முட்டைகோஸ் Muttaikose

முட்டைகோஸ் Muttaikose It's Especially for Jallikattu Videos

19/06/2022
நன்றி முரட்டுகாளை...இன்றளவும் பேசப்பட்டு வரும் திண்டுக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள். கொசவபட்டி, நல்லமநாயக்கன்பட்டி,...
14/02/2018

நன்றி முரட்டுகாளை...

இன்றளவும் பேசப்பட்டு வரும் திண்டுக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள். கொசவபட்டி, நல்லமநாயக்கன்பட்டி, மறவபட்டி போட்டிகள் முடிந்து சில நாட்கள் ஆனாலும் பலரால் சொல்லப்பட்டு வரும் இந்த மூன்று ஜல்லிக்கட்டுகள்.. அப்படி என்ன ஒரு சரித்திரம் என்றால் இன்றைய நிலையில் ஜல்லிக்கட்டில் முக்கியமான விஷயம் என்னவென்றால் முன் வாடிவாசல் அல்ல பின் வாடிவாசல்தான் அதுவும் காளைகளை வரிசைப்படி கொண்டு வருவதுதான். வரிசைகள் கலைந்து ஏறுக்குமாறாக காளையை திணித்து அதிலும் சில காளை அவிழ்த்து பல காளைகள் அவிழ்க்கப்படாமல் மாட்டுகாரர்கள் கஷ்டப்பட்டு சோறு தண்ணீர் இல்லாம தள்ளுவாடில மாட்டப் பிடிச்சு நின்னா மதியம் இரண்டு மணி (அ) மூன்று மணி போல் ஒலிப்பெருக்கியில் ஒரு அறிவிப்பு வரும் ஜல்லிக்கட்டு இத்துடன் முடிவடைந்தது என்று அந்த நேரத்தில் மாட்டுகாரர்கள் மனதில் இரத்தக் கண்ணீராகத்தான் இருக்கும். ஆனால் வாடிவாசலில் மொத்தம் 300 (அ) 350 காளைகள்தான் அவிழ்த்திருப்பார்கள் கொடுத்தது மொத்தம் 1000 அல்லது 1200 டோக்கனா இருக்கும் மொத்தம். . இவ்வளவு டோக்கன் கொடுத்தால் அவ்வளவு எளிதாக காளையை அவிழ்த்து விட முடியாது. இந்த சூழ்நிலையை கருதியே திண்டுக்கல் மாவட்டத்தில் 500 அல்லது 600 காளைகள் மட்டும் பதியப்படுகிறது கடைசியாக நடந்து முடிந்த திண்டுக்கல் மாவட்ட இந்த மூன்று ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் அனைத்தும் வரிசை எண் தொடர்ந்தே 25 காளைகளாக அனுப்பப்பட்டது அந்த மூன்று வாடிவாசலில்தான் மாட்டுகாரர்கள் முகத்தில் புன்னகையை கண்டேன் நீங்கள் பரிசு என்ன வேண்டுமென்றாலும் தாருங்கள் ஆனால் காளைகள் வரிசைப்படி எந்தவித இடையூறு இல்லாமல் அனுப்புங்கள் என்று கருத்துகளை தெரிவித்தனர் அந்த அளவுக்கு காளை உரிமையாளர்கள் ஆதரவாக இருந்தனர் இந்த மூன்று ஊர் ஜல்லிக்கட்டு போட்டியிலும் முதல் நன்றி காளை உரிமையாளர்களுக்கும் மற்றும் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் இதற்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும். இதே போல அனைத்து ஊர்களிலும் தொடருங்கள் நமது பாரம்பரியம் சிறப்பாக காக்கப்பட வேண்டும்

ஜல்லிக்கட்டுல அசம்பாவிதம் நடக்க கூடாதுன்னு மாற்றி அமைச்ச சட்டமே இன்று அசம்பாவிதத்துக்கு காரணமாக இருக்கின்றதா?????காலம் க...
11/02/2018

ஜல்லிக்கட்டுல அசம்பாவிதம் நடக்க கூடாதுன்னு மாற்றி அமைச்ச சட்டமே இன்று அசம்பாவிதத்துக்கு காரணமாக இருக்கின்றதா?????

