூடுதல். தொழிலதிபர், யுடியூபர், நடிகர், இயக்குனர் என்றால் அதில் கவர்ச்சி கூடுதல். டாக்டர், எஞ்சினியர் என்றால் மதிப்பு உண்டே ஒழிய கிளாமர் கிடையாது

வேலி இல்லாத துறைகளில் வெற்றி பெற்றவர்கள் தன் பிள்ளைகளை தன் துறையில் இறக்க முயலக்கூடாது. தந்தையின் பெயரே மகனுக்கு பெரிய சுமையாகிவிடும். ஜெய்சங்கர் தன் மகனை டாகடர் ஆக்கினார். சின்னி ஜெயந்த் மகன் கலெக்டர் ஆனார்.

நாம படிக்காம அடித்துபிடித்து முன்னேறிய துறைகளில் நம் பிள்ளையை இறக்கக்கூடாது. இருக்கும் பணத்தை வைத்து வேலி உள்ள துறைகளில் இறக்கிவிட்டுவிடவேண்டும். அதுதான் தலைமுறை முன்னேற்றம்

காலை வணக்கம்..

 #உடல்நலம்
26/03/2025

#உடல்நலம்

25/03/2025

#பாவபுண்ணியம்

"நன்மையும் தீமையும் செயல்களில் இல்லை. செய்யும் செயல் என்னென்ன விளைவுகளைத் தருமோ, அந்த விளைவைக் கொண்டு தான் நன்மையும் தீமையுமாகப் பிரித்துப் பார்க்கிறோம். அது நன்மையான விளைவாக இருந்தால் 'புண்ணியம்' என்றும், தீமையான விளைவாக இருந்தால் 'பாவம்' என்றும் கூறுகிறோம்.

பசி எடுக்கிறது உணவு சாப்பிட்டுப் பசியைப் போக்கிக் கொள்கிறோம். ஆனால் நாவுக்குச் சுவையாகவும், நன்றாகவும் இருக்கிறது என்பதற்காக அதிகப்படியாக உண்டால் என்ன ஆகும்? அந்த உண்ட உணவே தீமையை உண்டாக்குகிறது. ஆகவே செயலில் பாவம் புண்ணியம் இல்லை. செயல்களின் விளைவைத்தான் கவனிக்க வேண்டும். இதற்கு ஒரு சாம்யம் (Formula) கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது புண்ணியம் எது? பாவம் எது? என்று சிந்திக்க வேண்டும்.

புண்ணியம் எது? எண்ணம், சொல், செயல் ஆகிய ஏதொன்றாலும் தனக்கோ பிறருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ அறிவிற்கோ உடலுக்கோ துன்பம் தராது விழிப்போடு துன்பங்கள் நீக்கும் வகையில் செய்யப்படும் செயல்கள் யாவும் புண்ணியத்தின் பாற்படும்.

பாவம் எது? ஒருவரது எண்ணம், சொல், செயல் இவைகளினால் தனக்கேனும் பிறருக்கேனும் அன்றைக்கோ பிற்காலத்திலோ, உடலுணர்ச்சிக்கோ பகுத்தறிவுக்கோ துன்பம் விளைவதாக இருந்தால் அத்தகைய செயல்கள் பாவம் என்பதாகும்."
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

😭😭 படித்துக்கொண்டு இருக்கும்போதே கண்ணீர் வருகிறது😭😭''நல்லதங்காள் கதை''அர்ச்சுனாபுரம் ஒரு கிராமம். இது விருதுநகர் மாவட்டத...
22/03/2025

😭😭 படித்துக்கொண்டு இருக்கும்போதே கண்ணீர் வருகிறது😭😭
''நல்லதங்காள் கதை''அர்ச்சுனாபுரம் ஒரு கிராமம். இது விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. வத்திராயிருப்பு அருகில் உள்ளது. இந்தப் பகுதியில் மாந்தோப்பு, தென்னந்தோப்பு ஏராளம். வாழைமரம், பாக்குமரம், தேக்குமரம் ஏராளம். வானம் பொய்க்காத வளமான பூமி.

அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் பிறந்த ஊர். நல்லதங்காளின் தந்தை ராமலிங்க ராஜா. தாயார் இந்திராணி. அண்ணன் நல்லதம்பி.

