30/03/2024
துன்னாலை வடக்கு ஆயில் நின்றொல்லை வல்லியானந்தப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டும் சபாநாதக்குருக்களின் 25 வருட மகோற்சவ பிரதம குருவாக பொறுப்பேற்று 2000 ஆம் ஆண்டில் இருந்து 2024 ஆம் ஆண்டு வரையில் தொடர்ச்சியாக இவ் ஆலயம் வளர்ச்சி அடைவதற்கு முக்கிய பங்களிப்பாற்றியமைக்காக வல்லியானந்த விளையாட்டுக்கழக இளைஞர்கள் சார்பில் முதல் முறையாக அவரைக் கௌரவிக்கும் விதமாக ஆலயப் பெயர் பொறிக்கப்பட்ட சால்வையானது கொடியேற்ற தினமான இன்று கழகத் தலைவரால் வெளியிடப்பட்டது.