30/08/2026
இன்று நடைபெற்ற GOLD CUP 2026 SEMI FINAL போட்டியில் நாம் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளோம். இது எமது மூன்று ஆண்டுகால பயணத்தில் மிக மோசமான தோல்வியாக கருதப்படுகிறது. இந்த தோல்வி நிச்சயமாக அனைவருக்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இருந்தாலும், தோல்வியை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். நாம் செய்த தவறுகளை நேர்மையாக ஏற்றுக்கொண்டு, அவற்றைத் திருத்தி, இனி வரும் காலங்களில் இன்னும் வலிமையாக முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
“நூறு வெற்றிகளில் நாம் கற்றுக்கொள்ளும் படிப்பினைகளைவிட, ஒரு மிக மோசமான தோல்வியில் நாம் கற்றுக்கொள்ளும் படிப்பினைகள் அதிகம்.”
இளம் வீரர்களை வைத்து இந்தப் போட்டியில் பங்கேற்று, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி SEMIFINAL வரை வந்திருப்பது எமக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாகவே கருதுகிறோம். 💙⚽
இந்தப் போட்டியில் விட்ட தவறுகளை பாடமாக எடுத்துக்கொண்டு, எமது குறைகளை சரிசெய்து, கூடிய விரைவில் இன்னும் வலிமையான அணியாக மீண்டெழுந்து வருவோம். எமது அடுத்தடுத்த பயணம் இதைவிட வித்தியாசமாகவும், சிறப்பாகவும், வெற்றியை நோக்கியதாகவும் அமையும்.
இது எமது முடிவு அல்ல…
இது மீண்டும் எழுவதற்கான தொடக்கம்.
இன்ஷா அல்லாஹ்…
திரும்பி வருவோம்! இன்னும் பலமாக! 💙⚽🔥
ROYAL FC — WE WILL COME BACK STRONGER, INSHA ALLAH! 💙🔥