நல்லதங்காள் சின்னப் பெண்ணாக இருந்தபோது தாயும் தந்தையும் இறந்துவிட்டார்கள். நல்லதம்பிதான் தங்கச்சியை செல்லமாக வளர்த்தான்.

மானாமதுரை ராஜா காசிராஜனுக்கு நல்லதங்காளைக் கட்டிக்கொடுத்தான் அண்ணன் நல்லதம்பி. கல்யாணம் ஆகும்போது நல்லதங்காளுக்கு ஏழு வயது.

காசிராஜன் நல்லதங்காளுக்கு நிறைய பரிசுப் பணம் கொடுத்தார். சித்திரை மாதம் கல்யாணம் நடந்தது. செல்வக் கல்யாணம்.

பனைமரம் பிளந்து பந்தக்கால் நட்டார்கள்.

தென்னைமரம் பிளந்து தெருவெல்லாம் பந்தல் இட்டார்கள்.

நல்ல தம்பி தங்கச்சிக்கு நிறைய சீதனங்கள் கொடுத்தான்.
வேலி நிறைய வெள்ளாடுகள்
பட்டி நிறைய பால்மாடுகள்
மோர் கடைய முக்காலி பொன்னால்
அளக்குற நாழி பொன்னால்
மரக்கால் பொன்னால்.

இன்னமும் சீதனங்கள் நிறைய உண்டு. சொல்லிக்கொண்டே போகலாம்.

கல்யாணம் முடிந்தது. விருந்துச் சாப்பாடு முடிந்தது.

நல்லதங்காளும் காசிராஜனும் மானாமதுரைக்குப் புறப்பட்டார்கள். நல்லதங்காளுக்கு அண்ணனைப் பிரிய மனம் இல்லை.

அழுதுபுரண்டு அழுதாள்...
ஆபரணம் அற்று விழ.
முட்டி அழுதாள்...
முத்து மணி அற்று விழ.

நல்லதம்பி தங்கச்சிக்கு ஆறுதல் சொன்னான். ஒருவழியாக நல்லதங்காள் மானாமதுரைக்குப் புறப்பட்டுப் போனாள்.

நல்லதம்பிக்கு ஒரு மனைவி உண்டு. அவள் பெயர் மூளி அலங்காரி. அவள் கொடுமைக்காரி. நல்லதங்காள் போன பிறகு நல்லதங்காளைப் பார்க்க நல்லதம்பி ஒரு தடவைகூட மானாமதுரை போகவில்லையாம். அதற்கு மூளி அலங்காரிதான் காரணமாம்.

நல்லதங்காளுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. பிள்ளை குட்டிகளுடன் அவள் சந்தோஷமாக வாழ்ந்தாள். இதெல்லாம் கொஞ்ச காலம்தான்.

மானாமதுரையில் மழை இல்லை. 12 வருடமாக நல்ல மழை இல்லை. வயல்களில் விளைச்சல் இல்லை. மக்கள் பசியால் வாடினார்கள். பட்டினியால் தவித்தார்கள்.

பஞ்சமோ பஞ்சம்.
மரக்கால் உருண்ட பஞ்சம்
மன்னவரைத் தோற்ற பஞ்சம்
நாழி உருண்ட பஞ்சம்
நாயகரைத் தோற்ற பஞ்சம்
தாலி பறிகொடுத்து
கணவரைப் பறிகொடுத்து
கைக்குழந்தை விற்ற பஞ்சம்
இப்படி மக்கள் பஞ்சத்தில் செத்தார்கள்.

நல்லதங்காள் வீட்டையும் பஞ்சம் விடவில்லை. தாலி தவிர மற்றது எல்லாம் நல்லதங்காள் விற்றாள். குத்தும் உலக்கை, கூடை, முறம்கூட விற்றுவிட்டாள். எல்லாம் விற்றும் பஞ்சம் தீரவில்லை. குழந்தைகள் பசியால் துடித்தன.

நல்லதங்காள் யோசித்து யோசித்துப் பார்த்தாள். இன்னும் கொஞ்ச நாள் நீடித்தால் பிள்ளைகள் பசியால் செத்துப்போகும் என்று பயந்தாள். ஒரு முடிவு எடுத்தாள். அண்ணன் வீட்டுக்குப் பிள்ளைகளுடன் கொஞ்ச நாள் போய் இருக்கலாம் என்று முடிவு எடுத்தாள்.

