GPS Sports Club - Canada

GPS Sports Club - Canada Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GPS Sports Club - Canada, Sports Club, Markham, ON.

GPS Super Kings Cricket Club – Canada19/5/2024 - ஞாயிற்றுக்கிழமைGPS Sport Club 2024ம் ஆண்டுக்கான MTCL தொடருக்கு இம்முறைய...
05/20/2024

GPS Super Kings Cricket Club – Canada
19/5/2024 - ஞாயிற்றுக்கிழமை

GPS Sport Club 2024ம் ஆண்டுக்கான MTCL தொடருக்கு இம்முறையும் இரண்டு அணிகளை களமிறக்கியுள்ளது.

MTCL ன் 15 ஓவர்களை கொண்ட உத்தியோக பூர்வமான தொடரின் முதல் நாளாகிய இன்று GPS Super Kings Cricket Club அணியினர் இன்று நடைபெற்ற இரண்டு ஆட்டத்திலும் வெற்றியை தமதாக்கிக்கொண்டனர்.

1 வது ஆட்டம்

இதில் முதலாவது ஆட்டத்தில் Inuvil Bulls Cricket Club அணியினரை எதிர்த்து விளையாடினார்கள். வித்தியாசங்கர் தலைமையில் களமிறங்கிய GPS Super Kings அணியினர் தமது முதலாவது வெற்றியை பதிவுசெய்தனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய GPS Cricket Club அணியினர் 15 ஓவர்களுக்கு 74/7 என்ற இலக்கை அடைந்தனர். இதில் அதிகபட்சமாக பிரேம் 21 பந்துகளை சந்தித்து 32 ஓட்டங்களை பெற்றிருந்தார். தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய Inuvil Bulls Cricket Club அணியினர் 61/10 என்ற ஓட்டங்களை பெற்று தோல்வியினை தழுவிக்கொண்டனர்.

இதன் போது அதிகபட்சமாக GPS அணியின் பந்துவீச்சாளர்களாகிய விதுன் மற்றும் ஜீவிதன் ஆளுக்கு தலா 3 விக்கெற்றுகளை கைப்பற்றிக்கொண்டனர்.

இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தமது முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளனர்.

2 வது ஆட்டம்

இரண்டாவது ஆட்டத்தில் B-Town Boys Cricket Club அணியினரை எதிர்த்து விளையாடினார்கள்.
முதலில் துடுப்பெடுத்தாடிய B-Town Boys Cricket Club அணியினர் 15 ஓவர்களுக்கு 59/8 என்ற இலக்கை அடைந்தனர். இதன் போது அதிகபட்சமாக GPS Super Kings அணியின் பந்துவீச்சாளராகிய கோபிகரன் 3 விக்கெற்றுகளை கைப்பற்றிக்கொண்டார்.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய GPS Super Kings அணியினர் 60/4 என்ற ஓட்டங்களை பெற்று வெற்றியினை தமதாக்கி கொண்டனர். இதில் அதிகபட்சமாக ஜீவிதன் 18 பந்துகளை சந்தித்து 23 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்திலும் GPS Super Kings அணியினர் 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தமது இரண்டாவது வெற்றியை பதிவுசெய்துள்ளனர்.

GPS Cricket Club – Canada19/5/2024 - ஞாயிற்றுக்கிழமைGPS Sport Club 2024ம் ஆண்டுக்கான MTCL தொடருக்கு இம்முறையும்  இரண்டு ...
05/20/2024

GPS Cricket Club – Canada
19/5/2024 - ஞாயிற்றுக்கிழமை

GPS Sport Club 2024ம் ஆண்டுக்கான MTCL தொடருக்கு இம்முறையும் இரண்டு அணிகளை களமிறக்கியுள்ளது.

MTCL ன் 15 ஓவர்களை கொண்ட உத்தியோக பூர்வமான தொடரின் முதல் நாளாகிய இன்று GPS Cricket Club அணியினர் Inuvil Boys Cricket Club அணியினரை எதிர்த்து விளையாடினார்கள். தாருகாஷ் தலைமையில் களமிறங்கிய GPS அணியினர் தமது முதலாவது வெற்றியை பதிவுசெய்தனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய GPS அணியினர் 15 ஓவர்களுக்கு 128/7 என்ற இலக்கை அடைந்தனர். இதில் அதிகபட்சமாக ஆகீசன் 24 பந்துகளை சந்தித்து 47 ஓட்டங்களை பெற்றிருந்தார். தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய Inuvil Boys Cricket Club அணியினர் 63/10 என்ற ஓட்டங்களை பெற்று தோல்வியினை தழுவிக்கொண்டனர். இதனால் GPS அணியினர் 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில்

இதன் போது அதிகபட்சமாக GPS அணியின் பந்துவீச்சாளர்களாகிய பிரியன் மற்றும் தாருகாஷ் ஆளுக்கு தலா 4 விக்கெற்றுகளை கைப்பற்றிக்கொண்டனர்.

இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் GPS அணியினர் தமது வெற்றியை பதிவுசெய்துள்ளனர்.

