08/02/2026
**78வது சுதந்திர தின நிகழ்வுகள்**
78 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு எமது வள்ளுவர் இளைஞர் கழகம் மற்றும் ஆதவன் விளையாட்டுக் கழகம் இணைந்து கிளீன் ஸ்ரீலங்கா மற்றும் முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் எமது எமது ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவில் சவுக்கடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் (04.02.2026) அன்றைய தினம் சுதந்திர தின நிகழ்வும், மரநடுகை நிகழ்வுகள்,மற்றும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி என்பன இடம் பெற்றன. இவ் நிகழ்வில் எமது கிராம உத்தியோகஸ்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர், இளையர் சேவை உத்தியோகஸ்தர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர், பிரஜா சக்தி தலைவர், மாதர் சங்க உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வுக்கான நிதி அனுசரனைகளை வள்ளுவர் இளைஞர் கழக தலைவரும் சவுக்கடி பகவான் ஸ்ரீ நித்யானந்தா தியான மண்டப ஸ்தாபகர். அனுஜன் சர்மா அவர்களால் வழங்கப்பட்டது.