காலம் காலமா பாரம்பரியமா சாதாரணமாக நடத்திட்ட இருந்தப்ப கூட எங்க ஜல்லிக்கட்டுல எங்கனாச்சும் ஒருசில மாடுபிடி வீரர்கள் வீரமரணம் அடைவார்களே தவிர, காளைகள் அடிபட்டு இறந்ததாக சரித்திரம் இல்லை.

ஆனால் இன்னைக்கு காளைகள் இறந்து போகுதுனா அதுக்கு ஜல்லிக்கட்ட பற்றிய எந்த ஒரு அறிவும் இல்லாத பக்குவமில்லாதவங்க (இப்படித்தான் நடத்தனும், அப்படித்தான் நடத்தனும், அத பன்ன கூடாது இத பன்னக்கூடாதுன்னு) மாத்தி அமைச்ச விதிமுறைதான் காரணம் என்றால் யோசிக்கதானே வேண்டி இருக்கு.

ஜல்லிக்கட்ட பற்றி தெரியாத ஒருவர் அதுக்கான விதிமுறைய எழுதுனா என்ன என்ன விளைவுகள சந்திக்க வேண்டி வரும் என்று இன்னைக்கி நல்லா எல்லாரும் பாத்துட்டோங்கய்யா...

பாரம்பரியமா கோவில் திருவிழாவை முன்னிட்டு திருநல்லூர் என்ற தென்னலுர்ல ஒன்னு இல்ல இரண்டு இல்ல ஏழு வாடி, (எப்டி ஏழு வாடில) ஜல்லிக்கட்ட நடத்துனப்ப கூட எந்த ஒரு மாடும் அடிபட்டு இறந்து போனதில்லய்யா... காரணம் சென்ற வருடம் வரை தென்னலூர்ல ( #சதுர வாடி #) மாடு நல்லா நிதானமா வெளியே வந்து வீரர்கள் மத்தியில் பாஞ்சி வெற்றி பெரும்.

ஆனால்!!!

இந்த வருடம் நாங்க சொன்ன விதிமுறை படிதான் நீங்க ஜல்லிக்கட்ட நடத்தனும்ன்னு சதுர வாடிய குருக்கு (நேர்) வாடியா வச்சதாலதான், இதுவரை எந்த ஒரு வாடிலயும் பிடிபடாத எங்கள் கொம்பன் (ஜல்லிக்கட்டு மீது தீரா ஆசை கொண்ட அமைச்சர் திரு.விஜயபாஷ்கர் அவரோட காளை) அடிபட்டு இறந்து போச்சுன்னா அதுக்கு மாற்றி அமைச்ச விதிமுறை தான் காரணம் என்றால் மறுக்க முடியுமா உங்களால்... அந்த காளை எப்பேர்ப்பட்ட காளை தெரியுமாங்கய்யா உங்களுக்கு... அப்பேர்ப்பட்ட காளையை சாச்சிபுட்டீங்கலேய்யா.

எப்போதும் நடத்திட்டு இருந்த பானிலயே நடத்தி இருந்தோம் என்றால் இன்னைக்கு எங்கள் கொம்பன் அவனோட வெற்றி படிகட்டுகலில் மேலும் ஒரு வெற்றிய ருசிச்சிருப்பானய்யா. தமிழ்நாட்டின் சிறந்த காளையா மேலும் பல வாடிகலில் சுற்றி திரிந்திருப்பானய்யா... வாடிய மாத்தி அமைச்சி கொண்டுபுட்டீங்கய்யா... இதற்க்கு முழு காரணம் யார்???

முன்ன நடத்துனபடியா இப்ப ஜல்லிக்கட்டு நடந்திட்டு இருக்கு. சுதந்திரமா நடத்திட்டு இருந்தோம்யா எந்த ஒரு ப்ரச்சனையும் இன்றி. இந்த அளவுக்கு எங்கள அடக்கி ஒடுக்கலய்யா.

மேலும் மேலும் எங்கள விதிமுறை என்ற பெயரில் அடக்கி ஒடுக்காதீங்கய்யா.

கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கய்யா.

கேவலம் எங்க தமிழக மக்களில் எள் அளவு கூட இல்லாத எதோ பணம் மோகம் கொண்ட (பீட்டா) ஒரு கூட்டம் கோரிக்கை வச்சான்னு நாங்க காலம் காலமா பாரம்பரியமா நடத்தி வந்த ஜல்லிக்கட்டுக்கு தடை போட்டிங்க.

ஒட்டுமொத்த தமிழ் மக்கள் ஒன்று திரண்ட பிறகு தடைய வேறு வழியின்றி விடுவிச்சீங்க..