GPS கிரிக்கெட் கழகத்தின் 2022 ம் ஆண்டுக்கான சாதனைகள் - 2எமது கல்வியங்காடு GPS கிரிக்கெட் கழகம் - கனடா கடந்தவருடம் மொன்றி...
07/05/2023

GPS கிரிக்கெட் கழகத்தின் 2022 ம் ஆண்டுக்கான சாதனைகள் - 2

எமது கல்வியங்காடு GPS கிரிக்கெட் கழகம் - கனடா கடந்தவருடம் மொன்றியலில் நடைபெற்ற திலீபன் ஞாபகார்த்த வெற்றி கேடய தொடரில் அணித் தலைவர் வித்தியாசங்கர் ரவீந்திரனின் நேரடி வழிநடத்தலின் கீழ் 1ம் இடத்தை தனதாக்கிக் கொண்டது. இந்த தொடரில் எமது அணி சார்பாக பல வீரர்கள் விருதுகளை பெற்றுக்கொண்டார்கள்.

இந்த தொடரில் எமக்கு தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்.

GPS கிரிக்கெட் கழகத்தின் 2022 ம் ஆண்டுக்கான சாதனைகள் - 1எமது கல்வியங்காடு GPS கிரிக்கெட் கழகம் - கனடா கடந்தவருடம் MTCLன்...
06/30/2023

GPS கிரிக்கெட் கழகத்தின் 2022 ம் ஆண்டுக்கான சாதனைகள் - 1

எமது கல்வியங்காடு GPS கிரிக்கெட் கழகம் - கனடா கடந்தவருடம் MTCLன் 28ம் ஆண்டுக்கான தொடரில் அணித் தலைவர் வித்தியாசங்கர் ரவீந்திரன் தலைமையில் 1ம் இடத்தை தனதாக்கிக் கொண்டது. இந்த தொடரில் எமது அணி சார்பாக பல வீரர்கள் விருதுகளை பெற்றுக்கொண்டார்கள்.

இந்த தொடரில் எமக்கு தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 25.06.2023 அன்று முதல்முறையாக மாவீரர்களின் நினைவாக நடாத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட 10 ஓவர்கள் கொண...
06/28/2023

கடந்த ஞாயிற்றுக்கிழமை 25.06.2023 அன்று முதல்முறையாக மாவீரர்களின் நினைவாக நடாத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட 10 ஓவர்கள் கொண்ட சவால் தொடரின் வெற்றி கேடயத்தினை எமது கல்வியங்காடு GPS கிரிக்கெட் அணியினர் தட்டிச்சென்றுள்ளனர். அத்தோடு இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும், இந்த ஒட்டு மொத்த தொடரிலும் அனைத்து வகையிலும் சிறப்பாக விளையாடிய விருதாகிய MVP விருதையும் அணியின் தலைவர் ஸ்ரீதரன் தாருகாஷ் தட்டி சென்றுள்ளார்.

GPS Sport Club இவ்வருடம் MTCL தொடருக்காக இரண்டு அணிகளை களமிறக்கியுள்ளது. வழமையான அணியான GPS Cricket Club - Canada உடன் இ...
05/30/2022

GPS Sport Club இவ்வருடம் MTCL தொடருக்காக இரண்டு அணிகளை களமிறக்கியுள்ளது.

வழமையான அணியான GPS Cricket Club - Canada உடன் இணைந்து Kalviyankadu Super King – Canada என்ற புதிய இளைஞர் அணியினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படட MTCL இன் முதலாவது நாளன்று GPS Cricket Club - Canada இரண்டு ஆட்டங்களை சந்தித்து அந்த இரண்டு ஆட்டங்களிலும் வெற்றியினை பெற்றதோடு,
Kalviyankadu Super King – Canada ஒரு ஆட்டத்தை சந்தித்து அந்த ஆட்டத்தில் வெற்றியினை பெற்று தனது முதல் வெற்றியினை பதிவுசெய்துள்ளது.

GPS Cricket Team கடந்த 22/05/2022 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இவ்வருடத்துக்கான 2வது மட்டுப்படுத்தப்பட்ட பந்து பரிமாற்றங்கள...
05/27/2022

GPS Cricket Team கடந்த 22/05/2022 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இவ்வருடத்துக்கான 2வது மட்டுப்படுத்தப்பட்ட பந்து பரிமாற்றங்களை கொண்ட Cric4famous presents 50 ball cricket tournament 2022 க்கான வெற்றிக்கேடயத்தினை தமதாக்கி கொண்டுள்ளார்கள்.

GPS Cricket Team கடந்த 15/05/2022 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இவ்வருடத்துக்கான 1வது மட்டுப்படுத்தப்பட்ட பந்து பரிமாற்றங்கள...
05/26/2022

GPS Cricket Team கடந்த 15/05/2022 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இவ்வருடத்துக்கான 1வது மட்டுப்படுத்தப்பட்ட பந்து பரிமாற்றங்களை கொண்ட MegaBlaster 2022 க்கான வெற்றிக்கேடயத்தினை தமதாக்கி கொண்டுள்ளார்கள்.

  GPS Cricket Club on winning the finals and going undefeated!! Team's performance on the field was outstanding! Great j...
06/21/2021

GPS Cricket Club on winning the finals and going undefeated!! Team's performance on the field was outstanding! Great job guys! #

       #
04/05/2021

#

  are proud to support our friends and family @ GPS 100 in their quest to win the championship in GMPL. We wish every pl...
03/10/2021

are proud to support our friends and family @ GPS 100 in their quest to win the championship in GMPL. We wish every player great success in GMPL! GPS Cricket Club Canada will support you guys all the way!! #

Address

Markham, ON
L3R

Website

Alerts

Be the first to know and let us send you an email when GPS Sports Club - Canada posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GPS Sports Club - Canada:

Share

Category