Light Rook Sports Club - Oluvil

Light Rook Sports Club - Oluvil This club has officially registered at 2022 and our aim is to develop all the games in oluvil.

🏆 அம்பாறை மாவட்ட விளையாட்டு போட்டியில் எமது கழக வீரர்களின் சிறப்பான சாதனை 🏆இன்று தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்...
16/05/2026

🏆 அம்பாறை மாவட்ட விளையாட்டு போட்டியில் எமது கழக வீரர்களின் சிறப்பான சாதனை 🏆

இன்று தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட விளையாட்டு போட்டிகளில், எமது கழக வீரர்கள் அட்டாளைச்சேனை பிரதேச அணியை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு, ♟️ சதுரங்கம் மற்றும் 🎯 கரம் ஆகிய இரு போட்டிகளிலும் இரண்டாம் இடத்தை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

அல்ஹம்துலில்லாஹ் ❤️

குறிப்பாக கரம் இறுதிப்போட்டியில், அக்கரைப்பற்று அணியுடன் மிகவும் விறுவிறுப்பான முறையில் மோதிய எமது வீரர்கள், 2-3 என்ற கணக்கில் கடுமையான போட்டிக்குப் பிறகே தோல்வியை சந்தித்தனர்.

இந்த சாதனைக்கு பங்காற்றிய அனைத்து கழக வீரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ❤️👏

மேலும், பல்வேறு வழிகளில் ஆதரவு வழங்கிய அட்டாளைச்சேனை விளையாட்டு உத்தியோகத்தர் Mr. Rafsan அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

✨ உள்ளக விளையாட்டில் வரலாற்றுத் தடம் பதிப்போம்! ✨ இன்ஷாஅல்லாஹ்

Moving into the next level இன்று நடைபெற்று முடிந்த பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்களுக்கான கரம் தனிநபர் போ...
18/04/2026

Moving into the next level

இன்று நடைபெற்று முடிந்த பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்களுக்கான கரம் தனிநபர் போட்டியில்
எமது கழக வீரர் #அமானுள்ளாஹ்_அஸ்கி_அகமட் ஒலுவில் அந்- நூர் இளைஞர் கழகம் சார்பாக பங்குபற்றி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
அல்ஹம்துலில்லாஹ்

இவர் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள மாவட்ட மட்ட போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துக்கள் ❤️♨️❤️❤️

எமது கழகத்தின் கரம் விளையாட்டு அறை ....♨️♨️♨️Ready to roarUpcoming youth matches and divisions
12/04/2026

எமது கழகத்தின் கரம் விளையாட்டு அறை ....
♨️♨️♨️
Ready to roar
Upcoming youth matches and divisions

11/01/2026

Nothing will lose when you ready to fight

Light Rook 🏸practice session at Mac
20/11/2025

Light Rook 🏸practice session at Mac

அல்ஹம்துலில்லாஹ் 😍 ஒலுவில் மண் பெருமை கொள்ளும் தருணம்.நடைபெற்று முடிந்த அகில இலங்கை பாடசாலை விளையாட்டு போட்டியில்(தேசிய ...
12/10/2025

அல்ஹம்துலில்லாஹ் 😍
ஒலுவில் மண் பெருமை கொள்ளும் தருணம்.

நடைபெற்று முடிந்த அகில இலங்கை பாடசாலை விளையாட்டு போட்டியில்(தேசிய மட்டம்)எமது அல் ஹம்றா மஹா வித்தியாலய மாணவன் U.Abdullah ஆண்களுக்கான 14 வயது பிரிவு நீளம் பாய்தல் நிகழ்ச்சியில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இவருக்கும் இவரை வழிப்படுத்திய ஆசிரியர் நௌஷாட் மற்றும் பயிற்றுவிப்பாளர் அஸ்மத் ஸஹி அவர்களுக்கும் Light Rook Sports Club - Oluvil வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்

Proud moment 👏👏👏 Oluvil Al salam youth club champion - cricket நடைபெற்று முடிந்த பிரதேச மட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான ...
03/10/2025

Proud moment 👏👏👏



Oluvil Al salam youth club champion - cricket

நடைபெற்று முடிந்த பிரதேச மட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நமதூரின் அல்- ஸலாம் இளைஞர் கழக வீரர்களுக்கு Light Rook Sports Club - Oluvil இன் மணமார்ந்த வாழ்த்துக்கள் ❤️

இவ்வருடம் நடைபெற்ற 49 வது தேசிய விளையாட்டு போட்டிகளில் மாவட்ட மட்ட கரம் மற்றும் செஸ் சாம்பியன் சான்றிதழ்கள் அல்ஹம்துலில்...
02/10/2025