காசிராஜனிடம் தன் முடிவைச் சொன்னாள். காசிராஜன் நல்லதங்காள் சொன்ன முடிவை ஒப்புக்கொள்ளவில்லை.

“அடி பெண்ணே! வாழ்ந்து கெட்டுப்போனால் ஒரு வகையிலும் சேர்க்கமாட்டார்கள். கெட்டு நொந்துபோனால் கிளையிலும் சேர்க்க மாட்டார்கள். கை கொட்டிச் சிரிப்பார்கள். நீ போக வேண்டாம். கஷ்டம் வருவது சகஜம். நாம் பிடித்து நிற்க வேண்டும். சாணி எடுத்தாவது தப்பிப் பிழைப்போமடி! வேலி விறகொடித்து விற்றுப் பிழைப்போமடி’’ என்று காசிராஜன் தன் மனைவி நல்லதங்காளிடம் பலவாறு சொன்னான்.

காசிராஜன் சொன்னதை நல்லதங்காள் கேட்கவில்லை. இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்று நினைத்தாள்.

சந்தனம் தொட்ட கையால் - நான்
சாணி தொட காலமோ!
குங்குமம் எடுக்கும் கையால் - நான்
கூலி வேலை செய்ய காலமோ
என்று சொல்லி நல்லதங்காள் அழுதாள்.

இதற்குமேல் நல்லதங்காளைச் சமாதானப்படுத்த முடியாது என்று காசிராஜன் தெரிந்துகொண்டான். “சரி போய் வா. பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்’’ என்று சொல்லி வழியனுப்பி வைத்தான்.

நல்லதங்காள் பிள்ளைகளைப் பாசத்தோடு அழைத்தாள். “வாருங்கள் பிள்ளைகளா! உங்கள் மாமன் வீட்டுக்குப் போவோம். அங்கே தின்பதற்கு தேங்காய் கிடைக்கும், மாங்காய் கிடைக்கும், ஓடி விளையாட மான் கிடைக்கும்’’ என்று சொல்லி அழைத்தாள். பிள்ளைகள் ஆசை ஆசையாகப் புறப்பட்டன.

நல்லதங்காளும் பிள்ளைகளும் மானாமதுரையில் இருந்து அர்சசுனாபுரத்துக்குப் புறப்பட்டு வந்தார்கள். காடு மலையெல்லாம் தாண்டி வந்தார்கள். வனாந்திரங்களைக் கடந்து வந்தார்கள்.

அர்ச்சுனாபுரம் பக்கம் வந்துவிட்டார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு நடக்க முடியவில்லை. பசி பசி என்று கத்தினார்கள். அழுதார்கள்.

அந்த நேரம் பார்த்து நல்லதம்பி அந்தப் பக்கம் வந்தான். படை பரிவாரங்களோடு வந்தான். வேட்டையாட வந்தான். வந்த இடத்தில் நல்லதங்காளையும் பிள்ளைகளையும் பார்த்தான்.

அந்தக் கோலத்தில் அவர்களைப் பார்த்ததும் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

குதிரை அரிதாச்சோ
குடி இருந்த சீமையிலே!
பல்லக்குதான் பஞ்சமோ
பத்தினியே உனக்கு!
கால்நடையாய் வர
காரணம் ஏன் தங்கச்சி?
என்று அழுது புலம்பினான். நல்லதங்காள் தன் வீட்டு நிலைமைகளைச் சொன்னாள். நல்லதம்பி அவளைத் தேற்றினான்.

“சரி தங்கச்சி நம் வீட்டுக்குப் போ. தெற்குமூலையில் தேங்காய் குவிந்திருக்கும் வடக்குமூலையில் மாங்காய் குவிந்திருக்கும். காட்டு யானை வாசலில் கட்டி இருக்கும் காராம் பசுவும் உண்டு. போ தங்கச்சி போ! போய்ப் பிள்ளைகளுடன் பசியாறி இரு’’ என்று நல்லதம்பி சொன்னான்.

நல்லதங்காள் அண்ணன் இல்லாத வீட்டுக்குப் போக தயங்கினாள். அண்ணா! நீயும் கூட வா! என்று அண்ணனைக் கூப்பிட்டாள்.