இப்ப விதிமுறை என்ற பெயரில் ஒடுக்குரீங்க.

தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து கொஞ்சம் விதிமுறைய தளர்த்தி நல்ல முறையில் ஜல்லிக்கட்ட நடத்திட வழிவகை செய்ய வேண்டுகிறோம்...

********************************************

இன்று தென்னலூர் களத்தில் வீரமரணம் அடைந்த சுகாதாரத்துரை அமைச்சர் திரு.விஜயபாஷ்கர் அவர்களின் கொம்பனுக்கு வீர வணக்கத்தினை தெரிவித்து அரியலூர் மாவட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சார்பாக ஆழ்ந்த வருத்தத்தினை தெரிவித்து கொள்கிறோம்...

வீர வணக்கம் - #கொம்பா #...

**********************************************

27/01/2018

ஜல்லிகட்டு தடை நீங்க வெயில் மழை குளிர் என பாராமல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் குறிப்பாக ஜல்லிகட்டு நடைபெறாத பகுதியிலும் மிகப்பெறிய போராட்டம் செய்து வென்றோம்

ஆனால் இன்று அதையெல்லாம் மறந்துவிட்டு ஜல்லிகட்டிற்காக எந்த விதத்திலும் பாடுபடாத நடிகர்களையும், அரசியல்வாதிகளையும், மற்றும் தொழிலதிபர்களை மட்டுமே வைத்து கொடி அசைத்து ஜல்லிகட்டை தொடங்கி வைத்து எந்த ஒரு நன்றி உணர்வில்லாமல் செயல்படும் சில ஜல்லிகட்டு கமிட்டியிணர்களுக்கு இடையில்

ஜல்லிகட்டிற்காக அயராது உழைத்த சில நல்ல உள்ளங்களை
திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டி ல் பிப்ரவரி 10 நடக்கவிருக்கும் ஜல்லிகட்டில் சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கும் ஊர்கமிட்டிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

சிறப்பு விருந்தினர்கள்:

1) வழக்கறிஞர் திரு.ஶ்ரீனிவாச ரத்தினசாமி (ஜல்லிகட்டிற்கான சட்டவரைவை தயார் செய்து மத்திய மாநில அரசுக்கு அனுப்பி அதை இயற்ற பெரும்பாடுபட்டவர்)

2) உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு.பிரபாகரன் (ஜல்லிகட்டிற்கு தடை கொடுத்த நீதிபதி மேல் ஊழல் வழக்கு தொடர்ந்து ஜல்லிகட்டை உலக கலாச்சார அடையாளமாக மாற்ற UNESCO வை நாடியவர்.

4) திரு.பாலகுமார் சோமு பல வருடங்களாக ஜல்லிகட்டிற்கு ஆதரவாக பல கட்டுரைகள் எழுதி எளி சாமானிய மக்களும் புரியும் அளவில் விழிப்புணர்வு செய்தவர்.

5)திரு.சிந்துராம் Care and Welfare (ஜனவரி 8 சென்னை மெரினாவில் ஜல்லிகட்டிற்கு ஆதரவாக சுமார் 25000 நபர்களை இணைத்து போராட்டத்திற்கு வித்திட்டவர்.

6) மித்ரா, மிர்தினி (ஜல்லிகட்டை சட்டமாக்க அரசின் கவன ஈர்ப்புக்காக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மாராத்தான் ஓடி விழிப்புணர்வு செய்த மழலைகள்.

"எந்நன்றி கொண்றார்கும் உய்வுண்டாம் உயவில்லை
செய்ந்நன்றி கொண்ற மகற்கு"

இது ஒன்னும் உலக புகழ் பெற்ற ஜல்லிகட்டு இல்ல நன்றி மறவா " #உலக புகழ் பெறப்போகும் ஜல்லிகட்டு"

#திண்டுக்கல்
#நல்லமநாயக்கன்பட்டி
#பிப்ரவரி10

கோவை வாடியை நோக்கி திருமழபாடி M.C அவர்களின் வெள்ளை...
27/01/2018

கோவை வாடியை நோக்கி திருமழபாடி M.C அவர்களின் வெள்ளை...

Address

Ariyalur
621851

Telephone

9677414614

Website

Alerts

Be the first to know and let us send you an email when முட்டைகோஸ் Muttaikose posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category