இவ்வருடம் நடைபெற்ற 49 வது தேசிய விளையாட்டு போட்டிகளில் மாவட்ட மட்ட கரம் மற்றும் செஸ் சாம்பியன் சான்றிதழ்கள்

அல்ஹம்துலில்லாஹ் ❤️

🏏🔥 Light Rook Sports Club Presents 🔥🏏INTER MEMBERS CRICKET TOURNAMENT 2025📍 Venue: Jaisha Ground📅 Date: 04th October 202...
01/10/2025

🏏🔥 Light Rook Sports Club Presents 🔥🏏
INTER MEMBERS CRICKET TOURNAMENT 2025

📍 Venue: Jaisha Ground
📅 Date: 04th October 2025 (Saturday)
⏰ Time: 8.00 AM onwards

⚡ Tournament Format:
08 Overs , 11 a side

League matches

Top 2 teams advance to the Grand Final 🏆

🏆 Who Will Be the Champion?
Play hard, play fair & lift the glory!

✨ Come, Play, Support & Enjoy the Spirit of Cricket!

📞 For details: NK.Nubail Ahamed-0750410971
📌 Organized by Light Rook Sports Club

⭐விளையாட்டு ரசிகர்களுக்கு ⭐பல திறமையான விளையாட்டு வீரர்களை கொண்டுள்ள ஒலுவிலூரின் பெருமைகளை பாதுகாக்கவும் விளையாட்டுத்துற...
25/09/2025

⭐விளையாட்டு ரசிகர்களுக்கு ⭐

பல திறமையான விளையாட்டு வீரர்களை கொண்டுள்ள ஒலுவிலூரின் பெருமைகளை பாதுகாக்கவும் விளையாட்டுத்துறையில் அபரீத மாற்றங்களை கொண்டு வருவதற்காகவும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எமது லைட் ரூக் விளையாட்டு கழகம் இன்று உத்தியோகபூர்வமாக தனது எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது.

எமது,
தூர நோக்கு: விளையாட்டின் ஊடாக தன்னிறைவு பெற்ற இளைஞர் யுவதிகளை உருவாக்குவோம்

இலக்கு: அணைத்து விளையாட்டுக்களையும் ஆரம்பிப்பதன் மூலம் ஒவ்வொருவரும் தமக்கு பிடித்த விளையாட்டுத்துறையில் உச்ச உயரத்தை அடைதல்.

எமது சேவைகள்:-
⭐அணைத்து விளையாட்டுக்களையும் பயிற்றுவித்தல்
⭐ விளையாட்டு சங்கங்கள் ஊடான தொடர்பினை ஏற்படுத்தல்
⭐விளையாட்டு பட்டப்படிப்பு மற்றும் ஏனைய கற்கைநெறிகளுக்கான வழிகாட்டல்
⭐இலங்கை படையணிகளில் விளையாட்டுத் திறமையுள்ள வீரர்களை உள்வாங்க வழிகாட்டல்.
⭐பாடசாலை விளையாட்டுக்களை மேம்படுத்த உதவிகள் செய்தல்
⭐இளைஞர் யுவதிகளின் உடல் ஆரோக்கியத்தை பேண வழிகாட்டல்( உணவு முறை, பிழையான தொடர்புகளை இல்லாமல் செய்தல், போதைப் பாவனையை குறைத்தல்)
⭐நடுத்தர வயதினரின் உடல் ஆரோக்கிய பயிற்சி முகாம் அமைத்தல்
⭐திடீர் அனர்த்தங்களை முகங்கொடுக்க பழகுதல்
⭐முதலுதவிப் பயிற்சிப் பாசறை

எம்மிடம் உள்ள விளையாட்டுக்கள்:-

🎗️சதுரங்கம்
🎗️கரம்
🎗️மேசைப்பந்து
🎗️பூப்பந்தாட்டம்
🎗️கிரிக்கெட்
🎗️உதைப்பந்தாட்டம்
🎗️வொலிபோல்
🎗️எல்லே
🎗️மெய்வல்லுனர் போட்டிகள்

இதில் கடந்த வருடங்களில் கரம் மற்றும் சதுரங்க போட்டிகளில் 15 இற்கும் மேற்பட்ட மாவட்ட சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது.

எனவே தொடர்ந்தும் எமது பயணம் சிறப்புற செல்வதற்காக விளையாட்டு ரசிகர்களாகிய உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.

எமது கழகத்தில் இணைந்து கொள்ள விரும்பினால்

0750410971 எனும் இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்

Address

39 A Satham Road Oluvil/01
Oluvil
32360

Telephone

+94750410971

Website

Alerts

Be the first to know and let us send you an email when Light Rook Sports Club - Oluvil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Light Rook Sports Club - Oluvil:

Share

Category