“அம்மா நல்லதங்காள் நீ முதலில் போ. உன் அண்ணி மூளி அலங்காளி உன்னையும் பிள்ளைகளையும் நன்றாக கவனித்துக்கொள்வாள். நான் பின்னால் வருகிறேன். சீக்கிரன் வந்துவிடுவேன். உன் பிள்ளைகளுக்கு விளையாட புள்ளிமான் கொண்டுவருவேன்’’ என்று சொல்லி சமாதானப்படுத்தினான்.
நல்லதங்காள் அண்ணன் வீட்டுக்கு அரை மனதுடன் புறப்பட்டாள். அப்போது மூளி அலங்காரி வீட்டு மாடியில் இருந்தாள்.

நல்லதங்காளும் பிள்ளைகளும் பசியோடு தன் வீடு வருவதைப் பார்த்து விட்டாள். வேகவேகமாக இறங்கி வந்தாள். கதவுகளை அடைக்கச் சொன்னாள். இறுக்கிக் கதவை அடைத்தாள். ஈர மண் போட்டு அடைத்தாள். சோற்றுப் பானையை ஒளித்து வைத்தாள். பழந்துணி ஒன்றை உடுத்திக்கொண்டான். முகத்தில் பத்துப் போட்டு மூலையில் படுத்துக்கொண்டாள்.

நல்லதங்காள் வந்தாள். அண்ணி அண்ணி என்று ஆசையாகக் கூப்பிட்டு கதவைத் தட்டினாள். கதவு திறக்கவில்லை.

''கால் கடுக்குது அண்ணி கதவைத் திற, தண்ணீர் தண்ணீர் என்று தவிக்குறாள் பாலகர். அன்னம் அன்னம் என்று சொல்லி அலையுறார் பாலகர். புத்திரர் பசியாற கதவைத் திறவாயோ?''
என்று அழுது அழுது கூப்பிட்டாள். அதற்கும் கதவு திறக்கவில்லை. நல்லதங்காளுக்கு கோபம் வந்தது.
நான் பத்தினியானால் கதவு படீர் என்று திறக்கட்டும்

என்று கட்டளையிட்டாள். கதவுகள் திறந்தன. பிள்ளைகள் உள்ளே ஓடினார்கள். சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஒரு பண்டமும் இல்லை. மூளி அலங்காரி படுத்திருந்த இடத்தில் தேங்காயும், மாங்காயும் குவிந்து கிடந்தன.
ஓடிச்சென்று ஒரு பிள்ளை தேங்காயை எடுத்தது. தாவிச்சென்று ஒரு பிள்ளை மாங்காயைக் கடித்தது. மூளி அலங்காரி விருட்டென்று எழுந்தாள். மாங்காயைப் பறித்துப் போட்டாள்.

ஆயிரம் அழுகல் மாங்காயில் ஒன்று எடுத்துக் கொடுத்தாள். தேங்காயைப் பறித்துப் போட்டாள். ஆயிரம் தேங்காயில் அழுகல் தேங்காய் ஒன்று எடுத்துக் கொடுத்தாள்.

பார்த்தாள் நல்லதங்காள். மனம் பதறினாள். ''அண்ணி என் மக்களின் பசியை ஆத்துங்க'' என்று கெஞ்சினாள்.
மூளி அலங்காரி, ஏழு வருசம் மக்கிப்போன கேப்பையைக் கொடுத்தாள். திரிப்பதற்கு உடைந்த திருகையைக் கொடுத்தாள். உலை வைக்க ஓட்டைப் பானையைக் கொடுத்தாள். எரிக்க ஈரமட்டைகளை கொடுத்தாள். நல்லதங்காள் பொறுமையாகக் கேப்பையைக் திருகையில் போட்டு அரைத்தாள்.

எப்படியோ கஷ்டப்பட்டு கஞ்சி காய்ச்சினாள். ஈரமட்டைகளை வைத்து எரித்தாள். கூழும் கொதிக்கணும், குழந்தை பசியாறணும் என்று தெய்வங்களை வேண்டிக்கொண்டாள்.

ஒருவழியாகக் கஞ்சி கொதித்தது. ஆனால் பிள்ளைகள் கஞ்சியைக் குடிக்கப் போகும் நேரத்தில் மூளி அலங்காரி வந்தாள். பானையைத் தட்டிவிட்டாள். பானை உடைந்தது. கூழ் வழிந்து ஓடியது. பிள்ளைகள் அதை வழித்துக் குடித்தார்கள்.

