16/08/2026
அனுராதபுரம் சொலிட் அக்கடமியால் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட உதைப்பந்தாட்ட அக்கடமிகளுக்கான போட்டியில் warriors உதைப்பந்தாட்ட அக்கடமி 14 வயதின் கீழ் பிரிவில் 2ஆம் இடத்தை வென்றது.
இலங்கையின் வடக்கு முதல் தெற்கு வரையாக பல்வேறு பிரபலமான அணிகள் கலந்து கொண்ட இச்சுற்றுத் தொடரில் எமது அணி,
முதல் போட்டியில்
கொழும்பு Manchester academy யை 2-1 எனவும் இரண்டாவது போட்டியில் கலாவெவ royal உதைப்பந்தாட்ட அக்கடமியை 3-0 எனவும் ,மூன்றாம் போட்டியில் , அனுராதபுரம் சொலிட் உதைப்பந்தாட்ட அக்கடமியை 2-0 என்ற கணக்கிலும்
முன் அறையிறுதிப் போட்டியில் கண்டி சில்வெஸ்டர்ஸ் அணியினை 5-1 என்ற கணக்கிலும்
அரையிறுதியில் சம்மாந்துரை royal lines அணியினை 5-4 எனவும்
வெற்றியீட்டி இறுதிப் போட்டியில் கிண்ணியா genius உதைப்பந்தாட்ட academy ஐ எதிர் கொண்டிருந்தனர்.
இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் மதிப்பிற்குறிய ஜஸ்வர் உமர் பிரதம அதிதியாக எமது இறுதிப்போட்டியில் கலந்து சிறப்பித்திறுந்தார்
போட்டியின் ஆரம்பம் முதல் இறுதி வரையிலான போட்டியின் 80% வீதமான கட்டுப்பாட்டையும் ஆதிக்கத்தையும் செலுத்தி ஆடியிருந்த போதும் . இறுதி நேரத்தில் பின் களத்தில் ஏற்பட்ட தவறை கிண்ணியா genius அணி வீரர் கோலாக மாற்ற போட்டி 1-0 என முடிவுக்கு வந்திருந்தது .
கிண்ணியா ஜீனியஸ் அணியினறுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
எமது அக்கடமி இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் எந்த போட்டியிலும் பதிவு செய்யாமல் இருந்தது.
எனினும் இந்த குறுகிய 2 மாத காலத்துக்குள் இரண்டு கிண்ணங்களை வென்று நாச்சியாதீவு மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளது.
மேலும் அனுராதபுர உதைப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட போட்டியில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 13 கோல்கலை பதிவு செய்து எந்த வித கோல்களையும் எமக்கு எதிராக பதிவு செய்ய விடாது அரையிறுதியில் நுளைந்துள்ளது.
இப்போட்டித் தொடரின் அரையிறுதிப்போட்டியும் எதிர்வரும் 28ம் திகதி லும்பிணி மைதானத்தில் மின்னொளியில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
எமது ஆதரவாளர்கள் எமது நலன்விரும்பிகள் , எமது ஊர்மக்கள் கலந்து கொண்டு உற்சாகமூட்டுமாறு தெரிவித்துக் கொள்கின்றோம்.