நல்லதங்காளுக்கு இந்தக் காட்சியைப் பார்க்க சகிக்கவில்லை. இனியும் அவமானப்பட வேண்டாம். செத்துவிடலாம் என்று முடிவு எடுத்தாள்.

பிள்ளைகளைக் கூப்பிட்டு தெருவில் இறங்கினாள். வீதியில் நடந்தாள். அவளைப் பார்த்தவர்கள் பரிதாபப்பட்டார்கள். சாப்பிடுவதற்கு தங்கள் வீட்டுக்கு அழைத்தார்கள்.

''பச்சரிசி குத்தித் தாரோம்
பாலும் கலந்து தாரோம்!
பாலரும் நீயும்
பசியாறிப் போங்க!''
என்று கூப்பிட்டார்கள். நல்லதங்காள் மறுத்துவிட்டாள்.
''அரச வம்சம் நாங்கள்
அண்டை வீட்டில்
தண்ணீர் குடிக்க மாட்டோம்''
என்று சொல்லிவிட்டாள்.

காட்டு வழியே பிள்ளைகளைக் கூட்டிப் போனாள். பாழும் கிணறு தேடிப் போனாள். அண்ணன் வந்தால் அடையாளம் தெரியட்டும் என்று ஆவாரம் செடிகளை ஒடித்துப் போட்டுக்கொண்டே போனாள்.

நல்லதங்காளும் பிள்ளைகளும் நெடுந்தூரம் வந்து விட்டார்கள். ஒரு கிணறும் காணோம்.

அப்போது சிறுவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களைப் பார்த்து நல்லதங்காள் கேட்டாள்...
“தண்ணீர் தாகமப்பா. தண்ணீர் குடிக்கணும். பாழும் கிணறு இருந்தால் பார்த்துச் சொல்லுமப்பா!’’ என்று கேட்டாள். ஒரு சிறுவன் ஓடிச்சென்று ஆழமுள்ள பாழும் கிணற்றைக் காட்டினான்.

நல்லதங்காள் பிள்ளைகளோடு அங்கு போனாள்.

கணவன் கண்ணில் படுமாறு தாலியைக் கழற்றி கிணற்றுப் படியில் வைத்தாள்.

அண்ணன் கண்ணில் படுமாறு பாலூட்டும் சங்கை கிணற்று மேட்டில் வைத்தாள்.

அண்ணி கொடுத்த அழுகல் தேங்காயை ஓர் ஓரத்தில் வைத்தாள்.

ஒவ்வொரு பிள்ளையாக கிணற்றில் தூக்கிப் போட்டாள். ஒவ்வொரு பிள்ளையும் பயந்து பயந்து அம்மாவின் காலைக் கட்டிக்கொண்டன.

காலைக் கட்டிய பிள்ளையை பிடித்து இழுத்து கிணற்றில் போட்டாள். இப்படி ஆறு பிள்ளைகளைப் போட்டுவிட்டாள்.

மூத்த பிள்ளை நல்லதங்காளுக்குப் பிடிபடாமல் ஓடினான்.

''என்னை மட்டும் கொல்லாதே என்னைப் பெற்ற மாதாவே!'' என்று கெஞ்சினான்.

''தப்பிப் பிழைத்து அம்மா - நான்
தகப்பன் பேர் சொல்லுவேன்
ஓடிப் பிழைத்து அம்மா - நான்
உனது பேர் சொல்லுவேன்''

என்று சொல்லி தப்பித்து ஓடினான். ஓடிய பிள்ளையை நல்லதங்காள் ஆட்டு இடையர்களை வைத்துப் பிடிக்கச் சொன்னாள்.

இடையர்களுக்கு விசயம் தெரியாது. தாய்க்கு அடங்காத தறுதலைப் பிள்ளை என்று நினைத்து அவனைப் பிடித்துக்கொண்டுவந்து நல்லதங்காளிடம் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.

நல்லதங்காள் கதறி அழுத மூத்த மகனையும் பிடித்து கிணற்றுக்குள் போட்டாள். பிறகு தானும் குதித்தாள். நல்லதங்காளும், ஏழு பிள்ளைகளும் இறந்து மிதந்தார்கள்.

நல்லதங்காளுக்கு 16 அடிக் கூந்தல். அவள் கூந்தல் கிணறு பூராவும் பிரிந்து பரந்து கிடந்தது. பிள்ளைகளும் தெரியவில்லை. கிணற்றுத் தண்ணீரும் தெரியவில்லை. நல்லதங்காளின் கூந்தல் மட்டுமே கிணறு பூராவும் தெரிந்தது.

நல்லதங்காள் குடும்பம் இப்படி பட்டினியால் செத்து முடிந்தது.

நல்லதங்காள் புறப்பட்டு வந்த சில நாட்களிலேயே மானாமதுரையில் நல்ல மழை பெய்தது. பயிர்கள் திகிடுமுகடாக விளைந்தன. நாடு செழிப்பு அடைந்தது.

காசிராஜன் தன் மனைவி நல்லதங்காளையும் தன் பிள்ளைகளையும் அழைப்பதற்கு புறப்பட்டு வந்தான்.
நல்லதம்பி வேட்டை முடித்து வீட்டுக்கு வந்தான். தங்கச்சியைக் காணவில்லை. தங்கச்சி பிள்ளைகளையும் காணவில்லை. பதறிப்போனான்.

மூளி அலங்காரியைப் பார்த்து என் தங்கச்சியையும், தங்கச்சி பிள்ளைகளையும் எங்கே என்று கேட்டாள்.

மூளி கூசாமல் பொய் சொன்னாள்.
“சீரகச் சம்பா சோறு ஆக்கிப் போட்டேன்
பத்து வகைக் காய்கறி வைத்தேன்.
சாப்பிட்டுப் போனாங்க’’
என்று பொய் சொன்னாள்.

நல்லதம்பி இதை நம்பவில்லை. பக்கத்து வீடுகளில் போய்க் கேட்டான். அவர்கள் நடந்தது நடந்தபடி சொன்னார்கள். பிள்ளைகளைப் பட்டினி போட்டதைச் சொன்னார்கள்.

அவ்வளவுதான் நல்லதம்பிக்கு மீசை துடித்தது. கண் சிவந்தது. பக்கச் சதை எல்லாம் பம்பரம் போல் ஆடியது. தங்கையைத் தேடி காட்டுவழியே போனான். பதறிப் பதறிப் போனான்.

நல்லதங்காள் ஒடித்துப் போட்ட ஆவாரஞ் செடிகள் வழிகாட்டின. நல்லதம்பி பாழும் கிணற்றின் பக்கம் வந்தான். உள்ளே எட்டிப் பார்த்தான்.

''அய்யோ........'' தங்கையும் பிள்ளைகளும் செத்து மிதந்தார்கள். நல்லதம்பி ஓங்காரமிட்டு அழுதான்.

தங்கச்சி தங்கச்சி என்று தரையில் புரண்டு அழுதான். அம்மா அம்மா என்று அடித்துப் புரண்டு அழுதான். இப்படி அவன் அழுது புரண்டு கொண்டு இருந்தபோது காசிராஜனும் அங்கே வந்து விட்டான்.

பிள்ளைகளையும் மனைவியையும் பிணமாகப் பார்த்தான். மனைவியைக் கட்டிக் கொண்டு கதறி அழுதான்.
நல்லதங்காளையும் பிள்ளைகளையும் வெளியே எடுத்து தகனம் செய்தார்கள்.

நல்லதம்பி தன் மனைவி மூளி அலங்காரியைப் பழிவாங்க நினைத்தான். அவளை மட்டுமல்ல. அவள் குலத்தைப் பழிவாங்க ஏற்பாடு செய்தான்.

தன் மகனுக்கு உடனடியாக திருமணம் ஏற்பாடு செய்தான். மூளி அலங்காரியின் உறவினர்கள் உட்காரும் இடத்தில் இடிப்பந்தல் போட்டான். இடிப்பந்தலைத் தட்டிவிட்டு எல்லோரையும் கொன்றான். மூளி அலங்காரியையும் அரிவாளால் வெட்டிக் கொன்றான்.

இத்துடன் கதை முடியவில்லை. நல்லதம்பி ஈட்டியில் பாய்ந்து தன் உயிரை விட்டான். அதேபோல் காசிராஜனும் ஈட்டியில் பாய்ந்து தன் உயிரை விட்டான்.

இவ்வாறு இரண்டு குடும்பங்களும் பூண்டோடு அழிந்தன. இதற்கு அடிப்படையான காரணம் என்ன?
வறுமை ஒரு பக்கம். மூளி அலங்காரியின் கொடுமை மறுபக்கம். வறுமை கொடியது. பசி கொடியது. பட்டினி கொடியது.

அதைவிடக் கொடியது மனிதத்தன்மையற்ற செயல். நல்லதங்காள் பட்ட துன்பத்தை இந்த நாடு மறக்காது

21/03/2025

எல்லா மனிதர்களும் வாசிக்க வேண்டிய ஒரு பதிவு....

உங்கள் இறுதி ஊர்வலத்திற்குப் பின் ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும்,
அடுத்த வேளை உணவை அயல் வீட்டுக்காரர் கொண்டுவந்திருப்பார், இல்லை என்றால் ஆர்டர்கள் ஹோட்டலுக்கு சென்றிருக்கும்,
பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க,..

வந்த கூட்டத்தில் ஓர் இளம்பெண்ணும் ஆணும் காதல் புன்னகையுடன் பரஸ்பரம் போன் நம்பர்கள் மாற்றிக்கொள்வர்...

படுக்கப் போகும் முன் காலாற நடந்து வரலாமென சில ஆண்கள் தேநீர்க்கடை வரை சென்றிருப்பர்,..

சாப்பிட்ட இலைகளயும், குப்பைகளையும் இன்னும் கொஞ்சம் தள்ளிக் கொட்டியிருக்கலாம் என உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் மனதுக்குள் பொறுமிக்கொண்டிருப்பார்,..

ஒரு அவசர சூழ்நிலையால் நேரில் வர இயலவில்லையென உறவினர் ஒருவர் உங்கள் மகளிடம் போனில் பேசுவார்.

மறுநாள் விருந்தில், கறியில் காரம் போதவில்லையென ஓரிருவர் குறைபட்டுக்கொள்வார்கள், எலும்பை நீக்கி, கறியை மட்டும் குழந்தைக்கு ஒரு அம்மா ஊட்டிக்கொண்டிருப்பார்..

இத்தனை தூரம் வந்தாச்சு போற வழியில் அங்கேயும் பார்த்துவிட்டுப் போலாமா என வெளியூர் உறவுகள் சுற்றுலாத் திட்டங்கள் ரகசியாமாய் வகுத்திருப்பர்,

தன்னுடைய பங்குக்கு மேல் சிலநூறு ரூபாய்கள் அதிகமாக செலவாகிவிட்டதென ஒரு பங்காளி கணக்கிட்டு நொந்துகொண்டிருப்பார்..

கூட்டம் மெல்ல மெல்லமாய்க் கரையத் தொடங்கும்..

அடுத்து வரும் நாட்களில்
நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரக்கூடும்,..

உங்கள் அலுவலகம் உங்கள் இடத்துக்கு வேறொருவரை அவசரமாகத் தேடத் துவங்கியிருக்கும்,

ஒரு வாரம் கழிந்து, உங்கள் இறப்புச் செய்தி கேள்விப்பட்டு,

உங்கள் கடைசிப் பதிவு என்னவென ஆர்வம் கலந்த சோகத்தோடு சில பேஸ்புக் நண்பர்கள் தேடக்கூடும்.

இரண்டு வாரங்களில் உங்கள் மகன் மகளின் எமெர்ஜென்சி லீவு முடிந்து பணிக்கு திரும்பிடுவர்,

ஒரு மாதமுடிவில் உங்கள் வாழ்க்கைத்துணை டிவியில் வரும் ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சிக்கு சிரிப்பார்,

அடுத்துவரும் மாதங்களில், உங்கள் நெருங்கிய உறவுகள் மீண்டும் சினிமாவுக்கும், பீச்சுக்கும் சகஜமாய்ச் செல்லத்துவங்கியிருப்பர்,

அத்தனை பேரின் உலகமும் எப்போதும்போல் மிக இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும்,

ஒரு பெரிய ஆலமரத்தின் இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லாதது போல, அத்தனையுமே சுலபமாய், வேகமாய், எந்தச் சலனமுமின்றி நடக்கும்,

மழை பெய்யும், தேர்தல் வரும், பேருந்துகளில் கூட்டம் வழக்கம்போலவே இருக்கும், ஒரு நடிகைக்குத் திருமணம் ஆகும்,

திருவிழா வரும், உலகக்கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடி நடக்கும்,

வண்ண வண்ணமாய் பூக்கள் பூக்கும், உங்கள் செல்லப்பூனை அடுத்த குட்டி ஈனும்..

நீங்களே வியக்கும் வேகத்தில் இந்த உலகத்தால் நீங்கள் மறக்கப்படுவீர்கள்,

இதற்கிடையில் உங்கள் முதல்வருடத் திதிகொடுத்தல் மட்டும் மிகச்சிரத்தையாக நடக்கும்.

கண்மூடித் திறக்கும் நொடியில்
வருடங்கள் பல ஓடியிருக்கும்,

உங்களைப் பற்றிப் பேச யாருக்கும் எதுவுமே இருக்காது, என்றாவது ஒருநாள், பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் மட்டும், உங்கள் வாரிசுகளில் ஒருவர் உங்களை நினைவுகொள்ளக்கூடும்,

உங்கள் ஊரில், நீங்கள் நெருங்கிப் பழகிய ஆயிரம் ஆயிரம் பேர்களில், யாரோ ஒருவர் மட்டும், நீங்கள் இருந்ததாய், அபூர்வமாய் உங்களைப்பற்றிப் யாரிடமோ பேசக்கூடும்..

மறு பிறவி உண்மையென்றால் மட்டும் நீங்கள் வேறெங்கேயோ, வேறு எவராகவோ வாழ்ந்து கொண்டிருக்கக்கூடும்..

மற்றபடி, நீங்கள் எதுவுமே இல்லாமல் ஆகி, பேரிருளில் மூழ்கி பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும்,

இப்போது சொல்லுங்கள்.. உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்..?

உங்கள் வாழ்க்கை , யாரையும் நீங்கள் திருப்தி படுத்த தேவையில்லை, யாரும் உங்களை திருப்தி படுத்தபோவதும் இல்லை.

வாழுங்கள் உங்களுக்காகவும் வாழுங்கள்.......

19/03/2025

*மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது .*.... *கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா்*

_இந்தப் பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் ,உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமானது"" அதனால்,யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்!அனைவரும் அசையாமல் கீழே படுங்கள் என்றார்கள். படுத்துவிட்டார்கள் ._

மனதை மாற்றும் முறை என்பது இதுதான் .

*". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."*

_அங்கே ஒரு பெண், கொள்ளையர் களின் கவனத்தைத் திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி, அமர வைத்தான்.._..

*இதைத்தான், செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம் "Being Professional & Focus only on what you are trained""*

_கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று ._

_மற்றொருவன் சொன்னான் , பொறு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது .நேரம் அதிகம் செலவாகும். அரசே நாம் எவ்வளவு₹ #கொள்ளை அடித்தோம் என்று, நாளை செய்திகளில் சொல்லி விடும்._

*இதைத்தான்,படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்!*

*This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications! ""*

_கொள்ளை நடந்த போதே,வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது,அவருடைய மேல் அதிகாரி தடுத்து அவரிடம் கூறினார்._

" _வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி எடுத்து பங்கு பிரித்துக் கொள்வோம். மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார்_.

""காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ""என்பது இது தான் "
*This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours.*

_இதை கேட்ட மற்றொரு அதிகாரி "" வருடம் ஒரு கொள்ளை,இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் "" என்றார் ._

இதுதான் சுயநலமான உலகம்!
*This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.*

_மறுநாள் செய்திகளில்,வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கப்பட்டது .அமைச்சர் போட்ட உத்தரவு அப்படி.அவர் பங்கு 50 கோடி._

_கொள்ளையா்கள் மிரண்டு போனார்கள். பணம் எண்ணும் மிஷின் வாங்கி வந்து,பணத்தை எண்ணத் தொடங்கினர் ._

_எவ்வளவு எண்ணியும் ,அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை ._

_கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து ," நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம்._

_ஆனால் இந்ந வங்கி அதிகாரிகளும், அமைச்சரும் சிரமம் இல்லாமல், எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது_

*இதற்குத் தான் படித்திருக்க வேண்டும் .""என்றான்*

*True. Knowledge is nowadays very important than money in this world.*

*இந்தியா இப்படிப்பட்ட திருடர்களா லும், அமைச்சர்களாலும்தான் ஆளப்படுகிறது!பாவம் மக்கள்!*

-படித்ததில் பிடித்தது-

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when மறவர் - முக்குலத்தோர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share